
கடந்த ஆண்டு எந்த விமான நிறுவனம் டாப்?
புது வருடம் பிறந்து இரண்டாவது மாதத்தில் (பிப்ரவரி) விமானங்களில் பயணம் செய்தால், விமானத்துக்கு உள்ளே இருக்கும் இன்-பிளைட் சஞ்சிகையை ஒருமுறை புரட்டிப் பாருங்கள். கடந்த ஆண்டு தமது ஏர்லைன்ஸ் குறித்த ரேங்கிங் பற்றி அரேகமாக எழுதியிருப்பார்கள் (ரேங்கிங் நன்றாக இருந்தால்!)
சிவில் ஏவியேஷனில் வர்த்தகம் செய்யும் சகல விமான நிறுவனங்களும் இந்த விஷயத்தில் ஆர்வமாக இருப்பார்கள். தமது விமான நிறுவனம் உலக ரேங்கிங்கில் எங்கே உள்ளது என்பதை தெரிந்து கொள்வது சொந்த சந்தோஷத்துக்கு மட்டுமல்ல, விமான நிறுவனத்தின் விளம்பரத்துக்கும் பெரிதாக உதவும் என்பதாலேயே இந்த ஆர்வம். நாம் முன்னர் குறிப்பிட்ட பிப்ரவரி மாதம் வெளியாகும் விமான நிறுவன விளம்பரங்களிலும், இந்த ரேட்டிங் பற்றிய பிரஸ்தாபம் இருக்கும், நாம் முன்னர் குறிப்பிட்டதுபோல ரேட்டிங் நன்றாக இருந்தால்! (ஏர் இந்தியாவுக்கு இந்த கவலை எல்லாம் கிடையாது. அது பாட்டுக்கு சிவனே என்று ஓடும். ரேட்டிங் வந்தால்தானே!)
ஏர்லைன்ரேட்டிங்.காம் மீடியா, கடந்த ஆண்டில் (2014) விமான நிறுவனங்களின் ரேட்டிங் எப்படி இருந்தது என வரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளது. இதில் முதல் 10 இடங்களில் வரும் விமான நிறுவனங்களுக்கும், இந்த மாதம் தீபாவளிதான்!
இவர்களது ரேட்டிங்கில் முதல் இடத்தில் உள்ள விமான நிறுவனம், ஆஸ்திரேலியாவின் குவான்டஸ் ஏர்வேஸ். முழுமையாக 7 நட்சத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 1950களில் இருந்து விபத்தே ஏற்பட்டிராத விமான நிறுவனம் எனவும் சிலாகிக்கப்பட்டுள்ளது.
1950களில் இருந்து குவான்டஸ் விமானம் ஒன்று விபத்தையே சந்தித்ததில்லை என்பது நிஜம்தான். ஆனால், சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து புறப்பட்டு சென்ற குவான்டஸ் விமானம் ஒன்றுக்குள் பாம்பு ஒன்று இருந்ததாக, இந்தோனேசியாவில் அவசரமாக எமர்ஜென்சி லேன்டிங் செய்தார்களேஸ பாம்பு அபாயகரமான சமாச்சாரம் இல்லையா? (போட்டோ-1, குவான்டஸ் விமானத்தின் காக்பிட்டில் இருந்து அதன் பைலட் கை காட்டும் காட்சி. கேப்டன் கை காட்டுகிறாரா, பாம்பை துரத்துகிறாரா?)
2-வது போட்டோவில் உள்ள நங்கை அணிந்துள்ள உடையை பார்த்தவுடன், எந்த ஏர்லைன்ஸ் என்பதை புரிந்து கொள்வீர்கள். ஆம். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ். இவர்களுக்கு ‘2013-ன் சிறந்த விமான பொழுதுபோக்கு’ (In-flight entertainment) விருது கிட்டியுள்ளது. அத்துடன் 2013-ம் ஆண்டின் சிறந்த எகானமி கிளாஸ் கேபின் சீட்கள் ரேட்டிங்கிலும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 3-வது போட்டோவில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்துக்கு உள்ளே, எகானமி கிளாஸ் இருக்கைகளை பார்க்கவும்.
முதல் 10 இடங்களை வென்ற விமான நிறுவனங்கள், Air New Zealand, All Nippon Airways, Cathay Pacific Airways, Emirates, Etihad Airways, Eva Air, Royal Jordanian, Singapore Airlines மற்றும், Virgin Atlantic. என்னங்க இது? ஒரு அமெரிக்க விமான நிறுவனம்கூட இல்லையே? ஆமா.. எங்கே அய்யா நம்ம ஏர் கனடா? (பொல பொலவென கண்ணீர்)
குவான்டஸ் ஏர்வேஸூக்கு 7 ஸ்டார் கிடைத்திருக்க, ஆப்கானிஸ்தானின் ‘காம் ஏர்’ விமான நிறுவனத்துக்கு 3 ஸ்டார் கொடுத்திருக்கிறார்கள். நாம் கொடுத்துள்ள 4-வது போட்டோவை ஒருமுறை அவசியம் பார்க்கவும். ‘காம் ஏர்’ அலுவலகத்துக்கு வெளியே நிற்பவர் கையில் வைத்திருப்பதை கவனிக்கவும்ஸ ஒருவேளை அதனால்தான் ஸ்டார் கொடுத்தார்களோ, என்னவோ!
இந்தோனேசியாவின் ‘லயன் ஏர்’ 2 ஸ்டார்களை பெற்றுள்ளது. 5-வது போட்டோவை பாருங்கள். அதுதான், இந்தோனேசியாவின் பாலி கடற்கரை. அதில், தரையில் சஷ்டாங்கமாக விழுந்திருப்பது வேறொன்றுமில்லைஸ 2 ஸ்டார் பெற்ற லயன் ஏர் நிறுவனத்தின் போயிங் 737 விமானம்! ஹூம்!!
2013-ம் ஆண்டில் விமான விபத்துக்கள் அதிகம் ஏற்பட்ட இடம், ஆபிரிக்க கண்டம் என ரேட்டிங்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டின் மிக மோசமான விமான விபத்து நடந்தது, ரஷ்யாவில்! டாடார்ஸ்டான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம், ரஷ்யாவின் கஸான் பகுதியில் விபத்துக்குள்ளாகிய து .