கள்ளத் தொடர்பை துண்டித்ததால் பட்டதாரி பெண்ணுக்கு செல்போனில் செக்ஸ் தொல்லை; கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது
25 Dec,2010

மந்தைவெளியைச் சேர்ந்தவர் சுரேகா (45, பெயர் மாற்றப்பட்டுள்ளது) எம்.சி.ஏ. பட்டதாரியான இவர் கணவரை இழந்த விதவை. கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்தார். இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
சுரேகாவுக்கும், அவருடன் வேலை பார்க்கும் கம்ப்யூட்டர் என்ஜினீயரான சம்பத்குமார் (32) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தனது மகன், மகள்கள் பெரிய பிள்ளைகளாகி விட்டதால் சம்பத்குமாருடனான தொடர்பை சுரேகா துண்டித்துக் கொண்டார்.
அதன் பிறகு உறவினர் ஒருவருடன் சுரேகாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சம்பத்குமார் சுரேகாவின் செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு செக்ஸ் தொல்லை கொடுத்தார். ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்புவது, கொலை மிரட்டல் விடுவது என அவரது தொல்லை தொடர்ந்தது. நள்ளிரவிலும் போன் செய்து தொந்தரவு கொடுத்தார்.
இதில் மனஉளைச்சல் அடைந்த சுரேகா கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். மயிலாப்பூர் துணை கமிஷனர் பெரியய்யா உத்தரவின் பேரில் பட்டினப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கலியன் விசாரணை நடத்தி சம்பத்குமாரை கைது செய்தார்.