இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரைப்பற்றி அறிந்துள்ளீாகளா?
11 Nov,2013

இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரைப்பற்றி அறிந்துள்ளீாகளா?
இத்தாலி நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஓர் அழகிய, பாரம்பரியமிக்க, தொன்மை நிறைந்த நகரம் தான் வெனிஸ் நகரம். இது ஒரு உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தளமும் கூட. வெனிஸ் வெனட்டோ பிராந்தியத்தின் தலைநகராமாகும். வெனிஸ் மொத்தமாக 117 தீவுகளைக்கொண்டது.

இந்தத் தீவுகளினூடாக சுமார் 150 வாய்க்கால்கள் (Canals) ஓடுகின்றன. இதன் காரணமாக நிறைய சிறு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அவை இக்கால்வாய்களைக் கடக்க உதவுகின்றன. இங்கு தெரு வீதிகள் இல்லை. அந்த வீதிகளில் வண்டிகளில் செல்லவோ அல்லது வாகனங்களில் செல்லவோ முடியாது.
ஏனெனில் வீதிகளுக்குப் பதிலாக நீர் நிறைந்த கால்வாய்களே காணப்படுகின்றன. இந்தக் கால்வாய்கள் நகரைச் சுற்றிப் பின்னிக் காணப்படுகின்றன. எனவே, இந்த வீதிகளில் பயணிக்க கொண்டோலா எனப்படும் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.
பாரம்பரியமிக்க இத்தாலியின் கட்டிடக் கலையை வெளிப்படுத்தும் கட்டிடங்கள் சிற்பங்கள் என்பவற்றை வெனிஸ் நகரம் கொண்டுள்ளது. கால்வாய்களின் நகரம், பாலங்களின் நகரம், மிதக்கும் நகரம், நீர் நகரம், செரநிஸ்ஸிமா என பல்வேறு பெயர்களில் வெனிஸ் நகரம் அழைக்கப்படுகிறது.

414.57கி.மீ. சதுரப்பரப்பளவைக் கொண்ட வெனிஸ் நகரத்தில் 272,000 க்கும் (2009) அதிகமான மக்கள் வாழ்கின்றனர். வெனிஸ் நகரத்தைப் பார்வையிடுவதற்காக வருடாந்தம் பல இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக அந்த நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெனிஸ் நகரம் தொடர்பான வரலாற்றுக் கதைகள் பலவற்றை ஏற்கனவே புத்தகங்களில் படித்திருப்பீர்கள், வெனிஸ் நகரத்தைப்பற்றி நிறைய சொல்லலாம். இப்போது இது போதும்.

Doge அரண்மனை ( The Doge’s Palace )






