லூயி டாகர் (1787-1851)வரலாறு படைத்தோரின் குறிப்புகள் இளைஞர்களுக்காக

12 Nov,2013
 

 

லூயி டாகர் (1787-1851)

ஒளிப்படம் எடுப்பதற்கு நடைமுறைக்கு உகந்த முதலாவது முறையினைக் கண்டுபிடித்தவர் லூயி ஜேக்ஸ் மாண்டே டாகர் (Louis Jacques Mande Daguerre) ஆவார். அவர் இந்த முறையை 1830 களின் பிற்பகுதியில் கண்டுபிடித்தார்.

வடக்கு ஃபிரான்சிலுள்ள கார்மைல்ஸ் என்னும் ஊரில் 1787 ஆம் ஆண்டில் டாகர் பிறந்தார். இளமையில் ஓர் ஓவியராகப் பணியாற்றினார். தமது 30 ஆம் வயதுகளின் மத்தியில், தனிச் சிறப்புடைய ஒளி விளைவுகளைக் காட்டும் அற்புதமான அகல் பரப்புக் காட்சி வண்ண ஓவியங்களை அவர் வடிவமைத்தார். ஒளி நிழல் வண்ண வரைத்திறங்களின் மூலம் எழுஞாயிறு போன்ற இயற்கை நேர்காட்சிப் பண்பு தோன்றத் தீட்டப்படும் இவ்வகை ஓவியம் "டயோராமா" (Diorama) ஓவியம் என அழைக்கப்பட்டன. ஓவியப் பணியைச் செய்து கொண்டே, வண்ணமும் தூரிகையும் இல்லாமல், உலகக் காட்சிகளை அப்படியே தானாகப் படம் பிடிக்கக் கூடிய ஒரு சாதனத்தை, அதாவது ஒரு ஒலிப்படக் கருவியை (Camera) உருவாக்குவதில் அவர் ஈடுபாடு கொண்டார்.

நடைமுறையில் இயங்கக்கூடிய ஒரு ஒளிப்படக் கருவியை உருவாக்குவதற்கு அவர் மேற்கொண்ட முதல் முயற்சிகள் வெற்றியடையவில்லை. இவரைப் போலவே, ஒளிப்படக் கருவியைக் கண்டுபிடிக்கப் பாடுபட்டு வந்த ஜோசஃப் நைசேஃபோர் நீப்சே (Joseph Nicephore Niepce) என்பவரை 1827 ஆம் ஆண்டில் டாகர் சந்தித்தார். இந்த முயற்சியில் நீப்சே சற்று அதிக வெற்றியும் கண்டிருந்தார். ஈராண்டுகளுக்குப் பிறகு இவ்விருவரும் கூட்டாளிகளாகச் சேர்ந்தார்கள். நீப்சே 1833 ஆம் ஆண்டில் காலமானார். ஆயினும், டாகர் தமது முயற்சிகளில் தொடர்ந்து பாடுபட்டு வந்தார். 1837 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு உகந்த ஒளிப்படம் எடுக்கும் முறையொன்றை உருவாக்குவதில் டாகர் வெற்றி கண்டார். பாதரச ஆவி மூலம் ஒளிப்படமெடுக்கும் இந்த முறை "டாகரோ டைப்" (Daguerreo type) என வழங்கப்பட்டது.

1839 ஆம் ஆண்டில் டாகர் தமது முறைக்கு புத்தாக்க உரிமை எதுவும் பெறாமலே, அந்த முறையை உலகுக்கு அறிவித்தார். இதற்குக் கைமாறாக, ஃபிரெஞ்சு அரசு, டாகருக்கும், நீப்சேயின் மகனுக்கும் ஆயுட்கால ஓய்வூதியங்கள் வழங்கியது. டாகரின் கண்டுபிடிப்பு பொது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டாகர் ஒரு மாவீரராக போற்றப்பட்டார். அவருக்கு ஏராளமான விருதுகள் குவிந்தன. டாகரோ டைப் முறை மிக விரைவாக உலகெங்கும் பயனுக்கு வந்தது. டாகரும் விரைவில் ஓய்வு பெற்றார். அவர் 1851 ஆம் ஆண்டில், பாரிஸ் நகருக்கு அருகிலிருந்து தமது கிராம இல்லத்தில் காலமானார்.

ஒளிப்படக் கலையைப் போல் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்ட கண்டுபிடிப்புகள் மிகச் சிலவே. இது அறிவியல் ஆராய்ச்சித் துறை ஒவ்வொன்றிலும் பயன்படுகிறது. தொழில் துறையிலும், இராணுவத்திலும் இதன் பயன் மிகப் பல. சிலர் இதனை ஒரு கலை வடிவமாகப் போற்றுகிறார்கள். கோடிக்கணக்கானவர்கள் இதனை ஒரு பொழுதுபோக்குக் கலையாகப் பயின்று வருகிறார்கள். கல்வி, பத்திரிகைத் தொழில், விளம்பரம் ஆகியவற்றில் ஒளிப்படங்கள் தகவல்களை (அல்லது பொய்த் தகவல்களை) தெரிவிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த காலத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டக் கூடியனவாக ஒளிப்படங்கள் விளங்குவதால், நினைவுகள் மலர்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றில் ஒளிப்படங்கள் பெருமளவில் பயன்படுகின்றன. திரைப்படம், ஒளிப்படக் கலையில் ஒரு முக்கியமான துணை விளைவாகும். திரைப்படம், இன்று தலையாய பொழுது போக்குச் சாதனமாக விளங்குகிறது. இயங்கா ஒளிப்படக் கலையும் (Still Photography), ஒளிப்படக் கலையின் ஒரு முக்கிய அம்சமாகும்.

எந்த ஒரு கண்டுபிடிப்பும் ஒரு தனிமனிதனின் முயற்சியினால் மட்டும் உருவாவதில்லை. டாகருக்கு முன்பிருந்த பலருடைய தொடக்கப் பணிகள் டாகருடைய சாதனைக்கு வழியமைத்தன என்பதில் ஐயமில்லை. டாகருக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னரே குண்டூசித் துளை ஒளிப்படக் கருவி (Camera Obsura) ஒன்று கண்டுபிடிக்கப் பட்டிருந்தது. (இந்தக் கருவியில் படச்சுருள் (Films) இல்லை. 16 ஆம் நூற்றாண்டில் கிரோலாமோ சார்டானோ (Girolamo Cardano) என்பவர், குண்டூசித்துளை ஒளிப்படக் கருவியின் துளை வாயிலில் கண்ணாடி வில்லையை (Lens) வைக்கும் முக்கியமான முறையைக் கண்டறிந்தார். இன்றைய ஒளிப்படக் கருவிக்கு முன்னோடியாக அமைந்தது எனினும், இக்கருவியில் உண்டான உருவப் படிவம் நிரந்தரமாக இருக்கவில்லை. எனவே, இதை ஒரு ஒளிப்படக் கலையாகக் கருத முடியாது. ஜோகான் ஷூல்ஸ் (Johann Schulze) என்பவர் 1727 ஆம் ஆண்டில் மற்றொரு அடிப்படையான கண்டுபிடிப்புச் செய்தார். அவர் வெள்ளி உப்புகள், ஒளியைப் பதிவுச் செய்யக்கூடியவனாக உள்ளன என்பதைக் கண்டறிந்தார். தற்காலிக உருவப் படிவங்களை உருவாக்குவதற்கு ஷூல்ஸ் தமது கண்டுபிடிப்பைப் பயன்படுத்திய போதிலும் அவர் இத்துறையில் தொடர்ந்து ஈடுபாடு காட்டவில்லை.

டாகருக்கு முன்னர் டாகரின் சாதனைக்கு மிக நெருக்கமாக வந்தவர் நீப்சே என்று சொல்லலாம். நீப்சே பின்னர் டாகரின் கூட்டாளியானார். 1820 ஆம் ஆண்டில் "ஜூடியா நிலக்கீல்" (Bitumen of Judea) என்னும் ஒருவகை நிலக்கீலை நீப்சே கண்டுபிடித்தார். இதுவும் ஒளிப்பதிவு செய்யக் கூடியதாக இருந்தது. இந்த ஒளிப்பதிவுப் பொருளைக் குண்டூசித் துளை ஒளிப்படக் கருவியில் இணைத்து, உலகின் முதலாவது ஒளிப்படங்களை எடுப்பதில் நீப்சே வெற்றி கண்டார். (1826 ஆம் ஆண்டில் நீப்சே எடுத்த ஒரு ஒளிப்படம் இன்றும் உள்ளது). அந்தக் காரணத்திற்காகவே ஒளிப்படக் கலையைக் கண்டுபிடித்தவர் நீப்சேதான் என்று சிலர் கூறுவர். எனினும், நீப்சேயின் ஒளிப்பட முறை முற்றிலும் நடைமுறைக்கு உகந்ததாக இருக்கவில்லை. ஏனென்றால், அதில் ஒளிபடர் நேரம் (Exposure Time) எட்டு மணி நேரம் தேவைப்பட்டது. அப்போது கூட உருவப் படங்கள் மங்கலாகவே இருந்தன.

டாகரின் முறையில், வெள்ளி அயோடைடு பூசப்பட்ட ஒரு தகட்டின் உருவப் படங்கள் பதிவு செய்யப்பட்டன. இதற்கு ஒளிபடர் நேரம் 15-20 நிமிடங்கள் போதுமானதாக இருந்தது. இதனால், இந்த முறை சற்றே கடினமானதாயினும், நடைமுறையில் பயன்பாடுடையதாக இருந்தது. டாகர் தமது முறையை அறிவித்த ஈராண்டுகளுக்குள் மற்றவர்கள் அந்த முறையில் சிற்சில மாற்றமைவுகளைச் செய்தார்கள். ஒளிப்பதிவுப் பொருளாகப் பயன்படுத்தப் பட்ட வெள்ளி அயோடைடுடன், வெள்ளி புரோமைடும் சேர்க்கப்பட்டது. இந்தச் சிறிய மாற்றமானது ஒளிபடர் நேரத்தைப் பெருமளவு குறைக்கக் கூடிய முக்கியமான விளைவை ஏற்படுத்தியது. இதன் மூலம், ஒளிப்பட முறையில் உருவாக்கப்படங்களை எடுப்பது மிக எளியதாயிற்று.

டாகர் தமது ஒளிப்படக் கலைக் கண்டுபிடிப்பை அறிவித்த பின்பு மிக விரைவில் (1839 இல் ஹென்றி ஃபாக்ஸ் டால்போட் (Hentry Fox Talbot) என்ற ஆங்கிலேய விஞ்ஞானி முற்றிலும் வேறுபட்ட ஒளிப்படக்கலை முறையை தாம் கண்டுபிடித்திருப்பதாக அறிவித்தார். இதில், இன்று செய்யப்படுவது போல், முதலில் "மறிநிலைப் பதிவுப் படங்கள்" (Negative Prints) தயாரிக்கப்பட்டன. (மறிநிலைப் பதிவுக் கூடத்தில், வெளிச்சத்திற்குப் பதில் இருட்டும், இருட்டிற்குப் பதில் வெளிச்சமுமான பகுதிகள் பதிவாகியிருக்கும். இந்த மறிநிலைப் பதிவுப் படத்திலிருந்து நேர் படிவப் படங்களைத் தயாரிக்கலாம்.) டால்போட், 1835 ஆம் ஆண்டிலேயே, அதாவது "டாகோரை டைப்" ஒளிப் படங்கள் தயாரிக்கப்படுவதற்கு ஈராண்டுகளுக்கு முன்னரே தமது முதலாவது ஒளிப்படங்களைத் தயாரித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. டால்போட் வேறு பல துறைகளில் பணியில் ஈடுபட்டிருந்தமையால், அவர் தமது ஒளிப்படப் பரிசோதனைகளைத் தொடர்ந்து நடத்தவில்லை. அவர் அவ்வாறு செய்திருந்தால், டாகருக்கு முன்னதாகவே வாணிக முறைக்கு ஏற்றதொரு ஒளிப்பட முறையை அவர் கண்டுபிடித்திருக்கக் கூடும். அப்போது, ஒளிப்படக் கலையைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமையும் அவரைச் சார்ந்திருக்கும்.

டாகருக்கும் டால்போட்டுக்கும் பிந்திய ஆண்டுகளில், ஒளிப்படக் கலையில் ஏராளமான சீர்திருத்தங்கள் ஏற்பட்டு விட்டன. ஈரத்தகட்டு முறை, உலர்தகட்டு முறை, நவீன சுருள்படச் சுருள் (Roll Film) வண்ண ஒளிப்படம், இயக்கப் படங்கள், போலராய்டு ஒளிப்படக் கலை, மின்துகள் ஒளிப்பட முறை (Xeography) ஆகியவை ஒளிப்படக் கலையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்களாகும்.

ஒளிப்படக் கலை வளர்ச்சியில் பல வல்லுநர்கள் ஈடுபாடு கொண்டிருந்த போதிலும், ஒளிப்படக் கலை வளர்ச்சிக்கு மிக முக்கியமான தொண்டினைச் செய்தவர் லூயி டாகர்தான் என்று நான் கருதுகிறேன். அவருக்கு முன்பு நடைமுறையில் இயலக் கூடிய ஒளிப்பட முறை எதுவும் இருக்கவில்லை. அவர் கண்டுபிடித்த உத்திகள்தான் நடை முறைக்கு ஏற்றனவாக இருந்தன. அவருடைய முறை மிக விரைவிலேயே பெருமளவுக்குப் பயனுக்கு வந்தது. மேலும், அவருடைய கண்டுபிடிப்புக்கு நல்ல விளம்பரமும் அளிக்கப்பட்டது. அது, பிந்திய முன்னேற்றங்களுக்குப் பெரிதும் ஊக்கமளித்து. இன்று நாம் பயன்படுத்தும் ஒளிப்பட முறைகள் டாகோர டைப் முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை என்பது உண்மைதான். எனினும், இந்த முன்னேற்றங்களில் எதுவும் ஏற்படாதிருந்திருந்தாலும், டாகரோடைப் ஒரு பயனுள்ள ஒளிப்பட முறையாக நீடித்திருக்கும்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies