பேரனுக்காக சிறிய லம்போர்கினி காரை உருவாக்கிய விவசாயி
23 Feb,2014

பேரனுக்காக சிறிய லம்போர்கினி காரை உருவாக்கிய விவசாயி

சீனாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது அன்புக்குரிய பேரனுக்காக பெரும் சிரமத்தின் மத்தியில் சுயமாக சிறிய லம்போர்கினி ஆடம்பர காரொன்றை வடிவமைத்து வழங்கியுள்ளார்.
குவோ என்ற மேற்படி விவசாயி உலோக தகடுகளைப் பயன்படுத்தி 5000 யுவான் (500 ஸ்ரேலிங் பவுண்) செலவில் இந்தக் காரை வடிவமைத்துள்ளார்.
மேற்படி காரை உருவாக்க அவருக்கு 6 மாதங்கள் எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
2 மீற்றர் நீளமும் ஒரு மீற்றர் உயரமுமுடைய இந்தக் கார் மணிக்கு 60 மைல் வேகத்தில் பயணிக்கக் கூடியதாகும்.

