இனப்படுகொலையில் சொல்லப்படாத கதை! புதிய ஆவணப்படம் வெளியானது
17 Nov,2013
இனப்படுகொலையில் சொல்லப்படாத கதை! புதிய ஆவணப்படம் வெளியானது
இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் அரசாங்கம் அறிவித்த போர் தவிர்ப்பு வலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலிலேயே அதிகளவான மக்கள் கொல்லப்பட்டதாக இந்தியாவின் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழர்களின் இனப்படுகொலையில் சொல்லப்படாத கதை என்ற தலைப்பில் அந்த தொலைக்காட்சி புதிய காட்சிகளுடன் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
விடுதலைப்புலிகளிடம் இருந்து விடுபட்டு தாம் அறிவிக்கும் பகுதிக்கு மக்களை வருமாறு கூறிய இராணுவம், அந்த சிறிய பகுதியில் வைத்து அதாவது வீடொன்றில் பூட்டி வைத்து விட்டு நாலா புறமும் தாக்குதல் நடத்தியதாக போர் தவிர்ப்பு வலயத்தில் இருந்து உயிர் தப்பிய ஒருவர் தெரிவிக்கின்றார்.
மேலும் இலங்கை அரசாங்கம் முப்படைகளையும் பயன்படுத்தி போர் தவிர்ப்பு வலயம் மீது கடுமையான தாக்குதலை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.