
“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” - 3000 ஆண்டுகால கருப்பின அடிமை வரலாறு!-2
கடந்த வருடமே நான் இந்த அறுவை சிகிச்சையை செய்திருக்கவேண்டும். ஆனால், அப்போது சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன. டாக்டர். மேக்ரே மிகவும் நல்லவர். அவருக்கு நான் எப்போதுமே கடமைப்பட்டிருக்கிறேன்.
‘‘நீ மட்டும் இல்லை வாரிஸ். குடும்பத்துக்குத் தெரியாமல் எகிப்திலிருந்தும், சூடானிலிருந்தும், சோமாலியாவிலிருந்து ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள். பாவம், சில பெண்கள் கற்பமாகக்கூட இருப்பார்கள். என்னால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சிறப்பாக செய்கிறேன். நீ கவலைப்பட வேண்டாம்’’ என்றார்.
சிகிச்சை முடிந்து மூன்று வாரங்கள் ஆகியிருக்கும்.
ஒருநாள், டாய்லெட்டில் உட்கார்ந்து நான் சிறுநீர் கழித்தபோதுஸ
‘உஷ்ஷ்ஷ்ஷ்ஸ’
ஆஹா! என்ன ஒரு அற்புதம். நான் அடைந்த மகிழ்ச்சியை, அந்த சுதந்திரத்தைஸ வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த உலகில் இதைவிட மகிழ்ச்சியான ஒரு அனுபவம் இருக்கவே முடியாது.
1995-ம் ஆண்டு. என்னுடைய வாழ்க்கையை ஆவணமாக்குவதென்று பி.பி.சி தீர்மானித்தது.

‘நல்லது. ஆனால், சோமாலியாவுக்குச் சென்றதும் என் அம்மாவைக் கண்டுபிடிக்க நீங்கள் உதவவேண்டும்’’ -டைரக்டர் கெரி பொமிராயிடம் கோரிக்கை வைத்தேன். அவர் ஒப்புக்கொண்டார்.
என் குடும்பம் நகர்ந்ததாக சந்தேகிக்கப்படும் பல்வேறு இடங்களில் பி.பி.சி குழுவினர் தேடத் துவங்கினர்.
சிலர், ‘நான்தான் உன் அம்மா’ என்று வந்தனர்.
‘‘உனக்கும் உன் குடும்பத்துக்கும் மட்டுமே தெரிந்த ரகசியங்கள்னு சிலது இருக்கும். அது என்னன்னு யோசி’’ என்றார் கெரி.
‘‘ஓஸ ஆமால்ல! என்னை ‘அவ்டஹொல்’னு எங்க அம்மா கூப்பிடுவாங்க’’
‘‘இந்தப் பேரை அவங்களுக்கு ஞாபகம் இருக்குமா?’’
‘‘நிச்சயமா’’
இப்போது அவ்டஹொல் என்கிற வார்த்தை சீக்ரட் பாஸ்வேர்டாக கொண்டு செல்லப்பட்டது. ஒருநாள் பி.பி.சி ஊழியர்கள் என்னை அழைத்து, ‘‘அநேகமா உங்க அம்மாவை கண்டுபிடிச்சிட்டோம்னு நினைக்கிறோம். அந்தம்மாவுக்கு அவ்டஹோல் என்கிற வார்த்தை மறந்துபோச்சு. ஆனா, தனக்கு வாரிஸ்னு ஒரு பொண்ணு இருந்ததாகவும், அவ லண்டன் தூதரகத்துல வேலை பார்த்தாகவும் சொல்றாங்க’’ என்றனர்.

நாங்கள் உடனடியாக எத்தியோப்பியா பறந்தோம். அங்கிருந்து சிறியரக விமானம் ஒன்றில், ‘கலாடி’க்கு பயணம். எத்தியோப்பிய&சோமாலிய எல்லை கிராமமான அங்குதான், உள்நாட்டுப் போரிலிருந்து உயிர்காத்துக்கொள்ள அகதிகள் முகாம் அமைத்து இருந்தனர்.
கடைசியில் அது என் அம்மாவே இல்லை.
ஆனால், நாங்கள் முயற்சியை கைவிடவில்லை. அந்த கிராமத்தை அங்குலம் அங்குலமாக அலசினோம். அப்போதுதான் அந்த வயதான மனிதர் வந்தார்.
‘‘என்னை தெரியுதா? நான்தான் இஸ்மாயில். உங்க அப்பாவோட நெருங்கிய நண்பர். எனக்கு காஸ் வாங்க பணம் தந்தா, நான் உங்கம்மாவை கண்டுபிடிச்சித் தர்றேன்’’ என்றார்.
பி.பி.சி குழு ஒப்புக்கொண்டது.
மூன்று நாட்கள் ஆகிவிட்டது. என் அம்மா வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
அடுத்த நாள் காலை, ஜெரி என்னிடம் வந்து,
‘‘நீ நம்பப்போறதில்லை. அந்த ஆள் வந்துட்டார். அது உங்க அம்மாதான்’’ என்றார். நான் அவள் முகத்தைக்கூட பார்க்கவில்லை. முக்காடு அணிந்தபடி ட்ரக்கில் இருந்து இறங்கும்போதே தெரிந்துவிட்டது.

‘‘அம்மாஸ’’
ஓடிச் சென்று அவளை அணைத்துக் கொண்டேன்.
ட்ரக் வந்தபோது அப்பா தண்ணீர் தேடச் சென்றுவிட்டாராம். ஆனால், என் சின்னத் தம்பி அலி வந்திருந்தான். நானும் அம்மாவும் பல விஷயங்களைப் பேசினோம்.
‘‘அப்பாவுக்கு ரொம்ப வயசாயிடுச்சி. கண் பார்வையும் சரியா தெரியல. அவருக்கு ஒரு கண்ணாடி வாங்கித் தந்தா நல்லா இருக்கும்’’ என்றார் அம்மா.
திடீரென்று, அலி என்னைப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டான்.
‘‘டேய்! நான் சின்னக் குழந்தை இல்லை. எனக்கு கல்யாணம் ஆகப்போவுது. விட்றா!’’ என்றேன்.
‘‘என்னது கல்யாணமா? உனக்கு என்ன வயசு?’’
‘‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா, கல்யாணம் பண்ற வயசு’’
ஒரு வழியாக அலி, சமாதானம் ஆனான்.
‘‘எனக்கும் பேரப் பிள்ளையை பார்க்கனும்னு ஆசையா இருக்கு’’ என்றார் அம்மா.
அன்றிரவு நானும் அலியும் நட்சத்திரங்களைப் பார்த்தபடி குடிசைக்கு வெளியே தூங்கினோம். அவன் என்னிடம் நிறைய கேள்விகள் கேட்டான். எனக்கு பழைய ஞாபகங்கள் ஒவ்வொன்றாகத் திரும்பின. நான், மிகுந்த சந்தோஷமாகவும் மிக அமைதியாகவும் உணர்ந்தேன்.
மறுநாள் காலைஸ விமானம் புறப்படத் தயாராக இருந்தது.
‘‘அம்மா! போதுமான அளவுக்கு நீ உழைச்சிட்டே. இனிமே நீ ஓய்வெடுத்தாகணும். கிளம்பு என்கூட.’’ என்றேன்.
‘‘இல்லை. உங்க அப்பா இங்கதான் இருக்கார். அவரை நான்தான் பாத்துக்கணும். அவர் இருக்கிற இடம்தான் எனக்கு வீடு, நாடு எல்லாமே. முடிஞ்சா ஒண்ணு செய். சோமாலியாவுல எங்களுக்கு ஒரு வீடு வாங்கிக்கொடு. அது போதும்.’’
நான் அவளை இறுக அணைத்துக்கொண்டேன்.
FILE
‘‘அம்மா! நான் உன்னை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன். உன்னைப் பார்க்கத்தான் இங்கு வந்தேன். இதை மறந்துடாதே.’’
இப்போது நான் லண்டன் திரும்பிவிட்டேன். ஆனால், வாழ்க்கையில் நான் பட்ட துன்பங்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்தே இருந்தது. உலகத்தைப் பொறுத்த அளவில் நான், பிரபலமான ஒரு மாடல்.
மாதங்கள் உருண்டன. ஆண்டு, 1997. உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகையான ‘மேரி க்ளேய்ர்’ உலகின் முன்னணி மாடல் அழகியான வாரிஸை பேட்டி காண வந்தது.
‘‘சொல்லுங்கள். எப்போது உங்கள் போட்டோகிராபரை சந்தித்தீர்கள்? அதுதான் உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை இல்லையா?’’
‘‘இல்லை’’
‘‘என்ன?’’
‘‘ஆமாம். நீங்கள் நினைப்பதல்ல என் வாழ்க்கை. என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை லாரா. ஆனால், மாடலிங் பற்றி ஏற்கெனவே நீங்கள் எழுதியிருப்பீர்கள். நான் சொல்ல நினைப்பது அதுவல்ல. எனக்கு சத்தியம் செய்து கொடுத்தால், நான் உங்களுக்கு உண்மைக் கதையைச் சொல்கிறேன்.’’
ரிப்போர்ட்டர் ‘லாரா ஸிவ்’வின் கண்கள் அகல விரிந்தன.
‘‘ஐ டூ மை பெஸ்ட்’’ சொல்லிக்கொண்டே டேப் ரெக்கார்டரை ஆன் செய்தார்.
நான் என் கதையைச் சொல்ல ஆரம்பித்தேன்.
லாராவால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்படி ஒரு கதையை கனவிலும் அவர் நினைத்திருக்க மாட்டார். தேம்பித், தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார். என் நெருங்கிய நண்பர்கள்கூட அறிந்திராத உண்மையை, இப்போது உலகமே தெரிந்துகொண்டுவிட்டது.
‘‘ஆனால், செக்ஸ் என்றால் என்ன? "ஆனால் செக்ஸ் என்றால் என்ன?" இன்றுவரை எனக்குத் தெரியாது. என் வாழ்நாளில் ஒருபோதும் நான் செக்ஸ் இன்பத்தை அனுபவித்ததில்லை. அனுபவிக்கவும் முடியாது. நாங்கள் ஆண்களுக்காக, அவர்களின் தேவைக்காக மட்டுமே படைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு கன்னிப் பெண் வேண்டும் என்பதற்காக ஐந்து வயதுக்குள்ளாகவே எங்கள் உறுப்பை அறுத்து, க்ளிட்டோரியஸை வெட்டி எறிந்துவிடுகிறார்கள். மீண்டும் எப்போது அவர்களுக்குத் தேவையோ, அதாவது முதலிரவுக்கு முன்பு வெட்டித் திறந்துவிடுகிறார்கள்.
FILE
3,000 ஆண்டுகளாக வெட்டவெளியில், எந்தவித மருத்தவ உபகரணங்களும் இன்றி, மயக்கமருந்துகூட இல்லாமல் இந்த அறுவை நடக்கிறது. சிலருக்கு கத்தி, கத்தரிக்கோல்கூட கிடைக்காது. கூமையான பாறைக் கற்கள்தான்.
நான் பிழைத்துவிட்டேன். ஆனால், லட்சக் கணக்கான என் சகோதரிகள்? அறுவையின்போது சிலர், அறுவைக்குப் பின் நோய்த் தொற்று ஏற்பட்டு சிலர், அப்படியே உயிர் பிழைத்தாலும் குழந்தைப் பேற்றின்போது சிலர் என அடுக்கடுக்காய் செத்துப் போகிறார்களே! அவர்களை யார் காப்பாற்றுவது?
மத அடிப்படைவாதிகளால், என் உயிருக்கு ஆபத்து என்று நண்பர்கள் அஞ்சுகிறார்கள். இருக்கட்டும் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. பெண்களின் பிறப்றுப்பை சிதைக்கவேண்டும் என்று குரானில் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா? சொல்லுங்கள்!’’
பேட்டி வெளியான பிறகு வந்த அழைப்புகளை அடுத்து, ஐ.நா. அரங்கில் இப்படித்தான் பேசினேன். இப்போது, பெண் உறுப்பு சிதைத்தலுக்கு எதிரான இயக்கத்தின் சிறப்புத் தூதுவராக ஐ.நா என்னை நியமித்திருக்கிறது.
அடிப்படைவாதிகளால், என் உயிருக்கு ஆபத்து இருப்பதும் தெரியும். முதலில், அந்தக் கிழவனிடமிருந்து கடவுள் என்னைக் காப்பாற்றினார். பிறகு சிங்கத்திடமிருந்து. அவர் என்னை உயிரோடு வைத்திருப்பதற்கான காரணம் இதுதான். ஒரு நாள், இந்தக் கொடுமையிலிருந்து அணைத்துப் பெண்களும் வெளியேறி சுதந்திரம் பெறுவார்கள்.
வாரிஸ், அதற்காகத்தான் உழைத்துக்கொண்டிருக்கிறாள்