இணை பிரியாத அபூர்வ காதல் ஜோடி!
13 Feb,2014



இணை பிரியாத அபூர்வ காதல் ஜோடி!
பெப்ரவரி மாதம் ‘காதலர்கள் மாதம்’ என ஊடகங்கள் இளசுகளை ஞாபகமூட்டிக்கொண்டே இருக்கின்றன. பெப்ரவரி 14ஆம் திகதி காதலர் தினம் என்றும் ஒரு தினமாம்.
ஆம்! இளசுகள் இந்த காதலர் தினத்தை கொண்டாட தயாராகும் இவ்வேளையில், அபூர்வ காதல் ஜோடி ஒன்றை இன்று அறிமுகஞ் செய்யப்போகிறேன்.
குரங்குக்கும் கோழிக்கும் காதலாம். குரங்கு கோழியை காதலிக்கிறது என்றால் வியப்பாக இருக்கிறதா? ஆம் இதுவும் ஒரு உண்மை சம்பவம் தான்.
காதல் உணர்வு மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் உண்டு ஆனால் விலங்கு பறவை என வெவ்வேறு இனங்களுக்கு இடையே கூட காதல் வரும் என்பதை யாரும் நினைத்துகூட பார்க்க மாட்டார்கள்.
இந்தோனேசியாவிலேயே இந்த அபூர்வ சம்பவம் நடந்துள்ளது. ஜாவா தீவை சேர்ந்த ஹக்கீம் என்பவர் அங்குள்ள சந்தைக்கு தினமும் தனது குரங்கை அழைத்து செல்வது வழக்கம். . அப்போது அங்கே ஒரு கோழியும் வருகிறதாம். கோழியை பார்த்த பின்னர் குரங்கு காதல் வலையில் விழுந்துள்ளது.
பின்னர் குரங்கும் கோழியும் ஒன்றையொன்று கட்டியணைத்து உறவாடுகின்றதாம். இதனை ஒரு புகைப்பிடிப்பாளர் தனது கெமராவுக்குள் ‘கிளிக் ‘ செய்துக் கொண்டுள்ளார். அந்த குரங்கு -கோழி காதல் ஜோடிகளைத் தான் இன்று இங்கே காண்கிறீர்கள்.
‘இங்கு நீயொரு பாதி – நானொரு பாதி’ என்றல்லவா குரங்கு கோழியை அணைத்துக்கொண்டிருக்கிறது? இன்றைய நவீன உலகில் இதெல்லாம் சகஜமப்பா!