3,700 ஆண்டுக்கு முந்தைய நிலவறை: இஸ்ரேல் நாட்டில் கண்டுபிடிப்பு
25 Nov,2013

3,700 ஆண்டுக்கு முந்தைய நிலவறை: இஸ்ரேல் நாட்டில் கண்டுபிடிப்பு
இஸ்ரேல் நாட்டில், 3,700 ஆண்டுகள் பழமையான, ஒயின் தயாரிக்கும் நிலவறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டின், வடக்கு பகுதியில் உள்ள, டெல் காபிரி என்னும் இடத்தில், கடந்த ஜூலை மாதம் நடந்த, அகழ்வாராய்ச்சியில், அரண்மனையின் கட்டட இடிபாடுகளுக்கு இடையில், நிலவறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. "இந்த ஒயின் தயாரிக்கும் நிலவறை, 3,700 ஆண்டுகளுக்கு முந்தையது' என்று, தொல்லியல் துறை வல்லுனர்கள் கூறியுள்ளனர். இதில், மொத்தம் 2,000 லிட்டர் ஒயின் சேமித்து வைக்க முடியும்; இந்த நிலவறையில், 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட, 40 முழு ஜாடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலவறை கண்டுபிடிப்பை, ஆய்வாளர்கள் மிகவும் மதிப்புமிக்கதாகக் கருதுகின்றனர்.