யாழில் விடுதிகள் சுற்றிவளைப்பு: 5 பெண்கள் உட்பட 8 பேர் கைது
02 Mar,2014

யாழில் விடுதிகள் சுற்றிவளைப்பு: 5 பெண்கள் உட்பட 8 பேர் கைது
imagesயாழில் உள்ள மூன்று விடுதிகள் திடீரென சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நாடாத்தியபோது, அந்த விடுதிகளில் தவாறான நோக்குடன் தங்கியிருந்த ஐந்து பெண்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். நகர் பகுதியில் உள்ள விடுதிகளில் விபச்சாரம் செய்யும் நோக்குடன் பெண்கள் தங்கியுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் யாழ் பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளடங்கிய குழுவொன்று தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
இத் தேடுதல் நடவடிக்கையின்போது நல்லூர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரியாலை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து ஒரு ஆணும் பெண்ணும் கைதாகியுள்ளனர்.
இதேவேளை யாழ். நகர் பகுதியில் உள்ள விடுதியில் இருந்து ஒரு ஆணும் பெண்ணும் யாழ். பொலிசாரால் கைது செய்யப்பட்டு யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் வைத்து இவர்கள் என்ன நோக்கத்திற்காக விடுதியில் தங்கியிருந்தார்கள் என பொலிசார் அவர்களிடம் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.