பருத்தித்துறையில் கடந்த 10 ஆம் திகதி கிணறு ஒன்றிலிருந்து மீட்க்கப்பட்ட யுவதி பா. வல்லுறவுக்கு பின்னரே படுகொலை
24 Dec,2010
பருத்தித்துறை பிரதேசத்தின் புலோலி பகுதியில் கடந்த 10 ஆம் திகதி பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து மீட்க்கப்பட்ட யுவதி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையிலிருந்து தெரிய வந்துள்ளது.
கடந்த மாதம் 28 ஆம் திகதி முதல் காணாமல் போன 19 வயதான அரியநாயகம் துளசி டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி அவரது வீட்டுக்குப் பக்கத்திலுள்ள பாழடைந்த கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டமை யாவரும் அறிந்ததே.
குறித்த யுவதியின் சடலம் பருத்தித்துறை நீதிமன்ற நீதவானின் உத்தரவின் பேரில் யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
நேற்றைய தினம் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த யுவதி பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என்றும் அவரது இடை உட்பட உடலின் பல பகுதிகளிலும் காயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.