போற்றிடும் பால்காரர்!

28 Jan,2014
 

 

போற்றிடும் பால்காரர்!

குஜராத் மாநிலத்தில் கெய்ரா மாவட்டம் 1940களின் முற்பகுதி வெளியுலகத்துக்குத் தெரியாத பகுதி. அப்பகுதியில் "ஆனந்த்’ என்று ஓர் ஊர். பிற கிராமங்களைப் போல் ஆனந்திலும் பெரும்பாலான விவசாயிகள் ஓரிரு பசு அல்லது எருமை வளர்த்துப் பால் விற்றுச் சிரம வாழ்க்கை நடத்தி வந்தனர்.
"பால்சன்’ என்கிற தனியார் பால் நிறுவனம் அப்போது மிகப் பிரசித்தம். விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கப் பால் வாங்கிக் கொள்ளை லாபத்துக்கு விற்பனை செய்தார்கள். இவர்களை விட்டால் விவசாயிகளுக்கு வேறு வழியில்லை.
இத்தருணத்தில்தான் ஒரு திருப்பம் ஏற்பட்டது. ஆனந்தில் பிறந்து வளர்ந்த திருபுவனதாஸ் படேல் என்னும் விடுதலை வீரர் "வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் ஈடுபட்டு, இரண்டரை ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு 1945ல் ஊர் திரும்பினார்.

 

பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கு ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார் திருபுவனதாஸ் படேல். இதற்காகத் தன் தலைவர் சர்தார் வல்லபாய் படேலைச் சந்தித்துப் பேசினார். விஷயத்தை ஏற்கெனவே தெரிந்து வைத்திருந்த வல்லபாய் படேல், கெய்ரா மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களைத் தொடங்குவது ஒன்றுதான் சிறந்த வழி என்று ஆலோசனை கூறினார். சர்தார் படேலும் கெய்ரா மாவட்டத்தில் கரம்சாட் என்ற கிராமத்தில் பிறந்தவர்.
திருபுவன்தாஸ் வீடு வீடாகச் சென்று கூட்டுறவின் மூலம் அடையகூடிய பொருளாதாரப் பாதுகாப்பைப் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். 1946ஆம் ஆண்டு இறுதியில் 5 பால், உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து, கெய்ரா மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியமும் பதிவு செய்யப்பட்டது.
"ஆனந்தில்’ தொடங்கப்பட்ட இக்கூட்டுறவு இயக்கமே (ஆனந்த் பால் யூனியன் லிமிடெட் – அமுல்) "அமுல்’ என்கிற மந்திரச் சொல் ஆனது.
கூட்டுறவு கோட்பாடுகளிலிருந்து சிறிதும் வழுவாமல், அதேநேரம் புதிய நிர்வாக உத்திகளையும் கையாண்டு அமுல் நிறுவனம் பால் வினியோகப் பணிகளைச் செம்மையாகச் செய்து வந்தது. இதை அறிந்த, ஐக்கிய நாடுகள் சபையின் யூனிசெஃப் அமைப்பு குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து வழங்கும் திட்டத்திலிருந்து அமுலுக்கு கணிசமான நிதி உதவி செய்தது.
அதே போல் பசியிலிருந்து விடுதலை என்கிற திட்டத்தின்கீழ் விலை உயர்ந்த நவீன கருவிகளை நன்கொடையாக ஐ.நா.வின் உணவு மற்றும் வேளான் அமைப்பு வழங்கியது.
அமுல் துரிதமாக வளர்ந்ததற்கு முக்கிய உந்துசக்தியாக இருந்தவர்கள் இருவர்; திருபுவனதாஸ் படேல் மற்றும் டாக்டர் வர்கிஸ் குரியன் ஆகியவர்கள்.
1946ல் கூட்டுறவு ஒன்றியம் பதிவு செய்யப்பட்டது முதல் 1973ல் தானாக முன்வந்து ஓய்வு பெற்றதுவரை திருபுவனதாஸ் படேல் அமுல் தலைவராக மட்டும் அல்லாமல் ஒரு கர்ம வீரராகக் கெய்ரா மாவட்ட ஒன்றியத்துடன் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
உலகின் கவனத்தை அமல் ஈர்க்கும் வகையில், 1949 முதல் 2006ஆம் ஆண்டுவரை, பால் கூட்டுறவு இயக்கத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் டாக்டர் வர்கிஸ் குரியன்.
சர்வதேச அளவில், பால் வளத்துறையின் இணையில்லாத நிபுணர் என்ற அங்கீகாரம்; 1963ல் மகஸஸே விருது; 1966ல் பத்ம பூஷன்; 1999ல் பத்ம விபூஷன்; உலகின் 12 நாடுகளின் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற வர்கிஸ் குரியன், ஆரம்ப காலத்தில் பால் துறைக்கு வந்தது தற்செயலாகத்தான்!
யார் இந்த அதிசயம் மனிதர்? கேரள மாநிலத்தில் கோழிக்கோட்டில் 1921 நவம்பர் 26ல் பிறந்தவர். இவரது தந்தை கொச்சியில் டாக்டராகப் பணியாற்றினார்.
சென்னை, லயோலா கல்லூரியில் பி.எஸ்.ஸி. பட்டம் பெற்ற சூரியன், கிண்டி பொறியியல் கல்லூரியின் மெக்கானிகல் பொறியியல் பட்டமும் பெற்றார். பிறகு 1946ல், ஜேம் ஷெட்பூரில் டாடா ஸ்டீல் டெக்னிகல் இன்ஸ்டிடியூடில் உயர்தொழில் நுட்பம் பயின்றார். அதை அடுத்து மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் உதவியுடன் 1948ல் அமெரிக்காவில் மிக்சிகன் பல்கலைக் கழகத்தில் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் விரும்பி கேட்டது. மெக்கானிகல் பொறியியல் பாடம். கிடைத்ததோ பால்வளத்துறை; கிடைத்ததை ஏற்றுக் கொண்டார்.
அமெரிக்க மேல்படிப்புக்குப் பிறகு தாய்நாடு திரும்பிய குரியன், ஆனந்திலுள்ள மத்திய அரசின் பால் பண்ணை ஆய்வக்தில் பொறியாளராக நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே மூடப்படுகிற நிலையில் இருந்த அலவலகம் சில மாதங்களிலேயே மூடப்பட்டது. ஆனந்தில் அவருக்கு இருக்க விருப்பமில்லை. எனினும், மத்திய அரசு உதவிப் பணம் பெற்று அமெரிக்காவில் படித்தவர் என்பதால், அரசுப்பணியில் சில வருடங்கள் கட்டாயமாகத் தொடர்வேண்டிய நிலையில் இருந்தார்.
இதற்கிடையே திருபுவன்தாஸ் படேலுக்கும் குரியனுக்கும் ஆனந்தில் பரிச்சயம் ஏற்பட்டது. குரியன், கெய்ரா கூட்டுறவு அமைப்பில் தொடர வேண்டும் என்று திருபுவன்தாஸ் பெரிதும் விரும்பினார். அப்போது மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் விருப்பமும் அதுவாகவே இருந்தது. கொய்ரா மாவட்டம் சர்தார் படேலின் நாடாளுமன்ற தொகுதியும் கூட.
கெய்ரா பகுதியில் பால்சன் என்ற அன்னிய பால் நிறுவனத்தின் கோரப்பிடியிலிருந்து ஏழை விவசாயிகளையும் பால் உற்பத்தியாளர்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற லட்சியத்தின் அடிப்படையில் கெய்ரா கூட்டுறவு அமைப்பில் குரியன் 1949ல் நியமிக்கப்பட்டார்.
கூட்டுறவு சங்கத்தில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். பால்வரத்துப் பெருகியது. பெரிய அளவில் விற்பனைக்கு வழிவகுப்பதே குரியனின் உடனடி இலக்காக இருந்தது. அனைத்து மாநிலங்களிலும் நியாயமான விலை, உயர்ந்த தரம், கூட்டுறவு இயக்கத்துக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய அரசின் கடமை ஆகியவற்றை விளக்கினார் குரியன். விளைவு: அதுவரை பால்சனுக்குக் கிடைத்துக் கொண்டிருந்த ஒப்பந்தம் முதல் முறையாக குஜராத்திலுள்ள அமுலுக்குக் கிடைத்தது. வர்த்தக ரீதியாக இது ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.
நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, குழந்தைகளுக்கு ஊட்ட உணவான பௌடர், மற்றும் வெண்ணெய், நெய், சீஸ், சாக்லேட் என அனைத்து பால் பொருள்களையும் உற்பத்தி செய்வதில் குரியன் உலகத்தரத்தையும் மிஞ்சினார். இதனால் இந்திய சந்தையில் கொடிகட்டி பறந்த பல கம்பெனிகள் இந்திய சந்தையிலிருந்து வேகமாக மறைந்தன.
ஒரு கூட்டுறவு நிறுவனம் வர்த்தக ரீதியாக வெற்றிபெற முடியும்; தொழில் நுட்ப மேம்பாட்டின் மூலம் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களையும், வலுவான தனியார் நிறுவனங்களையும் போட்டியில் வெல்ல முடியும் என்பதை முதன்முறையாக இந்தியாவில் நிரூபணம் ஆனது.
கூட்டுறவுப் பணிகளில் உள்ளூர் விவசாயிகளை முழுமையாக ஈடுபடச் செய்தல்; பால் உற்பத்தியில் குடும்பத்தினர் உழைப்பு முழுமையாகப் பயன்படுத்துதல் ஆகிய புதிய உத்திகள் நல்ல பலன் அளித்தன. கிராமம் முதல் ஒன்றியம் வரை கூட்டுறவுச் சங்கங்களைத் தாங்களே நிர்வாகம் செய்திட ஊக்குவிக்கப்பட்டனர். வெளியார் தலையீடு அறவே அனுமதிக்கப்படவில்லை.
மிக முக்கியமாக, அமுலின் லாபம், பால் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கே முழுமையாகப் போய் சேர்ந்தது. இதனால், அவர்களின் பொருளாதாரமும், வாழ்க்கைத்தரமும் பிரமிக்கத்தக்க வகையில் உயர்ந்தன. இதன் விளைவாக, விவசாயிகளின் ஈடுபாடு மேலும் மேலும் அதிகரித்தது.
அர்ப்பணிப்பு உணர்வு, செயல்திறன், நடைமுறைக்கு உகந்த நிர்வாக இயல், மனிதநேயம் கொண்ட நிர்வாகம் உருவானது. ஊழல், வீண் ஆடம்பரச் செலவு, அரசியல் குறுக்கீடு, அதிகாரிகளின் தலையீடு ஆகியவை நெருங்காமல் கண்காணிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு வசதியான வீடு, நல்ல சாலை, பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் எனப் பலவசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இதனால் அமுல் வளர்ச்சி மேலும் மேலும் அதிகரித்தது.



Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies