
மாயமான மலேசிய விமானம் இந்திய கடல்வரை கடத்தப் பட்டிருக்கலாம் என்பதே தற்போதைய தியரி!
மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமான புலனாய்வு தொடர்பாக லேட்டஸ்ட்டாக புலனாய்வாளர்கள் கவனம் செலுத்துவது, தாக்குதல் அல்லது கடத்தல். இதற்கு காரணம், சில மிலிட்டரி ராடார்களில் இருந்து கிடைத்த தரவுகளின்படி, விமானம், ‘காரணத்தோடுதான்’ திசைமாறி சென்றது (அல்லது செலுத்தப்பட்டது) என்பதை புலனாய்வாளர்கள் நம்புகிறார்கள்.
இந்த புலனாய்வில் ஈடுபட்டுள்ளவர்கள் சிலருடன் நாம் தொடர்பு கொண்டபோது, மலேசியன் விமானம் தனது வடகிழக்கு விமானப் பாதையில் இருந்து விலகி, மேற்குப் பாதையில் சென்றதற்கு சில ஆதாரங்கள் உள்ளன என்கிறார்கள்.
இதில் இவர்கள் ‘வடகிழக்கு விமானப் பாதை’ என குறிப்பிடுவது, கோலாலம்பூரில் இருந்து பீய்ஜிங் செல்லும் பாதை. ‘மேற்குப் பாதை’ என்பது, தென்கிழக்கு ஆசியாவில் இருந்து இந்திய பகுதிகளை தாண்டி, மத்திய கிழக்குக்கும், ஐரோப்பாவுக்கும் விமானங்கள் செல்லும் பாதை.
இந்தப் பாதையில், இந்திய கடல் பகுதி வரை மலேசிய விமானம் சென்றதற்கான சில ஆதாரங்கள் உள்ளதாக சொல்கிறார்கள்.
இதில் மற்றொரு விஷயம், இங்கு குறிப்பிடுவதுபோல, ‘வடகிழக்கு விமானப் பாதை’யில் இருந்து ஒரு விமானத்தை நேர்த்தியாக ‘மேற்குப் பாதை’க்கு கொண்டுவருவது என்றால், ‘ஏவியேஷன் பிளைட் பாத்’ பற்றி நன்றாக தெரிந்த ஒருவரால்தான் முடியும்.
காரணம் இவை சர்வதேச விமான அமைப்பான ICAO-வால் நிர்ணயிக்கப்பட்ட பாதைகள்.
விமானம் கடத்தப்பட்டது என்ற தியரி நிஜமாக இருந்தால், அந்த விமானத்துக்குள் இந்தப் பாதைகள் பற்றிய தெளிவான அறிவு உடைய யாரோ ஒருவர் இருந்திருக்க வேண்டும் (விமானிக்கு இதில் தொடர்பில்லை என எடுத்துக் கொண்டால்).
அமெரிக்க கப்பல் இந்தியக் கடலை நோக்கி வருவதும், புலனாய்வாளர்கள், இந்தியாவின் அந்தமான் பகுதியில் தற்போது கவனம் செலுத்துவதும், இதனால்தான்.
இன்றைய தேதியில், விமானம் இந்தியக் கடல்வரை வந்திருக்கலாம் என புலனாய்வாளர்கள் நம்புகிறார்கள்.
மாயமான மலேசிய விமானத்தை தேட, அமெரிக்க கப்பல் ஏன் இந்திய கடலுக்கு வருகிறது?
சுவாரசியமான இந்த செய்தியை நண்பர்களுடன் பகிரலாமே:
மாயமான மலேசியன் விமானத்தை தேடுவதற்காக அமெரிக்க கடற்படையின் ஏவுகணை நாசகாரி கப்பல் (guided-missile destroyer) யு.எஸ்.எஸ். கிட் இந்தியக் கடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது பென்டகன்.
மலேசிய விமானம் சென்ற திசையில் இருந்து திரும்பி எதிர்த்திசையில் பறந்தது என்ற தியரி தற்போது அதிகம் பரிசீலனையில் உள்ள நிலையில், இந்த விமானம் இந்தியாவின் அந்தமான் கடல்பகுதிவரை சென்றிருக்கலாம் என்ற ஊகமும் உண்டு.
இதையடுத்து மலேசியா, இந்த விமானத்தை தேடுமாறு இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து, மாயமான விமானத்தை தேடும் 12-வது நாடாக இந்தியாவும் இணைந்து கொண்டது.
இந்த நிலையில்தான், அமெரிக்க கடற்படை கப்பல், இந்தியக் கடல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து, விமானம் மாயமானது குறித்து இதுவரை கூறப்பட்டுள்ள தியரிகளில், விமானம் இந்திய கடல்வரை சென்றிருக்கலாம் என உள்ள தியரியைதான் அமெரிக்கா நம்புகிறதா?
இந்தக் கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜெய் கார்னி, “எம்மிடம் புதிய தகவல்கள் உள்ளன. ஆனால், அவை நிச்சயம் என உறுதி செய்யப்படவில்லை” (“It’s my understanding that based on some new information that’s not necessarily conclusive – but new information – an additional search area may be opened in the Indian Ocean” ) என கூறியுள்ளார்.
அப்படி என்ன புதிய தகவல், இந்திய கடல் பகுதி பற்றி இவர்களுக்கு கிட்டியது?
கொஞ்சம் ஆராய்ந்துவிட்டு, வருகிறோம்