இலங்கை இனப்படுகொலை தொடர்பில் புதிய காணொளி – சேனல் 4 வெளியிட்டது.
09 Mar,2014
இலங்கை இனப்படுகொலை தொடர்பில் புதிய காணொளி – சேனல் 4 வெளியிட்டது. இன்று வெளியான கல்லம் மாக்கரேவின் இலங்கை இனப்படுகொலை பற்றிய காணொளி இறந்த பெண்புலிகளின் உடலங்களின் மீது அவர்கள் நடந்துகொண்ட முறை இதுவரை இல்லாதவகையில் மிக அருவருப்பாக உள்ளது. உடல்களைப் புணர்ந்தும், சிரித்து கொட்டமடித்தும் கொண்டாடுகின்றனர். ஆனால் இந்தப் பெண்கள் போராளிகள் என்று சொல்லப்படுகிறதே தவிர, அவர்கள் சீருடையில் இல்லை. எனவே இவர்கள் போராளிகளா இல்லையா என்று உறுதியாக தெரியவில்லை. டாக்டர் ரிச்சர்ட் ஷெப்பர்ட் என்ற நிபுணர் இந்தக் காணொலியை ஆராய்ந்து இது உண்மையான படமே என்று நிரூபித்துள்ளார். எல்லா உடல்களின் தலையிலும் துப்பாக்கிக் குண்டு காயம் இருக்கிறது. சிறிலங்கா அரசு இதனை மறுத்துள்ளது. வழக்கம்போல இது போலிக் காணொளி என்று கூறியுள்ளது.