ஜேர்மனிநகரை உலுக்கிய நிர்வாண மனிதன்
25 Dec,2013

ஜேர்மனிநகரை உலுக்கிய நிர்வாண மனிதன்
ஜேர்மனி நகரத்தின் மத்தியில் நிர்வாணமாக நபர் ஒருவர் மோட்டர் சைக்கிள் ஓட்டி செல்வது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் 15ம் திகதி யூடியூபில் ”பாலர் பாய்ஸ்” என்பவர்களால் இச்சர்சைக்குரிய வீடியோ வெளியாகியுள்ளது.
இதில் பயணித்த நபர் தன் முகத்தை ஹெல்மட்டால் மூடிக்கொண்டு முன்ஸ்ட்டர் நகரின் சந்தைபகுதிகளில் வண்டியை ஓட்டிச் சென்று மக்களை திடுக்கிட செய்கிறான்.
இதுகுறித்து பொலிஸ் அதிகாரி ஆண்டிரியாஸ், இம்மோட்டார் சைக்கிள் பற்றிய அடையாளம் பேஸ்புக்கில் உள்ளது.
ஆனால் அதில் அவன் பெயர் இல்லாமல் ”பாலர் பாய்ஸ்” என்ற புனைபெயர் இருப்பதால் உண்மையான நபரின் அடையாளத்தை கண்டறிவது மிக கடினமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்நிர்வாண மனிதன் தான் பந்தயம் ஒன்றில் தோல்வியுற்றதால் இவ்வாறு செய்ததாகவும், தனது அடையாளம் மறைத்த புகைப்படத்திற்கு பேஸ்புக்கில் 1000 லைக்ஸ் வந்ததால் இச்செயலை சவாலாக செய்துள்ளான் என்றும் தெரிவிக்கப்படுகிறது.