அந்தக் குழந்தை .

10 Jul,2011
 

இலங்காபுரியை ஒட்டி ஒரு அழகிய தடாகம் இருந்தது. அந்தத் தடாகத்தில் ராவணன் தினமும் குளிப்பது வழக்கம்.
அன்றும் அவ்வாறே தாமரை மலர் பறிக்க அவன் சென்றபோது, தடாகத்தின் நடுவே ஒரு பெரிய வெள்ளைத் தாமரை இருப்பதைக் கண்டான். அதில் அழகிய குழந்தை ஒன்று தங்க விக்கிரகம் போல இருப்பதையும் கண்டான்.

அதை எடுத்து அவன் மகிழ்ச்சியுடன் பார்க்கையில், அசரீரி வாக்கு ஒன்று, ""ராவணா! இந்தக் குழந்தையாலே உனக்கும், இலங்கைக்கும் கெடுதல் நேரிடும்!'' எனக் கூறி எச்சரித்தது.

அது கேட்ட ராவணன், அக்குழந்தையை கொன்று போட்டுவிடும்படிக் கட்டளையிட்டான். லட்சுமிதேவி வேதவதியாக அவதரித்து தவம் செய்து கொண்டிருக்கையில், ராவணன் அவளைச் சீண்டவே, அவள் யோகாக்னியோடு கலந்து இலங்கையில் போய் பிறந்தாள்.

வீரர்களால் அக்குழந்தையைக் கொல்ல முடியவில்லை. வாளை வீசினால் அது பொடி பொடியாகியது. நெருப்பில் போட்டால் நெருப்பே அணைந்து விட்டது. அதனால் அவர்கள், அக்குழந்தையை ஒரு பெட்டியில் போட்டு மூடி சமுத்திரத்தில் எறிந்து விட்டனர்.

அப்பெட்டி கடலில் மிதந்து போய், பிறகு தரையைப் பிளந்து பூமிக்கு அடியே போய், விதேகநாட்டு மிதிலாபுரியை அடைந்தது. விதேக நாட்டு மன்னன் ஜனகர். அவர் ஒரு யாகம் செய்ய பூமியை உழுதபோது, ஏரின் நுனியில் அக்குழந்தை இருந்த பெட்டி பட்டது. ஜனகர் அப்பெட்டியை எடுத்துத் திறந்து பார்க்க, அதில் அழகிய பெண் குழந்தை இருப்பதைக் கண்டு அகமகிழ்ந்தார்.

ஏர் நுனியில் கிடைத்த பெண்ணாகையால், "சிதம்' என்ற சொல்லிலிருந்து, "சீதை' என அவள் பெயர் பெற்றாள். ஜனகரின் மகளாக வளர்ந்ததால், "ஜானகி' என்றும், விதேக மன்னனின் புதல்வியாதலால், "வைதேகி' என்றும் பெயர்களை அக்குழந்தை பெற்றாள்.

ஒருமுறை, சீதை தன் தோழிகளுடன் பந்து விளையாடிக் கொண்டிருக்கையில், பந்து, ஜனகர் பூசித்து வரும் கனமான வில்லான சிவதனுசின் அடியே போய்விட்டது. முன்னூறு பேர் தூக்கக்கூடிய அந்த வில்லை, சீதை அனாயசமாக எடுத்து வைத்துவிட்டுத் தன் பந்தை எடுத்துக் கொண்டாள். இதைக் கண்டு வியந்த ஜனகர், "இந்த வில்லை எடுத்து வளைத்து நாண் ஏற்றுபவனையே இந்தச் சீதைக்குக் கணவனாக்குவேன்' என சபதம் செய்தார்.

சீதையின் சுயம்வரத்திற்கு, அரசர்களுக்கு அவ்விஷயத்தை முன்கூட்டியே சொல்வது என்று தீர்மானித்து அவர் சீதையை வளர்த்து வரலானார். இந்த சமயத்தில் தான், விசுவாமித்திரர் அயோத்திக்குப் போய், தசரதரிடம், யாகத்தைக் காக்க ராமரையும், லட்சுமணனையும் தன்னோடு அனுப்பும்படிக் கேட்டார். தசரதனோ, ""அவர்கள் சிறுவர்களாயிற்றே. நான் வந்து தங்களது யாகசாலையைக் காவல் புரிகிறேன்!'' என்றான்.

விசுவாமித்திரரோ, ""உன் புதல்வர்களுக்கு ஷத்திரியர்கள் கற்க வேண்டிய வித்தைகளைக் கற்றுக் கொடுக்கவும் வேண்டும். அதற்காகத்தான் என்னோடு அனுப்பும்படி நான் கேட்கிறேன்!'' எனக் கூறி, வசிஷ்டரை அர்த்த புஷ்டியுடன் பார்த்தார்.

வசிஷ்டரும் புன்னகைப்புரிந்தவாறே ராமரையும், லட்சுமணனையும், விசுவாமித்திரருடன் அனுப்பி வைக்கும்படி தசரதரிடம் கூறினார். தசரதரும், அவர்கள் இருவரையும் விசுவாமித்திரருடன் அனுப்பி வைக்கவே, அவர்களும், முனிவர்களின் உடை அணிந்து, வில் அம்புகளை எடுத்துக்கொண்டு விசுவாமித்திரருடன் சென்றனர்.

வழியில் விசுவாமித்திரர், அம்பு எய்வதிலுள்ள நுணுக்கங்கள் பலவற்றை அவர்களுக்குக் கூறினார். அவர்களும் அவற்றைக் கற்றுக் கொண்டனர். அவர்கள் சித்தா சிரமத்தை அடைந்தனர். விசுவாமித்திரரும், மற்ற முனிவர்களோடு சேர்ந்து யாகத்தை ஆரம்பித்தார். யாகத்தைக் காக்க ராமரும், லட்சுமணரும், வில்லும், அம்புகளுடன் காவலாக நின்றனர்.

யாகத்தை அழிக்க தடாகை முதலில் வந்தாள். பெண்ணாயிற்றே என்று ராமர் தயங்கவே, விசுவாமித்திரர், "அவள் ஒரு அரக்கி! அவள் யாகத்தைத் தடுப்பதால் அவளைக் கொல்வது பாவமல்ல...'' என்று கூறினார். ராமரும், கூரிய அம்பை எய்து அவளைக் கொன்றார்.

அடுத்து அவளது மைந்தர்களான மாரீசனும், சுபாகுவும், யாகத்தை அழிக்க வந்தனர். ராமர் விட்ட ஒரு அம்பு, சுபாகுவைக் கொன்றது. மற்ற அம்பு மாரீசனைத் தாக்க வரவே, அவன் பயந்து ஓடி இலங்கையில் போய்த் தான் நின்று திரும்பிப் பார்த்தான்! நல்லவேளை, அதுவரை அந்த அம்பு வரவில்லை. விசுவாமித்திரரின் யாகமும் நன்கு முடிந்தது.

அவர் யாக குண்டத்திலிருந்து சக்தி வாய்ந்த பாணத்தை எடுத்துக் கொடுத்து, ""இது எதிரியைத் தாக்கிவிட்டு உன்னிடமே வந்து சேரும் சக்தி வாய்ந்தது!'' என்றார். ராமரும் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு வைத்துக் கொண்டார்.

இந்த யாகம் முடிய சிறிது காலம் பிடித்தது. இந்த காலத்தில், விசுவாமித்திரர் பல போர் முறைகளை ராமருக்கும், லட்சுமணனுக்கும் கற்றுக் கொடுத்தார்.

""ராமா! என்னைப் போல நீயும் சூரியவம்சத்தில் பிறந்தவன். அதனால்தான், மிகவும் ஆர்வத்தோடு உனக்குப் போர்க் கலைகளை எல்லாம் கற்றுக் கொடுக்கிறேன். நீ எனது சீடன் என்பது பற்றிப் பெருமைப்படுகிறேன்!'' என்றார்.
""குரு தேவரே! எல்லாம் தங்கள் அனுக்கிரகம் தான்!'' என்று பணிவுடன் கூறினார் ராமர்.

இச்சமயத்தில், ஜனக மன்னர், சீதையின் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்து, மன்னர்களுக்கும், ரிஷி முனிவர்களுக்கும் தகவல் அனுப்பினார். விசுவாமித்திரருக்கும் அந்தத் தகவல் கிடைக்கவே, அவர் ராமரையும், லட்சுமணனையும் அழைத்துக் கொண்டு மிதிலையை நோக்கிச் சென்றார்.

வழியில் கவுதமரின் ஆசிரமம் இருந்தது. அவ்வழியே சென்ற ராமரின் கால், ஒரு பாறை மீது பட்டதும், அது பெண்ணாக மாறியது. அவள் ராமரை வணங்கினாள். அவள்தான் கவுதமரின் மனைவி அகல்யை. கவுதமரின் சாபத்தால் அவள் கல்லாகி இருந்தாள். "ராமரின் கால் பட்டால் அவளுக்கு சாப விமோசனம்' என அவர் கூறி இருந்ததால், ராமரின் கால் பட்டதும் அவளுக்கு இருந்த சாபம் விலகியது.

அப்போது கவுதமரும் அங்கு வந்து, ""ராமா! உன்னால் இவள் சாபம் விலகி முன்போலானாள். இவள் என் மனைவி அகல்யை,'' என்றார்.

கவுதமர் எல்லாரையும் தம் ஆசிரமத்துள் அழைத்துச் சென்றார். அவர் அளித்த உபசரிப்பை ஏற்றபின் விடைபெற்ற விசுவாமித்திரர், ராமரையும், லட்சுமணனையும் அழைத்துக் கொண்டு மிதிலாபுரிக்குச் சென்றார்.

விசுவாமித்திரரை அழைத்தது போலவே, சனகரின் மந்திரி சதானந்தர் மற்றும் பல முனிவர்களையும் அழைத்திருந்ததால், வழி நெடுக சீதையின் சுயம்வரம் பற்றிய பேச்சாகத்தான் இருந்தது. விசுவாமித்திரரும், ராமரும், லட்சுமணனும் மிதிலையை அடைந்தனர்.

அப்போது சீதை, தன் தங்கையான ஊர்மிளையுடன் சேர்ந்து பூங்காவில் உலாவிக் கொண்டிருந்தாள். அப்போது அவ்வழியே ராமரும், லட்சுமணனும் சென்று கொண்டு இருப்பதை அவர்கள் பார்த்தனர். சீதை ராமரைப் பார்த்து தன் மனதைப் பறிகொடுத்துதான் விட்டாள்.

ஊர்மிளையும், லட்சுமணனைக் கண்டு, அவனே தன் கணவன் எனத் தீர்மானித்துக் கொண்டாள். அதே சமயம் ராமரும் சீதையைப் பார்க்கவே, அவள் நாணத்தால் தலை குனிந்து அங்கிருந்து அரண்மனைக்குள் ஓடிவிட்டாள்.

சுயம்வர மண்படத்தில் வைக்கப்பட்ட சிவதனுசை, எந்த மன்னனாலும் தூக்கக்கூட முடியவில்லை. அப்போது, ஜனகர் அங்கு கூடி இருந்த மன்னர்களைப் பார்த்துப் பெருமூச்சு விட்டார். அவரது கவலையைக் கண்ட விசுவாமித்திரர், ராமரிடம் வில்லைத் தூக்கி நிறுத்தி நாணேற்றும்படிக் கூறினார்.

குருவின் கட்டளைப்படி ராமர், சிவதனுசை எடுக்கச் சென்றார். முதலில் அவர் அந்த வில்லை மரியாதையுடன் வணங்கினார். பிறகு அவர், யானை கரும்பைப் பற்றுவது போல எளிதாகச் சிவதனுசை எடுத்து நிறுத்தி நாணேற்ற வளைத்தார். அப்போது அந்த வில், படீரென்ற பெருத்த சப்தத்தோடு முறிந்தது.

அந்த சத்தம், மகேந்திர மலையில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்த பரசுராமர் காதிலும் விழுந்தது. பரசுராமர், தாம் விஷ்ணுவின் அவதாரம் என்பதை உணர்ந்து, இப்போது விஷ்ணுவின் மற்ற அவதாரமான ராமருக்கு, தன்னிடமுள்ள, "கோதண்டம்' என்ற வில்லைக் கொடுத்துவிடும் எண்ணத்தோடு அங்கிருந்து கிளம்பினார்.

சிவதனுசு முறிந்ததும், அதை வளைத்து முறித்த ராமரின் கழுத்தில் சீதை மலர் மாலையை போட்டாள். ஜனகரும், உடனே தசரதருக்குச் செய்தி அனுப்பிவிட்டு, சீதைக்கும், ராமருக்கும் நடக்கப்போகும் விவாகத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யலானார். தசரதரும் தம் குடும்பத்தவருடன் மிதிலைக்கு வந்து சேர்ந்தார்.

ராமர் - சீதை விவாகத்தின் அன்றே, சீதையின் தங்கையான ஊர்மிளையை லட்சுமணனுக்கு மணமுடித்து வைக்க ஏற்பாடாயிற்று. இதுபோல, பரதனுக்கு மாண்டவியையும், சத்துருகனனுக்கு சுருதிகீர்த்தியையும் மணமுடித்து வைத்தனர்.

சீதா கல்யாணத்தோடு, அவளது மற்ற மூன்று சகோதரிகளின் விவாகமும், தசரதரின் மைந்தர்களுடனேயே நடந்தது சிற்பபாக விளங்கியது



Share this:

Thailand

Malaysia

Dubai

Bali

Srilanka

Dubai

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies