உறவைத் தேடும் உயிர் - 4

28 Dec,2013
 
தேடல் - 4
TKS.Tmilnanbargal.
பதிந்தவர் Sivaji dhasan
 

கூட்டிச் சென்றவனைக் கூட்டத்திலேயே தொலைத்த கதையானது வசந்தனின் நிலைமை.

 

ராஜீவ் எங்கு போனான்? என்ன நடக்கிறது? என்ற பல கேள்விகளை மனதினுள் எழுப்பியபடி வீட்டை விட்டு அவசர அவசரமாக வெளியே வந்து எட்டிப் பார்த்தான். பசுமை நிலம் இருக்கிறதே தவிர பார்வையில் யாரும் படவில்லை. மரப் படிக்கட்டுகளில் அவசரமாகக் கீழிறங்கினான். சுற்றிப் பார்த்தான்.

 

பயம் கலைந்து நிம்மதி பிறந்து, அதோ ! அதோ ! ராஜீவ் என்றது அவன் மனது. ராஜீவ் அங்கே என்ன செய்கிறான்? என்று நோக்கினான். அவன் ஒரு பெண்ணோடு பேசிக்கொண்டிருந்தான்.

 

அப்பெண் யார்? அவளை எங்கோ பார்த்திருக்கிறோமே? எங்கே? என்று சிந்திக்கலானான்.

விடை விரைவிலேயே கிடைத்தது. நாம் வந்த வண்டியில் தானே இவளும் வந்தாள்? என்று நினைவு கூர்ந்தான்.

 

ராஜீவைக் கண்டுகொண்ட திருப்தியில் அவர்களை நோக்கி நடந்தான். வசந்தன் வருவதை ராஜீவ் கவனிக்கவில்லை; ஆனால் அவளின் கருவிழிகள் வசந்தனைக் கவனிக்காமல் இல்லை.

 

வசந்தன், சோலைகளை ரசித்தபடி வந்தான். எங்கு பார்த்தாலும் மலர்களின் நறுமணம் "கம்ம்ம்ம்..." என்று வீசி மயங்கச் செய்தது. வெளிச்சமும் இல்லாமல் இருட்டும் இல்லாமல் ரம்மியமான பொழுதாக அந்நேரத்தில் அவ்விடம் விளங்கியது. இவற்றை எல்லாம் ரசித்த  வண்ணம் அவளின் அழகிய முகத்தை நோக்கினான் வசந்தன்.

 

வர்ணிப்பதற்கு வார்த்தை கிடைக்காமல் கவிதை திணறுவது போல் திணறியது அவனது மனமும் விழிகளும். கற்பனைக்கு அப்பாற்பட்ட அழகு அவளின் அழகு. அவளது மீன் விழிகள்,இவன் முகத்தை நோக்கியதும் மரியாதைக்காக புன்முறுவலை வழங்கினான் வசந்தன்.

 

அவள் அதை ஏற்றுக்கொள்ளாமல் உடனே ராஜீவின் மேல் பார்வையைத் திருப்பினாள். வசந்தனுக்கு ஆத்திரம் வந்தது. பெண்கள் எல்லோரும் ஒன்று போல தான். முகங்கள் மட்டும் தான் வித்தியாசம். மனங்கள் சொல்லிவைத்தார் போல் ஒரே குணத்தைக் கொண்டவர்களாக உள்ளார்கள் என்று எண்ணியபடியே அவர்களின் அருகில் சென்றான்.

 

அவர்கள் பேசிய சில வார்த்தைகள் அவன் காதுகளில் விழுந்தன. அவ்வார்த்தைகளை மூளையில் ஏற்றாமல் ராஜீவின் பின்னே நின்றான். ராஜீவ் அவனைக் கவனிக்காததால் தணலில் தவிப்பதைப் போன்று உணர்ந்தான்.

 

தன்னை அலட்சியப்படுத்திய அவளின் முகத்தைப் பார்க்க விரும்பாமல், ரசனை இல்லாதவன் கவிதை வாசிப்பதைப் போல், இயற்கையின் அழகை வெறித்துக்கொண்டிருந்தான்.

 

வசந்தனுக்கு என்னவோ போல் இருந்தது. நான் என் தோழியைக் கண்டுபிடித்துவிட்டால் நன்றாக இருக்குமே. அவளது துணையில் சந்தோசமாக என் நேரத்தைக் கழிப்பேனே என்று எண்ணினான்

புது இடத்தில் துணை இல்லாமல் இருப்பது தான் கொடுமை. எது செய்தாலும் மற்றவர்கள் அவர்களை வித்தியாசமாய்ப் பார்ப்பது போல தோன்றும். செய்வதறியாமல் கைகளைப் பிசைந்தபடி கண்களை மேயவிடுவார்கள். வசந்தன் இந்த நிலைமையில் தான் மாட்டிக்கொண்டான்.

 

அவர்கள் பேசியது மீண்டும் அவன் காதுகளில் ஒலித்தன. இப்பொழுது அவன் அதை நிராகரிக்க விரும்பவில்லை.

 

"நான் எதற்குத் தர வேண்டும்? என்னால் முடியாது" என்றாள் அவள்.

 

"இல்லை, ஷோபனா. எனக்காக நீ இதைச் செய்யத்தான் வேண்டும்"

 

"அவள் பெயர் ஷோபனாவா? நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் என்ன? மனம் தான் சோபனமாக இல்லை" என்று எண்ணிக்கொண்டு அவர்களின் உரையாடலைக் காதில் விழுங்கினான்.

 

"நான் உனக்காகச் செய்தாலும் நீ வேறு யாரோ ஒருவருக்குத் தானே செய்கிறாய். தெரியாதவர்களுக்கு உதவி செய்வது எனக்குப் பிடிக்காது".

 

"சரியான கல்நெஞ்சக்காரியாக இருப்பாள் போல. உதவியை வேண்டியவர்களுக்குத் தான் புரியவேண்டும் என்ற சட்டம் இருக்கிறதா என்ன?" என்று எண்ணினான் வசந்தன்.

 

இதுவரை வசந்தன் வந்தது தெரியாமல் கவனியாது இருந்த ராஜீவ் அவனை நோக்கினான்.

 

"ஹேய்ய்ய்...நீயே வந்துவிட்டாயா? இவள் என் தோழி. பெயர் ஷோபனா" என்று அறிமுகப்படுத்தினான்.

 

அறிமுகப்படுத்தியதால் அவளைப் பார்த்து புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை வசந்தனுக்கு. மிகவும் போராடி இதழ்களில் புன்னகையை உதிர்த்தான். அதையும் நிராகரித்தாள் ஷோபனா. வசந்தனை முறைத்தாள். அப்பார்வை வசந்தனின் எரிச்சலை இருமடங்காக்கியது; பொறுத்துக்கொண்டான்.

 

ராஜீவை நோக்கிய அவள் "இதோ வருகிறேன் !" என்று வீட்டினுள் போனாள். அவளுடைய வீட்டை ஒரு முறை நோட்டமிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டான், வசந்தன்.

 

ராஜீவ் வசந்தனின் தோள்களில் கையைப் போட்டு "உனக்காகத் தான் பேசிக்கொண்டிருந்தேன்" என்றான்.

 

வசந்தனுக்கு அப்பொழுது தான் புரிந்தது, அவள் இத்தனை நேரம் சொன்னது எல்லாம் தன்னைத் தான் என்று. கோபம் உடலில் ஊடுருவியது. வெளிக்காட்ட விரும்பாமல் எண்ணங்களை மாற்ற முயன்றான் வசந்தன்.

 

"எதற்காக அவளிடம் என்னைப் பற்றிக் கூறிக்கொண்டிருந்தாய்?"

 

"நாம் ஓர் இடத்திற்குச் செல்லவேண்டும் அல்லவா?"

 

"இவள் தான் கூட்டிச் செல்லப் போகிறாளா?" என்றான் வசந்தன் எரிச்சலாக.

 

ராஜீவ் புன்னகைத்துக்கொண்டே, இல்லை என்பதைப் போல் தலையசைத்தான்.

 

"எதற்காகச் சிரிக்கிறாய்?"

 

"சிறிது நேரத்தில் நீயே பார்க்கத்தானே போகிறாய்? அவசரம் ஏன்?" என்றான் ராஜீவ்

 

புதிரைப் போட்டு விடை சொல்லாமல் விட்டால் குழம்பும் மனது போல வசந்தன் குழம்பினான்.
 

ஷோபனா வந்தாள். அவளின் அழகை வசந்தனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அவள் இரக்கமற்றவள் ஆனாலும் காண்போரைக் கவரும் கன்னி இனத்தவள் தான் என்பதை அவன் மனம் ஒப்புக்கொள்ளாமல் இல்லை.
 

ஷோபனா, ராஜீவின் கையில் பொன்னால் ஆன ஓர் உலோகத்தை வேண்டா வெறுப்பாகத் திணித்தாள்.
 

"இதுவே கடைசி!" என்றாள் பொட்டிலறைந்தார் போல்.
 

"சரி ! சரி ! நாங்கள் வருகிறோம்" என்று விடைபெற்று அங்கிருந்து நகர்ந்தார்கள் ராஜீவும் வசந்தனும்.
 

"இதை வாங்குவதற்கா அவள் வீட்டின் முன் தவம் கிடந்தாய்?"
 

ராஜீவ் புன்னகைத்தான். பதிலேதும் கூறாமல் கையிலிருந்த உலோகத்தை வசந்தனின் முன் நீட்டினான்.
 

அது உயிர் பெற்று ஒரு மாயமீனாக மாறி மேலே எழும்பி அவர்களைச் சுற்றி நதியில் நீந்துவதுபோல் காற்றிலே நீந்தியது. சிறிது நேரம் வேடிக்கை காட்டிவிட்டு மீண்டும் ராஜீவின் கைகளில் தஞ்சம் புகுந்தது.
 

வசந்தன் ஆச்சர்யத்தில் கண்களை அகல விரித்து அந்த மாயமீனையே பார்த்துக்கொண்டிருந்தான்.
 

"இது என்ன மாயாஜாலமா? நான் காணும் அனைத்தும் என்னைப் பிரம்மிப்பூட்டுகிறதே!"
 

"இதற்கே மயங்கிவிட்டாயே? இது போல இன்னும் பல ஆச்சர்யங்களை நீ காணப்போகிறாய்".
 

"இந்த மாயமீன் என்ன செய்யும்?"
 

மீண்டும் பதிலேதும் கூறாமல் ராஜீவ் அந்த மாயமீனை நோக்கினான். உடனே, ஒரு மாபெரும் கடல் சூழல் அவர்களைச் சுற்றித் தோன்றி அவர்களை இழுத்துச் சென்றது.
 

ஒரு பெரிய பள்ளத்தில் வேகமாக விழுந்து கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு வசந்தனுக்குத் தோன்றியது. பயத்தால் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டான். அடிவயிற்றில் கூசியது அவனுக்கு.
 

கண்ணிமைக்கும் நேரத்தில் ஓரிடத்தில் விழுந்தார்கள் இருவரும்.
 

கடும் குளிரால் அந்த இடம் சூழப்பட்டிருந்தது. தரைப்பரப்பை வெண்பனி மறைத்திருந்தது. நிலவின் ஒளி மட்டும் அவர்களின் பார்வைக்கு ஒளி கொடுத்தது.
 

பனியினுள் விழுந்திருந்த வசந்தன், தட்டுத் தடுமாறி எழும்பி உடலில் ஒட்டியிருந்த வெண்ணிறப் பனியைத் துடைத்தான். அவ்விடத்தைச் சுற்றி பார்த்தான். மலைத்துப் போனான்.
 

சுற்றிலும் பனி மலைகள் குன்றுகளைப் போல குவிந்திருந்தன. வெண்பனி ஜொலித்தது. வெண்பனியில் கால் வைக்கும் போது பாதத்தின் அச்சுகளில் மின்மினிப்பூச்சி மினுமினுப்பது போல் மின்னியது. பச்சை மரங்கள் பனிக்கட்டிகளைத் தாங்கி இருந்தன. பழங்களை பனிமுத்துக்கள் ஸ்பரிசித்திருந்தன.
 

அவர்களைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை.
 

வசந்தன், "இந்த இடம் அழகாக இருக்கின்றது" என்றான்.
 

"ரசிக்காதே! எதையும் ரசித்து விடாதே!" என்று எச்சரித்தான் ராஜீவ்.
 

"ஏன் அப்படிச் சொல்கிறாய்?"
 

"இது ஆபத்தான இடம். கண்ணில் படும் எதையும் நம்பாதே, மயங்காதே. மனதைத் தைரியப்படுத்து. இங்கே துஷ்ட ஆத்மாக்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றன".
 

வசந்தன் அதிர்ந்தான். இருந்தும் தனக்குத் துணை இருக்கிறதே என்ற தைரியத்தில் சிறிது நிம்மதியுடன் நடந்தான்.
 

"இந்த ஆபத்தான இடத்திற்கு நாம் வருவதற்கு அவசியம் என்ன?"
 

ராஜீவ் அவனைப் புதிராகப் பார்த்து, "உனது ஞாபகங்கள் அழிந்துகொண்டே வருகின்றன என்று எண்ணுகிறேன்".
 

வசந்தன் புரியாமல் விழித்தான்.
 

"நினைவுகள் அழிந்துவிட்டன என்று வருந்தினாயே? மறந்து விட்டாயா?"
 

"ஓஓஓ ....அவரைப் பார்க்கத்தான் வந்தோமா?" என்று ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் வசந்தன்.
 

ஆமாம் என்பது போல் தலையசைத்தான் ராஜீவ்.
 

"எனக்குப் பயங்கரமாகக் குளிருகிறது" என்றான் வசந்தன் நடுங்கியபடி.
 

"பொறுத்துக்கொள். வேறு வழியில்லை. அவர் வீட்டை வேறு கண்டுபிடிக்க வேண்டும். அது தான் பெரிய தலைவலி".
 

"ஏன்? அவர் வீடு உனக்குத் தெரியாதா?"
 

ராஜீவ், வசந்தனைப் பார்த்தான். "இக்கேள்விக்கு விடை சொல்வது சற்றுச் சிரமம். அவர் எங்கிருப்பார் என்பது யாருக்கும் தெரியாது".
 

"அவர்.. அவர்..என்று சொல்கிறாயே. யார் அவர்?"
 

"அவர் பெயர் நீலகண்டன். நாங்கள் அவரை "ஓல்ட்மன்"(old man) என்று தான் அழைப்போம். தீர்க்கதரிசியின் மறு உருவம், அவர். அவருக்குத் தெரியாத விசயங்களே இல்லை. பூமியில் விஞ்ஞானியாக வாழ்க்கையை அர்ப்பணித்தவர். பல கண்டுபிடிப்புகளின் சொந்தக்காரர். இவ்வுலகிலும் சிறந்த விஞ்ஞானி. இங்கே இருக்கும் மெமோரியல் உலகத்தில் சிறிது காலம் பணிபுரிந்தவர்".
 

"மெமோரியல் உலகமா? அப்படி என்றால்?"
 

"அது கடலின் நடுவே இருக்கும் ஒரு தீவு. அத்தீவில் சாதரணமாக உள்ளே நுழைய  முடியாது. நுழைந்தவர்கள் திரும்பியதில்லை. அங்கே தான், ஒருவன் எங்கு பிறக்க வேண்டும்? எந்த நேரத்தில் மரணிக்க வேண்டும் என்று முடிவெடுப்பார்கள். நிறைய வேலையாட்கள். வேலையாட்களுக்கு மேல் முதலாளி. முதலாளிகளின் தலைவன் ஒருவன். இப்படிப் பல கிளைகளாகப் பிரிந்து தங்கள் வேலைகளைச் செய்வார்கள் அவர்கள்".
 

"அப்படியென்றால் அவர்கள் தான் கடவுளா?"
 

"அப்படியும் வைத்துக்கொள்ளலாம்".
 

"ஏன், அங்கே இருந்து வந்து விட்டார் அந்த ஓல்ட்மன்?".
 

"அதற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை. அவர் சொல்லவும் இல்லை. இப்பொழுது அவர் தனியாகத் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்".
 

அப்போது, வழியில் ஒரு சிறிய மரத்தில் பழங்கள் கொத்துக் கொத்தாக தொங்கிக்கொண்டிருந்தன. அதைப் பார்த்த வசந்தனுக்கு பறித்துச் சாப்பிட ஆசை உண்டானது. அதை நோக்கி ஓடினான்.
 

ராஜீவ், "நில்! நில்!" என்று பின்னே சென்றான்.
 

வசந்தன் மரத்தை நெருங்கும் முன் அவனைத் தடுத்துவிட்டான், ராஜீவ்.
 

"நான் சொல்வதைக் கேட்கமாட்டாயா? எதையும் நம்பாதே என்று இப்பொழுது தானே சொன்னேன். அதற்குள் மீறுகிறாய்"
 

"மன்னித்துவிடு ! அந்தப் பழம் என் கண்களைக் கவர்ந்து சுவைத்துப்பார் என்பது போல் சுவை அரும்புகளைத் தூண்டியது....அதனால் தான்..." என்று இழுத்தான் வசந்தன்.
 

"கண்களுக்குக் கடிவாளம் இட்டுக்கொண்டு பேசாமால் வா!" என்று  ராஜீவ் கடுமையோடு கூறியபடி முன்னே சென்றான்.
 

அப்பொழுது அந்த மரத்தில் இருந்து பழுத்த இலை ஒன்று கீழே விழுந்தது..
 

விழுந்த இலை அவர்களின் பின்னே காற்றிலே மிதந்து சென்றது.
 

அவர்கள், முட்டிவரை படர்ந்திருந்த பனியில் தத்தித் தத்தி நடந்து சென்றார்கள். 
 

"இந்தப் பனியில் நடப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது" என்றான் வசந்தன். .
 

"எனக்கு மட்டும் என்ன இனிமையாகவா இருக்கிறது? முக்கிய வேலைகளைச் செய்யும் போது இது போன்ற கஷ்டங்களைப் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்".
 

இலை அவர்களின் பின்னே தொடர்ந்தபடி இருந்தது. பனிமழைத் தூறல் தொடங்கியது. அவர்களின் உடல் நடுங்கியது. காற்றும் பலமாக வீசியது. நிலைகுலைந்து போனார்கள் அவர்கள். இருந்தும்  அதைத் தாங்கிக் கொண்டபடி சென்றனர்.
 

"அவரால் என் நினைவுகளை மீட்டுத் தர முடியும் அல்லவா?"
 

"நினைக்கிறேன்...".
 

"என்ன? நினைக்கிறாயா?" என்று பதறினான் வசந்தன்.
 

"நம்பிக்கை வைப்போம். அவர் தான் தீர்க்கதரிசி. நான் இல்லையே?" என்று கிண்டலாகக் கூறினான் ராஜீவ்.
 

அவர்களின் கண்கள் நீலகண்டனின் வீட்டைத் தேடி அலைந்துகொண்டிருந்தன.
 

அப்போது ராஜீவின் கையிலிருந்த மாயமீன் ஒளி வீசத் தொடங்கியது. ஆபத்தின் அறிகுறி என்பதைப் புரிந்துகொண்ட ராஜீவ் திரும்பிப் பார்த்தான்.
 

அவர்களைப் பின்தொடர்ந்த இலை சட்டெனக் கீழே விழுந்தது.
 

"மனதிற்கு சரியாகப் படவில்லையே" என்று ராஜீவின் உதடுகள் முணுமுணுத்தன.
 

வசந்தன், "என்ன ஆயிற்று?" என்று கேட்டான்.
 

ஒன்றும் இல்லை என்பதைப்போல் தலையசைத்தான் ராஜீவ்.
 

பனி மழை கோரத்தாண்டவம் ஆடியது. எதிரில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் மாயத்திரையிட்டு மறைத்தது. காற்று "சர்ர்ர்...." என்று வீசி அவர்களின் உடலை உறையவைத்தது. அவர்களின் மூச்சு கூட குளுமையாக வெளிவந்து உடலின் வெப்பத்தை உறிஞ்சியது.
 

நிலைமை மிகவும் மோசமாகி செய்வதறியாமல் விழித்தனர் இருவரும். எந்தத் திசையில் செல்வது? எங்கே இருக்கிறோம்? என்பதைக் கூட மறந்தனர்,
 

திடீரென்று, அவர்களின் மேல் கருங்காற்றுப்படலம் ஒன்று பரவி வானை மறைத்தது. தீய ஆவியின் அபாயக்குரல் போல வினோதமான ஓலங்கள் ஒலித்தன.
 

ராஜீவ் பின்னே திரும்பிப் பார்த்தான். சூரைக்காற்றிலும் அந்த இலை அசையாமல் இருந்தது.
 

வசந்தனை நோக்கினான். "வேகமாக நட" என்று உதடுகளால் முணுமுணுத்தான். வசந்தனும் புரிந்துகொண்டான்.
 

வேகமாக நடக்க ஆரம்பித்தனர். ராஜீவ் மீண்டும் இலையைப் பார்த்தான். அது ஒரு கொடியாக விருத்தி அடைந்து அவர்களின் பின்னே சர்ப்பம் போல் தொடர்ந்தது.
 

"உனக்கு ஓடத் தெரியுமா?" என்று வசந்தனைப் பார்த்து பயமுகத்தோடு கேட்டான்.
 

"நன்றாக ஓடுவேன். பூமியில் நான் ஒரு..."
 

"போதும்! போதும்! வரலாறு கேட்க இப்பொழுது நேரமில்லை. நான் ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணுவேன். பத்து என்று சொன்னவுடன், ஓட வேண்டும்" என்றான்.
 

வசந்தனும் "சரி" என்று ஒப்புக்கொண்டான்.
 

ராஜீவ் பயத்தோடு எண்ண ஆரம்பித்தான்.
 

"ஒன்று,இரண்டு...பத்து"
 

ராஜீவ் ஓடினான். அவனைத் தொடர்ந்து வசந்தனும் ஓடினான்.
 

கீழே படர்ந்திருந்த மலர்க்கொடி வேகமாக அவர்களின் பின்னே படர்ந்தபடி தொடர்ந்தது.
 

மேலே படர்ந்திருந்த கரும்படலத்தில் இரண்டு உருவங்கள் கொடிய கண்களோடு பின்தொடர்ந்தன.
 

தேடல் தொடரும்...Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies