அமெரிக்காவில் ஆலிவுட் நடிகர் பால் வால்க்கர் கார் விபத்தில் பலியானார்.
01 Dec,2013


அமெரிக்காவில் ஆலிவுட் நடிகர் பால் வால்க்கர் கார் விபத்தில் பலியானார்.
பிரபல ஆலிவுட் நடிகர் பால் வால்க்கர் (40). இவர் பாஸ்ட் அன் பியூரியஸ் என்ற படத்தில் நடித்து பிரபலமானவர். கார் பந்தயத்தை வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் 6 பகுதிகளாக வெளிவந்து வெற்றி பெற்றது.
தற்போது ‘பாஸ்ட் அன் பியூரியஸ்' 7–வது பாகத்தில் இவர் நடித்து வருகிறார். நேற்று இவர் ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியில் பங்கேற்க லாஸ்ஏஞ்சல்ஸ் பகுதியில் தனது நண்பரின் காரில் பயணம் செய்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே வாலன்சியா என்ற இடத்தில் சென்றபோது அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரோட்டோரம் இருந்த மின் கம்பத்திலும், பின்னர் மரத்திலும் பயங்கரமாக மோதி தீப்பிடித்தது.
அதில் கார் சுக்கலாக நொறுங்கியது. படுகாயம் அடைந்த பால் வால்க்கரை லாஸ் ஏஞ்சல்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலினின்றி பரிதாபமாக இறந்தார். இவர் நடித்த ‘ஹவர்ஸ்’ என்ற படம் இந்த மாதம் ரிலீஸ் ஆக தயாராக உள்ளது. இந்த நிலையில் இவர் விபத்தில் பலியானது அவரது ரசிகர்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தி உள்ளது.