ஆட்டை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபருக்கு சிறைத்தண்டனை
05 Dec,2013
ஆட்டை
ஆடொன்றை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 28 வயது நபரொருவருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதித்து கென்ய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த வாரம் இடம்பெற்ற இந்த விநோத வழக்கு விசாரணை குறித்து சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
நீதிமன்றத்தில் கதனா கிட்சவோ கொனா என்ற மேற்படி நபருடன் அவரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட ஆடும் நிறுத்தப்பட்டது.
கதனா கிட்சவோ கொனாவின் வீட்டிற்கு அயலில் வசிப்பவர் ஒருவர், கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் திகதி சிறுநீர் கழிப்பதற்காக புதர் ஒன்றுக்குள் சென்றபோது மரமொன்றில் ஆடைகள் தொங்குவதைக் கண்டு அது தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.
இதன்போது அவர் கொனா நிர்வாணமான நிலையில் தனது ஆட்டை பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனையடுத்து ஆட்டின் உரிமையாளரான அந்த அயலவரும் ஏனைய கிராமவாசிகளும் கொனாவை கையுங் களவுமாகப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் அந்த ஆட்டை பரிசோதித்த மிருக வைத்திய அதிகாரியொருவர், அது பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து குறிப்பிட்ட ஆட்டை தான் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதை ஒப்புக் கொண்ட கொனா, தன்னை நம்பி விசேட தேவையுள்ள தனது மனைவி உள்ளதால் தனக்கு மன்னிப்பளிக்க கோரியிருந்தார்.
எனினும், வழக்கை விசாரித்த பெண் நீதிபதி முதோனி நஸிபி, அவருக்கு 10 வருட சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித் துள்ளார்.