இங்கிலாந்தில் 3 நோயாளிகளை கொன்ற நர்சு கைது
29 Mar,2014

இங்கிலாந்தில் 3 நோயாளிகளை கொன்ற நர்சு கைது
இங்கிலாந்து நாட்டில் கிரேட் மான்செஸ்டர் பகுதியில் ஸ்டாக்போர்ட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சாக விக்டோர்னோ ஹ¨யா(48) என்பவர் பணியாற்றினார். 3 கொலை வழக்கு தொடர்பாக இவரை போலீசார் கைது செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 44 வயது, 83 வயது மற்றும் 71 வயதுள்ள நோயாளிகளுக்கு தடை செய்யப்பட்ட விஷத்தன்மையுள்ள மருந்துகளை செலுத்தி அவர்களை உயிர் இழக்க செய்ததுவே இவர் மீதான குற்றச்சாட்டு ஆகும்.
அதுமட்டுமின்றி அவரது கவனக்குறைவால் சுமார் 25 நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதையும், மேலும் சிலரை பாதிப்பு உட்படுத்த முயற்சி செய்ததையும் போலீசார் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவரிடம் முழுமையாக விசாரித்த பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீஸ் அதிகாரிகள் கூறினர்.