பிரபலங்களின் திகைப்பூட்டும் மரணங்கள்!
பிரபலங்கள் என்றாலே மக்களிடம் தனி ஈர்ப்பு உண்டு. அதிலும், குறிப்பாக சினிமா பிரபலங்கள் என்றால் அவர்களை பற்றியும் அவரது வாழ்க்கையை பற்றியும் தெரிந்து கொள்ள மக்கள் ஆசைப்படுகின்றனர். மக்கள் அவரவர்க்கு விருப்பமான நடிகர் நடிகைகளை பற்றிய செய்திகளை படிக்க அதிகம் விரும்புகின்றனர்.
பிரபலங்களின் வாழ்வு வெறும் புகழும் கிளாமரும் கொண்டவைமட்டுமல்ல அது பெரும்பாலும் பொய்யான உறவுகளும், தனிமையும், தளர்வு நிறைந்த வாழ்க்கை நடைமுறையும் நிறைந்தவை ஆகும். ஆயிரம் ஆயிரம் ரசிகர்கள் அவரோடு வாழநினைத்தாலும், இயல்பான வாழ்கையை வாழத்துடிப்பார்கள்.
பிரபலங்களும் அவர்களது வாழ்வும் ஒரு தீர்க்க முடியாத புதிராகவே இருந்துவருகின்றது. நடைமுறையில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி நாம் அறிந்திருக்க முடியாது. சில பிரபலங்களின் புதிரான வாழ்வு மட்டுமல்லாது அவர்களது மரணத்தின் ரகசியமும் வெளிவராமல் இருக்கும். பழங்காலத்தில் இருந்தே பிரபலங்களின் திகைப்பூட்டும் மரணங்களும் திகைப்பூட்டும் கொலைகளும் நடைமுறையில் உள்ளது.
அப்படிப்பட்ட சில பிரபலங்களின் திகைப்பூட்டும் மரணங்கள் பற்றி இப்பொழுது படிக்கலாம். இந்த மரணங்கள் புரிந்து கொள்ள முடியாதவைகளாகவும், ரகசியங்கள் மறைக்கப்பட்டவைகளாகவுமே இருந்து வருகின்றன.
ஜியா கான் (Jiah Khan)
மாடலாக இருந்து நடிகையாக மாறிய ஜியா கான் அவர்கள், தனது முதல் படத்தில் அமிதாப் பச்சனுடன் ஜோடியாக நடித்துள்ளார். இந்த வருட ஜூன் மாதம் 3 ஆம் தேதி தனது படுக்கை அறையில் தூக்கு மாட்டி இருந்து போனார். முதலில் தற்கொலையாக கருதப்பட்ட இந்த வழக்கு மீண்டும் கொலை வழக்காக மாறியுள்ளது. ஜியாகானின் காதலரான சூரஜ் பஞ்சொளி அவர்களை கொலையாளியாக சந்தேகிக்கின்றனர். கொலையோ தற்கொலையோ ஜியா கானின் மரணம் பிரபலங்களின் திகைப்பூட்டும் மரணங்களில் ஒன்றாகும்.
திவ்ய பாரதி (Divya Bharti)
19 வயதான இந்த சூப்பர் ஸ்டார் 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி மும்பையில் உள்ள வெர்சோவா என்னும் தனது 5 மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து மரணமடைந்தார். இந்த மரணத்திற்கான காரணங்களாக கருதபடகூடியவை தற்கொலை முயற்சி, எதிர்பாராத விபத்து, அவருக்கு எதிரான சதி அல்லது கொலை போன்றவைகளாகும். இவரது மரணம் பிரபலங்களின் திகைப்பூட்டும் மரணங்களில் ஒன்றாகும்.
பர்வீன் பாபி (Parveen Babi)
இந்த பழம்பெரும் நடிகை 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது பக்கத்துக்கு வீட்டுகாரர் மூன்று நாட்களாக பாலும் பேப்பரும் எடுக்காததை கண்டு போலீசிடம் புகார் அளித்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம் கண்டறியப்பட வில்லை.
சில்க் ஸ்மிதா (Silk Smitha)
கிளாமருக்கு பேர்போன இந்த தென்னிந்த நடிகை 1996 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இறந்து கிடந்தார். தனது சொந்த பிரச்சனைகளாலும் தொழில்சார்ந்த பிரச்சனைகளாலும் தற்கொலை செய்து கொண்டார்.
நபிஸா ஜோசப் (Nafisa Joseph)
மாடலும், எம்டிவி யின் தொகுப்பாளருமான இவர் மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. அவரது பியான்சியால் தான் இந்த முடிவை மேற்கொண்டார் என்று சொல்லப்படுகின்றது. இவரது மரணம் பிரபலங்களின் திகைப்பூட்டும் மரணங்களில் ஒன்றாகும்.
குரு தத் (Guru Dutt)
சிறந்த நடிகரான இவர் அதிகமான தூக்க மாத்திரைகளாலும் மதுவினாலும் 1964 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி மரணமடைந்தார். இவரது மரணம் தற்கொலையா அல்லது எதிர்பாராத மரணமா என்பது புதிராகவே இருந்து வருகின்றது.
பிரியா ராஜ்வன்ஷ் (Priya Rajvansh)
இந்த நடிகை 2000 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்திற்கான காரணம் வெளிவராததால் குழப்பம் நிலவி வந்துள்ளது. பின்னர், அவரை அவரது கணவர் சேட்டன் ஆனந்த் அவர்களின் சகோதரர்கள் வேலையாட்களின் துணையோடு கொலை செய்தனர் என்று நிரூபணம் ஆகியது.
குல்ஜித் ராந்தவா (Kuljit Randhawa)
இந்த இளம் நடிகை தற்கொலை செய்து கொள்ளும்போது வாழ்வின் பிரச்சனைகளை சமாளிக்க முடியாததால் இந்த முடிவிற்கு வந்ததாக கைப்பட எழுதிவிட்டு மரணமடைந்துள்ளார்.
இளவரசி டயானா (Princess Diana)
தனது வசீகர அழகினாலும் பணிவான தன்மையாலும் பல கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இந்த உலக புகழ்பெற்ற பிரபலம் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி மரணமடைந்தார். அவரை பின்தொடர்ந்து வரும் நபர்களிடம் இருந்து தப்பிப்பதற்கான வழியில் ஒரு கொடூரமான சாலை விபத்தில் இறந்தார். இந்த விபத்து அவரை கொலை செய்வதற்கான முயற்சியாகவே கருதப்படுகின்றது.
மரிலின் மன்ரோ (Marilyn Monroe)
இந்த அழகுப் பதுமை பல இதயங்களை கொள்ளை கொண்டுள்ளது. இவர் 1962 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அவர் மரணத்திற்கான காரணம் அறியப்படவில்லை. முதலில் தற்கொலை என்றும் பின்னர் கொலை என்னும் மக்கள் எண்ணினார்.