இதய நோய்களை தடுக்கும் தக்காளி மாத்திரை
20 Jul,2014
கொடிய இதய நோய்களைத் தடுப்பதற்கு தக்காளி மாத்திரை (Tomato pill) எனும் புதிய மருந்து உதவுவதாக பிரித்தானிய விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதய நோய்களைக் குணப்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் அவர் இதய நோயுள்ள 72 இளம்பராயத்தினரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சாதாரண மாத்திரைகளையும், தக்காளி மாத்திரைகளையும் வழங்கியுள்ளார்.
இதன்போது சாதாரண மாத்திரை உட்கொள்வதை விட தக்காளி மாத்திரை உட்கொள்ளும்போது இதய நோய்களுக்கு சிறந்த நிவாரணம் கிடைப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வகை மாத்திரைகளை CamNutra எனும் நிறுவனம் தயாரித்து வழங்கவுள்ளது.