பிரிவுத் துயரால் கட்டியணைத்து மனதை நெகிழ வைத்த குரங்கு
14 Feb,2014
பிரிவுத் துயரால் கட்டியணைத்து மனதை நெகிழ வைத்த குரங்கு



சுகவீனமுற்ற நிலையில் மிருக சிகிச்சை நிலையமொன்றில் சிகிச்சை பெற்று வந்த வாலில்லா குரங்கொன்று, மீளவும் காட்டுக்கு திருப்பி அனுப்பப்படுகையில், தன்னைப் பராமரித்த மிருக மருத்துவரை நன்றியறிதலுடன் கட்டியணைத்து தனது அன்பை வெளிப்படுத்திய நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் கொங்கோ குடியரசில் இடம்பெற்றுள்ளது.
வுண்டா என்ற வாலில்லா குரங்கே இவ்வாறு தசிபோன்கா குரங்கு புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த மிருக வைத்தியரான ஜேன் குட்டோலை இவ்வாறு அனைத்து அன்பை வெளிப்படுத்தியுள்ளது.
வுன்டா என்றால் மரணத்தை நெருங்குதல் என பொருள்படும்.
உடல்நலம் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் மேற்படி புனர்வாழ்வு நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட வுண்டாவிற்கு ஜேன் குட்டோல் சிகிச்சையளித்தார்.
தொடர்ந்து முழுமையாக குணமடைந்த வுண்டாவை மீளவும் காட்டுக்கு திருப்பி அனுப்ப அழைத்துச் சென்ற போது, தான் பிரிந்து செல்லப் போவதை உணர்ந்த வுண்டா உணர்வு மேலீட்டுடன் ஜேன் குட்டோலை அணைத்து அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
மேற்படி மிருக புனர்வாழ்வு நிலையத்தில் 160க்கு மேற்பட்ட குரங்குகள் வசித்து வருகின்றன