கருப்பி...by நிலா ..4

23 Dec,2010
 

கருப்பி...கருப்பின்னு இந்த சாதிசனம் கூப்பிடத்தானோ என்னவோ... ஆண்டவனும் உன்னை கருப்பா படைச்சுப்புட்டான்..

உனக்கு ஒரு மூணு வயசு இருக்கும் புள்ள...
அப்ப தான் திடீர்னு காக்காவலி்ப்பு வந்துது உங்காத்தாளுக்கு...

வலி வந்தப்ப இரும்ப கிரும்ப கொடுத்து நிறுத்தினாலும்... அப்பப்ப நுரை கக்கிக்கிட்டே இருந்தாள் அந்தப் பாவி மகள்..

எந்தக் காத்துக்கருப்பு பட்டுதோ.. படுத்த படுக்கையில உங்காத்தாள்...
அவள் நெஞ்சுலயும் தலையிலையும் நீ பாட்டுல ஏறி விளையாடுவ.. பாவி மகள் .. உன்னை தூக்கி விளையாடக்கூட முடியாம படுத்துக் கிடந்தாள்...

ஏதோ இந்தக்கிழவிக்கு வந்த பிச்சைக்காசுல காவயிறு அரைவயிறு கஞ்சிய ஊத்தி காலம் போச்சுது..

கொஞ்சக்காலத்துல பேச்சு மூச்சே இல்லாம போயி.. சிவலோகம் போய் சேந்துட்டா உங்காத்தா.... என்று கூறி அந்தக்கிழவி கண்கலங்கியதையும்..

சிவலோகம் எங்கே இருக்கு .. பாட்டி என்று அப்பாவித்தனமாக சிறுமியாகக் கேள்வி கேட்டதையும் நினைத்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாள் கருப்பி..

காலங்கள் கடந்தன...
விதியின் வட்டத்திற்குள் கண்ணாம்பூச்சியாட கருப்பியின் நேரமும் வந்தது...
யார் யாராவது இரக்கப்பட்டுத் தரும் சில்லறைகளை சேமித்து.. கருப்பிக்கு ஒரு வெள்ளைச்சட்டை... கிழிசல் பை... நெற்றியில் விபூதி கொடுத்து பாடசாலைக்கும் அனுப்பி வைத்தாள் கிழவி..

ஏட்டுக்கல்வி தேடி குடிசைப்பள்ளியில் சேர்ந்து கொண்டாள் கருப்பி..
சுடு மணலைத் தவிர்ப்பதற்கு கொஞ்சமாகக் கிடைக்கும் அந்த மரநிழலுக்கு.. நீயா நானா என்ற போட்டி... அதில் கலந்து கொள்ளும் துணிவு கருப்பிக்கு எப்போதுமே இருந்ததில்லை..

மண்ணோடு மண்ணாகப் போகும் உடல் என்று எண்ணிணாளோ என்னவோ... தரைக்கும் கால்களுக்கும் அவள் இடைவெளிகளை வைத்ததில்லை...

சுடுமணலில் கிளித்தட்டு விளையாடி பாதங்கள் கூட காய்ச்சுப்போயின...

வருடங்கள் கடந்தது...
அப்போது கருப்பிக்கு பன்னிரண்டு வயது..
இழுத்து இழுத்து காலந்தள்ளி வந்த அந்தக்கிழவிக்கும் பரலோகத்தில் நியமனங் கொடுத்தான் எமன்...

கருப்பி அனாதையானாள்...
கேட்கப் பார்க்க யாரும் இல்லாத நிலை... அந்த மரத்தடி பிள்ளையாரும் இல்லையென்றால்... கருப்பி .. பயத்தாலேயே செத்திருப்பாள்...

யாரையாவது கேள்வி கேட்கவேண்டும் என்று எப்போதாவது தோன்றினால்.. பிள்ளையாரைக் கேட்கிறாள்.. அவரோ பதில் சொல்வதில்லை... கருப்பியும் விடுவதில்லை..

விதியின் மையக்கோடு கருப்பியின் தலைக்கு நேராக இருந்தது...

பள்ளிப்படிப்பில் ஆர்வங்காட்டி வந்த கருப்பிக்கு .. இப்போதெல்லாம் பள்ளிக்குச் செல்லவே விருப்பமில்லை... நான்கு நாட்களுக்கு ஒரு நாள் வந்து .. நாலைஞ்சு வரிகளை ஆசிரியர் சொல்லிக்கொடுத்தாலும்... மாத முடிவில் திருப்பிக்கேட்டால் ஞாபகத்தில் வைத்திருந்து பதில் சொல்லிவிடுவாள்... கருப்பியின் மனதில் படிப்பைத் தவிர வேறு எந்த நினைப்பும் இருக்கவில்லை...

நாட்கணக்கில் தண்ணீரோடு காலந்தள்ளியும் கூட பசியைப்பற்றி அவள் சிந்தித்ததில்லை...

கிழவி அருகில் இருந்த தெம்பும்.. வயதும் அவளுக்கு சாதகமாக இருந்தன...
ஆனால்.. இப்போது கருப்பி அனாதையானாள்...

விடிவதும் மறைவதும் அவளுக்குப் பழகிப்போனது...
இருள் .. வெளிச்சம் எல்லாம் அவள் கண்களுக்கு வெறுத்துப்போனது...
எங்கே செல்வது... எப்படி வாழ்வது என்று எதுவுமே அவளுக்குத் தெரியவில்லை..

உறக்கத்திலிருந்து கண்விழித்ததும் பரதேசியாக தெருவெல்லாம் அலைந்து... எங்காவது கண்ணில் படும் எதையாவது உண்டு... அந்த வாவிக்கரையோரம் அமர்ந்திருப்பாள்....

போதும் என்று ஆனவுடன் அங்கிருந்து எழுந்து... கால் போன போக்கிலே நடக்கிறாள்... களைத்துப்போகும் இடத்தில் படுத்துறங்குகிறாள்... மறைவான இடங்கள் மாத்திரமே அவள் தேடிச் செல்லும் தேவையிருந்தது...

கருப்பியின் நாடோடி வாழ்க்கையும் சீரழிவாகியது...

அன்று ஒரு நாள்...
இது வரை மரத்தடி பிள்ளையாரை மட்டுமே கேள்வி கேட்டு வந்த கருப்பியின் கண்களுக்கு அந்தக் கோயில் தென்பட்டது..

ஏன் இத்தனை பேர் உள்ளே செல்கிறார்கள்.. வருகிறார்கள் ... என்று யோசித்தாள்... உள்ளேயிருப்பது கடவுள்... ஓ.. கடவுள் உள்ளேதான் இருக்காரா... என்னையும் பார்ப்பாரா... அவள் சின்ன மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் வந்து போகிறது...

போகும் வழியைத் திசை திருப்பினாள்...
கோயிலுக்குள் சென்றாள்...

மஞ்சள் குங்குமம் மணக்க ... பட்டில்.. தட்டில் ... வெள்ளி..தங்கம்...வெற்றிலை...கற்பூரம்... ம்... கருப்பிக்கு இவை தேவையில்லாதவை... எங்கே கடவுள்...? அவள் கண்கள் தேடுகின்றன...

ஓ.. அங்கே கூட்டமாக இருக்கிறதே....
இருமருங்கிலும் கூட்டம் ... நடுவில் இடைவெளி... அந்த இடைவெளிக்கு நேராக நின்றால்.... பட்டு வண்ணத்தில் ஜொலித்து... பால் வடியும் முகத்தோடு அந்தச் சிலை... ம்... கடவுளை பாத்திட்டன்... கேள்வி கேட்கட்டா...? அவள் மனதுக்குள் ஒரு போராட்டம் வந்தது...

கேட்டுத்தான் பார்ப்போமே....
கடவுளை நோக்கி நேராக நடந்து சென்றாள் கருப்பி...

அந்த மண்டபத்தில் ஏறி உள்ளே செல்ல அவள் மனது மறுத்தது... வெளியில் நின்று கொண்டாள்.... தூரத்தே நேரெதிரே தெரியும் கடவுளைப் பார்த்து மெதுவாக சிரித்தாள்...

கடவுளே.. உனக்கு பசிக்காதா....
இது தான் அவளுக்குள் எழுந்த முதலாவது கேள்வி...
எனக்குப் பசிக்கிறதே....

அவள் சொல்லி முடிப்பதற்குள்.. அங்கே வந்த அந்த மனிதர்..
ஏய்.. ஏய்.. இங்க என்ன பண்ணுற... போ போ .... போய் அங்க உட்காரு என்று ஒரு இடத்தைக் காட்டினார்...

கருப்பி திரும்பிப் பார்த்தாள்...
அங்கே நிறையப் பேர் இருக்கிறார்களே...
கண்களை அகலவிரித்துப்பார்த்தாள்...
சிறு குழந்தைகள்..கால் இல்லாதவர்கள்..கை இல்லாதவர்கள்.. பார்வையில்லாதவர்கள்... ம்.. பல பேர் இருக்கிறார்கள்....

அவர்களைப் பார்த்து கணக்குப்போடுவதற்கு முன்...
அவள் கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டே சென்றான் அந்த மனிதன்..

கையை விடு... என்று சுதாரித்துக் கத்துவதற்குள் கருப்பி விடப்பட்டாள்...

தள்ளி உட்காரும்மா...
கருப்பி திரும்பினாள்....
கூட்டத்தோடு கொண்டுவந்து அவளையும் தள்ளிவிட்டார்கள்....
கருப்பி வியப்போடு சுற்று முற்றும் பார்த்தாள்...
கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து கொண்டாள்...

ஏன் உட்கார வேண்டும்.... என்று அவள் மனம் சிந்தித்து எழ முயன்றபோது...
அவள் முன்னால் அந்த இலை வந்து விழுந்தது...

வாழையி்லை...
கருப்பி சுற்று முற்றும் பார்த்தாள்..
என்ன நடக்கிறது...
அவள் திரும்புவதற்குள்...
அந்த சோற்றுப் பார்சல் அவள் முன்னே விழுந்தது...

கருப்பி தன்னைத் தானே ஒரு தடவை பார்த்தாள்...
தன் முன்னால் இருக்கும் சோற்றுப் பார்சலையும் பார்த்தாள்...
இப்போது கொஞ்சம் தலையை எட்டி அந்தக் கடவுள் சிலையையும் பார்த்தாள்...

எனக்குப் பசிக்கிறது என்று சொன்னது அந்தக் கடவுளுக்கு கேட்டு விட்டதா....
அவளுக்கு ஆச்சரியம்... திகைப்பு...
என்னைப் போலவே கடவுளிடம் பசியென்று கேட்டவர்களா இவர்களெல்லாம்...
பந்தியில் இருப்பர்வர்களை வலமும் இடமுமாக திரும்பித் திரும்பிப் பார்த்தாள்..

அப்போ உள்ளே இருக்கிறவங்க யாருக்குமே பசி இல்லையா....
இல்லை.. கடவுளுக்கு இங்கே உள்ளவங்கள மட்டுந்தான் பிடிச்சிருக்கா...

கருப்பிக்கு எந்தக்கேள்விக்குமே சரியான பதில் தெரியவில்லை...
ஏழைகளின் வரிசையில் சோறரைக்கும் சப்தங்கள் தலையெடுக்கின்றன...
கருப்பியும் தன் பார்சலை விரித்து... சாப்பிடத் தொடங்கினாள்..

சாப்பிட்டுக்கொண்டே அங்கு நடப்பவற்றையும் .. வருவோர் போவோரையும் பார்த்துக்கொண்டிருந்தாள் கருப்பி...

சின்னச் சின்னக்குழந்தைகள்... அழகழகான குழந்தைகள்...
அழகழகான ஆடைகள்... வளையல்கள்... பூத்துக்குலுங்கும் அந்தச் சின்னஞ்சிறுசுகளைப் பார்த்துக்கொண்டே இவள் கண்கள் மெதுவாக நீரைக் கசியவிட்டது...

இந்தாம்மா... நீ தனியா இம்புட்டையும் சாப்பிடுவியா.. கொஞ்சம் சாதம் கொடேன்....
யாரது... கருப்பி திரும்பினாள்..
அருகில் இருந்த அந்தப் பெண்... கருப்பியும் யோசித்துப்பார்த்தாள்...
சரி என்று தலையாட்டினாள்....
இப்போது அவளுக்கு இன்னொரு யோசனை... அப்புறம் பசிச்சா என்ன பண்ணுறது...

கடவுளுட்ட சொல்லுறது... கடவுள் தான் கேட்டவுடனே சோறு போடுறாரே...
கருப்பி தனக்குத்தானே கேள்வியும் கேட்டு .. பதிலையும் கூறிக்கொண்டாள்...

போதும் என்று அவள் வயிறு சொன்னதும்.... எழுந்து கொண்டாள்...
எலேய்... இலைய எடு புள்ளோய்...

சத்தம் கேட்ட திசையில் நின்றிருந்த அந்த மீசை மாமாவைப் பார்க்கவே கருப்பிக்குப் பயமாக இருந்தது...

இலையை எடுத்துக்கொண்டு நடந்தாள்...
அதோ... அந்தக் குப்பைத் தொட்டி...
அருகில் நடந்து சென்றாள்...
அதன் அருகில் தண்ணீர்த்தாங்கி...
வழியும் குழாயில் வளைந்து நெளிந்து நொறுங்கிப்போயிருக்கும் அந்தச் சிறிய கோப்பையில் எல்லோரும் தண்ணீர் பிடிக்கிறார்கள்.. குடிக்கிறார்கள்...

கருப்பியும் காத்திருந்தாள்... இப்போது அவள் கையில் கோப்பை...
குழாயில் பிடித்தாள்....
நேரம்... குழாய் விம்மியது... ஒரு சொட்டை வாந்தியெடுத்து.. மறு சொட்டுக்கு வாயடைத்தது... கருப்பி கையை எடுக்கவில்லை.. பிடித்துக்கொண்டே இருந்தாள்...

சொட்டுச் சொட்டாக வழியும் தண்ணீரை ... கை வலிக்க வலிக்க பிடிக்கிறாள்...

இல்லை.. இதற்கு மேல் தண்ணீர் இல்லை என்று சொல்வது போல் குழாய் முழுசாக வாயை மூடிக்கொண்டது.... அந்தச் சிறிய கோப்பையில் அரைவாசி கூட தண்ணீர் இல்லை....

சரி.. கடவுளிடம் பசியென்று தானே சொன்னேன்... தாகம் என்று சொல்லவில்லையே என்று அவள் மனம் நினைத்ததோ என்னவோ... அந்தத் தண்ணீரைப் பருக முனைந்தாள்...

அப்போது...
படார்.... என்று கோப்பையில் ஏதோ படும் சத்தம்...
இருக்கும் அந்தக் கொஞ்சம் தண்ணீரோடு கோப்பை தரை நோக்கி விழுந்தது...
கருப்பி ஆச்சரியத்தில் திரும்பினாள்...
திரும்பும் அந்தக்கணமே அவளும் தூக்கி எறியப்பட்டாள்...
அம்...மா.... என்ற கருப்பியின் அலறல் சத்தம் அங்கு எதிரொலித்தது...
கருப்பியில் பட்டுக் கொண்டே மிருக வரம்பில் ஓடிச்சென்ற அந்த மனிதனுக்கு இது கேட்கவில்லை...

விழுந்து மறு புறம் திரும்புவதற்குள்... கருப்பியின் அருகே.....
ஏதோ வெள்ளை நிறத்தில் தெரிந்தது...
அது என்னவென்று அவள் யோசிப்பதற்குள்.. அவள் கைகளைப் பிடித்து யாரோ எழுப்பிவிடுகிறார்கள் போலிருந்தது...
கருப்பி எழுந்து கொண்டே திரும்பினாள்...

அப்போது.... அவள் எதிர்பார்க்காத நேரத்தில்...
அந்த மனிதன்

சனியன்...சனியன்...
அவன் சங்கிலியை பறிச்சிட்டு ஓடுறான்..நடுவுல வந்து நிக்குது சனியன்...

கருப்பியின் முகத்துக்கு நேரே எரிந்து விழும் அந்த மனிதனைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே கருப்பிக்கு அழுகை வந்துவிட்டது....
அவள் கண்கள் சிவந்து கண்ணீர் கொட்டத்தொடங்கியது...

அனாதரவாகித்தவிக்கும் பிஞ்சு மனம் வெதும்பியது...
ஏன் அவளைப் போய் திட்டுறிங்க... சின்னப்பொண்ணு விடுங்க....
அந்தப் பெண்குரலைக் கேட்டபோது வேதனையிலும் அந்தப் பிஞ்சு மனம் திரும்பிப்பார்த்தது...

சாந்தமே உருவான முகத்துடன் அந்தப்பெண்...
அவள் கைகளில் இழுபட்டுச்சென்றாலும் திரும்பித் திரும்பி கருப்பியையே முறைத்துப் பார்த்துக்கொண்டு செல்கின்றான் அந்த மனிதன்...

தண்ணீர் கேட்ட குரல்வளையும் தவித்துப்போனது...
அனாதையாகிவிட்ட தன் நிலையை கருப்பி மெதுவாக உணரத்தொடங்கினாள்...
அவளுக்கு அம்மா ஞாபகம் வந்தது... அழுது பார்த்தாள்... ஓ.. அவளைத்தான் தெரியவே தெரியாதே....

பாட்டி... ம்... அவள் கூட என்னைத் தனியா விட்டுட்டு போயிட்டாளே...
வெளியே சொல்லியழத்தெரியாத கருப்பியின் மனது தன்னைத்தானே நொந்து கொண்டது...

அவள் மனம் கல்லாகியது...
ஆனாலும் கால்கள் விடவில்லை... கிழவியோடு தங்கியிருந்த வீட்டை நோக்கி நடக்கலானாள்... கண்களில் தெரிவதுதான் பாதை.. கால்கள் போவதுதான் மார்க்கம் என்று ஒருவாறு தேடிப்பிடித்துக் கொண்டாள்...

அதிர்ச்சியிலிருந்து மீளாத அவள் சிந்தனைகள் ஒரு நிலையில்லாமல் தவித்தது... மெதுவாக அந்தக் குடிசையோரம் சாய்ந்துகொண்டாள்... அனல் வெயிலின் கொடூரம் தாங்காமல் .. அவள் கண்கள் மெல்ல மூடித்திறந்தன...

அப்போது...
பெரும் அலையே வந்து அடித்தது போலிருந்தது கருப்பிக்கு...
நித்திரை கலைந்தாள்... கண்விழித்துப்பார்த்தாள்...
உடம்பெல்லாம் ஈரம்...
யாரோ தண்ணீரை ஊற்றியிருக்கிறார்கள்... யார்... யார்... என்மேல் தண்ணீர் ஊற்றுவது... கருப்பி யோசித்தாள்... அதற்குள் மீண்டும் அந்தக் குடிசை வாயிலில் இருந்து பறந்து வந்து இவளைக் குளிப்பாட்டியது...

ப்பாக்...
வெட்டப்பட்ட மீன் செதில்கள்...தலை...முள்ளு...குடல்...என்று அறுவறுப்பாகயிருந்தது... அவள் உடம்பெல்லாம் அவை ஒட்டிக்கொண்டது...
கருப்பி சினந்தாள்...

கிழவியின் குடிசைக்குள் யார் என்று எட்டிப்பார்த்தாள்...
என்னடி புள்ள... என்ன வேணும்...
உள்ளேயிருந்து அந்தப் பெண் குரல் கொடுத்தாள்...
யார் நீங்க..
நீ யாருடி சின்னப்பொண்ணு... என்னைக் கேள்வி கேட்கிற...
இது என் பாட்டி குடிசை...
பாட்டியா... எந்த பாட்டி... ஏதாச்சும் கனவு கினவு கண்டிருப்ப... போ போ... அவள் விரட்டும் போது .. கையிலிருந்து பறந்து வரும் வெடுக்குத்தண்ணீர்....கருப்பியில் விழுந்தது...

கருப்பி வியந்தாள்... அதிர்ந்தாள்...யாரிடம் சொல்வது...
அவள் தலையே சுற்றியது... என்னதான் செய்வது... அவளுக்கு எதுவுமே தெரியவில்லை...

அப்போது அவள் தோள்களில் கையை வைத்தான் ... அவன்...
திரும்பிய கருப்பி அவளைக் கண்டுகொண்டதும் கண்களில் ஒரு கலக்கத்துடன்...
பாருங்க சின்னவன் மாமா... யாரோ எங்க பாட்டி குடிசையில இருந்துட்டு என்னையே விரட்டுறா ... என்றாள் பரிதாபமாக...

கருப்பி... அவ வேறு யாரும் இல்லைம்மா... இங்க தான் என்னோடதான் இருக்கிறா... பாவம் உன்னைப்போலத்தான்.. அவளும் யாரும் இல்லாதவ... அதான் கூட்டிவந்தன்... நீ வேற தனியா இங்க சுத்துற... உன்னையும் இங்க காணல... அதான் சரி கருப்பிக்கு துணையாயிருக்கட்டுமே என்று கூட்டி வந்தேன் என்றான்...பவ்யமாக...

கருப்பிக்குள் ஒரு சிறு ஆறுதல் மலர்ந்தது...
தன்னைப்போலவே யாரும் இல்லாதவள் என்றாள்... தன் வேதனைகளைப் புரிந்துகொள்வாள் என்ற ஆர்வம் அவளைத் தூண்டியது... மெதுவாகச் சிரித்தாள்...

ஏன்டி... என்ன வச்சிருக்கே... பாவமில்லை... கருப்பிக்கு ஏதாச்சும் குடு...
அவன் அதிகாரக்குரலுக்குப் பெட்டிப்பாம்பாய் அடங்கிப்போனாள் அவள்...

சின்னவன்...
அப்பகுதி குடிசை வாழ் மக்களுக்குள் நன்கு அறியப்பட்டவன்...
கருப்பிக்குக்கூட அவனைத் தெரியும்....
இப்போது இவள் மனதில் எந்தக்கோபமும் இல்லை... மாறாக .. ஒரு நம்பிக்கை உருவானது... தன்னையும் அவர்கள் சேர்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையும்... ஆசையும் உருவானது...

குடிசைக்குள் நுழைந்து கொண்ட கருப்பி... துலாவித் துலாவி தேடினாள்...
ஒருவாறு அந்த பள்ளிச் சட்டையை கண்டெடுத்தாள்.... பழைய பை ஒன்றுக்குள்.. கசங்கிப்போன கந்தலாக இருந்த துணியை கையிலெடுத்தவளாய்...சின்னவனிடம் வந்தாள்...

சின்னவன் மாமா... ஒன்று கேட்கட்டுமா...
கேளு கருப்பி...
நாளையிலயிருந்து என்னைப் பள்ளிக்கூடத்துல சேத்துவிடுறிங்களா...
கருப்பியை மேலும் கீழுமாகப் பார்த்த சின்னவன்... ஓ...அதுக்கென்ன.. வாத்தியார் பய நான் சொன்ன கேட்காமலா..... கேட்கலன்னு வையி....அப்புறம் அவன் இந்தப் பக்கம் வந்துருவானா என்ன... என்று அட்டகாசமாகச் சிரிக்கும் சின்னவனின் வார்த்தைகள் கருப்பியின் மனதுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது...

சட்டையை நெஞ்சில் அணைத்தவாறே ஓடினாள்...
ஓடிச்சென்று அந்த மரத்தடிப்பிள்ளையாரிடம் மண்டியிட்டாள்...
விநாயகரே... நான் பள்ளிக்குப் போகப்போறன்...
நிறைய படிக்கப்போறன்.... என்னை ஆசிர்வாதம் பண்ணுறியா....என்று தன் தலையைக் குனிந்தாள்...

கருப்பியின் மனதுக்குள் ஒரு மாற்றம் உருவானது...
வாழ்க்கையில் இழந்த எதையோ திரும்பப்பெற்ற உணர்வு அவளிடம் வந்தது...
தனிமையில் வாடித்தவித்த அவள் மனதுக்குள் ஒரு விடிவு பிறந்தது..

இந்த மாற்றம் அவளுக்குள் ஒரு புதுத்தெம்பை வழங்கியது...
இப்போது அவளுக்குப் பசிக்கவும் இல்லை... தாகமும் இல்லை... மனசு நிறைந்திருந்தது... நிம்மதியாய் மறையும் பொழுதை ரசித்துக்கொண்டே தன் கனவுகளை மலரவிட்டாள்....

என்னடியம்மா கருப்பி... யாருடி உனக்கு இந்தப் பேரை வச்சது....
கேள்வி கேட்டவளை ஒரு தடவை பார்த்துவிட்டு... ஆ... எங்கம்மா...
பேருவைச்சாளாம் பேரு... உலகத்தில இல்லாத பேரு... அதென்னடி கருப்பி...
அவள் கேள்வி கருப்பிக்குள் எதையோ வரவழைத்தது... எனினும் மறுநொடி அமைதியானாள்...
இந்தாம்மா சாப்பிடுறியா...
இல்லை பசிக்கல... நான் தூங்கப்போறன் ... என்று கூறிவிட்டு வழக்கமாக அவள் கண்மூடிக்கொள்ளும் அந்த மூலையில் படுத்துறங்கினாள்...

இரவின் ஆளுமைக்குள்...ஊரே அமைதி கண்டது...

எத்தனை மணிநேரம் தூங்கினாள்...எதற்காக விழித்தாள் என்று கருப்பிக்குத் தெரியவில்லை... ஆனால் ஏதோ ஒன்று அவளை உலுப்பி எழுப்பியதை மட்டும் உணர்ந்து கொண்டாள்....

லேசாகக் கண்களைக் கசக்கித் திறந்தாள்... கும்மிருட்டு....
அந்தப் பெண்ணின் கால்கள் தன் மீது விழுந்திருப்பதை உணர்ந்து கொண்டாள்...
மெதுவாக எழுந்து அந்தக் காலிலிருந்து விடுபட முனைந்தாள்...
ஆனால் அந்தக் கால் அசைகிறது...
கருப்பியால் விடுபட முடியவில்லை...
கையால் இழுத்துப்போடவும் பயமாக இருந்தது...
மெதுவாகத் தன் இடது கையை தூக்கி நிலத்தில் தடவினாள்...
இதோ... அந்தப் பெண்ணின் தலையில் கையை வைத்தது போல் உணர்ந்து கொண்டாள்.... பயத்தில் மீண்டும் கையை எடுத்துவிட்டு...திடீரென எழுந்து கொண்டாள்...

அருகில் படுத்திருந்தவளில் எந்த மாற்றமும் இல்லை...
கருப்பி எழுந்துகொண்டாள்.... தட்டுத்தடுமாறி அந்த மூலைக்கம்பின் இடையில் துலாவினாள்...

இதோ...அன்றொருநாள் ஒளித்துவைத்த அந்த தீப்பெட்டி கையில் தட்டியது..
எடுத்தாள்...
ஒரு தீக்குச்சியை எடுத்து பெட்டியில் உரசினால்...
அதில் எழுந்த மெல்லிய வெளிச்சத்தில் கருப்பியின் கண்களில் மங்கலான இரு உருவங்கள் தெரிந்தது...
இப்போது குச்சியில் சுவாலை எழுந்தது...
தீப்பெட்டியை கீழே விட்டுத் தன் கையை எடுத்து வாயில் வைத்துப் பொத்திக்கொண்டாள் கருப்பி...

அருகில் இருவரும் நிர்வாணமாய்க் கிடக்கும் காட்சியினைக் கண்ட அதிர்ச்சி கருப்பியை ஆர்ப்பரித்துக்கொண்டது...

சுவாலையை அணைத்தாள்...
கருப்பிக்கு வியர்த்து வழிந்தது...
அப்படியே கூனிக்குறுகிக்கொண்டாள்....சுருண்டு படுத்தாள்...
பயத்தில் அவள் திரும்பவே இல்லை... கண்கள் மூடியது...
அவள் அறியவே இல்லை... தூக்கமும் அவளை கொள்ளை கொண்டது...

விடிந்தது...
ஓரத்தில் மேய்ந்திருந்த ஓலையிடையில் போட்டிபோட்டு நுழைந்த கதிரவன் ஒளி கருப்பியின் தோலை சூடாக்கியது...

சூட்டையுணர்ந்து கொண்ட கருப்பி எழுந்தாள்....
சுற்று முற்றும் பார்த்தாள்...
இரவின் அதிர்ச்சியிலிருந்து அவள் இன்னும் மீளவில்லை...
மெதுவாக எழுந்து தேடினாள்...
அங்கும் இங்கும் ... வெளியிலுமாக தேடினாள்...
யாரையும் காணவில்லை... யாருமே இல்லை....
கையில் அணைத்து வைத்திருந்த அந்த பள்ளிச்சீருடை .. அதோ அந்த மூலையில்...

எங்கே அவள்... அந்தப் பெண்ணைத் தேடினாள்...
எங்கே அவன்... சின்னவனையும் காணவில்லை... கருப்பிக்குள் இனம் புரியாத ஒரு பயம் உருவாகியது... வெளியே ஓடினாள்... மரத்தடிப்பிள்ளையாரையும் தாண்டியே ஓடினாள்.... திடீரென நின்றவளுக்கு மேலும் கீழுமாக மூச்சு வாங்கியது..

என்ன செய்வதென்று தெரியவில்லை...
நேற்றைய நாள் அவளுக்கு ஞாபகம் வந்தது...
திரும்பினாள்... அந்த கோயிலை நோக்கி நடந்தாள்....
கடவுளிடம் கேட்காமலே இன்றும் பந்தியில் சாப்பாடு பரிமாறப்படுகிறது...
பயந்து பயந்து தண்ணீரையும் குடித்துக்கொண்டவள்... இஷ்டப்படி தெருவோரம் நடந்தலைந்தாள்...

கால் வலிக்கும் வரை நடந்தாள்...
ஒரு கட்டத்தில் ஆசை தீரும் வரை அழுதாள்..
தாயை நினைத்துப்பார்த்தாள்... தாய்க்கிழவியை நினைத்துப்பார்த்தாள்...
வேதனையும் சோதனையும் நிறைந்த நேரங்கள் அவளை உலுக்கியெடுத்தன..

எதற்காக வாழக்கின்றோம்...எதை அடையப்போகிறோம் என்றெல்லாம் கேள்வி கேட்கும் அளவு கருப்பியிடம் பக்குவம் இல்லை...
அந்த அளவில் யோசிக்கும் வயதும் அவளுக்கில்லை...

இறைவன் வரைந்த விதியாட்டத்திற்குள்..சிக்கித்தவிக்கும் அப்பாவி ஜீவனாய் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தாள் கருப்பி....

மாலையும் ஆனது....
வேறு எங்குதான் போவது...
கிடைத்ததை உண்பதும்...குடித்ததுமாக வயிறும் பழகிப்போனது..
பாசத்தையூட்டி வளர்த்த அந்த நாலடி மண் வாசனை மட்டுமே இப்போது கருப்பிக்குப் பிடித்திருந்தது...

மீண்டும் தன் குடிசையை நோக்கி நடந்தாள் கருப்பி....
கால் வலிக்க வலிக்க ... குடிசையை நோக்கி வந்துகொண்டிருந்த கருப்பிக்கு வாசலிலேயே அதிர்ச்சி காத்திருந்தது....

வா.. கருப்பி .. வா.. எங்க போயிட்ட..
சின்னவனின் மிடுக்கான குரல் அவளை வரவேற்றது..

கருப்பியின் கண்கள் அங்கும் இங்கும் சுழன்று தேடின...
இடுப்பு மடிப்பில் தூக்கிக்கட்டிய சேலையுடன் நடந்து வந்த அவள் மீது கருப்பியின் பார்வை விழுந்தது...

இவள் அவளா.... இல்லையே... அவள் இல்லையே... இது வேறு ஒருத்தி...
அப்போ அவள்... கருப்பியின் யோசிக்க ஆரம்பிக்க...

என்னப்பா சின்னா.. யாரு இந்தப் பொண்ணு...
இன்னுமொரு ஆண் குரல்...
கருப்பி குரல் வந்த திசை நோக்கித்திரும்பினாள்...

யாரோ ஒருவன்... அவனை இதற்கு முதல் பார்த்ததே கிடையாது...

இது கருப்பி....
சின்னவன் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தான்...
கருப்பி... ம்... கலருக்கேத்த பேரு... என்று அட்டகாசமான அவன் சிரிப்பொலி காற்றில் கலந்து வந்தது...
கருப்பியின் கண்களுக்குள் கோபம் தெறிக்க ஆரம்பித்தது..

யார் இவங்கெல்லாம்...
கருப்பி சத்தமாகக் கேட்டாள்...

இதை எதிர்பார்க்காத சின்னவன் மெல்ல எழுந்தான்...
இவங்கள்லாம் என் சொந்தக்காரங்க கருப்பி..

இங்க என்ன பண்றாங்க... இது என் பாட்டி வீடு... வேற எங்கயாவது கூட்டிப்போங்க சின்னவன் மாமா.... கருப்பி கலங்கி வரும் குரலில் மண்டியிட்டாள்...

என்ன கருப்பி... ஏதோ இன்னைக்கு ஒரு ராத்திரி இங்க தங்கிட்டு போகப்போறாங்க...

அவன் சமாளிப்பு கருப்பிக்குப் பிடிக்கவே இல்லை...

இப்படித்தான் நேற்று யாரையோ தங்க வைச்சிங்க... இன்னைக்கு வேற யாரோ...சின்னவன் மாமா வேணாம்... கருப்பி மேலும் கெஞ்சினாள்...

அது சரி... சாப்பாடெல்லாம் ஆச்சா ... எங்க சாப்பிட்ட...
சின்னவன் கதையை திசை திருப்பினான்...

ஆனாலும் கருப்பி விடவில்லை...
சின்னவன் மாமா... இவங்கள கூட்டிட்டு போங்க.. நீங்க வேணும்னா இங்க தங்கிக்கங்க... போங்க...

அவள் இதைச்சொல்லி முடிப்பதற்குள்...
எதிரொலியும் அருகிலேயே விழும் அளவு அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் அந்த மனிதன்....

கருப்பி திகைத்துப்போனாள்...
விபரம் தெரிந்த நாள் முதல் அவளை யாரும் இப்படி அடித்ததே கிடையாது...
அவனை வெறிச்சோடிப்பார்த்தவாறே விம்மினாள்... விம்மி விம்மி அழுதாள்...
கண்ணீர் ஆறாய் வடிந்தது...

என்ன பேச்சு பேசுற... அடக்க ஒடுக்கமா குழந்தையாட்டம் இரு...ஆமா...
அவன் கர்ஜித்தான்...

அனைத்தும் நொடிப்பொழுதில் நடந்தது...சின்னவனும் திகைத்துப்போனான்..
கருப்பியை சமாளிக்க அருகில் நடந்து வந்தான்...

கருப்பியை தொட முனைந்த அவன் கைகளை உதறித்தள்ளிவிட்டு .. கருப்பி ஓடினாள்...

எதை செய்வதென்றறியாத அவளுக்கு... வேறு எதுவும் செய்ய முடியவில்லை..
ஓடிச்சென்று குடிசையின் ஒரு மூலையில் முடங்கினாள்...

விம்மி விம்மி அழுதாள்...
பதறும் இள நெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவும் யாரும் இல்லை...
வெளியில் அட்டகாசமான சிரிப்பொலி...
யார் யாரோ எல்லாம் சொந்தம் கொண்டாடுகிறார்கள்...
இனியும் இந்த இடத்தில் இருப்பது பாதுகாப்பில்லை.... கருப்பியின் மனம் சிந்தித்தது...

எழுந்திருக்க முற்பட்டாள்... ஆனால் ஓங்கி அறைந்த அவன் கைகள் இரும்புக் கைகள்... கருப்பிக்கு தலையும் சுற்றிக்கொண்டு வந்தது..
அழுது கொண்டே .. தன்நிலை மறந்தாள்...

நேரச்சுழற்சி வேகமாக இருந்தது...
கருப்பிக்குள் ஒரு மெதுவான உணர்வு எழ ஆரம்பித்தது...
லேசாகக் கண்விழிக்க முனைந்தாள்....
வெறுந்தரையில் படுத்திருந்தது... வயிற்றில் ஏதோ ஊர்கின்றது போன்று ஒரு சிறு உணர்வு...

தலையடியில் வைத்திருந்த வலக்கையை மெதுவாக எடுத்து வயிற்றில் வைத்தாள்...

கை... அது கை... ஏதோ இல்லை... யாருடையதோ கை...
கருப்பி திடீரென அதிர்ந்தாள்... கண்களை அகல விரித்துப்பார்த்தாள்... கும்மிருட்டு... என்ன செய்வதென்று பயந்தாள்... மெதுவாக அந்தக் கையை தட்டி விட்டாள்....

ஒரு கணம்.. அந்த ஒரு கணம் நிம்மதி... மூச்சிழுத்து விடுவதற்குள் மீண்டும் அந்தக் கை.... கருப்பியின் வயிற்றில் விரல்களால் கோலம் போட்டது...

கருப்பி மீண்டும் தட்டினாள்....

மீண்டும் ... இதோ கருப்பி எழுந்து கொண்டாள்...
வயிறிருந்த இடத்தில் அவள் கால் தட்டியது... காலை இறுக்கமாக இழுக்க முனைந்தது அந்தக் கை...

கருப்பிக்கு சத்தமாகக் கத்தவேண்டும் போலிருந்தது...
முடியவில்லை... மெதுவாக காலையும் மேலே இழுத்துக்கொண்டாள்....
முழங்காலை இழுத்துப்பிடித்து கைகளால் இறுக்கிக்கொண்டாள்...

கருப்பிக்கு வேர்த்தது...
எழுந்து ஓடவேண்டும் போல் நினைத்தாள்....
எங்கே.. எங்கே ஓடுவது... அர்த்த ராத்திரியில் எங்கே ஓடுவது...
பசி வேறு....
கருப்பியின் கண்கள் சுழன்றன...
முழுதாகக் கலைந்த நித்திரையில்லை அது... திடீரெனக் குழப்பப்பட்டிருக்கிறது..
வேதனையுடன் ... அவள் கண்கள் வறண்டு கிடந்த கன்னத்தை ஈரமாக்கியது..
கருப்பி அழுகிறாள்...

ஒரு சிறு பொழுது கூட நிம்மதி காணாத அவள் இதயமும் அழுகிறது...
திடீரென கருப்பி சுதாரித்தாள்.. எழுந்தாள்.... அந்த இருளிலும் நிலத்தைக் கூர்ந்து பார்த்தாள்..

வாசலில் கிடக்கும் அந்த ஓலை இடுக்குகளுக்குள் நுழைந்து நெளிந்து மெல்லிய பனிப்படராய் கீறல் ஒளி .. அதில் ஊகிக்கும் அளவுக்கு இல்லை...
கருப்பி குடிசையின் ஓரத்தைப் பற்றிக்கொண்டாள்...

மெது மெதுவாக... கால்களை எடுத்து வைத்து .. ஓரத்தைக் குறி வைத்து ஓலையில் கைகளைத் தேய்த்தவாறு நடந்தாள்...

வெகு நேரப் போராட்டம்... வாசலை அடைந்து விட்டாள்..
மெதுவாக வாசலைத் திறந்தாள்...வெளியேறினாள்...
கருமை நிற வானத்தின் தூரத்தில்... அந்தச்சின்னஞ்சிறிய செம்மைக் கோடுகள்...

விடியப்போகிறதா... கருப்பி தனக்குத்தானே கேள்வி கேட்டாள்...
இருட்டில் எங்கே செல்வது.... யோசனையுடன் வாசலில் குந்திக்கொண்டாள்...
வானத்தையே வெறிச்சோடிப்பார்த்தன அவள் கண்கள்..

அடிவானம் மெல்ல மெல்ல சிவக்க ஆரம்பித்தது....
கருப்பியின் கண்களோ மெல்ல மெல்ல மூட ஆரம்பித்தது...
பசி..வேதனை...போராட்டம்...களைப்பு .. என எல்லாம் சேர்ந்து அவளை வாட்டி எடுத்தது... முகத்தில் வழியும் கண்ணீரைக்கூடத் துடைக்கவிவ்லை...

குந்திக்கொண்டே முகத்தை முழங்காலில் தாங்கி... கண் அயர்ந்தாள்....

சிறிது நேரம் கழித்து.. எங்கோ கேட்ட அந்த சேவல் சத்தம் அவள் போராடும் மனதைத் தட்டி எழுப்பியது... அதிகாலைச் சூரியன் மெல்ல எட்டிப்பார்க்க ஆயத்தமாகிறான்... சிவந்த வானம் கக்கும் மெல்லிய ஒளியில் கண்திறந்தாள் கருப்பி...

அந்த வெளிச்சத்தில் குடிசையின் உள்ளே திரும்பிப்பார்த்தாள்...
ஒன்றல்ல இரண்டல்ல... ஆறு கால்கள்... போத்தல்கள்... பேப்பர்கள்.. ஈயத்தாள்கள்... கருப்பிக்கு என்னவென்றே புரியவில்லை...

அந்தப்பெண்ணைக் காணவில்லை.... அவள் இரவோடு இரவாக சென்றுவிட்டாளா... ம்.. கருப்பிக்கு யோசிக்க நேரமில்லை.... விடியும் முன்னர் எழுந்து ஓடிவிடு... அவள் மனது அவளை எச்சரிக்கை செய்தது...

ஒவ்வொரு நாளும் போராட்டமாகிவிட்டது...
யார் யாரோ எல்லாம் வருகிறார்கள்...
இரவு அவள் வயிற்றில் கோலம் போட்ட அந்தக் கைகளை நினைக்க அவளுக்கு மேலும் பயம் பிடித்தது....
எழுந்தாள்... எழுந்து ஓடினாள்....

சாலையோரத்தைப்பிடித்து ஓட ஆரம்பித்தாள்...
அடிக்கடி திரும்பிப்பார்த்துக்கொண்டே ஓடினாள்...
அவள் கண்களில் வெறுமை.... விரட்ட விரட்டத் துரத்தும் விதியைக் கேள்வி கேட்க அவளுக்கு ஞானம் போதவில்லை...
பேதையாக ஓடுகிறாள்... ஓடிக்கொண்டே இருந்தாள்...

வயிறு வலித்தது...
தொண்டை வறண்டது...
தண்ணீர்... தண்ணீர் தாகம் அவளை வாட்டி எடுத்தது...
கண்களைச் சுழற்றினாள்...
அதிர்ஷ்ட்டம்... அதோ அந்தக் குழாய்... அவள் கண்களில் ஒரு மலர்ச்சி...
ஓடிச்சென்றாள்... திறந்தாள்....
சொட்டுச் சொட்டாய் வடியும் தண்ணீரை உறிஞ்சு உறிஞ்சுக் குடித்தாள்....
தாகம் தீருமா தெரியவில்லை... ஆனால் குடித்தாள்...
பசி நீங்கிடுமா தெரியவில்லை... ஆனால் தண்ணீரை உறிஞ்சுக்குடித்தாள்...

ஆதவனும் எட்டிப்பார்க்கும் நேரம் நெருங்கிவிட்டது...
போதும் என்று ஆன கருப்பியும் எழுந்துகொண்டாள்....
சுற்று முற்றும் பார்த்தாள்...

சாலையோரத்தில் சோம்பல் முறித்துக்கொள்ளும் நாய்கள்...
வேலி தாண்டி ஒடிக்கொண்டிருக்கும் பூனை...
ஓய்ந்து கிடக்கும் சாலை...
விறகு வைத்துத் தள்ளிக்கொண்டு போகும் இழுவை வண்டி...
இவற்றையெல்லாம் பார்த்த அவள் கண்களுக்குள் சிறு மலர்ச்சி...

லேசாகப் புன்முறுவல் பூத்தபடி.... நடக்கலானாள்...
ஒரு ஐம்பது அடி நடந்திருப்பாள்..
லேசாக அவள் வயிறு வலிக்க ஆரம்பித்தது...
வயிற்றில் ஒரு கையை வைத்துத் தடவினாள்...
மேலும் ஒரு பத்தடி நடந்திருப்பாள்..
வயிற்றுக்குள் ஏதோ குத்துவது போன்று ஒரு உணர்வு...
இரு கைகளாலும் பொத்திப்பிடித்தாள்...
முடியவில்லை...
குனிந்தாள்...
நெளிந்தாள்...
அ...ம்.....மா என்று லேசாக முனங்கினாள்... முடியவேயில்லை...
வலி தாங்க முடியவில்லை....
வயிற்றைப்பிடித்துக்கொண்டு அந்த வேலியோரம் சாய்ந்தாள்...

அம்மா.... என்று பலமாக அலறி ... கழுத்தை ஒரு புறம் சாய்த்தாள்...
பல்லைக் கடித்துக்கொண்டாள்...
கண்களை இறுக்கி மூடி .. வயிற்றைப் பொத்திப்பிடித்துக்கொண்டிருந்தவள்..
மெதுவாகக் தலையைக் குனிந்து பார்த்தாள்...
கண்களை அகல விரித்தாள்....

முழங்காலைத் தாண்டி மெல்லிய கோடாக வழியும் இரத்தத்தைக்கண்டதும் அதிர்ந்து போனாள்...



Share this:

Thailand

Malaysia

Dubai

Bali

Srilanka

Dubai

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies