இங்கிலாந்தில் ராணுவ வீரரை கொன்ற வாலிபருக்கு 45 ஆண்டு ஜெயில் தண்டனை
27 Feb,2014

இங்கிலாந்தில் ராணுவ வீரரை கொன்ற வாலிபருக்கு 45 ஆண்டு ஜெயில் தண்டனை
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள உல்விச்சில் கடந்த ஆண்டு மே மாதம் ராணுவ வீரர் லீ ரிக்பை என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
கொலை தொடர்பாக மிஷால் அடிபோலாஜோ(29), அடிபோவாலே(22) ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவர்கள் இருவரும் நைஜீரியா நாட்டை நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த லண்டன் கோர்ட்டு அடிபோலாஜோவுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. சுமார் 45 ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மற்றொருவர் ஆஜராகாமல் இருப்பதால் தண்டனை விவரம் பிறகு அறிவிக்கப்படும் என தெரிகிறது.