திருமணமாக போகும் பெண்ணின் சந்தேகம்
கே: நான் விரைவில் திருமணமாக போகும் பெண். எனது கேள்வி என்னவென்றால் மார்புகள் சுவைக்கப்படுவது அவை கட்டுக்குலைவதட்கு காரணமாக ஆகுமா?
ப: இல்லை.
என்னம்மா கேள்வி இது? கல்யாணம் முடிந்தால் கணவன் மார்புகளை சுவைக்க தான் செய்வான்.
தாம்பத்தியத்தின் ஆரம்பத்தில் பெண்களின் உச்சம் எப்போதும் சாத்தியமா?
கே: நான் அண்மையில் திருமணமான பெண். எமது உடலுறவில் நான் இதுவரை உச்சமடைந்ததாக உணரவில்லை. ஆயினும் கணவர் எனது சந்தோசத்தில் அதிக அக்கறை காட்டுகிறார். நான் உச்சமடையாமல் இருப்பது எனது உடல் கோளாறா?
ப: பெண்களுக்கு ஆரம்பகால உடல் உறவுகளில் உச்சமடைய முடியாமல் இருப்பது வழமையற்றதொன்றொல்ல. இது காலவோட்டத்தில் சரிவரும். நீங்களும் உங்கள் கணவரும் இது தொடர்பாக மிக வெளிப்படையாக பேசி உங்களுக்கு அதிக களிப்பூட்டும் செயல்களில் கவனத்தை அதிகப்படுத்தலாம்.
பின்புற உறவு
கே : எனக்கு என் மனைவியுடன் பின் வழி்ப்பாதையின் ஊடாக பின்புறத்தில் இருந்து உறவு கொள்ள ஆசை.. பலமுறை முயற்ச்சித்தும். பயம் காரணமாக மனைவி மறுத்துவிட்டாள். அவ்வாறு உறவு கொள்வதால் ஏதேனும் தீங்கு உண்டா தயவு செய்து உடன் பதில் தரவும்.
ப: மனைவி விரும்பாத ஒன்றை அவர்மீது வற்புறுத்தல் சரியானது அல்ல. மற்றும் அது பல பாலியல் நோய்களை கடத்தக்கூடியதும்கூட
உடலுறவு எத்தனை நிமிடங்கள்?
நீண்டநேர உடலுறவு தொடர்பான கேள்விகள் அதிகம் வந்திருக்கின்றன. எனவே அனைத்துக்கும் பொதுவாக சில அடிப்படைத்தகவல்களை தரவேண்டியிருக்கிறது.
உடலுறவு சாதாரணமாக 15 இலிருந்து 20 நிமிடங்களுக்கு நீடிக்கும். இதில் உடலுறவுக்கு முன்னரான விளையாட்டுக்களைத்தவிர புணர்ச்சி வெறும் 3 முதல் 5 நிமிடங்களே.
எனவே வாசகர்கள் தாங்கள் பார்த்த நீலப்படங்கள் போல் இது இடம்பெறவேண்டும் என எதிர்பார்க்ககூடாது. பார்வையாளர்களை கவர்வதற்காக எப்போதும் படங்களில் மிகைப்படுத்தல்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.
கணவர் குளியலறையில்
கே: என்னுடைய கணவர் குளியலறையில் சுய இன்பம் காண்பதை சில நாட்களுக்கு முன் அவதானித்தேன். நாங்கள் இருவரும் ஆரோக்கியமான உடலுறவில் ஈடுபடுகிறபோதும் ஏன் இவர் இப்படி செய்கிறார் என்று தெரியவில்லை. இதனால் எனக்கு பயமாக இருக்கிறது. நான் என்ன செய்ய?
ப: நீங்கள் இதை அவர் இன்னொரு பெண்ணுடன் உடலுறவில் ஈடுபடுவதுபோல் நோக்குவதால்தான் இந்த பயம் ஏற்பட்டிருக்கிறது. இது அவ்வாறு பயப்படக்கூடிய விடயமல்ல. மாறாக அதை காணும்போது அவரை பாலியலுக்கு அழைத்திருக்கலாம். அது வித்தியாசமான இனிய அனுபவமாக இருவருக்கும் அமைந்திருக்கும்.
மார்பகங்களை பெரிதாக்க
கே: நான் 24 வயதான் பெண். என்னுடைய மார்பகங்கள் சிறிதாக இருக்கின்றன. நண்பிகளின் அறிவுரையின்படி சில கிறீம்களை பாவித்தும் பலன் இல்லை. மார்பகங்களை பெரிதாக்க பொருத்தமான கிறீம் எது?
ப: உங்கள் பணத்தை கிறீம்களில் செலவளிக்கவேண்டாம். இவை எதுவும் பலனளிக்காது. நீங்கள் ஒல்லியாக இருந்தால் கொஞ்சம் சதை போட முயற்சிக்கலாம். வேறுவழிகள் பலன் தரா..
விந்து முந்துதல்
வரைவிலக்கணம்
ஒரு ஆண் தனது பாலியல் துணை விரும்பும் காலத்திற்கு முன் விந்தை வெளியேற்றலாகும்.
இது 50% க்கும் அதிகமான பாலியல் உறவுகளில் நிகழ்கிறது.
சில பாலியல் வல்லுனர்கள் புணர்ச்சி ஆரம்பித்து 2 நிமிடங்களில் விந்து வெளியாவது என்றும் வரைவிலக்கணப்படுத்துவர். இந்நிலையானது முக்கால்வாசி ஆண்களில் அவர்களது அரைவாசிக்கும் அதிகமான உறவுகளில் நிகழ்கிறது.
புணர்ச்சி நேரம்
புணர்ச்சி ஆரம்பித்து விந்து வெளியேறுவதற்கான சராசரி நேரம் வெறும் 6 இலிருந்து 7 நிமிடம் வரையான காலப்பகுதி மட்டுமே. எனவே அரைமணிநேரம் புணர்ச்சி என்றெல்லாம் நீங்கள் கற்பனை செய்திருந்தால் அக்கற்பனையை மறக்கவும்.
முதற் காரணி
உளவியல் காரணி - மன அழுத்தம்
நிதிப்பிரச்சினைகள், துணையுடன் மனம் விட்டு பேசாமை, ஏன் "விந்து முந்துமோ "என்ற பயம் கூட காரணியாகும்.
சிலருக்கு அதீத வேட்கை / கிளர்ச்சி காரணமாகும். ஆனால் இது நாளடைவில் சரியாகும்.
சரி செய்தல்
மன அழுத்தங்களை தவிர்த்தல்.
புணர்ச்சிக்கு முன்னரான பாலியல் செயற்பாடுகளில் அதிக நேரத்தை செலவிடல்
உணர்வுகளை கட்டுப்படுத்த பயிற்சி பெறல்
பயிற்சி :start and stop technique
விந்து வெளியேறக்கூடும் என்ற நிலை வரும்போது சிறிது நேரன் புணர்ச்சியை நிறுத்தி பின் மீண்டும் ஆரம்பித்தல். இவ்வாறாக மீண்டும் மீண்டும் ஆரம்பித்து நிறுத்துவதன்மூலம் புணர்ச்சியின் நேரத்தை மடங்குகளாக அதிகப்படுத்தலாம்.