பூமியில் வேற்றுக்கிரகவாசிகள்? பாகம்-3 (உண்மையின் தரிசனம்): நிராஜ் டேவிட்
29 Jan,2014

பூமியில் வேற்றுக்கிரகவாசிகள்? பாகம்-3 (உண்மையின் தரிசனம்): நிராஜ் டேவிட்


பூமியில் விடைதெரியாத பல கேள்விகள் இருக்கின்றன.... தீர்க்கப்படாத பல சந்தேகங்களும் இருக்கின்றன.
பூமியில் வேற்றுக்கிரகவாசிகளின் பிரசன்னம் என்பதும் –அப்படிப்பட்டதுதான். பூமியில் மனித சக்தியை விஞ்சிய காரியங்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் பூமி முழுவதும் நிறைந்து காணப்படுகின்றன.
அப்படியான காரியங்களின் பின்னணியில் வேற்றுக்கிரகவாசிகள் இருந்திருக்கிலாம் என்பது சில ஆய்வாளர்களின் வாதமாக இருக்கின்றது. இல்லை இவை முற்றுமுழுதாக மனித சக்தியைக்கொண்டு மாத்திரம்தான் நடைபெற்றிருக்கின்றன என்று வாதிடும் தரப்புக்களும் உள்ளன.
வேறுதரப்பட்ட ஆச்சரியங்களையும், அவிழ்க்கப்படாத பல மர்மங்களையும் தன்னகத்தே கொண்டு காணப்படும் சில விடயங்கள் பற்றியும், அந்த விடயங்களின் உருவாக்கத்தின் பின்னால் வேற்றுக்கிரகவாசிகளின் கரங்கள் இருந்திருக்கச் சந்தர்ப்பம் இருக்கின்றதா என்பது பற்றியுமான ஆய்வாளர்களது கருதுகோள்களைச் சுமந்துவருகின்றது இந்த வார உண்மையின் தரிசனம்.