

சாம் கோல்ட் என்றபெயரில் வாடகை கொலையாளியாக சி.ஐ.ஏ.வின் திட்டத்துக்குள் வலிய வந்து புகுந்தவர் உண்மையில் சிக்காகோ நகர இத்தாலிய மாஃபியா குழுக்களின் தலைவர் சாம் ‘மோமோ’ கியன்கானா என்று கடந்த பாகத்தை முடித்திருந்தோம்.
இப்படியான ஒரு பெரிய மாஃபியா தாதா, எதற்காக ஒரு அடியாள் போல இந்த ஆபரேஷனுக்குள் வருகிறார்?
விஷயம் இருக்கிறது.
சிக்காகோவில் ‘42-கேங்க்’ என்ற கிரிமினல் குழுவின் கைதேர்ந்த டிரைவராக இருந்த கியன்கானா, படிப்படியாக வளர்ந்து, மற்ற கிரிமினல் குழு தலைவர்கள் சிலரை போட்டுத் தள்ளி, மாஃபியா தலைவரானவர். பொது இடங்களில் பலரை போட்டுத் தள்ளியதால், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த FBI, இவரை என்கவுன்டர் செய்ய முடிவு எடுத்தது.
அந்த தகவல் இவருக்கும் தெரியவந்து விட்டது.
அப்படியான நிலையில்தான் ரொசீலி, கியூபா தலைவர் காஸ்ட்ரோவை கொல்ல உதவிக்கு ஆள் தேடிக்கொண்டு சிக்காகோ நகரத்தில் சுற்றிக்கொண்டு இருக்கிறார் என்ற தகவல் இவருக்கு கிடைத்தது. காஸ்ட்ரோவை கொல்லும் திட்டம் என்பதால், இதில் ‘பெரிய கை’ ஒன்று இருக்க வேண்டும் என ஊகித்துக் கொண்டார் கியன்கானா.
அதையடுத்து, தனது ஆட்களை அனுப்பி, ரொசீலியை தருவித்து விபரம் கேட்டார்.
கோடீஸ்வரர் வேஷமிட்ட ராபர்ட் மஹியூ (சி.ஐ.ஏ.வுக்காக இந்தோனேசியாவில் நீலப்படம் எடுத்து கொடுத்தவர் இவர்தான்)
கோடீஸ்வரர் வேஷமிட்ட ராபர்ட் மஹியூ (சி.ஐ.ஏ.வுக்காக இந்தோனேசியாவில் நீலப்படம் எடுத்து கொடுத்தவர் இவர்தான்)
ரொசீலி தாம் தயாராக வைத்திருந்த, ‘கோடீஸ்வரர் ராபர்ட் மஹியூவின் கொலை விருப்பம்’ (கடந்த பாகத்தை பார்க்கவும்) என்ற கதையை சொன்னார்.
உடனே அந்தக் கதை, ‘கப்சா’ என்பதை சுலபமாக புரிந்துகொண்ட கியன்கானா, ரொசீலியை பிடித்து நாலு தட்டு தட்டஸ
அவரோ, இது சி.ஐ.ஏ. ஆபரேஷன் என்பதை இவரிடம் உளறி விட்டார்.
கியன்கானாவுக்கு இது ஒரு அருமையான சான்ஸ்.
சி.ஐ.ஏ. ஆபரேஷன் ஒன்றுக்குள் புகுந்து கொண்டால், FBI அருகிலும் வர மாட்டார்கள். என்கவுன்டரில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
இதையடுத்து, சாம் கோல்ட் என்ற பெயரில் ரொசீலியுடன் கிளம்பி நியூயோர்க் பிளாசா ஹோட்டலில் போய் இறங்கி விட்டார். போகும்போதே, தாம் யார் என்பதை, ‘கோடீஸ்வரர்’ ராபர்ட் மஹியூவிடம் சொல்ல கூடாது என ரொசீலியை மிரட்டித்தான் அழைத்து சென்றார்.
இதுதான், இந்த சி.ஐ.ஏ.வின் திட்டத்துக்குள் சாம் கோல்ட் என்ற பெயரில் கியன்கானா புகுந்த கதை!
ராபர்ட் மஹியூவிடிடம் பேசிய சாம் கோல்ட், “எனக்கு கியூபாவில் சூதாட்ட சின்டிகேட்டில் தொடர்புகள் இருக்கின்றன. அவற்றை உபயோகித்து காஸ்ட்ரோவைக் கொலை செய்வது மிக சுலபம்” என்றார்.
இந்த தகவல் சி.ஐ.ஏ.வின் பிஸ்ஸலுக்கு ராபர்ட்டினால் தெரிவிக்கப்பட்டது. “கியூபாவிலேயே சூதாட்ட சின்டிகேட் தொடர்பு உடைய ஆளே நமக்கு கிடைத்திருக்கிறார். திட்டம் கிட்டத்தட்ட வெற்றியில் முடிந்த மாதிரிதான்
இவ்வளவு ‘வெற்றிகரமாக’ ஏற்பாடுகள் முடிந்து விட்டதால், பிஸ்னர், இந்த ஆபரேஷனை சி.ஐ.ஏ.வின் தலைவர் அலன் டுல்லஸ்ஸிடம் கூறி ஒப்புதல் வாங்கச் சென்றார்.

சி.ஐ.ஏ.வின் அப்போதைய தலைவர் அலன் டுல்லஸ்
சி.ஐ.ஏ. தலைமை அலுவலகத்தில் அலன் டுல்லஸ்ஸின் பிரத்தியேக ரூமில் வைத்து இந்த விஷயம் பற்றி இருவரும் பேசியபோது, சம்மந்தப்பட்ட நபர்களின் பெயர்களைக் கூட பிஸ்ஸல் வெளியிடவில்லை. A,B,C, என்று (ரொசீலி, ராபர்ட், சாம்) சங்கேதப் பெயர்களில் குறிப்பிட்டார்.
இது ஒரு கொலைத்திட்டம் என்றோ, கியூபாவின் அதிபரை ஆட்சியிலிருந்து (அத்துடன் உலகிலிருந்தும்) அகற்றுவது என்றோ குறிப்பிடாமல் ‘கியூபா உளவு ஆபரேஷன்’ என்று மாத்திரம் குறிப்பிட்டார்.
சி.ஐ.ஏ.வின் தலைவர் அலன் டுல்லஸ், சும்மா எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டாரே தவிர, மறுப்பு எதையும் தெரிவிக்கவில்லை.
பின்னாட்களில் (1967-ல்) நடைபெற்ற இன்ஸ்பெக்டர் ஜெனரலின் விசாரணையின் போது பிஸ்ஸல், “காஸ்ட்ரோவின் கொலை முயற்சிக்கு சி.ஐ.ஏ.வின் தலைவர் அலன் டுல்லஸ்ஸிடம் அனுமதி வாங்கியிருந்தேன்” என்று கூறியபோது, அதற்கு எழுத்து பூர்வமான ஆதாரம் எதுவும் இருக்கவில்லை.
“நான் கூறிய அனைத்தையும் அவர் (அலன்) புரிந்து கொண்டார். கியூபாவின் தலைவரைக் கொல்வதற்கான முயற்சிக்கு ஒப்புதல் கொடுக்கிறேன் என்பதைத் தெரிந்து கொண்டே அவர் மறுப்பு எதுவும் கூறாமல் இருந்தார். அவரது மௌனத்தை சம்மதமாக எடுத்துக்கொண்டு நான் மேற்கொண்டு காரியங்களைச் செய்தேன்” என்று பிஸ்ஸல் அந்த விசாரணையில் கூறினார்.
“அத்துடன் நான் அலன் டுல்லஸிடம் கூறியதை அவர் ஜனாதிபதிக்கு (எய்சன்ஹோவர்) தெரிவித்து அவருடைய ஒப்புதலையும் பெற்றிருப்பார் என்று நான் ஊகித்துக் கொண்டேன்” என்றும் கூறியதால், பிஸ்ஸலுக்கு பின்னாட்களில் சிக்கல் ஏதும் ஏற்படவில்லை.
மாஃபியா தலைவர் கியன்கானா
மாஃபியா தலைவர் கியன்கானா
இதன் பிறகுதான் தொடங்கியது, நாம் முன்னர் குறிப்பிட்ட, ‘அதி சோகமாக முடிந்த நகைச்சுவையின் உச்சம்’
சி.ஐ.ஏ.வில் பிஸ்ஸலும், அலன் டுல்லஸும் பெயர் குறிப்பிடாமல் A,B,C, என்று பேசிக் கொண்டிருக்கஸ வாடகைக் கொலையாளிகளுக்கு இதில் சி.ஐ.ஏ.வின் சம்பந்தம் இருப்பது தெரியாதிருக்க ராபர்ட்டை கோடீஸ்வர பிசினெஸ்மேனாக நடிக்க விட்டிருக்கஸ
இது சி.ஐ.ஏ. என்பதை தெரிந்து வைத்திருந்த கியான்கானா புகுந்து விளையாட தொடங்கினார்.
தனக்குத் தெரிந்தவர்கள் எல்லோருக்கும், “சி.ஐ.ஏ.வின் காஸ்ட்ரோ கொலை ஆபரேஷனில் நான்தான் பிரதான பாத்திரம் வகிக்கிறேன்” என்று பறைசாற்றி விட்டார்.
இந்த தகவல், தன்னை என்கவுன்டர் செய்ய முடிவு எடுத்துள்ள FBI-க்கு போய் சேர வேண்டும். அதன்பின்னரே அவர்கள் தம்மை விட்டு ஒதுங்கிக் கொள்வார்கள் என்ற நினைப்பில்தான், அவ்வாறு செய்தார் அவர்.
1960-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி, FBIயின் டைரக்டர் எட்கர் கோவரிடம் இருந்து சி.ஐ.ஏ.வின் தலைமையகத்துக்கு ஒரு மெமோ வந்து சேர்ந்தது
“கியூபாவின் தலைவர் காஸ்ட்ரோவை கொலை செய்வதற்காக திட்டம் போடப்பட்டிருப்பதாகவும் அதற்கான ரகசிய வேலைகளில் தான் ஈடுபட்டிருப்பதாகவும் சாம் ‘மோமோ’கியான்கானா ஏராளமான ஆட்களுக்குச் சொல்லிக் கொண்டு திரிகிறார். சிக்காகோ நகரம் முழுவதும் இதுவே பேச்சாக இருக்கின்றது.
விஷயம் இப்படி வெளிப்படையாகப் பேசப்படுவதால் கியூபாவின் உளவுத்துறைக்கும் விஷயம் இதற்கிடையில் தெரிய வந்திருக்கும். காஸ்ட்ரோவுக்கும் தெரியவந்திருக்கும்” என்றது FBI-யின் மெமோ.
FBI அனுப்பிய மெமோவில் சி.ஐ.ஏ.வுக்கு இதில் சம்மந்தம் இருப்பதுபற்றி நேரடியாக குறிப்பிடாவிட்டாலும், FBIயின் தலைவர் எட்கர் ஹோவர், தங்களைப் பார்த்து நகைக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டார் சி.ஐ.ஏ.வின் தலைவர் அலன் டுல்லஸ்.
இது நடந்த அதே நேரத்தில் இந்த நகைச்சுவைக் காட்சிகளுக்கெல்லாம் உச்சமான காட்சி ஒன்று, மயாமி நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றதுஸ அமெரிக்க புலனாய்வுத்துறை FBI, உளவுத்துறை சி.ஐ.ஏ.வுக்கு அனுப்பிய மெமோவில் இருந்து, FBIயின் தலைவர் எட்கர் ஹோவர், தங்களைப் பார்த்து நகைக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டார் சி.ஐ.ஏ.வின் தலைவர் அலன் டுல்லஸ் என்று கடந்த பாகத்தை முடித்திருந்தோம்.
இது நடந்த அதே நேரத்தில் இந்த நகைச்சுவைக் காட்சிகளுக்கெல்லாம் உச்சமான காட்சி ஒன்று, மயாமி நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது என்றும் எழுதியிருந்தோம்.

உலக வல்லரசு அமெரிக்காவின் வானளாவிய அதிகாரம் பெற்றிருந்த உளவுத்துறை சி.ஐ.ஏ., கியூபாவின் தலைவர் காஸ்ட்ரோவைக் கொல்வதற்காக போட்ட திட்டத்தில், இப்போது நாம் எழுதப்போகும் கேலிக்கூத்தை நம்புவது உங்களுக்குக் கடினமாக இருக்கலாம்.
சி.ஐ.ஏ. போன்ற மிகப்பெரிய உளவுத்துறை, இப்படியான காரியத்தைச் செய்திருக்குமா என்று வியப்பாக இருக்கலாம்.
வியப்படையாதீர்கள் – இது உண்மையிலேயே நடைபெற்றது. இது பற்றிய விசாரணை 1967-ல் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆணைக்குழுவின் முன் நடைபெற்றபோது, சி.ஐ.ஏ. அதிகாரிகளால் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம் இது.
காஸ்ட்ரோ கொலை முயற்சி ஆபரேஷனில் கோடீஸ்வரராக நடத்தவர் ராபர்ட் மஹியூ என்று கடந்த பாகத்தில் குறிப்பிட்டோம் அல்லவா? இந்த ஆபரேஷனில், மாகியோவின் சி.ஐ.ஏ. தொடர்பாளராக பணிபுரிந்த அதிகாரி (Agent handler) ஓகானல் என்பவர், 1967-ல் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆணைக்குழுவின் முன் நடந்த விசாரணையின் போது நாம் குறிப்பிடப்போகும் சம்பவத்தை “A keystone comedy act” என்று கூறியதாகப் பதிவாகியுள்ளதை, இப்போதுகூட இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆணைக்குழு அறிக்கையில் பார்க்கலாம்.
அப்படி என்னதான் செய்தது சி.ஐ.ஏ.?
சிக்காகோ நகரைச் சேர்ந்த பாதாள உலகத்தலைவரான ஜியான்கானா “காஸ்ட்ரோவைக் கொலை செய்வதற்காக சி.ஐ.ஏ. என்னை அமர்த்தியிருக்கின்றது” என்று ஊரெல்லாம் சொல்லித்திரிவதாக FBI-யின் தலைவர் சி.ஐ.ஏ.வுக்கு ஒரு மெமோ மூலம் அறிவித்ததும், சி.ஐ.ஏ. தலைவர் அலன் டுல்லஸ் போட்ட உடனடி உத்தரவு என்ன தெரியுமா?
“(காஸ்ட்ரோவை கொல்லும்) காரியம் முடியும் வரை, இந்த ஆள் ஜியான்கானா சிக்காகோ நகரில் விட்டு வைத்திருக்கக்கூடாது. சிக்காகோவில் இருந்தால், இவர் உளறியே காரியத்தை கெடுத்து விடுவார். உடனடியாக இவரை மற்றொரு நகரத்துக்கு கொண்டுபோய், சி.ஐ.ஏ.வின் பார்வையில் எப்போதும் இருக்கும்படி வைத்துக் கொள்ளுங்கள்” என்பதே, சி.ஐ.ஏ.வின் தலைவரது உத்தரவு.
இதில் பெரிய தமாஷ் என்னவென்றால், ஜியான்கானா இந்த ரகசிய ஆபரேஷன் பற்றி வெளிப்படையாக உளறிய போதிலும், அவரால் காஸ்ட்ரோவை கொல்ல முடியும் என நம்பியது சி.ஐ.ஏ.
அந்த நம்பிக்கை இல்லாவிட்டால், ஜியான்கானாவை கடத்திச் சென்று, சி.ஐ.ஏ.வின் ரகசிய சிறை ஒன்றில் அடைத்திருக்கலாம்.
ஆனால், இந்த கொலை ஆபரேஷனில் அவர்தான் நட்சத்திர கொலையாளி என்பதால், காஸ்ட்ரோ கொல்லப்படும்வரை, மயாமி நகர கடற்கரையிலுள்ள ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் ஜியான்கானா சி.ஐ.ஏ.வின் செலவிலேயே தங்கியிருக்கலாம் என்று அழைத்துச் சென்றார்கள்
மயாமி சென்று இறங்கிய முதல் நாளே ஜியான்கானா, தாம் மாலை வேளைகளில் மதுவுடன் சைட்-டிஷ்ஷாக சாப்பிட விசேடமாக தயாரிக்கப்பட்ட கவியா (Caviar – மீன் முட்டையில் தயாரிக்கப்படுவது) வேண்டுமென்றார்.
கடற்கரை நகரமான மயாமியில் உள்ள ஆடம்பர ஹோட்டலில் தயாரிக்கப்படும் கவியா ருசியாக இல்லை என புகார் செய்த அவர், சிக்காகோ நகரிலுள்ள குறிப்பிட்ட ரெஸ்ட்டாரென்ட் ஒன்றிலிருந்துதான் அது கொண்டுவரப்பட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்.
ஜியான்கானாவும், பாடகி பிலிஸ் மக்கூரியும்
ஜியான்கானாவும், பாடகி பிலிஸ் மக்கூரியும்
அந்த சைட்-டிஷ் உணவு வந்துசேராவிட்டால் தான் திரும்பவும் சிக்காகோ நகருக்கே போகப்போவதாகவும் கூறிவிட்டார்.
வேறு வழியில்லாமல் இந்த பாதாள உலக மாஃபியா தலைவரின் மீன் முட்டை சைட்-டிஷ்ஷை தினமும் மாலை சிக்காவோ நகரிலிருந்து மயாமி நகருக்கு விமான மூலம் கொண்டுவர ஏற்பாடு செய்தது சி.ஐ.ஏ.
இதற்கு பிரத்தியேகமாக ஒரு சி.ஐ.ஏ. ஏஜென்ட் நியமிக்கப்பட்டார். அவரது தினசரி பணி, சிக்காகோ ரெஸ்ட்டாரென்ட்டுக்கு போய், இந்த உணவை வாங்கி, மாலை விமானத்தில் மயாமி வந்து, ஜியான்கானாவிடம் கொடுத்துவிட்டு செல்வது!
அதற்கு அடுத்ததாக மற்றுமோர் பிரச்னையைக் கிளம்பினார் ஜியான்கானா.
இந்த ஜியன்கானாவுக்கு ஒரு பெண் சினேகிதி இருந்தார். அவரது பெயர் பிலிஸ் மக்கூரி. இவர் சிக்காகோ நகர நைட்கிளப்களில் பாடும் பாடகி. லாஸ்வேகஸ் நகரிலுள்ள நைட்கிளப் ஒன்றுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, பாடல் பாடுவதற்காக ஒரு வார கான்ட்ராக்ட்டில் அவர் லாஸ்வேகஸ் நகருக்குச் சென்றிருந்தார்.
இந்த நைட்கிளப் பாடகிமீது நகைச்சுவை நடிகரான டான் ரோவன் என்பவருக்கு ஒரு கண். அது, ஜியன்கானாவுக்கும் தெரியும்.
சிக்காகோவிலிருந்து பாடகி பிலிஸ் மக்கூரி வெவ்வேறு நகரங்களுக்கு போனால், அவருடன் ஜியன்கானா போவது வழக்கம்.
இம்முறை லாஸ்வேகஸ் நகருக்கு பாடகி போனபோது அவருடன் ஜியன்கானா போகாத நிலையில், இந்த நகைச்சுவை நடிகரும் லாஸ்வேகஸ் நகரில் உள்ள நைட்கிளப் ஒன்றில் ஒரு வாரத்துக்கு ஷோ நடத்த கான்ட்ராக்ட் அடிப்படையில் போய் தங்கியுள்ள விஷயம், ஜியன்கானாவுக்குத் தெரியவந்தது.
உடனே தாமும் லாஸ்வேகஸ் நகருக்குப் போக வேண்டும் என்று தொடங்கிவிட்டார் ஜியன்கானா.
சி.ஐ.ஏ.வின் ரகசிய ஆபரேஷனுக்காக கியூபாவின் தலைவர் காஸ்ட்ரோவை கொல்லும் வேலையை பாதியில் விட்டுவிட்டு ஜியான்கானா, ஒரு பாடகியைப் பார்க்க ஒரு வாரம் லாஸ்வேகஸ் வரை சென்றால், காரியம் எல்லாம் கெட்டுவிடும் அல்லவா?
எனவே சி.ஐ.ஏ. வேறு ஒரு ஏற்பாடு செய்துகொடுக்க முன்வந்தது. அடுத்த பாகத்துடன் நிறைவுபெறும்சி.ஐ.ஏ.வின் ரகசிய ஆபரேஷனுக்காக கியூபாவின் தலைவர் காஸ்ட்ரோவை கொல்லும் வேலையை பாதியில் விட்டுவிட்டு ஜியான்கானா, ஒரு பாடகியைப் பார்க்க ஒரு வாரம் லாஸ்வேகஸ் வரை சென்றால், காரியம் எல்லாம் கெட்டுவிடும் அல்லவா? எனவே சி.ஐ.ஏ. வேறு ஒரு ஏற்பாடு செய்துகொடுக்க முன்வந்தது என கடந்த பாகத்தை முடித்திருந்தோம்.
லாஸ்வேகஸ் நகரில் நகைச்சுவை நடிகர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் பக் (Bug) ஒன்றை ஏற்படுத்திவிடுவதாக சி.ஐ.ஏ. கூறியது. Bug என்றால் ஒட்டுக்கேட்கும் சாதனங்களை பொருத்தி அவரை உளவு பார்ப்பது.
அந்த ஒட்டுக் கேட்கும் சாதனம் மூலம், நடிகர் பாடகியை சந்திக்க போகும் விஷயம் தெரியவந்தால், போகும் வழியில் நடிகரை ‘தட்டி வீழ்த்த’ இரு ஆட்களையும் ஏற்பாடு செய்வதாக கூறியது, சி.ஐ.ஏ.
Bug ஏற்பாடு செய்வதற்காக லாஸ்வேகஸ் நகருக்கு சென்ற சி.ஐ.ஏ.வின் ஏஜன்ட் ஒருவர் (இவரது பெயர் பிராங் லிப்பா), நடிகர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் உளவு சாதனத்தைப் பொறுத்தும் போது, ஹோட்டலின் துப்புரவு பணியாளர் ஒருவரிடம் கையும் களவுமாக அகப்பட்டுக் கொண்டார்.
ரூமில் தங்கி இருந்தவரும் ஓரளவு பிரபலமான நடிகர் என்பதால், ஹோட்டல் நிர்வாகம் இதை சீரியசாக எடுத்துக் கொண்டது. அகப்பட்ட நபர் சி.ஐ.ஏ.வின் ஏஜன்ட் என்பதைத் தெரிந்து கொள்ளாத ஹோட்டல் நிர்வாகம், அகப்பட்டு கொண்டவரை லாஸ்வேகஸ் நகர போலீசிடம் ஒப்படைக்கஸ
விவகாரம் ஒரு நடிகருடன் சம்மந்தப்பட்டது என்பதால், போட்டோக்களுடன் மயாமி நகர மீடியாக்களில் வெளிவந்துவிட்டது.
ஹோட்டலில் அகப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய அழைத்துச் சென்றபோது, ஏகப்பட்ட போட்டோகிராபர்களும் செய்தியாளர்களும் கூடிவிட்டனர்.
வேறு வழியில்லாமல், சி.ஐ.ஏ. தலைமைச் செயலக அதிகாரி ஒருவர் லாஸ்வேகஸ் சென்று, மாஜிஸ்ட்ரேட்டுக்கு முன்னால், “இது ஒரு சி.ஐ.ஏ. ஆபரேஷன்” என்று கூற வேண்டியதாகி விட்டது.
இதையடுத்து சங்கிலித் தொடர்போல, இதில் சம்மந்தப்பட்ட ஜியன்கானா, சிக்காகோவில் அவர் உளறிய ‘காஸ்ட்ரோவை கொல்லும் திட்டம்’ எல்லாவற்றையும் மீடியாக்கள் இணைத்து செய்தி வெளியிட தொடங்கஸ
சி.ஐ.ஏ.வின் ரகசியம் திறந்த வெளியில், லவுட் ஸ்பீக்கரில் கூறப்பட்ட விஷயமாகிப் போனது.
அத்துடன் ஜியன்கானாவை விட்டுவிட்டு, வேறு ஒரு நபரை காஸ்ட்ரோவைக் கொல்வதற்காகப் பிடித்தது சி.ஐ.ஏ.
அவரது பெயர் டோனி வரோனாமுதலில் போடப்பட்டிருந்த திட்டத்தின்படி காஸ்ட்ரோ புகைக்கும் சுருட்டுக்களில் விஷம் தடவப்பட்டு தயாராக சி.ஐ.ஏ.விடம் இருந்தது அல்லவா?
ஆனால் இந்த புதிய நபர், விஷம் தடவப்பட்ட சுருட்டுக்களை கொடுத்து காஸ்ட்ரோவைக் கொல்ல முடியாது என்று கூறி விட்டார்.
அவர் கேட்டது, விஷ மாத்திரைகள்.
எந்தவொரு பானத்தில் போட்டாலும் இலகுவில் கரையக்கூடிய விதத்திலுள்ள விஷ மாத்திரைகளைத் தயாரித்து தருமாறு கேட்டார் டோனி வரோனா.
இவரால் இந்த காரியம் முடியும் என எப்படி நம்பியது சி.ஐ.ஏ.?
எப்படியென்றால், இந்த டோனி வரோனா, கியூபாவின் தலைநகர் ஹவானாவிலுள்ள மிக பிரபல நட்சத்திர ஹோட்டல் ரெஸ்ட்டாரென்ட்டில் பணிபுரிபவர். இந்த நட்சத்திர ஹோட்டல் ரெஸ்ட்டாரென்ட்டுக்கு வாரத்தில் இரண்டு தடவையாவது உணவு அருந்த காஸ்ட்ரோ செல்வது வழக்கம்.
சி.ஐ.ஏ.வின் அபிமான விஞ்ஞானி கொட்லிப்பின் (விஷம் தடவிய சுருட்டுக்களை தயாரித்து கொடுத்த அதே விஞ்ஞானிதான்) ஆய்வுக் கூடத்தில் இந்த விஷ மாத்திரை தயாரிக்கப்பட்டது.
ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்து பார்த்தபோது, தண்ணீரிலும், பழரசத்திலும் மற்ற பானங்களிலும் மிகச் சுலபமாக 4 விநாடிகளில் கரைந்து போனது இந்த விஷமாத்திரை.
அதன்பிறகு விஷமாத்திரையை ஒரு டியூப்பில் வைத்து ஹாவானா சென்ற கனேடிய நாட்டு பிரஜை ஒருவர் மூலம் (அமெரிக்க பிரஜைகள் அமெரிக்காவிலிருந்து கியூபா செல்ல முடியாது) அனுப்பி வைத்தது சி.ஐ.ஏ.
இந்தத் திட்டம் கிட்டத்தட்ட நிறைவேறும் அளவுக்குச் சென்றது உண்மைதான். ஆனால் அதுவும் கடைசி நேரத்தில் கவிழ்ந்து போனது.
நடந்தது என்னவென்றால், அந்த உணவு விடுதிக்கு காஸ்ட்ரோ சென்றபோது, அவர் வழமையாக அருந்தும் ஒரு வகை புல்லில் இருந்து தயாரிக்கப்பட்ட பானத்தில் இந்த மாத்திரையை போட்டிருக்கிறார் டோனி. ஆனால் மாத்திரை ஆய்வுக்கூடத்தில் 4 விநாடிகளில் கரைந்தது போல கரையவில்லை.
கிளாஸின் அடியில் போய் நின்று கொண்டது.
உடனே சமயோசிதமாக அந்தப் பானத்தை காஸ்ட்ரோவுக்கு அனுப்பாமல் வேறு பானத்தை அனுப்பிவிட்டார் டோனி.
இருந்தபோதிலும், காஸ்ட்ரோ உணவை முடித்துக்கொண்டு உணவகத்தைவிட்டு சென்றபின், கியூபாவின் உளவுத்துறையினர் உணவகத்தில் நடத்திய வழமையான சோதனையில், மாத்திரையுடன் கூடிய கிளாஸ் அகப்பட்டுவிட்டது.
அன்றிலிருந்து அந்த உணவகத்துக்குப் போவதையே காஸ்ட்ரோ நிறுத்திவிட்டார். (முற்றும்)