ஷக்தி......ஷக்தி......ஷக்தி...ம் எங்க இவரைக் காணோம்.... எங்க போயிருப்பார்.? பக்கத்தில உள்ள சொப்பிங் சென்டருக்குப் போயிட்டு வாறன் என்றதிற்குள்..... எங்க போயிருப்பார்.....? அடடா செல் போன் இருப்பதையே மறந்து விட்டேன். சரி அதற்காவது எடுத்துப் பார்ப்போம்.
என்னடாயிது போன் கூட ஓவ்வில இருக்கிறதே....என்ன நடந்தது...ஷக்திக்கு..?
தனக்குள்ளே கேள்விகளைப் போட்டுக் கொண்டு விடை தெரியாமல் பதறிப் போனாள் சுருதி. சுருதியும் ஷக்தியும் இல்லற வாழ்விலே இனிமைப் பொழுதுகளை மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருக்கும் ஆண்டுகள் இதுவரை
2 ஆகிவிட்டது. ஷக்தியும் சுருதியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அவர்கள் வாழ்விலே சண்டைக்கும், சந்தேகத்திற்கும் இடமின்றி நிலவும் வானும் போல அன்பாக வாழ்ந்து வந்தார்கள்.
ஷக்திக்கு......சுருதியிடத்தில் மிகவும் பிடித்துக் கொண்ட குணம் என்றால் மிகவும் எழிமையான பாவனை. மற்றப் பெண்கள் போல அதிக நேரம் மேக்கப்பில நேரத்தை செலவிட மாட்டாள். தினமும் 2 தடவை நெற்றியிலே குங்குமம் வைப்பது. யாருடனும் அன்பாகப் பழகுவது. இப்படி எல்லாமே அவளிடத்திலே பிடித்துக் கொண்டதாக அடிக்கடி கூறுவான். சுருதிக்கு அதிகமாக பெண் நண்பிகள் என்றெல்லாம் கிடையாது. எல்லாமே அவள் ஷக்தி மட்டும்தான் என்று கூறுவாள். எப்பாவது இருந்து விட்டு வேலை அலுப்பு என்றால் மாத்திரம் ஷக்தி மதுவை நாடுவான்.
அப்போதெல்லாம் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சிடு சிடு என்றெல்லாம் இருக்க மாட்டாள் சுருதி. கணவனின் விருப்பத்திலே ஞாயம் இருப்பதாக மாத்திரம் கூறுவாள். இன்று மாலையாகி வேலைவிட்டு வீடு வந்த ஷக்தி....இப்போது இல்லை. அவனைக் காணாது உள்ளம் பதறியவளாக அழுதாள். யாரிடம் கேட்பது...? ஷக்தியின் ப்ரெண்டிடம் கேட்கலாம் என்றவாறு டெலிபோனை கையில் எடுத்து எண்களை ஒவ்வொன்றாக தட்டினாள் சுருதி. தன் எண்ணங்களை கவலையோடே பறக்கவிட்டபடி......
ம்கூம்....அங்கிருந்தும் ஏமாற்றம்தான். ம்....ஷக்திக்கு அதிக நண்பர்கள் கிடையாது. 1, 2 பேர் மட்டும் தான். அதிலும் மிகவும் குளோஸ் நண்பன் என்றால் ராகவன் மட்டும் தான். அடிக்கடி ஷக்தி மனம் விட்டு பேசிக் கொள்ளும் ராகவன் வீட்டிற்கு தான் சுருதி போன் செய்தாள். என்ன செய்வது...? நேரமோ இருட்டிக் கொண்டு வந்து விட்டது. மணி இரவு 8 மணியாகி விட்டது.
வாசலுக்கும், டெலிபோனை கையிலுமாக வைத்துக் கொண்டு ஒரு இடத்திலே இருக்காமல் தவியாய் தவித்து போனாள் சுருதி.
நேரம் ஆக ஆக....... அவளையும் அறியாமல் அழுகை வந்து அவளை நனைத்தது. ஓவென...... அழுதாள். அவள் அன்புக்குரியவனை இத்தனை மணிநேரம் இதுநாள் அவள் பிரிந்தது இல்லை. தன் முகங்கங்களை பொத்திக் கொண்டு தனிமையிலே அழுதாள். ஏதாவது விபரிதம் நடந்திருக்குமோ என்று வேறு பலவாறு சிந்தித்தாள். எதற்குமே அவளால் விடை பெற முடியாமல் இருந்தது.
சுமார் இரவு 1 மணியிருக்கும்........அப்போது டெலிபோன் அடிக்கும் சத்தம் கேட்டு மனம் பதைபதைக்க........ஹ....லோ.......என்றாள் சுருதி........ மறுமுனையில் தன் கணவன் ஷக்தி தான் என்று நினைத்தவளுக்கு மீண்டும் ஏமாற்றம்.......அங்கே ஷக்தியின் மற்றுமொரு பிரெண்ட் குணதீஸ்.............. ஹ..லோ சிஸ்டர்...நான் குணதீஸ்........இங்கே.........
ம்...........சொல்லுங்கோ கேட்குது. என்ன குணதீஸ்......? ஷக்திக்கு என்னாச்சு...? சொல்லுங்க ப்ளீஸ்.....
குணாவின் வார்த்தை வர முதலே தன் ஆவலை வெளிப்படுத்தி அழுதாள் சுருதி. ப்ளீஸ் அழாதீங்க....சிஸ்டர், ப்ளீஸ் ஷக்திக்கு நீங்க நினைப்பது போல ஒன்றுமே இல்லை. சொல்லுறதைக் கேளுங்கோ...... கண்களின் ஓரம் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு.........எங்க ஷக்தி என்று கேட்டாள் சுருதி.
ம்......சொல்லுறன் " எங்கட ப்ரெண்ட் ராகவன் ஓவர் ஸ்பீடில போய் கார் அக்ஸிடென்ட் ஆகிட்டு. நான்தான் ஷக்திக்கு மெசேஜ் கொடுத்து அவரோடு இங்க கொஸ்பிட்டலுக்கு வந்தோம். ராகவனுக்கோ யாருமில்லையே...... அவன் தான் தனிக்கட்டையாகிற்றே. அதனால........"
சொல்லி முடிக்க முதலே....குறுக்கிட்டாள் சுருதி......" இப்ப ஷக்தி எங்க....? அத முதல்ல சொல்லுங்க..."
ம்......சொல்லிடிறன். அவன்தான் என்னை அனுப்பினான். உங்களுக்கு சொல்லச் சொல்லி. ராகவனுக்கு நிறைய பிளட் தேவைப்பட்டது. கும்பிடப் போன தெய்வம் குறுக்க வந்த மாதிரி ஷக்தியின், பிளட் குரூப்பும் ராகவனுடையதும் சேமாம். அதனால ஷக்தி பெட்டில இருக்கிறான். நீங்க ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம். இன்னும் கொஞ்ச நேரத்தில அவனே நேர வந்து உங்க கூட கதைப்பார்." இதனை சொல்லும் போதே குணாவிற்கும் மனதிற்கு வேதனையாகத்தான் இருக்கிறது என்பதை....சுருதியறியாமலில்லை.
"சரி..குணா இப்பத்தான் எனக்கு நின்மதி. இருந்தாலும் இவ்வளவு நேரம் கழித்து தானா....அவருக்கு என் ஞாபகமே வந்ததாக்கும்.? நான் என் உசிரையே விட்டமாதிரி ஆச்சுது....."
இதனை சொல்லும் போது கூட விழியோரம் ஈரம். ஈரம் காயாத கன்னம். ஏதோ நிறைய நிறைய பேசத் துடிக்கும் மனசு. எல்லாவற்றிக்கும் பொதுவாக " தாங்ஸ் குணா...."
"ஆ.....வச்சிடாதீங்க சிஸ்டர்....இன்னுமொரு விசயம்.....ஷக்தி மேலே கோபப்படாதீங்கோ........இங்க வைத்து உடனே டெலிபோன் எடுக்க முடியாமல் போய் விட்டது . அதுதான்......."
"அடடா.....இது வேறயா....ம்....ம்......நான் யாருடனும் கோபம் இல்லை. ஓகே....பாய்...."
றீசிவரை வைத்து விட்டு நேராக சுவாமிப் படத்தருகே சென்று....தன் மன நின்மதியை சொல்லி ஆறுதலடைந்தாள். நமக்கெல்லாம் துன்பம் வந்து வாட்டும் போது.....தெய்வத்திடம் தானே எங்கள் துன்பச் சுமையை இறக்குவோம். அது போலவேதான் சுருதியும்.
மறு நாள் நேரம் சென்றது தெரியாமல்.....ஷக்தி நல்ல நித்திரை........தன் கணவன் தூங்கும் அழகைக் கண்டு பல தடவை ரசித்திருக்கிறாள் சுருதி. அன்றும் அப்படித்தான். அவன் மிகவும் தாமதமாகவே காலையிலே வந்து நித்திரை கொண்ட படியால்.....ஷக்தி தானாக எழும்பட்டும் என விட்டு விட்டாள் சுருதி.
கண்களை மெல்லத் திறந்து .......எது விததண்டனையும் புரியாமல் சிவரில் தூக்கி தொங்க விடப்பட்டிருக்கும் மணிக் கூட்டின் நேரத்தைப் பார்த்தான்.... ஷக்தி.
" அட...சீ....இவ்வளவு நேரமும் தூங்கிட்டேனே........ராகவன் தேடப் போகிறானே....." என்றவன் அவசரவசரமாக பாத்ரூம் நோக்கி ஓடினான்.
குரல் கொடுத்தவாறே......"சுருதி......சுருதி......."
அவளும் , கணவன் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து நின்றாள். பாசத்தோடு கணவனைப் பார்த்து கேட்டாள்......" என்ன ஷக்தி கூப்பிட்டீங்களா..."?
"ம்......ம்......நான் கொஸ்பிட்டலுக்குப் போகிறன். சரியா. நான் வர லேட்டாகும். எனக்காக காத்துக் கிடந்து சாகாமல் நேரத்திற்கு சாப்பிடு...... என்ன நான் பாட்டிற்கு சொல்லிக் கொண்டேயிருக்கேன் நீ என்னடா என்றால் ஆணி அடிச்ச மாதிரி.....நிற்கிறாய்.? என்ன ஆச்சு.......? " என்று எரிச்சலோடே கேட்டான்.
அவள்தான் பாவம் என்னத்தை சொல்லுவாள்....? அவள் நேற்றுப் பட்ட துன்பம் இவர் அறிய ஞாயமில்லை. தன்னைப்பற்றி கொஞ்சமும்....... அக்கறையில்லாமல். தன் நண்பன் நண்பன் ராகவன் ராகவன் என்றே போகிறாரே....என்று மனதிற்குள் நினைத்தாள். மீண்டும் அவளுக்குள் சோகம்.
" சரி ஷக்தி என்னையிட்டு கவலைப்படாதீங்க......ராகவனை போய்ப் பார்த்து விட்டு வாங்கோ......."
'ஆமா....இது ஒன்னுதான் குறைச்சல்....நீ சொல்லித்தான் ஆக்கும் நான் போக வேணுமோ...." தேவையில்லாமல் சுருதியை வேதனைப் படுத்தினான்.... ஷக்தி.....
தொடரும்................