மாயமான மலேசிய விமானம் பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்டதா? அதிர்ச்சி தகவல் video
கடந்த சனிக்கிழமை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மாயமான விமானம் தற்போது கடத்தப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து இந்த விமானத்தை கடத்தியிருக்கலாம் என்றும், இந்த கடத்தலுக்கு விமான பைலட் ஒருவர் ஒத்துழைப்பு கொடுத்திருக்க வேண்டும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
விமானத்தில் பணிபுரிந்த பைலட் Zaharie Ahmad Shah மீது தற்போது சந்தேகப்பார்வை விழுந்துள்ளது. அவருடைய வீட்டில் மலேசிய போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடைசியாக கிடைத்த தகவலின்படி விமானம் பாகிஸ்தானை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் விமானம் கடத்தப்பட்டதை மலேசிய பிரதமர் Najib Razak உறுதிப்படுத்தவில்லை.
ஆனால் அமெரிக்க உளவு அதிகாரிகள் மலேசிய விமானம் கண்டிப்பாக கடத்தப்பட்டிருக்கிறது என்றும், கடத்தப்பட்ட விமானம் ஏழு மணிநேரம் வானில் பறந்துள்ளது என்றும், அது கடைசியாக பாகிஸ்தான் அருகே இருந்ததாக தங்கள் உளவுத்துறை ராடார் கூறுகிறது என்றும் அறிவித்துள்ளனர்.
எனவே இந்திய பெருங்கடலில் இதுவரை தேடிக்கொண்டிருந்த 13 நாட்டு மீட்புப்படையினர்களும் தற்போது தங்கள் பார்வையை பாகிஸ்தானை நோக்கி செலுத்த ஆரம்பித்துள்ளனர். மேலும் அந்த விமானம் மேற்கு தாய்லாந்து அல்லது கஜகஸ்தான் பகுதியில் இருக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது,.
இதனை அடுத்து, இந்த விமானத்துக்கான தேடுதல் வேட்டையை, தனது அரசு தெற்கு சீனக் கடல் பகுதியில் நிறுத்துவதாகவும், இனி விமானத்தைத் தேடும் முயற்சி, வேறு இரண்டு பகுதிகளில் தொடரும் என்றும் அவர் கூறினார்.
ஒன்று, கஜக்ஸ்தான் -துருக்மேனிஸ்தான் எல்லையில் தொடங்கி, வட தாய்லாந்து வரையிலான பகுதி; இரண்டாவது, இந்தோனேசியாவில் தொடங்கி இந்தியப் பெருங்கடலின் தென்பகுதி வரையிலானது.
விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற வதந்திகள் இருந்தாலும், மலேசிய அதிகாரிகள் அனைத்து சாத்தியக்கூறுகளையும் விசாரிக்கிறார்கள் என்று ரசாக் கூறினார்.
விமான பயணிகளுக்கு இதுவரை எவ்வித ஆபத்தும் நேர்ந்திருக்க வாய்ப்பில்லை என்றும் எனவே பயணிகளின் உறவினர்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
மலேசிய விமான தொலைதொடர்புக் கருவி “வேண்டுமென்றே முடக்கம்”
காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் தொலைதொடர்பு அமைப்புகள் “வேண்டுமென்றே” முடக்கப்பட்டதாகத் தெரியவருவதாக மலேசியப் பிரதமர் நஜிப் ரஸாக் கூறியிருக்கிறார்.
விமானத்தை செய்கோள் மற்றும் ராடார் கருவிகள் மூலம் கண்காணித்த தரவுகளின் அடிப்படையில் கிடைத்திருக்கும் இந்தப் புதிய ஆதாரம், விமானத்தில் யாரோ ஒருவர் வேண்டுமென்றே இந்த கருவிகளை முடக்கியிருப்பதைக் காட்டுவதாக அவர் கூறினார்.
மிகச் சமீபத்திய செய்கோள் தரவுகளை வைத்துப் பார்க்கையில், விமானம் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் செல்லும் வழியில் இரண்டு முறை திசை மாறியிருக்கிறது, முதலில் மேற்குப் புறமாகவும் பின்னர் வடமேற்காகவும் திரும்பியது என்று அவர் கூறினார்.
இப்போது விமானம் காணாமல் போனது குறித்த விசாரணைகள், விமானக் குழுவினர் மற்றும் பயணிகள் மீது திரும்பியிருக்கிறது. இத்தகவலை ஓரளவு நிச்சயமாகத் தன்னால் சொல்ல முடியும் என்று பிரதமர் ரஸாக் கூறினார்.
malaysiaமலேசியப் பிரதமர் நஜிப் ரஸாக்
திசை மாறிய விமானம், திசை மாறும் விசாரணை.