உறவைத் தேடும் உயிர் - 7

28 Dec,2013
 
தேடல் - 7
TKS.Tmilnanbargal.
பதிந்தவர் Sivaji dhasan
 

நீல வானத்திற்குப் போட்டியாக நெடுதூரக்கடல் கீழே படர்ந்திருந்தது. அதனுடைய நீர்த்துளிகள் பல வண்ண வைரங்களைப் போன்று ஜொலித்து ஒளிக்கடலாக மின்னின. ஒளி உமிழும் நீரில் சிறு சிறு அலைகள் எழுந்து எழுந்து விழுந்து தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடின. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஜலமயம் தான். வண்ண வண்ண மீன்கள் அக்கடலைத் தாயகமாகக் கொண்டு நீந்திக்கொண்டும் விளையாடிக்கொண்டும் அவ்வப்போது எகிறிக் குதித்தும் கடலின் மடியில் விளையாடிக்கொண்டிருந்தன.

 

திடீரென்று வானமே வெடித்துவிட்டதா என்று தோன்றும் அளவிற்கு வானத்தில் நட்சத்திரங்கள் எரிந்து கீழே விழுவது போல் வெடிகளும், தரையை நோக்கி விழும் மத்தாப்பு பூக்கள் வான்மழைக்குப் போட்டியாய் விண்மீன் மழையாய் பொழிந்தன. விண்ணை முட்டிய கரகோஷங்களும் கடலையே கதிகலங்கச் செய்தன.

 

கடலின் நடுவே இருந்த மாயத்தீவில் தான் இத்தனை கொண்டாட்டங்களும் கண்ணைப் பறிக்கும் வாண வேடிக்கைகளும்...!

 

நடுக்கடலில் பரந்த நிலபரப்பில் அமைந்திருந்த அந்தத் தீவை சொர்க்கத்தில் உள்ள சிறு சொர்க்கம் என்றே அழைக்கலாம். பனிக்கட்டியால் உருவாக்கி தங்கமுலாம் பூசப்பட்டு மின்மினிப் பூச்சிகளின் ஒளியால் நிரப்பப்பட்டிருக்கும் எழில் கொஞ்சும் மரகதத்தீவு; வைரங்களாலும் வைடூரியங்களாலும் தங்கத்தாலும் வெள்ளியாலும் அமைக்கப்பட்டிருக்கும் மதில்சுவர்; கடல் நீர் மதில்சுவரின் மேலிருந்து கீழே விழுந்து அத்தீவில் நதி போல் ஒய்யாரமாக ஓடியது.

 

தீவின் நடுவே பெரும் பிரம்மாண்ட அரங்கம், கிட்டத்தட்ட கடல் போல் பரப்பளவு என்றே சொல்லலாம்; நிகழ்ச்சியைக் காண வசதியாக பனிக்கட்டிகளால் ஆன ஒரு லட்சம் இருக்கைகள் அடுக்கடுக்காக அமைக்கப்பட்டிருந்தன. மேலே இருக்கும் இருக்கையில் இருந்து அந்த அரங்கத்தை நோக்கினால் அங்கிருப்பவர்கள் புள்ளிகளாகத் தோன்றும் அளவிற்கு உயரமானதாக அமைக்கப்பட்டிருந்தது.அதில் ஒரு லட்சம் மக்கள் அமர்ந்து கரகோஷங்களை எழுப்பினர். உற்சாகக் குரல்களும் வாழ்த்துக் கோஷங்களும் கலந்து கடல் அலைகளுடன் போட்டி போட்டுக் காதைக் கிழித்தன. அரங்கத்தில் இருந்து வெடிகள் விண்ணை நோக்கி வீசப்பட்டு வர்ணஜாலங்களால் வானை மறைக்கப் போராடின.

 

மெமோரியல் உலகின் புது தலைவராகப் பொறுப்பேற்றுக்கொள்ளும் முகுந்தனுக்குத் தான் இத்தனை ஆர்ப்பாட்டமான வரவேற்புகள்...

 

வசந்தனும் ராஜீவும் லட்சம் பேர்களில் ஒருவர்களாகக் கலந்திருந்தனர். அவர்கள் பேசாமல் அங்கு நடந்துகொண்டிருக்கும் வித்தைகளை ஆனந்த உவகையுடன் நோக்கிக்கொண்டிருந்தனர். இவ்வளவு கூட்டமா என்று அசந்து வாயடைத்துப் போனான் வசந்தன். ராஜீவின் கண்கள் அங்கும் இங்கும் மேய்ந்தபடி இருந்தன.

 

அந்த பிரம்மாண்ட அரங்கின் மூலையில் ஒரு மாளிகையும் அமைக்கப்பட்டிருந்தது. அதில் பரபரப்புடன் ஆட்கள் அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டிருந்தனர்.

 

"முகுந்தன் தயாராகி விட்டாரா?"

 

"இல்லை, தலைவர் இன்னும் தயாராகவில்லை"

 

"இதுவரை இது போல் விழா யாரும் அமைத்ததில்லை"

 

"தலைவர் முகுந்தனின் விழா என்றால் சாதாரணமானதா?"

 

"இன்று புதிய அறிக்கைகளில் நல்லவை இடம் பெறும் என்று நம்புவோம்.."

 

இப்படிப் பல குரல்கள் சலசலப்புடன் ஒலித்துக்கொண்டிருந்தன.

 

தலைவராகப் போகும் முகுந்தனின் உதவியாளர் சுயம்பு ஓரிடத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார். வழியில் எதிர்பட்ட யாரையும் கவனியாமல் பதற்றத்துடன் சென்றுகொண்டிருந்தார். ஒரு பெரிய அருவி அவரை வழி மறைத்தது. அதனுள் தயங்காமல் சென்று அங்கிருந்த கடல் அறையில் நுழைந்தார், சுயம்பு.

 

அந்தக் கடல் அறையின் உள்ளே யாரும் இல்லை. வெள்ளிப் பிளம்பால் செய்யப்பட்ட கண்ணாடியும் வாசனைத் திரவியங்களும் முகுந்தன் பயன்படுத்தும் சில உடமைகளும், சில நாற்காலிகளும் மட்டுமே அங்கே இருந்தன.

 

தலைவர் எங்கே போயிருப்பார் என்று சுற்றும் முற்றும் பார்த்தார், சுயம்பு.

 

அப்பொழுது அவரின் பின்னால் "என்ன சுயம்பு?" என்று ஒரு குரல் கேட்டது.

 

சுயம்பு திரும்பிப் பார்த்தார்.

 

நீண்ட தலைமுடி, கூரிய விழிகள், வளைந்த மூக்கு, சவரம் செய்யப்பட்ட முகமுமாய் முகுந்தன் காட்சி தந்தார்.

 

அவரைப் பார்த்தது சுயம்பு, "தலைவருக்கு வணக்கங்கள்!" என்று பணிவுடன் கூறினார்.

 

"என் அறையினுள் என்னைத் தவிர வேறு யாரும் இருக்கக்கூடாதென்பது உனக்குத் தெரியுமல்லவா?"

 

"தெரியும், தெரியும் அரசே! வெளியே, மக்கள் தங்களைக் காண வேண்டி கூக்குரல் எழுப்புகிறார்கள். அவர்களுக்காக நான் உங்களின் ஆணையை மீற வேண்டியதாகப் போயிற்று"

 

"இன்று நான் என்ன சலுகைகள் கூறப் போகிறேன் என்று அறிய மக்கள் ஆவலாக உள்ளார்களா?" என்று இதழின் ஓரத்தில் தலைக்கனப் புன்னகையோடு விசாரித்தார் முகுந்தன்.

 

"இருமடங்கு ஆவல் கொண்டு ஆர்ப்பரிக்கிறார்கள் அரசே! இது போல் ஒரு விழாவை இது வரை கண்டதில்லை என்ற பேச்சும் அடிபடுகிறது"

 

"அப்படியா? மக்களை ஏங்கவிடாமல் இப்பொழுதே அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யலாம் வா!"

 

இருவரும் அந்தக் கடல் அறையை விட்டு வெளியேறினார்கள். வெளியே குழுமி இருந்தவர்கள் அனைவரும் சிரம் தாழ்த்தி முகுந்தனை வணங்கினார்கள். அவர்களை, இதழ் சிந்தும் சிறு நகையோடு பார்த்தவாறே மிடுக்கோடு சென்றார் முகுந்தன்.

 

அவர் அரங்கத்தின் வாயிலை அடைந்ததும் கரகோஷங்களின் இரைச்சல் விண்ணைப் பிளந்தது.

"மெமோரியல் உலகத்தின் புதிய அரசர் வாழ்க! வாழ்க! வாழ்க!" என்கின்ற கோஷங்கள் எழுந்தன. கோஷங்கள் அடங்க வெகுநேரமானது.  

 

கூடியிருந்தவர்களைப் பார்த்துக் கையசைத்தவாறே கடல் அலைகளால் செய்யப்பட்ட அரியணையில் முகுந்தன் அமர்ந்தார். கோஷங்கள் போதும் என்பது போல் அவர் கையசைத்ததும், அத்தனை சலசலப்புகளும் வீழ்ந்து கடல் அருவியின் சத்தம் மட்டுமே சங்கீதம் பாடுவதுபோல் இரைச்சலுடன் விழுந்துகொண்டிருந்தது.

 

இவற்றையெல்லாம் பார்த்தவண்ணம் இருந்த வசந்தனின் மனதில் பல கேள்விகள் எழுந்தன.

 

யார் இவர்? இவரின் கண்ஜாடையே கூட்டத்தை அமைதிப்படுத்திவிட்டதே! அது என்ன விழிகளா? இல்லை வேல்களா? பார்த்தாலே உடலைத் துளைத்து குருதி வெளிவந்துவிடும் போலிருக்கிறதே? என்றெண்ணினான்.

 

வசந்தன், ராஜீவை நோக்கினான். ராஜீவ் நடக்கும் நிகழ்வுகளைக் கண்சிமிட்ட மறந்தபடி பார்த்து ஸ்தம்பித்திருந்தான். ராஜீவின் தோள்களை உலுக்கினான் வசந்தன். உடனே, சுயநினைவு பெற்ற ராஜீவ், என்ன? என்பதைப் போல் வசந்தனை நோக்கினான்.

 

"யார் இவர்? எதற்காக என்னை இவ்விடத்திற்கு அழைத்துக்கொண்டு வந்திருக்கிறாய்?"

 

"நீ கேட்ட கேள்வியை மீண்டும் ஒருமுறை கேட்டுவிடாதே. மெமோரியல் உலகத்தைப் பற்றி உன்னிடம் சொன்னேன் அல்லவா?"

 

"அந்த பிறப்பு இறப்பைத் தீர்மானிக்கும் உலகம்....?"

 

"ஆம், அதே தான். இவர் தான் மெமோரியல் உலகின் புதிய சக்ரவர்த்தியாக பதவி ஏற்றிருப்பவர்".

 

"பழைய சக்ரவர்த்தி எங்கே போனார்?"

 

"அது தெரியவில்லை. திடீர் திடீரென்று மறைந்து போவார்கள். புதுப் புது அரசர்களை உருவாக்குவார்கள். மெமோரியல் உலகமே ஒரு புதிரான உலகம். அதைப் பற்றிப் பேச ஆரம்பித்தால், வருஷங்கள் கூட கடந்து விடும்"

 

அப்பொழுது அரங்கத்தின் நடுவே ஒருவர் வந்து நின்று பேசினார்.

 

"மக்களே! புதிய அரசரின் சொற்பொழிவுக்கு முன் உங்களை மகிழ்விப்பதற்காக ஆடல் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்போகின்றன" என்று முழங்கினார்.

 

கூடி இருந்தவர்கள் சந்தோசக் கூக்குரலிட்டு ஆர்ப்பரித்தனர்.

 

திடீரென்று அவ்விடமே இருளால் சூழ்ந்தது. கூட்டத்தில் அமைதி ஏற்பட்டது. மைதானம் மட்டுமே ஒளிக் கீற்றால் சூழப்பட்டிருந்தது. அதில் கடல் அலைகள் திடீரென்று தோன்றின. கூட்டத்தினர் ஒரு கணம் பயந்தாலும் அவர்களின் பயம் உடனே துடைத்தெறியப்பட்டது.

 

கடலின் மேல் ஓர் அழகிய கன்னி மூழ்காமல் நடந்து வந்தாள். நீல வண்ண ஆடை அணிந்திருந்தாள். அந்த ஆடையில் சிறு சிறு நட்சத்திரங்கள் மின்னுவது போல் ஆடை முழுதும் மின்னியது. நீரின் மேல் நடக்கும் தாமரையாக அவள் விளங்கினாள். அவளின் கார் கூந்தல் கருமேகங்களைப் பொறாமை கொள்ள வைக்கும் அழகு.

 

வசந்தனின் கண்கள் அகல விரிந்தன. பிரம்மிப்பில் வீழ்ந்தான். அதிர்ச்சியில் தவழ்ந்தான். நடப்பவை கற்பனையா? அல்லது கனவா? என்று குழம்பினான். அப்பெண் வேறு யாரும் அல்ல; ஷோபனாவே தான்! அவனது மனம் மயங்கிய நிலையில் அவளைக் கண்டான். இமைகள் துடிப்பதை நிறுத்திவிட்டன.

 

அப்போது, இனிய சங்கீதம் ஒலிக்கத் தொடங்கியது. அது எங்கிருந்து வருகிறதென்று தெரியவில்லை. ஆனால், சங்கீதத்தின் இனிமை காதில் நுழைந்து மனதில் தங்கி உடலிற்கு கிளர்ச்சியை அள்ளி வழங்கியது. அக்கிளர்ச்சியின் பூரிப்பு விழிகளில் படர்ந்து, அனைவரின் கண்களுக்கும் ஷோபனா நிலவு தேவதையாய் காட்சியளித்தாள். எல்லோரையும் அவளது கண்கள் நோட்டமிட்டபின் அக்கடலின் ஜலத்தின் மேல் ஆடத் துவங்கினாள்.

 

அவளின் கை, கால்கள் அசைந்தாடும் போது அவளின் அழகு ஆயிரம் மடங்கு பெரிதாகியது. முன்னே வந்து அவளின் உடல் வளையும் போது போதை மயக்கத்தை உண்டு பண்ணியது. அவளின் குவளைக் கண்களில் வண்டுகள் மயங்கிய பாடு தான் வசந்தனின் நிலைமையும். அவன் எழுந்தான்; அங்கிருந்து நடந்தான்; இன்னும் அருகே சென்று காண வேண்டும் என்று அவன் மனது அரித்தது.

 

குழுமியிருந்தவர்களின் சலசலப்பை ஷோபனா தன் மாய நடனத்திலேயே சொக்க வைத்து விட்டாள். அனைவரும் ஒரு சேரத் தங்கள் கண்களை அவள் மீது பதித்தனர். திடீரென்று அவளைச் சுற்றி அல்லி மலர்கள் தோன்றின. அதன் இதழ்களின் மேல் பாதம் வைத்து ஆடினாள். கடல் நீர் அடர்ந்த நீல நிறத்திற்கு மாறி ஒளிக் குழம்புகளைக் கமிழ்ந்து வர்ண ஜாலங்களை நிகழ்த்தின. அலைகளின் மேல் அவள் நின்று அரங்கத்தை வேகமாக சுழன்று வந்தாள். அது வானவில் அவர்களைச் சுற்றிச் சுழலுவது போல் இருந்தது. அலை மேலே எழுந்தது. ஆனால், அதில் அவள் மூழ்கவில்லை; இன்னும் வேகமாக நடனமாடினாள். வசந்தனின் இரு விழிகளிலிருந்து நீர் துளிர்த்தது. காரணம் தெரியவில்லை. ஆனால், அந்த நடனத்தில் ஏதோ ஒன்று ஒளிந்திருப்பதாய் அவனுக்குத் தோன்றியது. அவள் கீழிறங்கி வந்தாள். அவளைச் சுற்றி நூறு பெண்கள் தோன்றி நடமாடினர். அவற்றைப் பார்ப்பதற்கு சூரியனைச் சுற்றும் கோள்கள் போல இருந்தது. அவள் மட்டும் தனியாகத் தெரிந்தாள். பிரம்மாண்ட நடனம் பிரம்மிக்க வைத்தது. பிறகு, ஆட்டம் நின்று ஆடியவர்கள் கலைந்து போயினர். ஷோபனாவும் சென்றாள். ஆனால், வசந்தன் அவளின் முதுகையே வெறித்துக்கொண்டிருந்தான்.

 

பின்னர், மீண்டும் பேச்சுக் குரல்களின் சலசலப்பு கூடியது. அரசர் எழுந்தார். கோஷங்கள் கூடின. அதை ஒரு கையின் அசைவிலேயே நிறுத்திவிட்டார் மெமோரியல் உலகின் சக்கரவர்த்தி முகுந்தன்.

 

"என் அன்பான ஆத்மாக்களே! மெமோரியல் உலகின் சக்கரவர்த்தியாகப் பொறுப்பேற்றிருக்கும் இச்சமயத்தில் உங்களில் ஒருவனாக இருந்து உங்களின் மனநிலைகளைப் படித்தவனாக நான் இங்கு சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறேன். அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு அவசியம் தேவை" என்று பேச்சைத் துவங்கினார்.

 

"ஒத்துழைப்பு கொடுப்போம்! ஒத்துழைப்பு கொடுப்போம்!" என்று குரல்கள் ஆங்காங்கே எழுந்தன.

 

"மெமோரியல் உலகில் வேலை செய்யும் வயதான ஊழியர்களுக்கு ஓய்வு கொடுத்து புதியவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படும்" என்றார்.

 

கைதட்டல்கள் காதைக் கிழித்தன.

 

"இன்று நான் பதவி ஏற்ற முதல் நாளில், உங்கள் அனைவருக்கும் மந்திர தந்திரப் பொருள் ஒன்று கிடைக்கும். அதைப் பெற்றுக்கொண்டு மகிழுங்கள்!"

 

"சிறைச்சாலையில் இருந்து தப்பிய ஆத்மாக்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்!"

 

"வருஷத்தில் ஒரு நாள் உங்களின் உறவுகளைப் பார்க்க பூமிக்குச் சென்று வரலாம். ஆனால் பேச முடியாது. ஏனென்றால், அவர்களின் கண்களுக்கு நீங்கள் புலப்படமாட்டீர்கள்"

 

"மெமோரியல் உலகத்தின் ஊழியர் ஆவதற்கு உங்களின் பெயர்களை எழுதி அரங்கத்தின் நடுவே இருக்கும் தண்ணீரில் தூக்கி எறியுங்கள். உரிய காலத்தில் யார் யார் அதற்குத் தகுதியானவர்கள் என்று தெரியும்" என்றார்.

 

எல்லா திசைகளிலிருந்தும் கைதட்டல்களும் வாழ்த்துப்பாடல்களும் குவிந்திருந்த வேளையில், அவற்றைக் காதில் போட்டுக்கொள்ளாமல் அரங்கை விட்டு வெளியேறினார் முகுந்தன்.

 

வசந்தன் மாயமான ஷோபனாவைத் தேடிக்கொண்டிருக்கையில் ஒரு காட்சியைக் கண்டு அவனது கண்கள் ஓரிடத்தில் நின்றன.

 

கூட்டத்தின் ஓர் மூலையில் ஓல்ட்மன் முகுந்தனை முறைத்தபடி நின்றுகொண்டிருந்தார். அவரின் கண்களில் சினம் குடிகொண்டிருந்தது. அவரின் கைகள், கையில் இருந்த ஊன்றுகோலை இறுக்கமாகப் பிடித்து, தாடை துடித்துக்கொண்டிருந்தது.

 

வசந்தன் அவரை நோக்கிச் சென்றபோது ஒருவன் மீது மோதிவிட்டான். அவன் வசந்தனை முறைத்தான்.

 

"மன்னிக்கவும்!" என்று கூறி ஓல்ட்மனின் அருகில் சென்று, "ஓல்ட்மன்" என்றான்.

 

அவர் அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை.

 

அருகில் இருந்தவன், "யாரைக் கூப்பிடுகிறாய் தம்பி?" என்றான்.

 

"இதோ இருக்கிறாரே, இவரைத் தான்" என்று ஓல்ட்மனை சுட்டிக் காட்டினான்.

 

"அங்கு யாரும் இல்லையே" என்றான் அவன்.

 

"இல்லையா?" என்று மீண்டும் ஓல்ட்மனைப் பார்த்து, "அவர் உங்களை இல்லையென்று  சொல்கிறார்" என்று அவரைத் தொட முயன்ற போது அவனால் தொடமுடியவில்லை. ஆனால், ஓல்ட்மனின் பிம்பம் முகுந்தனையே முறைத்தபடி இருந்தது.

 

வசந்தன் ஒன்றும் புரியாமல் பார்த்தான். ஓல்ட்மன் திடீரென்று மறைந்துவிட்டார். அவன் குழம்பினான். ஏன் ஓல்ட்மன் மற்றவர் கண்களுக்குத் தெரியவில்லை. என் கண்களுக்கு மட்டும் தெரிந்தார் என்று தனக்குள்ளாகவே கேட்டுக்கொண்டான்.

 

அப்போது அரங்கத்தில் நெருப்புப் பறவைகள் பறப்பதைக் கண்டு திடுக்கிட்டு சுற்றிலும் நோக்கினான்.

 

மெமோரியல் உலகின் பணிக்கு ஆர்வம் உள்ள பலர், தங்களின் உள்ளங்கையில் ஒரு காய்ந்த ரோஜாமலரை உருவாக்கி அதில் தங்கள் பெயரை எழுதினார்கள். பெயர் முழுவதையும் எழுதியதும் மலர் தீப்பற்றி எரிந்தது. அதை அரங்கத்தின் நடுவே இருந்த தண்ணீரை நோக்கி வீசினர். அது ஒரு நெருப்புப் பறவையாக மாறி உடல் முழுதும் தணலின் வெப்பத்தைச் சுமந்துகொண்டு பறந்து சென்று தண்ணீரில் விழுந்து மடிந்தது. அதே போல் பல்லாயிரக்கணக்கான அக்னிப் பறவைகள் பறந்து சென்று தண்ணீரில் மூழ்கி மடிந்தபடியே இருந்தன.

 

அதைக் கண்ட வசந்தனின் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது. மெமோரியல் உலகிற்கு சென்றால் தன்னால் நினைவுகளை மீட்டுக்கொள்ள முடியும் அல்லவா? அப்பொழுது நாமும் விண்ணப்பிப்போமே என்று எண்ணினான். ஆனால், அவனால் அந்த மலரை உருவாக்க முடியவில்லை. தன் விதியை நொந்துகொண்டான். வானமே கையை விரித்தது போல் சில மழைத்துளிகளை அவன் முகத்தில் விழவைத்தது.

 

"போதும் நிறுத்துங்கள்!" என்றார் சுயம்பு.

 

உடனே, தண்ணீரை நோக்கிப் பறந்துகொண்டிருந்த அனைத்து  அக்னிப்பறவைகளும் வெடித்துக் கரித்தூளாகக் கீழே விழுந்தன.

 

"கூடிய விரைவில் யார் யார் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்  என்ற அறிவிப்பு வரும். கலைந்து செல்லலாம்"

 

அனைவரும் கலைய ஆரம்பித்தனர். வசந்தன் ஏமாந்த முகத்தோடு, அரங்கத்தை விட்டு செல்வோரை வெறித்தான். ராஜீவைத் தேடினான். ராஜீவ் இல்லை; தேடிய ஷோபனாவும் இல்லை; கண்களில் தென்பட்ட ஓல்ட்மனும் இல்லை.

 

பனிக்கட்டி இருக்கையில் உட்கார்ந்துகொண்டான். அப்பொழுது அவன் தோள்களின் மேல் ஒரு கை விழுந்தது. வசந்தன் தன் தலையைத் திருப்பினான். ராஜீவ் அங்கிருந்தான்.

 

"என்னை விட்டு எங்கே ஓடி விட்டாய்?" என்றான் ராஜீவ் புன்னகைத்தபடி.

 

"அப்படி ஒன்றும் இல்லை. இங்கே நன்றாகத் தெரிந்தது. அதனால் வந்துவிட்டேன்"

 

"யார் ஷோபனாவா?" என்றான் ராஜீவ்.

 

வசந்தன் நெளிந்தபடியே ராஜீவை நோக்கினான்.

 

"அப்படி இல்லை. நான் சொல்வது உண்மை"

 

"நான் கூறுவதும் உண்மை தான். சரி, நீ விண்ணப்பிக்கவில்லையா?" என்றான் ராஜீவ்.

 

"இல்லை, எதற்கு அதெல்லாம்" என்று முணுமுணுத்தான் வசந்தன். "மீண்டும் எப்படி விண்ணப்பிப்பது?" என்று ராஜீவைப் பார்த்து கேட்டான்.

 

"இவையெல்லாம் சரித்திரத்தில் ஒரு முறை மட்டுமே நிகழக்கூடியவை;  மீண்டும் வாய்ப்பு கிடைக்கப் பல காலங்கள் ஆகலாம்"

 

வசந்தனின் முகம் வாடியது.

 

"கவலையை விடு. இது ஒன்று மட்டுமே வழி இல்லையே. உள்ளே போக பல கிளை வழிகள் உள்ளன. அதில் உன்னை எப்படியாவது சேர்த்துவிடுகிறேன்"

 

வசந்தன் ஆறுதல் அடைந்தாலும் மனதின் ஒரு மூலையில் உறுத்திக்கொண்டே இருந்தது.

 

"சரி, சரி கவலைப்பட்டது போதும். வீட்டிற்கு செல்லலாம் வா" என்று கூறினான் ராஜீவ்.

 

இருவரும் நடந்தார்கள்.

 

"ஷோபனாவைப் பிடித்துவிட்டதா?" என்றான் ராஜீவ்.

 

"அப்படி இல்லை. அவளுடைய ஆட்டம் நன்றாக இருந்தது"

 

"அப்படியென்றால், ஆடியவரும் நன்றாக இருந்தார் என்று தானே அர்த்தம்" என்று சிரித்தான் ராஜீவ்.

 

வசந்தன் வெட்கத்தோடு வானை நோக்கினான்.

 

ஓல்ட்மனைப் பார்த்ததைப் பற்றி ராஜீவிடம் கூறலாமா வேண்டாமா என்ற சிந்தனையோடு நடந்தான். பிறகு, எதற்கு வேண்டாத வேலை. மெளனமாக இருப்பதே நன்மை என்றெண்ணி சொல்லாமல் விட்டுவிட்டான்.

 

சிந்தனையில் இருந்தவனைக் கலைத்து, பேசத் தொடங்கினான் ராஜீவ்.

 

"சரி, முதலில் உனக்கு ஒரு வேலை வேண்டும்"

 

"வேலையா?"

 

"ஆம். அதை நான் பார்த்துக்கொள்கிறேன். என்னிடம் விடு" என்றான் ராஜீவ்.

 

இருவரும் அரசர் கொடுத்த சலுகையான மந்திரப் பொருளில் ஆளுக்கு ஒன்றை வாங்கிக்கொண்டு புறப்பட்டார்கள்.

 

***   ***   ***

 

முகுந்தன் கோபக் கனலை முகத்தில் அப்பிக்கொண்டு மாளிகையின் உள்ளே சென்றார்.

 

"அந்த ஓல்ட்மன் கூட்டத்துக்கு நடுவில் இருந்தான்" என்றார் சுயம்புவை முறைத்தபடி.

 

"என்ன அரசே சொல்கிறீர்கள்?"

 

"அவனை உடனே  பிடித்தாக வேண்டும். கட்டளையை நிறைவேற்றுங்கள்!"

 

"உத்தரவு அரசே!" என்றார் சுயம்பு.

 

தேடல் தொடரும்....Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies