விண்வெளி ஆய்வு கூடத்துக்கு 2016–ம் ஆண்டில் சரக்கு விண்கலத்தை அனுப்ப சீனா திட்டம்
02 Mar,2014

விண்வெளி ஆய்வு கூடத்துக்கு 2016–ம் ஆண்டில் சரக்கு விண்கலத்தை அனுப்ப சீனா திட்டம்
சீனாவும் விண்வெளி ஆய்வில் தீவிரமாக இறங்கி வருகிறது. கடந்த 2011–ம் ஆண்டு செப்டம்பரில் விண்வெளிக்கு ‘தியான்கோயாங்–1’ என்ற ஆய்வு கூடத்தை அனுப்பி விண்வெளியில் நிலைநிறுத்தி வைத்துள்ளது. அடுத்து அதேவரிசையில் 2–வது பரிசோதனை விண்கலனை 2015–ல் அனுப்ப திட்டமிட்டுள்ளது.
அதன்பிறகு இந்த பரிசோதனைக்கூடத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து செல்ல 2016–ம் ஆண்டில் சரக்கு விண்கலத்தை அனுப்பவும் தீர்மானித்திருக்கிறது. இந்த தகவலை சீன விண்வெளி திட்ட வடிவமைப்பாளர் ஷூயூ ஜியான்பிங் தெரிவித்தார்.