அசைவற்று அதிர்ச்சியுற்ற நிலையில் சுவரில் சாய்ந்தவளாக சுருதி.....அப்படியே கீழே இருந்தாள். அவளால் தன் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
அம்மா.....ஐயோ..அம்மா....ஏனம்மா எனக்கு மட்டும் இந்த வாழ்க்கை...? யாரை நம்பி வந்தேனோ அவரே.....ஐயோ....ஏன்.....ஏன் இப்படியெல்லாம்....கடவுளே... நான் என்ன குற்றம் செய்தேன். ஏன் எனக்கு இதெல்லாம் தெரியாமல் போனது..
ஐயோ....ஐயோ......என்று தன் தலையில் பலமாக அடித்துக்கொண்டாள்.
ப்ளீஸ் சுருதி...ப்ளீஸ் நான் சொல்லுறதைக் கேளுங்க...ப்ளீஸ்..
எனக்குத்தெரியாது...சுருதி இந்த விசயம் உங்களுக்குத்தெரியாது என்று எனக்கத் தெரியாது சுருதி. ........நா.....அவன் முடிக்க முன்பு குறுக்கிட்டான் ராகவன்.
அடச்சீ....நீங்க எல்லாம் ஒரு நல்ல நண்பரா....? எப்படியெல்லாம் சேர்ந்து நாடகமாடி....எப்படி ....எப்படி ராகவன் உங்களால் முடிந்ததது.? ஏன் எனக்கு மறைச்சீங்க......நான் யாருக்கு என்ன துரோகம் செய்தேன்......
இல்ல அப்படியொன்றுமில்ல....
என்ன அப்படி ஒன்றுமில்ல......அப்ப எல்லாம் பொய்யா......என்ன ராகவன் இது....என்ன....சொல்லுறீங்க....ப்ளீஸ் முதல்ல நீங்க இங்கிருந்து போயிடுங்க...
சுருதி.....எப்படி நான் .......
நான் எப்படியாவது தாக்குப்பிடிப்பேன்....என்னை தொந்தரவு செய்யாதீங்க..முதல்ல நிங்க போயிடுங்க ப்ளீஸ் உங்கள கையெடுத்து கும்பிடுறன்...போயிடுங்க.....
சுருதி...நான் சொல்லுறதைக்கொஞ்சம் கேளுங்க.....ஷக்தி....
ஸ்டொப்...ஸ்டொப்...ப்ளீஸ்...லீவ் மீ எலோன். போயிடுங்க....எனக்கு இனி யாரைப்பற்றியும் வேண்டாம்....ராகவன் போயிடுங்க....போயிடுங்க....
இனிமேலும் தான் அந்த இடத்திலஇருப்பது சரிபட்டுவராது....என்று எதுவுமே பேசாது....சென்றான் ராகவன்.
கிறீச்.......மெல்ல கதவு திறக்கும் ஓசை....வீடு முழுவதும் முழு இருட்டு. இந்த இருட்டிலும், அடுப்படியின் யன்னல் ஓரத்து......கண்ணாடியினால் இரவின் மெல்லிய ஒளி...வீட்டிற்குள் மெல்லியதாக தெரிந்தது.
அந்த வெளிச்சத்தினால் கண்டுகொண்டான் ஷக்தி.....சுருதி நிலத்திலே தன் இரு கால்களையும் குற்றிக்கொண்டு முழந்தாளிட்டு.....குந்தியிருந்து முழங்காலிலே முகத்தைப்புதைத்த படி அமர்ந்திருந்தாள். அருகில் இருந்த சாப்பாட்டு மேசை லைற்சுவீச்சை தட்டினான்.
ஷக்தி.....வருகை சுருதிக்கு தெரியாமல் இல்லை.
அவள் அருகிலேயே தானும் அமர்ந்து கொண்டான். மெல்ல தன் ஒரு கரம் கொண்டு அவளை தன்னோடு சேர்த்து அனணத்துக்கொண்டான்.
சுருதி....சுருதிம்மா.....என்னைப்பாரும்மா...சுருதி......நானடா உன்னிலதான்டா நேசம். ....
சொல்லிக்கொண்டே...அவள் முகத்தை உயர்த்தி பார்த்தான்....அவளோ....அதை விரும்பாதவளாய்...மீண்டும் தன் முகத்தை குற்றியிருக்கும் கால்களுக்குள் புதைத்துக் கொண்டாள்.
ம்......என்னம்மா செய்வது...விதி என் வாழ்க்கையிலையும்.......
அதுவரைக்கும் பேசாத...சுருதி...அப்போது பேசினாள்.....அவள் முகம் அழுது அழுது சிவந்து போயிருந்தது. கண் மடல்கள் வீங்கிப்போயிருந்தன....
ஷக்தி....யாருக்கு...விதி விளையாடியது...? எனக்குத்தான்...ஷக்தி என் தலைவிதி....
இல்லம்மா......நீ..தான் எனக்கு....எல்லாமே.....
நிற்பாட்டுங்க....எதுவுமே எனக்குத்தேவல.....இனி என் வாழ்க்கை எப்படிப்போகிறதோ.....போகட்டும்....எதுவுமே....எனக்கு வேண்டாம்.
சுருதி....நானே...இந்த விசயத்தை சொல்லவேண்டுமென்றுதான் இருந்தேன்....அதற்குள்......ராகவன் ஏன் அவசரப்பட்டான்....என்று இருக்கு.....அது தான் எனக்குத் தெரியல்ல....
சும்மா அடுத்தவர் மேலே பழியைப்போடாதீங்க......நீங்க எனக்குச்சொன்னது..என்ன சொன்னீங்க...பவித்ரா....ச்சீ..ச்சீ...வேண்டாம் எனக்கு இனிமே யாரைப்பற்றியும் வேண்டாம். என்னை இப்படியே தனியா இருக்க விடுங்க...ராகவன்...
இல்லம்மா....உன்னை இப்படியிருக்க விட்டு என்னால......
ம்......இது ஒன்னும் உங்களுக்குப்புதுப் பழக்கம் இல்லைத்தானே.....நானும் ஏற்கனவே பழகிக் கொண்டது தான்.....போயிடுங்க...
சுருதி.....நான் சொல்லவந்தது என்னவென்றால்.......
வேண்டாம்....திரும்பத்திரும்ப..என்னை தொந்தரவு செய்யாதீங்க...
அவ்விடத்தை விட்டு எழும்பிய ஷக்தி.....பிரிஜ் கதவைத்திறந்து தண்ணீர் எடுத்து போத்தல் மூடியைத்திறந்து.....மட மட வென குடித்தான். அப்படியே ஒரு கப்பில பாலும் ஊற்றி மைக்குரோவில் பாலை சூடு ஏற்றினான்.
கையிலே பாலுடன்...மீண்டும் ஷக்தி சுருதியின் அருகில்....
சுருதி.....இஞ்ச பாரும்மா....இதையாவது குடிம்மா...எனக்காக கொஞ்சம் குடிம்மா.....
ம்....ம்....இதிலே வையுங்க...அப்புறமா குடிக்கிறேன்.
இல்ல....நான் நம்ப மாட்டேன்.....இப்ப குடிக்கவேணும்.
ம்...எல்லாம் நம்பிக்கையின் படி தானே...வாழ்க்கைஓடுது...போங்க...நீங்க....போய் உங்க அலுவலைப்பாருங்க....
அலுத்துக்கொண்டாள்......அவளுக்கு ஷக்தியைப்பார்க்க எரிச்சலாகவே இருந்தது. அவன் கை பட்ட போது தீயிலிட்ட புலுவாய் உணர்ந்தாள்.
இதற்குப் பிறகும் எதுவுமே பேசாது......படுக்கையறைக்குச் சென்று....இரண்டு தலையணைகளையும் எடுத்து வெளியே கொண்டு வந்து போட்டான்.
அதில ஒன்றை சுருதிக்குப்பக்கத்தில போட்டான். மற்றொன்றில் தன் தலையை சாய்த்துக்கொண்டான்......அப்படியே....சுருதிக்கப்பக்கத்திலையே.....அவனும் தரையில் படுத்துக்கொண்டான்.
சுருதி எழுந்து....பக்கதில இருந்த பாலை பைப்பை திறந்து ஊற்றினாள். அத்தோடு அந்த இடத்தை செயற்கை வெளிச்சசத்தினால் அலங்கரித்த
லைற்றை ஓவ் பண்ணினாள்.
மீண்டும் அந்த தரையில்.......சுருதி.
மெல்லிய...விசும்பல்கள்...அந்த மெளனமான நேரத்தில பெரிதாகவே கேட்டது.
கொஞ்ச நேரத்தில......ஷக்தி நன்றாகவே உறங்கிப்போனான்.
அப்போது நேரம்...ஜாமம்....3 மணியிருக்கும்.
கதிரை ஒன்று கீழே விழுந்த சத்தம்......
ஆழ்ந்த தூக்கத்தில இருந்த ஷக்தி..திடுக்குற்றாற்போல கண்களைத்திறந்து....படுக்கையில இருந்து எழுந்தான்.......
ஐயோ.......சுருதி......
சுருதி....சுருதி......எனை பாரம்மா...சுருதிம்மா....என்னைப்பாரம்மா....செல்லம்..டேய்...சுருதி....
ஆகாய கங்கை தரையில் கொட்டியது போல..பொல பொல வென்றுகண்ணீர் பெருக்கெடுத்தது.ஷக்திக்கு. சுருதியின் தொண்டையில் இறுக்கப்பட்ட சேலையை கையில் எடுத்தாலும், சுருதியினால் பேச முடியவில்லை. மயக்கத்திலேயே கிடந்தாள். அவசரஉடனடி மருத்துவ சேவைக்குபபோனது...அம்புலன்சில் சுருதி மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டாள். ஷக்தியும் கூடவே சென்றான். மருத்துமனையில் விஷேட சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு..சுருதி மயக்கம் தெளிந்து சுற்றும் முற்றும் பார்த்தாள்.
அவள் பார்வையில் யாரையோ..தேடுவது போன்று காணப்பட்டதையடுத்து.....அருகில் இருந்த டாக்டர் சுருதிக்குக்கிட்டச்சென்றார்.
டோன்ட் வொரி...யு..ஆர் பேர்பெக்ட்லி ஓகே.
டொக்டர்...கான் ஐ சீ மை ஹஸ்பென்ட்..?
யெஸ்...வை நொட்.....பட்......
டாக்டரால் தொடர்ந்து விளக்கம் கொடுக்கமுடியாமல்...கையைப்பிசைந்தார். அதன் பின்பு....
சொறி டியர்......நொட் எலவுட்.
சுருதி புரிந்து கொண்டாள். அந்த ஆங்கிலேயர் மருத்துவமனையில் ஒரு தமிழ் இன்டர்பிரட்டர் வரவழைக்கப்பட்டார். அத்தோடு இரண்டு பொலீஸ் காரர்களும் அங்கே வந்திருந்தனர்கள்.
ஐயோ...என்னை ஏன் காப்பாற்றினீங்க.......ஷக்தி. எனக்கு வாழப்பிடிக்காமல் தானே இந்த முடிவை எடுத்தேன்.
தன் மனதை கல்லாக்கிக்கொண்டு.....விழி வழி வழிந்த கண்ணீரை துடைத்து துடைத்து.....அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஆம், இல்லை ஆம் இல்லை என்ற பதில்களைக் சொல்லிக்கொண்டிருந்தாள் சுருதி
ஒருவர் கேட்டார்....இதனை உங்கள் சம்மதத்துடன் மீடியாவிற்கு கொடுக்க விரும்புகின்றீகளா எனக் கேட்டார்.
அப்போது.....கூறினாள் வேண்டாம். நான் அதனை விரும்பவில்லை.
உங்களுக்காக அரசாங்க சார்பில தங்குமிட வசதி, மற்றும், இதர தேவையான பாதுகாப்புக்கள் யாவும் செய்து தரப்பட்டுள்ளன. இன்றே மாலை 6 மணிக்கு அல்லது அதற்கு முன்பாக நீங்கள் அங்கு செல்லலாம்.
என்ன............நா...நா...ஏன் அங்க போகனும்..?
இது யார் எடுத்த முடிவு...? என்னைக்கேட்காமலே.....இல்ல நோ...நோ...
டொக்டர் ப்ளீஸ் ஐ டோன்ட் லைக் இட். ஐ ஹேவ் டு கோ மை ஹோம்.
ம்.....வந்திருந்தவர்கள் தலையில கையை வைத்தார்கள்.
என்ன இது வேடிக்கை......?
கணவனைப்பிடிக்காமல் தூக்கு போட்டாங்க...அப்புறம் என்னடா என்றால்...அவர் கூடவே வாழப் போறேன்னு இருக்கிறாங்க.....
தமிழ் மொழிபெயர்பாளர் கூறி விளங்கப்படுத்தினார்.
சரி.....இனிமேல் ஏதாவது நடக்காமல் பார்த்துகோம்மா.......அவங்க கேட்கிறாங்க.....வேறையாராச்சையும் பார்த்து பேச போறீங்களா எண்ணு.....
ம்....ஆமா...
ம்....பதிவாகியது.
யாரை என்று சொல்லிடுங்கம்மா.....நீங்க யார் கூட பேசினாலும் இங்க பதிவாங்க. அது உங்க பாதுகாப்புக்குத்தான் அம்மா.
ராகவன்.....வந்திருக்கிறாரா.....? பார்த்து சொல்லிடுங்க....ஐயா..
ம்....ம்.......கொஞ்சம் பொறுங்கம்மா பார்த்திடிறேன்.
ம்...தாங்ஸ்.
வெளியே போய் பார்த்து வந்த அந்த இன்டர்பிரைட்டர். அங்குமிங்கும் பார்த்தார் அங்கே ஷக்தியைத்தவிர யாருமில்லை.
இல்லம்மா...யாருமே இல்ல.....உங்க கணவர் மட்டும் தாம்மா. சரி நான்வந்த வேலை முடிஞ்சு போச்சுது. நான் கிளம்புறன்....
சுருதி உன்னை என் பெத்த பொண்ணாட்டம் கேட்டுக்கிறேன். வாழப்பிறந்த நீ.....இனிமேலாச்சும் சாகத்துணியாதே. சாதிச்சுக்காட்டு....அது ஒன்னே போதும். என் ஆசிகள் நான் வாறன்.
இரு கரம் கூப்பி கையெடுத்து கும்பிட்டு.......ஐயா...இது விசயம் பற்றி யாரிட்டையும் சொல்லிடாதீங்க ஐயா.....உங்களை தயவாய் கேட்டுக்கிறேன்.
அட...நீ என்ன பொண்ணம்மா....இது போல வேற அசிங்கம் எல்லாம் நான் போய் கேள்வி கேட்டு வந்திருக்கிறேன். இதைப்போய்....சரி..சரி..நீ...கவலைப்படாதேம்மா. நா யாருக்கும் சொல்ல மாட்டேன். சரியா. நான் திரும்பவும் உன்னைப் பார்க்கணும். ஆனா...இந்தக்கோலத்தில இல்லை. சரிம்மா...
மெதுவாக தலையாட்டி விடை கொடுத்தாள் சுருதி..
வெளியிலே விசிட்டர்சுக்கென......ஒரு இருக்கை. அதிலே தலையைக்கவிழ்ந்து கொண்டு அமர்ந்தபடி ஷக்தி. அவன் தோளிலே மெல்ல அழுத்தியபடி ஒரு கை.....
ஓ.....வா...நீ..யா...வா...மச்சான் வா....வாடாப்பா....இப்ப சந்தோசம் தானே....இப்ப உனக்கு ரொம்ப சந்தோசம் தானே........பார்த்தாயா...எங்க கொண்டே விட்டிருக்கு என்று....
கொஞ்சம் பொறு ஷக்தி....அவசரப்படாதே.......நான் ஒன்னும் அவவுக்கு சொல்லல்ல.....நீ தான் நீ தான் சுருதிக்கு சொல்லியிருக்கின்றாய்.......
என்னடா நான் சொன்னேன்.......சுருதிக்கு பத்த வச்சதுமல்லாமல்.....உடனே எனக்கும் போன் எடுத்து சொன்னாய் பாரு....அப்பவே...அப்பவே உன்ன.......அடச்சீ......வெட்கக்கேடு.....இனி நான் எப்படி தலை காட்ட முடியும்....?
ஷக்தி நீ விட்ட தவறு......பவித்ரா என்ற பெயரை ஏன் அவவுக்கு சொல்லனும்....ஆ.....சொல்லு....
ஓ.....மை..கோட்....ஓ...ஹோ......அதிலதானா.....ம்...ம்......அப்ப அவள் உன்னைப்பற்றியே கேட்டாளா....அதுதான்...அப்ப பார்த்து பவித்ரா ஞாபகமும் வர......
ஹலோ.....எக்ஸ் கியூஸ் மி.....சுருதி..வோன்ட் டூ டோக் வித்....யூ......
ஓகே...தாங்க்யூ......
ஷக்தி....சுருதியின் ரூமுக்குள் நுழைகின்றான்...
சுருதி.....இனிமே என்னை விட்டு போக நினைக்காதேம்மா......நான் இருப்பதுதான் உனக்கிடைஞ்சல் என்றால்.....சொல்லு நா....நா..போயிடுறன். ப்ளீஸ் சுருதி. உன்னைப்பிரிந்து என்னால.....ம்ஹ_ம்...நினைத்துப்பார்க்கமுடியாதம்மா.....
பாவம் சுருதி.....கணவனின் அன்பு அரவணைப்பில.........தான் செய்த தவறை உணர்ந்தாள். அவள் கண்களில் வழியும் கண்ணீரை ஷக்தி துடைத்துவிட்டுக்கொண்டிருந்தான். அப்போது ஏதேச்சையாக.....வாசலைப்பார்த்த சுருதி...கண்டு கொண்டாள்....ராகவன் அங்கே.....ஒற்றைக்காலைக் பின்பக்கமாக மடக்கி சுவரிலே கொடுத்தபடி.....வெள்ளையாக காட்சி தரும் அந்த முகட்டைமட்டும் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்தான்......
ஷக்தி.....
என்னம்மா.....
ராகவன் வந்திருக்கிறார் போல.....
ம்...அவரே தான்.....ஏன் இங்க வந்தான் என்று தெரியவில்லை. எல்லா குழப்பத்திற்கும் காரணம் அவன் தான்.
இல்ல ஷக்தி...மெதுவாய்ப்பேசுங்க....ராகவன் காதில விழப்போகிறது.....அவரில்லை....காரணம்....நீங்க தான். ஆனா...இப்போதைக்கு நாம இது பற்றி பேசாம விடுவதே நல்லது என்று நினைக்கிறேன். ஷக்தி....கூப்பிடுங்க ராகவனை கூப்பிடுங்க ஷக்தி.....
ம்...ம்.....அறிவுகெட்டவளுக்கு எப்படிச்சொன்னாலும் ஏறப்போறதில்லை. ஆடுறாளாம் ஆட்டம். தன் மனதிற்குள் திட்டியவாறு.....
.ராகவன்...ராகவன்.....
மெதுவாக திரும்பினான்......
தூர நின்றே....என்ன என்று கைவிரலை மட்டும் உயர்த்தி கேட்டான்..
உள்ள...வாங்க......ராகவன். மெதுவாய்....சுருதியின் குரலில்.. ஒரு கணம் தன்னையறியாது....ஏதோ ஒரு உணர்வில் கட்டுண்டவன் போல......
கண்களில் ஈரத்தை வைத்துக்கொண்டு........கௌவாய் யு சிஸ்டர்...?
ம்........ஒகே...ஐ ஆம் ஆல் ரைட் ராகவன்.
ராகவன் என்ன பயந்திட்டிங்களா......செத்திட்டேன் என்று.
நோ...நோ...அப்படியொன்றுமில்லை....
இல்ல ராகவன் ஆண்டவன் ஒருத்தனே.....அவன நான் நம்புறன். உங்களுக்கு சேர வேண்டிய பணத்தை எல்லாம் சேர்த்து தந்த பிறகு..தான் இந்த உசிர் போகவேண்டும் என்ற விதி போல...
சீச்சீ....இப்ப போய் இதென்ன பேச்சு...முதல்ல நீங்க வீட்டிற்குப் போங்க...நான் அங்க வந்து சந்திக்கிறேன்.
சரி...கண்டிப்பா வறனும்.......சரியா...ராகவன்.
யா....டெஃபனிட்லி...
ஷக்தி...நான் வாறன். அப்புறமா பேசுவோம்.....போன் எடுக்கிறேன். பாய்
டேக் கெயார். சீ யு.....
அதுவரை..மௌனமாக இருந்த ஷக்தி...சுருதிக்குச் சொன்னான்.....சுருதி நீ அவசரப்பட்டிட்டாயம்மா....முதல வீட்டை போய் பேசுவோம் வாம்மா.
ஷக்தி எனக்கொரு ஆசை.......
என்னம்மா சொல்லு.....என்ன வேணும் ஊருக்குப்போகணுமா...அம்மா, அப்பாவை பார்க்கணுமா....?
இல்ல....அவங்களயில்ல...
அப்ப வேறு யாரை.....
பவித்திராவை....பார்க்கணும்.......நான் உடனே பார்க்கணும்.
கொஞ்சம் பொறும்மா. அவ வரமாட்டா. நான் கூட்டிட்டுப்போறன். அதற்கு முன்னாடி நீ ஒரு உண்மையை....
வேண்டாம் ஷக்தி....ப்ளீஸ் எனக்கு எதையுமே இனி சொல்லாதீங்க....ப்ளீஸ்.....நான் முதல்ல பவித்திராவைப்பார்த்து பேசியதுகப்புறமா உங்ககிட்ட கேட்கிறேன் சரியா....
ம்..
அவர்கள் கார் மருத்துவமனையை விட்டு...வீடு நோக்கிப் புறப்பட்டது.......
வீட்டிற்கு வந்த சுருதி சில நாட்கள் பெட் ரெஸ்ட் எடுத்தாள். அதன் பின்பு வழமையான நாட்கள் போலவே தனது கடமைகளைக் கவனிக்கத்தொடங்கினாள். ஷக்தியுடன் சுருதியின் நெருக்கம் அதிகமானதாக இல்லை என்றதை ராகவனாலும், மற்றும் அவர்கள் நண்பர்களாலும் தெரியக் கூடியதாக இருந்தது.
ஷக்தி முன்பைப்போலல்லாமல்..இப்பவெல்லாம் நேரத்திற்கு வீட்டிற்கு வந்துவிடுவான். கூடிய நேரங்களில் சுருதியுடனேயே பொழுதை போக்குவான். ஆனாலும் சுருதியின் மனதிலே ஷக்தியை ஏற்க முடியாத படி ஒரு வித மாறாத வடு அவள் நெஞ்சிலே குடி கொண்டிருந்தது. ஷக்தி வெளியில் போவம் என்று கேட்டால் கூட அவசியதேவைக்கு மட்டுமே போவாள். சுருதியினால் எதையுமே மனம் விட்டு ஷக்தியுடன் பேசக்கூட விரம்பாதவளாய் ஒற்றைப்பனை மரம் போல இருந்தாள்.
நீண்ட நாட்களின் பின்பு ஷக்தியுடன் ராகவன் போனிலே பேசிக்கொண்டிருந்தான். ஷக்திக்கு கொஞ்சமும் விருப்பமேயில்லை. ராகவன்கூட அவன் நட்பை வளர்த்துக்கொள்ளுவது அவனுக்கு அதிலே நாட்டம் இல்லை. ஆனாலும், தங்கள் பிஸினசுக்கு ராகவனின் முதலீடு பெரும் தொகையான பங்களிப்பு, ஏற்கனவே ராகவனிடம் பெற்றுக்கொண்ட கடனான பணத்தொகை எல்லாவற்றையும் நினைத்து, முகத்தில் புன்னகையும், உள்ளுக்குல் புகைச்சலையும் வைத்து நட்பை வளர்த்தான்.
எல்லோராலும் எல்லோரையும் இலகுவில் புரிந்து கொள்ள முடிவதில்லை. அதனால் தானோ கூறுவார்கள்எந்தப்புற்றில் எந்தப் பாம்பு குடி கொண்டிருக்கின்றது என்று. இங்கேயும் அதேதான்.
ராகவன் வீட்டிற்கு வருவதாகச்சொல்லி போனை வைத்தான்.
வாங்க ராகவன்.....என்ன நீண்ட நாளைக்கப்புறம் இந்தப்பக்கம் தலைகாட்டியிருக்கின்றீங்கள்..
அப்படியொன்றுமில்லை....நீங்க இப்பவெல்லாம் கொம்பனி பக்கம் வருவதில்லைத்தானே..அதனால என் தலையில பெரிய சுமையாகப்போய்விட்டது..அவ்வளவு தான் மற்றப்படி ஒன்றுமில்லை.
சரி.......ஷக்திக்கூட பேசிட்டிருங்க ராகவன்.. நான் குடிக்க ஏதாச்சும் எடுத்திட்டு வாறன்..
சொல்லிக்கொண்டே கிட்சினுக்குப் போனாள் சுருதி..
சொல்லுடா ராகவன்....எப்படிப்போவுது பிசினஸ்.....?
ம்....நீங்க கேட்பீங்க தானே நான் படும் பாடு உங்களுக்கு எங்கே புரியப்போகிறது...?
ஓமடா....ஓம்..ஓம...விளங்குது..எனக்கு நல்லா விளங்குது..ஆனால் சுருதி வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறாளே. சரி வந்தனீ நீ ஒருக்கால் சொல்லிப்பார்க்கக்கூடாதா என்ன..?
ம்....ஆள் வறா.....ம்...ம்....கேட்கிறேன்...
இருங்கோ சுருதி....எங்கே போறீங்கள்...? உங்கள் கூட கதைத்து ரொம்ப நாளாச்சு....இங்க இருங்கோ..
சரி....இருக்கின்றேன்..தாங்ஸ்
என்ன கொம்பனிப்பக்கம் எப்ப வாறதா இருக்கிறீங்கள்....?
ஹா...ஹா...அதெல்லாம் முடிஞ்சு போன கதை. ராகவன் ப்ளீஸ் என்னை இனிமேலும் அங்க கூப்பிடவேண்டாம். நீங்களும் ஷக்தியுமாக கொண்டு நடத்துங்க. அதில வாற லாபத்திலே முதல்ல உங்க காசை எடுத்திருங்க...அவ்வளவு தான் இப்ப என்னால் சொல்லமுடியும்.
வட்...வட்...வட் யு டோக்கிங் எபெளவுட் திஸ்....நோ..நோ...நோ வே
யெஸ் .....யெஸ்...ஐ டோன்ட் லைக் கம் எகைன்...ப்ளீஸ் டோன்ட் போதர் டூ மீ...ப்ளீஸ்.
சுருதியின் கண்கள் கண்ணீரால் முட்டிக்கொண்டு இருந்தது. இதனைக்கண்ட ஷக்தி....
ஒகே..ஒகே....ஸ்டொப் திஸ் மேட்டர். ..
ஐ ஆம் சொறி., சுருதி...ஐ ஆம் சொறி.
நோ..நோ....இட்ஸ் ஒகே..
சரி...நாங்க வேற விசயம் பேசவோம், ஆ....நாட்டு நிலமை பற்றி பேசுவோமா...?
ஷக்தி பேச்சை மாற்றி நாட்டு நிலமை பற்றி பேசத்தொடங்கினான். அப்போது சுருதி......
ஷக்தி நாட்டு நிலமை இப்ப முக்கியமில்ல....
அப்ப எதைப்பற்றி பேசுவது...? வர வர இந்தக்கழுதைக்கு தலைக்கனம் கூட ஏறுது...கழுதை கழுதை.
என்று தன் மனதிற்குல் திட்டியவாறு கேட்டான்.
ம்.....வீட்டு நிலமை, நம்ம வீட்டு நிலமை பேசுவோம்...
என்ன வீட்டு நிலமையா...என்ன இந்த வீடு சரியில்லையா....? வேற வீடு மாறவேண்டுமா...?
என்ன...என்ன வேண்டும் சொல்லு சுருதி...?
நான் பவித்திராவைப்பார்கனும்...
போச்சுடா...வேதாளம் முருங்கைமரத்தில ஏறிய கதையாய் திரும்பவும்....ம்...ம்..அதற்கு என்ன செய்யனும்.
நாளைக்கு சன்டேதானே....நாங்க அங்க போவோம்....
சுருதியின் குரலில் ஒரு கட்டளை பிறந்தது போல...கண்டிப்பாகச் சொன்னால்.
சரி...நாளைக்கே போவோம்....ராகவன் நீங்களும் வாங்க...
நானா...ஏ..ஏன்....நீங்க இருவரும் போங்க..
இல்லை ராகவன் இதுவரையில உங்களுக்கு தெரிந்தது எல்லாம், நான் சுருதியை கட்ட முதல் பவித்திராவின் காதல் மட்டும் தான் . அதன் பின்பு அந்த 2 வருட இடைவெளியில என்னென்ன நடந்தது என்று நீங்களும் இதுவலையில என்னட்ட கேட்கல்ல...நானும் உங்க கிட்ட சொல்லல்ல...ஆகையினால நிச்சயம்...நீங்களும் எங்க கூட வாங்க...ப்ளீஸ் மாட்டேன் என்ற மட்டும் சொல்லிடாதீங்க..
சரி....நாளைக்கு நானும் வாறன்.
[COLOR=purple]அது ஒரு தொடர் மாடிக்கட்டிடம். காரைவிட்டு இறங்கிய சுருதி., வெளியில் வீசிய காற்றினால் அவள் கன்னங்களை அவளுடைய தலைமுடிகள் தழுவிக்கொண்டிருந்ததை ஒரு கையால் . நீக்கிவிட்டு அண்ணர்ந்து பார்த்தாள். அடேயப்பா எவ்வளவு பெரிய கட்டிடம். ம்.....பவித்திரா
அந்த முகம் தெரியாத முழுமதியை, தன்கணவரின் மனதை ஆளும் அந்த சீமாட்டியைப்பார்த்து ஏன்டி உன் சுகத்திற்கு என் புருஷனா கிடைச்சான். அடியேய் சிறுக்கி இப்ப சொல்லடி உனக்கு எவ்வளவு பணம் வேணுமடி .......இன்றைக்கு எல்லாத்தையும் கேட்டிட வேண்டியது தான்.
இவ்வாறாக தன் மனதிற்குள் கேள்விகளைப்போட்டு திட்டித்தீர்த்து இன்றைக்கு இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று நினைத்தவளாய். இதயம் படபடவென அடிக்க அந்த உயர்ந்த மாடிக்கட்டிடத்தின் உள்ளே...முதலில் ஷக்தி...அவரைத் தொடர்ந்து சுருதி..கடைசியாக ராகவன்..
லிப்டின் பட்டினை அமிழ்த்தி 27 வது மாடிக்கு செல்லுகின்றனர்....
ராகவன் பதட்டத்தோடு சுருதியைப்பார்த்தான். சுருதியின் கண்கள் கோபத்தால் சிவந்திருப்பதைக்கவனித்தான்.
வாயில் கையைவைத்து ப்ளீஸ் சுருதி எதுவும் பேசவேண்டாம் என சைகையினால் கேட்டுக்கொண்டான்.
சுருதி...சுட்டெரிக்கும் விழிகளால் ராகவனை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்தாள்.
நான் இருக்கிறேன்....ப்ளீஸ் நான் கேடட்கிறேன் எதையும் நீங்க கேட்காதீங்க என்பதைப்போல இருவரும் கண்களாலும், கைகளாலும் மட்டும் பேசிக்கொண்டனர்கள்.
ரூம் நம்பர் 2703 தன் பாக்கெட்டில் இருந்து திறப்பை எடுத்து கதவைத்திறக்க முற்பட்டபோது....
ஷக்தி...வேண்டாம்.. கதவைத்தட்டுங்க. யாராக.. இருந்தாலும் அதுதான் முறை....அவங்களே வந்து திறக்கட்டும்.
ம்.....நீ சொல்லுவது கேட்க நல்லாத்தான் இருக்கு சுருதி..ஆனா....
என்ன ...ஆனா....ம்......ஓஹோ....கட்டிய கணவன் கதவைத்தட்டுவது எப்படி என்ற சிந்தனையோ...
இல்ல அப்படியொன்றுமில்லை. ..இப்ப உனக்கு எதையுமே நான் புரியவைக்க முடியாது....
ஆஹா...அப்படியென்றால்....
கதைத்துக்கொண்டு...இருக்கும் போதே கதவைத்திறந்துகொண்டு உள்ளே போய் வாங்க ராகவன் வந்து இருங்க....ஷக்தி கூறிக்கொண்டே பவித்திரா என்று குரல் கொடுத்தான்.
இருங்க வந்திடுறன்....வோஸ்ரூமில் இருந்து வந்ததுஅந்தக் குரல்.
கதவு திறந்த ஓசைகேட்டு கட்டிலில் குழந்தை அழும் சத்தம்.
என்னங்க....பையன் அழுறான் கொஞ்சம் தூக்கிவச்சிடுங்க...இதோ வந்திடிறன்...
அன்போடு தூக்கிஅணைத்தான் 18 மாதக்குழந்தை மாதவனை.
குழந்தை சரியாக ஷக்தியைப்போலவே காணப்பட்டான். சுருதியினால் எதுவுமே பேசமுடியவில்லை. கண்கள் இரண்டிலும் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்திருந்தது. ....எத்தனையோ குழந்தைகளை அன்போடு தூக்கியணைத்தவளுக்கு இந்தக்குழந்தையைப்பார்க்கும் போது எரிச்சலாக இருந்தது.
ராகவன் எழும்பிச்சென்று ஷக்தியிடமிருந்து குழந்தையை வேண்டினான். குழந்தை மாதவனோ...இரு கைகளாலும் ஷக்தியின் கழுத்தைக்கட்டிப்பிடித்துக்கொண்டு போகமாட்டேன் என அடம்பிடித்தது.
சுசுருதியின் கண்கள் அந்த ஹோலை ஒரு வலம் வந்தது. ஜாலியாக பவித்திரா, ஷக்தியின் படங்கள். அந்தச்சுவரை நிரப்பிக்கொண்டிருந்தது.
சொறி கொஞ்சம் லேட்டாயிச்சு......சொல்லிக்கொண்டே குளியறைக்கதவைத்திறந்தபடி பவித்திரா..
ஈரத்தலையில் ஒரு சேலையால் தலைப்பாகைபோல சுற்றி அழகிய மஞ்சள் வர்ணபற்றிக் சட்டையில் .....பவித்திரா.
பவித்திராவைக்கண்டவுடன் அம்மா என்று குழந்தை தாயிடம் சென்றது.
எதுவுமே பேசாது எழும்பி நின்றாள்...சுருதி....அவள் கண்களில் இதுவரையில் கண்ணீர் முட்டிக்கொண்டு தான் இருந்தது. பவித்திராவைக்கண்டவுடன் தாரைதாரையாகக் கண்ணீர் கொட்டியது.
ராகவனும் எழும்பி நின்றான். வாயில் கையை வைத்து ஒருகையை தலையிலும் வைத்தான்.
சுருதி என்னவெல்லாம் நாக்கைப்பிடுங்கி சாகிற மாதிரி கேள்விகள் கேட்க வேண்டும் என்று ஆசைப்பட்டாளோ....இப்போ வாயடைத்து நின்றாள்.
ஆம்......பவித்திரா என்னும் அந்தப்பெண் ஒரு ஊணமுற்றவள் மனித உடலுக்கு நம்பிக்கையூட்டும் கால்களில் ஒன்றை இழந்தவள். அவளால் ஒரு நடைப்பிணமாகத்தான் வாழ முடியுமே தவிர ஆசைப்பட்ட மாதிரி வாழ்க்கை அமைக்கதகுதியற்றவள். .
என்ன .....என்னைப்பார்த்ததும் எழும்பிட்டீங்க...? இருங்கோ ஒரு நிமிடத்தில காப்பி போட்டு எடுத்து வாறன். தன் சக்கர நாற்காலியை கைகளால் சுழற்றியவாறு அடுப்படியை நோக்கிச்சென்றாள்..
அப்போது சுருதி குழந்தையை அவளிடம் இருந்து தூக்கினாள். குழந்தை மாதவனும் புதியமுகத்தை நிமிர்ந்து பலதடவை பார்த்துக்கொண்டது.
தொடரும்.......