புலிகளிடம் இருந்த கிளைடர் விமானம் எங்கே ? ஆராய்ந்து வரும் இலங்கை புலனாய்வு !
02 Mar,2014

புலிகளிடம் இருந்த கிளைடர் விமானம் எங்கே ? ஆராய்ந்து வரும் இலங்கை புலனாய்வு !
கடந்த 23 ம் திகதி உடவல காட்டு பகுதிக்கு மேலாக பறந்த இலங்கை இராணுவத்தின் ஆளில்லா விமானம் காணமல்போன செய்தி வெளியாகியுள்ள நிலையில், விடுதலைப் புலிகளிடம் மற்றுமொரு கிளைடர் ரக விமானம் இருந்துள்ள செய்தியும் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகளிடம் 2 விமானங்கள் மட்டுமே இருந்ததாகவும் அதனை தாம் கொழும்பில் வைத்து சுட்டு வீழ்த்திவிட்டதாகவும் மார்தட்டி வரும் இலங்கை இராணுவத்தினருக்கும், புலனாய்வுப் பிரிவினருக்கும் அடுத்தடுத்து சில அதிர்சி தகவல்கள் கிடைக்கப்பெற்று வருகிறது என்று அறியப்படுகிறது. புலிகளிடம் மொத்தமாக 4 விமானங்கள் இருந்துள்ளது என்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆனால் அந்த எண்ணிக்கையை விட கூடுதலான விமானங்கள் அவர்களிடம் இருந்திருக்கலாம் என்பது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் தோண்டி எடுக்கப்பட்ட சில அவணங்களில் ஒரு CD யும் சிக்கியுள்ளது என்று கூறப்படுகிறது. அதில் புலிகள் பயிற்சிக்காக பயன்படுத்திய விமானங்களின் வீடியோக்கள் உள்ளன என்று கூறப்படுகிறது. விடுதலைப் புலிகள் 2 சிலின் 143 ரக விமானங்களையே தாக்குதலுக்கு பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
கிளைடர் விமானம்(இலகுரக) ஒன்றும் இதற்குமேலாக பாரஷூட் உதவியோடு பறப்பில் ஈடுபடும் மேலும் ஒரு விமானமும் புலிகளிடம் இருந்துள்ளது. இந்த இரண்டு விமானங்களும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இதில் கிளைடர் இலகுரக விமானம் , வன்னியில் பறப்பில் ஈடுபடும் வீடியோ காட்சி ஒன்றை, இலங்கை புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளார்கள். இவர்கள் இதனை தமது ஆவணப் படம் ஒன்றி இணைத்தும் உள்ளார்கள். புலிகளின் தாக்குதல் திறன் தொடர்பாக , காட்சிகளை சித்தரிக்கும்போது, குறிப்பிட்ட படத்தை இவர்கள் காட்சிப்படுத்தியுள்ளார்கள். இருப்பினும் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இராணுவ உயர் அதிகாரி ஒருவர், தாம் இதுவரை விடுதலைப் புலிகளின் 2 விமானங்களையே கண்டதாகவும், புலிகளின் வீடியோவில் பார்த்த அந்த கிளைடர் விமானங்களை தாமது படையினர் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.