நீரினால் மூடப்பட்டிருந்த வழிபாட்டுத்தலங்கள் மீண்டும் மக்களின் கண்களுக்கு!
28 Dec,2013



நீரினால் மூடப்பட்டிருந்த வழிபாட்டுத்தலங்கள் மீண்டும் மக்களின் கண்களுக்கு!
மவுசாகலை நீர் தேக்கத்தால் மூடப்பட்ட பௌத்த விகாரை, இந்துக் கோவில் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல் நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் வற்றியதில் அவை மீண்டும் மக்களின் கண்களுக்கு தெரிகின்றது.
மஸ்கெலியா பழைய நகரில் இருந்த பௌத்த விகாரை, இந்து கோவில், முஸ்லிம் பள்ளி ஆகியன மவுசாகலை நீர் தேக்கம் ஆரம்பிக்கும் போது குறித்த மூன்று வழிபாட்டுத்தலங்களும் நீரினால் மூடப்பட்டது.தற்போது மவுசாகலை நீர் தேக்கத்தின் நீர்மட்டம் 140 அடியிலிருந்து 40 அடிக்கு குறைவடைந்ததால் மூன்று தேவாலயங்களும் தற்போது மக்களின் பார்வைக்கு தெரியவந்துள்ளது.
தற்போது மக்கள் பௌத்த விகாரை, இந்து கோவில், முஸ்லிம் பள்ளி ஆகிய வாழிபாட்டுத்தலங்களுக்கு பூஜை நடத்தி வழிப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.நீர்மட்டம் குறைவடைந்ததால் மக்களை மிகுந்த அவதானத்துடனும், மற்றும் மவுசாகலை நீர் தேக்கத்தில் குளிக்க செல்ல வேண்டாம் எனவும் மின்சாரசபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.