அரசியல்வாதி 1 : கட்சியில எந்தத் தொண்டரும் சரியா வேலை செய்ய மாட்டேங்குறாங்க.
அரசியல்வாது 2 : அப்ப 'தொண்டர்கள்' னு சொல்லுங்க.
சர்வர் : முதலாளி சதாம் உசேன உங்களுக்கு ரொம்ப பிடிச்சுருக்கலாம் அதுக்காக போர்டுல இப்படியா எழுதறது.
முதலாளி : என்ன எழுதியிருக்கேன்?
சர்வர் : தயிர் சதாம் தக்காளி சதாம் லெமன் சதாம் ரெடி அப்படீன்னு எழுதியிருக்கீங்க.
பாக்கி : ஏன் சார் நீங்களோ வீணை வித்வான் பின்ன ஏன் குரல் சரியில்லைன்னு கச்சேரி வேணாண்டீங்க?
ரமனன் : நான் பாடிக்கிட்டே தான் வாசிப்பேன் அதனால தான்.
வேலு : கோபம் வந்துட்டா என் மனைவி காளியாயிருவா
பாக்கி : நீ என்னாவே....?
வேலு : காலியாயிருவேன்.
சிலுக்கு சீனி : "படம் சக்கைப்போடு போடுறமாதிரி ஒரு தலைப்பு சொல்லுங்க"
விச்சு : "கரும்பு".
ரமனன் : புத்தகக் கடைக்காரர்கிட்ட வம்பிழுத்தது தப்பாப் போச்சு.
வேலு : ஏன்?
ரமனன் : நல்லா புரட்டி எடுத்துட்டாரு.
டாக்டர் : அந்தப் பேசண்டுக்கு என் மேல கோபம் போல தெரியுது.
நர்ஸ் : எப்படிச் சொல்றீங்க ?
டாக்டர் : நாக்கை நீட்டச் சொன்னா, அந்த சாக்குல நாக்கைத் துருத்துறாரே.
வேலு : கைலி வியாபாரி எப்படி சிரிப்பாரு?
பாக்கி : கு'லுங்கி' கு'லுங்கி' த்தான்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நிருபர் : நீங்க எழுதின நாவல் ரொம்ப Tasteஆ இருக்கே, ஏங்க ?
எழுத்தாளர் : கிச்சன்லே நான் சமையல் பண்ணும்போது எழுதினது ஆச்சே
ஆசிரியர் : உங்க அப்பா ராத்திரி படுக்கிறப்ப சட்டை பாக்கெட்ல நூறு ரூபா வைக்கிறாரு. காலையில பார்க்கிறப்ப நூறு ரூபா அப்படியே இருக்கு. இதுல இருந்து என்ன தெரியுது ?
மாணவன் : எங்க அம்மா ஊர்ல இல்லேன்னு தெரியுது சார்.........
வேலு : அந்தத் தியேட்டர் முதலாளியை போலீஸ் பிடிச்சுக்கிட்டுப் போகுதே ஏன்..?
பாக்கி : டி.வி-ல போட வெச்சிருந்த படத்தைத் தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிட்டாராம்
ரமனன் : டாக்டர்... நீங்க சொந்தமா வீடு கட்டிட்டு இருந்தீங்களே.. அந்த வேலை முடிஞ்சுதா?
டாக்டர் : இன்னும் இல்லை. நீங்க ஏன் தினம் அதைக் கேட்கறீங்க?
டாக்டர் : என்னை எப்போ டிஸ்சார்ஜ் பண்ணப் போறீங்கனு தெரிஞ்சுக்கத்தான்.
நண்பர் : திரும்ப வாங்க முடியாத கடன் கோடிக்கணக்குல இருக்கறதால உங்க பாங்க்குக்கு எதிர்காலமே இருக்காதுன்னு சொல்லிக்கறாங்களே?
அதிகாரி : நீங்க வேறே.. எதிர்காலத்துல எங்க பாங்க்கே இருக்காதுங்கறதுதான் உண்மை.
ரானி : டாக்டர்.. என் கணவருக்கு சில நேரம் என்னை அடையாளம் தெரிய மாட்டேங்குது..
டாக்டர் : எப்படி சொல்றீங்க?
ரானி : சில நேரம் என்னைப் பார்த்தா பயப்பட மாட்டேங்கிறாரு டாக்டர்..
வேனி : குடும்பத்துக்கு விளக்கேற்றி வைக்கப் பொண்ணு வேணும்னு சொல்லி என் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணினது தப்பா போச்சு..
ரானி : ஏன்?
வேனி : என் மருமகள் விளக்கேத்தறதைத் தவிற வேற எந்த வேலையும் செய்ய மாட்டேங்கிறா..
பாபு : நம்ம ஃபைனான்ஸ் கம்பெனி முதலாளிக்கு பத்மஸ்ரீ பட்டம் தரப்போறாங்களாமே...
வேலு : நிஜமாவா?
பாபு : ஆமாம்... குல்லா போடாம எல்லோருடைய பணத்தையும் வட்டியோட திருப்பித் தர்றாரே.. சும்மாவா
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
டாக்டர் : உங்க கணவர் உங்ககிட்ட பயங்கரமா நடிப்பார் போலிருக்கே?
அமலா : எப்டி சொல்றீங்க?
டாக்டர் : ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணும்போது இதயத்துல இருக்கற என் மனைவிக்கு காயம்படாம பண்ணுங்கன்னு சொன்னாரே!
அமலா : என்னடி, நீ வேலைக்காரி சேலையைப் போய் கட்டியிருக்க?
விமலா : அப்பத்தான்டி என் புருசன் ஏறெடுத்தே என்னைப் பாக்குறாரு.
அமலா : பத்திரிக்க ஆசிரியருக்கு காதல் கடிதம் அனுப்பியது தப்பாப் போச்சு.
விமலா : ஏன் ?
அமலா : பத்திரிக்கையில பிரசுரம் பண்ணிட்டு, சன்மானம் அனுப்பிட்டார்.
அமலா : என் மாமியார் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.
விமலா : எப்படி?
அமலா : கரெக்டா அரை மணி நேரத்துக்கு மேல சண்டைய நீடிக்க மாட்டார்.
அமலா : வாசல்ல நின்னுக்கிட்டுதான் என் மாமியார் என்கூட சண்டை போடுவாங்க
விமலா : ஏன்?
அமலா : அப்பதான் ஜெயிக்க முடியும்னு அவுங்களுக்கு வாஸ்து சாஸ்திரத்ல சொன்னாங்களாம்.
அமலா : புகுந்த வீட்டுல பெண்கள மதிக்க மாட்டேங்குறாங்க .
விமலா : என்ன செய்றாங்க?
அமலா : மாமியார் மருமக சண்டைக்கு வாய்ப்புக் குடுக்காம எந்நேரமும் அப்பாவும் மகனும் சண்டை போடுறாங்க.
அமலா : "என் புருசனுக்கு ரொம்ப நல்ல மனசு"
விமலா : "எத வச்சு சொல்ற?"
அமலா : "சமையல் செய்றதுமில்லாம எனக்கு ஊட்டியும் விடுவாரே, அத வச்சு தான்."
விமலா : "என் மாமியாரும் நானும் சும்மா இருந்தாலும் என் புருசன் சண்டை போடச் சொல்லி வற்புறுத்துவாரு"
அமலா : "ஏன்?"
விமலா : "வீட்டோட இயல்பு நிலை பாதிச்சிடக் கூடாதுன்னுதான்".
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ராமு : டெய்லர்களுக்கு பிடிச்ச மாசம் எது ?
சோமு : தை.
ராமு : பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...
சோமு : என்னாச்சு?
ராமு : பேசியதையே திரும்பத் திரும்பப் பேசி கழுத்தை அறுக்கிறாளே
ராமு : சுருட்டு கம்பெனி கேஷியர் சுகுமாரன் எங்கே ?
சோமு : அவர், பணத்தை சுருட்டிட்டு ஒடிட்டார்
ராமு : அவரு வியாபாரத்துல படிப்படியா உயர்ந்தவர்
சோமு : எப்படி?
ராமு : முதல்ல செருப்பு வியாபாரம் பண்ணி, அப்புறம் பெல்ட் வியாபாரம் செஞ்சாரு. இப்ப தொப்பி வியாபாரம் பண்றாரு.
ராமு : குடி குடியை கெடுக்கும்ங்றது சரியா போச்சு
சோமு : எப்படி?
ராமு : எனக்கு கல்யாணம் ஆனதுமே என் மனைவி என்னை குடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டா..
ராமு : பேங்க் மேனேஜர் பின்னால ஒருத்தர் அலைஞ்சா எப்படி அலைவாரு?
சோமு : லோன் லோன்-னுதான்
சோமு : அந்த பட்டாசுக்கடைக்காரர் இதற்கு முன்னால் பூக்கடை வைத்திருந்தார் போல் தெரிகிறது ,,,,,,
ராமு : எப்படி சொல்றே ,,,,, ?
சோமு : சரவெடி கொடுங்கன்னா ,,, எத்தனை முழம்னு கேட்கிறாரே
ராமு : என்ன இது .. .. ஷூட்டிங் பார்க்க இவ்வளவு வி.ஐ.பி-க்களா .. .. ?
சோமு : அவங்கள்லாம் சென்ஸார் போர்டு மெம்பருங்க .. ..ஒவ்வொரு ஸீன் எடுக்கறதக்கு முன்னாடி அவங்க அபிப்பிராயத்தைக் கேட்டுக்கிட்டு எடுக்கறாங்க .. ..
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இரண்டு சர்தார்கள் ஜாலியாக தனி விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது இரண்டு விமானக்களும் மோதிக் கொண்டு பஞ்சாபிலுள்ள சுடுகாட்டில் விழுந்து இறந்து விட்டனர். உள்ளூர் சர்தார்கள் அவர்களின் சடலங்களை தேடி மண்ணை தோண்டி வருகின்றனர். இதுவரை 500 சடலங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. இன்னும் தோண்டிக் கொண்டிருக்கிறார்களாம்.