போலீஸ் நாயை கொன்றவருக்கு 26 மாத சிறை
02 Mar,2014

போலீஸ் நாயை கொன்றவருக்கு 26 மாத சிறை
கனடா நாட்டின் அல்பெர்டா மாகாணத்தில் உள்ள எட்மண்டன் பகுதியை சேர்ந்தவர், பால் ஜோசப் உக்மனிச், போதையில் கடந்த அக்டோபரில் திருட்டு காரை ஓட்டிச்சென்றார்.போலீசார் மறிக்கவே காரை நிறுத்தி தப்பியோட முயற்சித்தார். அப்போது ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தை சேர்ந்த நாயை போலீசார் ஏவி விட்டனர்.ஆக்ரோஷமாக விரட்டிய அந்த நாயை அவன் கத்தியால் குத்தி கொன்றுவிட்டான். இதில் அவன் மீது தனித்தனியாக 3 வழக்குகள் போடப்பட்டது.விசாரணைக்கு வந்த வழக்கில் நேற்று ஜோசப்பிற்கு 26 மாத சிறை தண்டனை விதித்தார் நீதிபதி.