
புதை குழியில் இருந்து மேலும் மனித எச்சங்களை தேடி


மன்னார் – திருக்கேதீஸ்வர மனித புதை குழி ஒன்று கண்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் நடத்தப்பட்ட மனித எச்சங்களை தேடும் பணியின் போது 10ற்கும் மேற்பட்ட மனித எலும்பு கூடுகளும் எச்சங்களும் கண்டுபிடிக்கப்படடிருந்தன.
இதனை தொடர்நது இன்று 28ம் திகதி சனிக்கிழமை குறித்த மனித எச்சங்களை தேடிக் கண்டுபிடிக்கும் பணி காலை 8:30 மணியளவில் மன்னார் மாவட்ட நீதவான் ஆனந்தி கனகரெட்ணம் முன்நிலையில் நடைபெற்றது.
இதன்போது குறித்த பகுதியில் பாதையின் நடைபாதையின் ஒரு பகுதி அகற்றப்பட்டு அகழ்வு வேலைகள் நடைபெற்றன. மேலும் சில மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதேவேளை, மனித எச்சங்களை தேடிக்கண்டு பிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
குறித்த மனித எச்சங்களை தேடும் பணிகளுக்கென அனுராதபுரம் சட்டவைத்திய அதிகாரி டி.எல்.வைத்தியரெட்ண தலைமையில் சட்ட வைத்திய நிபுணர்கள் பகுப்பாய்விற்கென பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, பேராதனை பல்கலைக்கழக பகுப்பாய்வு அதிகாரி கே.நந்தசேன, தொல்பொருள் திணைக்கள அதிகாரி ஏ.விஜயரத்தின உள்ளிட்ட பல துறைசார் நிபுணபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிகிழமை மாந்தை பகுதியில் மனித எச்சங்கள் சில மீட்க்கப்பட்டுள்ளன. மாந்தை சந்தியிலிருந்து தீருக்கேதீஸ்வரம் செல்லும் பாதையில் 50 மீற்றர் தூரத்தில் பாதையின் அருகே நீர் வடிகாலமைப்பிற்காக தண்ணீர் குழாய்கள் பதிக்கும் வேலைகள் நடைபெற்றுள்ளது.
இதன்போது வீதியின் அருகில் குழாய்கள் பதிப்பதற்கான வேலைகள் செய்வதற்கென நிலம் ஆழமாக்கப்பட்ட போது நிலத்திற்கடியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் சில கணப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து குறித்த வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் இது தொடர்பாக தமது உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் குறித்த விடயம் மன்னார் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்குச் சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தினர். அதன் அடிப்படையில் தற்போது பல மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
மனித எச்சங்களை அகழ்ந்து எடுக்கும் பணிகளுக்கு விசேட தடயங்களை கண்டறியும் பொலிசாரின் உதவியும் பெறப்பட்டுள்ளது.
கடந்த திங்களன்று (23) மனித எச்சங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அனுராதபுரத்திலிருந்து மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வைத்தியரெட்ண அழைக்கப்பட்டு, அன்று மாலை 3 மணியளவில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரெட்ணம் முன்னிலையில் விசாரணை நடந்தது.
மரண விசாராணைகளுக்கு உதவியாக அதிகாரியின் அறிக்கை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி எந்திரி ஜிப்றியின் அறிக்கைகள் என்பவற்றை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதவான் குறித்த விசாரணைகளை சனிக்கிழமை 28ம் திகதி நடத்த தீர்மானித்தார்.
அதற்கமைய மனித புதைக்குழு மீண்டும் தோண்டப்பட்டது. இதன்போது மேலும் சில மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மொத்தமாக 11 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்க்கப்பட்டுள்ளன.
இன்றைய அகழ்வுப் பணிகளை பார்வையிட வன்னி மாவட்ட ததேகூ பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்கி ஆனந்தன் நேரடியாக வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் மீட்கப்படும் எலும்புக் கூடுகளின் அதிர்ச்சிப் படங்கள்!