ஆர்வத்தை தூண்டும் லிபிடோ இன்ஜெக்சன்!
ஆணோ பெண்ணோ பாலியல் ரீதியாக பலரும் ஏராளமான சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். மனஅழுத்தம், வேளைப்பளு உள்ளிட்டவைகளினால் தாம்பத்ய உறவில் ஆர்வமின்மை ஏற்படுகிறது. அவர்களின் சிக்கலுக்கு வரப்பிரசாதமாக முன்பு வயக்ரா கண்டுபிடிக்கப்பட்டது. ஆண்களுக்கு மட்டுமேயான இந்த மாத்திரையை விட தற்போது ‘லிபிடோ இன்ஜெக்சன்’ இருபாலருக்கும் நன்மை தரக்கூடியதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த மருந்தை பயன்படுத்தினால் போனசாக உடல் எடையும் கணிசமான அளவு குறைகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
உலகம் முழுவதும் மூன்றில் ஒரு பங்கு பெண்களும், ஆறில் ஒரு பங்கு ஆண்களும் பாலியல் ஆர்வமின்மை கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வரப்பிரசாதம் இது என்கின்றனர் இந்த புதிய அதிசய மருந்து தயாரிப்பாளர்கள்.
வயக்ரா மாத்திரையை உலகமெங்கும் மூன்று கோடி பேருக்கும் மேலாக பயன்படுத்தியுள்ளதாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது. ஆனால் இந்த புதிய கண்டுபிடிப்பான ‘லிபிடோ இன்ஜெக்சன்’ வயாகராவைப் போல மேனியில் நேரடியாக மாற்றங்களை ஏற்படுத்தாமல் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தி பாலியல் ஆர்வத்தையும், ஆரோக்கியத்தையும் தூண்டுகிறதாம்.
வயாகரா வெறுமனே உடலில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் நின்று விடுகிறது. மன அளவில் அது எந்த விதமான ஆர்வத்தையோ, விருப்பத்தையோ, மோகத்தையோ கிளறிவிடுவதில்லை. கூடவே அது முழுக்க முழுக்க ஆண்களுக்கானது. ஆர்வமற்ற பெண்களுக்கு வயாகராவினால் எந்த பயனும் இல்லை. ஆனால் இந்த புதிய ஆர்வம் தூண்டும் மாத்திரை பெண்களுக்கும் ஆண்களுக்கும் பொதுவானது என்பது குறிப்பிடத் தக்கது. இந்த மருந்து Type 2 gonadotropinb ஐ வெளிவிடும் ஹார்மோன்களை ஊக்கப்படுத்துவதன் மூலம் பாலியல் ஆர்வத்தை தூண்டுகிறதாம்.
ஆர்வத்தைத் தூண்டுவதன் மூலமும், அதற்குரிய சுரப்பிகளை சுரக்கச் செய்வதன் மூலமும் ஆண்மைக் குறைபாடு உட்பட பல நோய்களையும் இந்த மருந்து சரி செய்து விடும் என்கின்றனர்.
முதலில் பெண்களுக்கென தயாரிக்கப்பட்ட இந்த மருந்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் பயன்படுத்தப்படும் வகையில் இப்போது உருவாகி வருகிறது. மூளையில் நேரடியாக ஊசி மூலம் செலுத்த வேண்டும் என துவங்கிய ஆராய்ச்சி இப்போது இரத்தக் குழாய்களிலும் செலுத்தலாம் எனும் அளவில் வளர்ச்சியடைந்திருக்கிறது. இதை மாத்திரையாக தயாரிக்கும் முயற்சி இப்போது நடைபெற்று வருகிறது.
வயாகராவை முழுமையாக துடைத்து எறியும் நோக்குடன் இந்த மருந்து மன உடல் சார்ந்த பிரச்சனைகளின் தீர்வாக தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்த மருந்தை உட்கொள்வதன் மூலம் மற்றுமொரு நன்மை கிடைக்கிறதாம் அதாவது உடல் எடை கணிசமாகக் குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஆண்களுக்கு ஈரம்.. பெண்களுக்கு நீள முத்தம்!
அன்பை வெளிப்படுத்தும் மிகச்சிறந்த ஆயுதம் முத்தம். ஆயிரம் வார்த்தைகளால் புரிய வைப்பதை விட இதழால் எழுதும் முத்தத்தினால் அன்பை புரியவைக்கலாம். அந்தளவிற்கு சக்தி படைத்தது முத்தம்.
சாதாரணமாய் முத்தமிடுவதை விட ஈர உதடுகளால் தங்களுக்கு உரியவரை ஆழமாய் முத்தமிடுவதையே ஆண்கள் விரும்புகின்றனராம். அது அன்பின் ஆழத்தை அறியும் முயற்சியாகவே ஆண்கள் நினைக்கின்றனராம். இது குறித்து மிகப்பெரிய ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.
ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளரான ஹெலன் பிஷர், முத்தம் குறித்தும் அதன் தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். ஆண்களின் இந்த முத்தத்தில் காதல் மட்டுமல்ல, கொஞ்சம் ஆராய்ச்சியும் இருக்கிறது என்று தெரியவந்தது.
நம்ம ஆளு வளமையானவளா, செழிப்பானவளவா என்பதை அறியும் ஆராய்ச்சிதானாம் இது. முத்தத்தோடு நிற்காமல் உதடுகளால் துளாவுவதைத்தான் அநேக ஆண்கள் விரும்புகின்றனர் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். முத்தம் எந்த அளவிற்கு ஆழமாக, இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆண்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
வசியப்படுத்தும் முத்தம்
முத்தத்தின் மூலம் தனது காதலி அல்லது மனைவியை வசியப்படுத்தி விட வேண்டும், மற்றவை அப்போதுதான் எளிதாக இருக்கும் என்ற எண்ணமும் கூட ஆண்களின் இந்த ஈர முத்தத்திற்கு ஒரு காரணம் என்கிறார் ஹெலன். ஆழமான முத்தத்திற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது.அது, பெண்ணின் உணர்ச்சிகளைத் தூண்டுவிக்கும், டெஸ்டோஸ்டிரானை தங்களது முத்தத்தின் மூலம் பார்ட்னரிடம் அனுப்பி விடும் உத்தி என்கின்றனர் ஆய்வாளர்கள்.
நம்பிக்கையின் வெளிப்பாடு
ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி முத்தம்தான் எல்லாவற்றுக்கும் ஆரம்பம். அதை நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் கருதுகிறார்கள் என்று அமெரிக்காவின் ஈஸ்டன் நகரில் உள்ள லபாயெட் கல்லூரியின் ஆய்வாளரான வென்டி ஹில் என்பவர் கூறியுள்ளார்.
எந்த அளவுக்கு முத்தம் ஆழமாகவும், தீவிரமாகவும் இருக்கிறதோ அதை வைத்து தங்களது பார்ட்னரின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ள முடியும் என்பது ஆண் மற்றும் பெண்களின் நம்பிக்கை. ஒரு உறவு சிறப்பாக அமையும் போது அது அருமையான பழக்கமாக மாறுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இனிமேல் ‘என்ன’ முத்தம் இந்த நேரம் என்று வகை பார்த்து கவி பாட வேண்டுமோஸ!
ஆண்கள் விரும்புவது இரவையா, காலை நேர உறவையா
காலையில் எழும்போது வெளியில் சூரியனின் வருகை, ஜன்னலை திறக்கும் போது நம்மை வருடும் இதமான காற்று, ஜன்னல் வழியாக ஊடுறுவி வரும் மென்மையான வெளிச்சம், உங்கள் துணை படுக்கை அறையில் பரவசமூட்டும் நிலையில் கண்களை மூடி, இதழ்களை லேசாக திறந்து கலைந்து போயிருக்கும் உடைகள் அந்த கோலம், அதற்குப் பின்னால் மறைந்திருக்கும் அழகு, யாராக இருந்தாலும் சத்தமின்றி ரசிக்க வைக்கும்.
இப்படிப்பட்ட அழகைப் பார்க்கும் பெரும்பாலானோருக்கு ஆழமாக அவர்களை ரசிக்கத் தூண்டும். அதில் பலருக்கும் தோன்றும் உணர்வு -இப்போது உறவு வைத்துக் கொண்டால் என்ன என்பதுதான். ஆண்களில் பெரும்பாலானோருக்கும் காலை நேர செக்ஸ் உணர்வு எழுவது சகஜம். ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு காலை உறவில் நாட்டம் ஏற்படுவதில்லை.
செக்ஸ் விஷயத்தில், ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி உறவு கொள்வது என்பதில் தனித் தனிகருத்துக்கள் இருக்கின்றன. பெரும்பாலான பெண்களைப் பொறுத்தவரை இரவு நேரம்தான் உறவுக்கு உகந்ததாக கருதுகிறார்கள் -. ஆண்களோ இரவையும் விரும்புகிறார்கள், காலை நேர உறவையும் விரும்புகிறார்கள்.
ஆண்களைப் பொறுத்தவரை செக்ஸ் என்பது உணர்வுப்பூர்வமானது என்பதை விட உடல் ரீதியான ஒரு தேவையாகவே பெரும்பாலும் உள்ளது. எப்போதெல்லாம் ஆண்களின் உடலும், மனமும் நிதானமாக, ரிலாக்ஸ்டாக இருக்கிறதோ அப்போதெல்லாம் செக்ஸ் உணர்வுகள் தூண்டப்படுகிறது. அதிலும் துணை வெகு அருகே இருக்கும்போது செக்ஸ் உணர்வுகள் வேகமாகவே தூண்டப்படும். இதுதான் காலையில் எழுந்திருத்ததும் அவர்களுக்குப் செக்ஸ் உணர்வு தோன்ற முக்கியக் காரணம்.
ஆனால், பெண்களைப் பொறுத்தவரை, செக்ஸ் என்பது உணர்வுப்பூர்வமாகவே தூண்டப்படுகிறது. தனது துணையைப் பார்த்ததும் பெண்கள் செக்ஸ் ரீதியாக தூண்டப்படுவதில்லை. மாறாக (துணை வருடும்போதும், கூந்தலில் விளையாடும் போதும், கட்டி தழுவதன் மூலம்,) உணர்வுகள் தூண்டப்பட்டால் மட்டுமே அவர்கள் சாப்பிடத் தயாராவார்கள். இதுதான் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே உள்ள ஒரு வித்தியாசம்.
சரி, இரவில் மட்டும் பெண்கள் உறவுக்கு விரும்புவதும், காலையில் விரும்பாததற்கும் என்ன காரணம்
இந்தியாவைப் பொறுத்தவரை, தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலை பார்க்கிறார்கள், பிசியாக இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், ஆண்களை விட பெண்களுக்குத்தான் இன்று சுமைகள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. குடும்பத்தைக் கவனிப்பது, வேலைகளைச் செய்வது, குழந்தைப் பராமரிப்பு என ஏகப்பட்ட பணிகளை அவர்களது மென்மையான தோள்களில் சுமத்தி விட்டது சமுதாயம்.
எனவே பெண்களுக்கு வழக்கத்தை விட வேலைப்பளு, மன ரீதியான டென்ஷன் அதிகமாகி விட்டது. எப்போதும் ஏதாவது ஒரு வேலை குறித்த சிந்தனையில் பெண்களின் மனம் உழன்று கொண்டிருக்கிறது. இதனால் பிரஷர் அதிகமாகவே உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இரவு உறவுக்கே அவர்கள் பெரும் மெனக்கெட வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் காலையில் உறவு கொள்வது என்பதை அவர்கள் கிட்டத்தட்ட வெறுக்கவே செய்கிறார்கள்.
இன்னொரு விஷயம், ஆண்களைப் பொறுத்தவரை காலையில் உறவு கொண்டு மனதையும், உடலையும் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறார்கள். இப்படிச் செய்வதன் மூலம் பகல் முழுவதும் தாங்கள் சந்திக்கப் போகும் வேலைகளையும், சவால்களையும் சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை.
ஆண்களை பொருத்த வரை வேலை என்பது காலையில் எழுந்திருத்து, குளித்து, சாப்பிட்டு விட்டு அலுவலகம் செல்வது, பகல் நேரத்தை வேலையில் கழிப்பது, மாலையில் மீண்டும் திரும்பி விடுவது என்ற அளவில்தான் அவர்களது வட்டம் உள்ளது. பெரிய பொறுப்பு என்று எதையும் அவர்கள் சுமப்பதில்லை. எனவே நினைக்கும்போது உறவு வைத்துக் கொள்வதில் என்ன தப்பு என்று அவர்கள் கேட்கக் கூடும்.
ஆனால் பெண்கள் அப்படி நினைப்பதில்லை. பகல் நேர சவால்களையும், வேலைகளையும் எப்போதும் போலவே அவர்கள் எதிர்கொள்ள நினைக்கிறார்கள். இதை சரியாகச் செய்ய செக்ஸ் தேவை என்று அவர்கள் நினைப்பதில்லை. சவால்கள் எப்போதுமே ஒன்றுதான் அதை எதிர்கொள்ள மனரீதியான, புத்திரீதியான பலம்தான் அவசியம், செக்ஸ் என்ற மருந்து தேவையில்லை என்பது அவர்களது சிந்தனை.
இன்றைய சமுதாயத்தில் மனைவியருக்கு உதவும் கணவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். கர்ச்சீப்பை எடுத்துக் கொடுக்கக் கூட மனைவியைத் தேடுவோர் நிறையப் பேர் உண்டு. இப்படிப்பட்ட பிசியான ஷெட்யூலில் காலையில் எங்கே போய் உறவு கொள்வது. இதுதான் பெண்கள் காலை நேர விளையாட்டை விரும்பாததற்கு முக்கியக் காரணம்.
இருப்பினும் காலை நேர செக்ஸ் நல்ல ஐடியாதான் என்கிறார்கள் மன நல மருத்துவர்கள். நல்லதொரு இரவுத் தூக்கத்தை மேற்கொள்பவர்களுக்கு காலையில் உடலும், மனமும் பிரஷ்ஷாக இருக்கும். உடலில் வளர்ச்சி ஹார்மோன்கள் தூண்டப்படும். உடலும் நல்ல வலுவுடன் இருக்கும். இதனால் காலை நேரத்தில் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது அது நிச்சயம் சிறப்பாகவே இருக்கும். அதேசமயம், பெண்களும் நல்ல மூடில் இருக்கும்போது மட்டுமே ஆண்கள் காலை நேர உறவுக்கு முயற்சிக்கலாம். மாறாக வற்புறுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்கிறார்கள்.
எந்த நேரமாக இருந்தால் என்ன, உறவுக்கு மிக மிக முக்கியம் மென்மையான அணுகுமுறைதான். காலையாக இருந்தாலும் சரி, இரவாக இருந்தாலும் சரி அந்த உறவை, அன்புப் பரிமாற்றமாக, அணுசரணையான நிகழ்வாக, காதலுடன் கூடியதாக மாற்றிக் கொள்வதே சாலச் சிறந்தது, காலத்திற்கும் நிலைத்திருக்கக் கூடிய உறவுக்கு வழிவகுக்கக் கூடியது என்பதை இருவருமே மறக்கக் கூடாது.
காலையில் எழுந்ததும் கண்களில் ஒரு முத்தம், நெற்றிப் பொட்டில் ஒரு சின்ன இச், காது மடல்களில் உதடுகளால் ஒரு வருடல், உதடுகளில் தென்றல் பூவைத் தீண்டுவது போல வலிக்காமல் ஒரு முத்தமிட்டு, குட்மார்னிங் சொல்லி உங்களது மனைவியை எழுப்பிப் பாருங்கள், செக்ஸ் உறவை விட அது ஆழமாக அவரது மனதைத் தொடும்.
உடல்களின் உறவை விட உள்ளங்களின் நெருங்கிய உறவுதான் இல்லறத்தில் மிக மிக முக்கியமானது, இல்லையாஸ
அழகாய் இருந்தா மட்டும் போதாதுஸ புத்திசாலித்தனம் அவசியம்!
பெண்களுக்கு பிடித்த அம்சங்கள் இன்னதுதான் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. முக்கியமாக ஆண்களிடம் எந்த அம்சம் பிடிக்கும். எதுமாதிரி பெண்கள் எதிர்பார்ப்பார்கள் என்று எவராலும் எளிதில் தெரிந்து கொள்ள முடியாது. ஆண்களின் எந்த அம்சம் கவர்ச்சிகரமானதாக இருக்கும் என்று பெண்களைக் கேட்டால் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக பதிலளிப்பார்கள். எதுமாதிரியான அம்சங்கள் பெண்களை கவர்கின்றன என்று சராசரியாக பெண்களுக்கு பிடித்த அம்சங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ஆண்களின் கவர்ச்சி என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன.
நிறம் ஒரு பொருட்டல்ல
ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என பெரும்பாலான பெண்கள் எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து. அதனால்தான் அநேகம் பெண்கள் கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு என்று பாட ஆரம்பித்துள்ளனர். எனவே கலராய் இருந்தால் மட்டுமே பெண்களை கவர்ந்து விடலாம் என்று நினைத்திருக்கும் ஆண்களே கவனம் தேவை.
பொருத்தமான ஆடை
பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் அதே மாதிரி அம்சம் ஆணிடமும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். பேண்ட்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர்ட் போடாமல், தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது, போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை. இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான, நல்ல கலர் சென்ஸுடன், ஸ்மார்ட்டாக உடை அணிந்தால் பெண்களின் மனதில் சீக்கிரமாக இடம் பிடித்து விடலாம்.
கண்களைப் பார்க்கும் ஆண்கள்
முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை தேவையில்லாமல் கேட்க கூடாது. அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது அவளது கண்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். முகத்தைப் பார்த்துப் பேசும் ஆண்களையே அநேக பெண்கள் விரும்புகின்றனராம்.
நம்பிக்கை, நேர்மை
எடுத்தவுடனே பொய் சொல்லும் ஆண்களை எந்த பெண்ணுக்கும் பிடிக்காதாம். நேர்மையுடனும், நம்பிக்கையூட்டும் வகையிலும் பேசும் ஆண்களையே அதிகம் விரும்புகின்றனர்.
நகைச்சுவை உணர்வு
உர் என்ற முகத்துடன். நான் இப்படித்தான் என்று இறுக்கம் காட்டும் ஆண்களை எந்த பெண்ணும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. நகைச்சுவை உணர்வும், அறிவுப்பூர்வமான பேச்சும் உள்ள ஆண்களையே பெண்கள் விரும்புகின்றனர்.
ஆண்மைக்கு மீசை அழகு
ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்களின் மீசைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மீசை ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து. மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ தாடி பிடிப்பதில்லை. காரணம் நம்மூர் ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக பராமரிக்கத் தெரிவதில்லை என்பதுதான்.
நட்பாய் இருங்க காதல் கனியும்
எந்த பெண்ணுமே நட்பு ரீதியான பழக்கத்தையே விரும்புகின்றனராம். ஏனெனில் எந்த ஒரு பிரச்சினை என்றாலும் நட்பு என்றால் எளிதில் பகிர்ந்து கொள்ளலாம் என்பது அவர்களின் கருத்து. எனவே பெண்களிடம் முதலில் நல்ல நட்பை ஏற்படுத்திக்கொண்டால் அவர்களின் மனதில் உங்கள் மீது தானாய் காதல் கனியும்
இவை அனைத்தும் பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, இந்த எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.
ஜாதிக்காய் நேச்சுரல் வயகரா
பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயகராவாக பயன்படுத்தப் பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம்.
செயல்திறன் மிக்க வேதிப்பொருள்:
ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் 15 சதவிகிதம் உள்ளது. அல்பா பைனென், பீட்டர் பைனென், அல்பா-டெர்பைனென், பீட்டா – டெர்பைனென், மிர்ட்டிசின், எலின்சின், செப்ரோல். ஜாதிக்காய் வெண்ணெயில் புட்டிரின் மற்றும் மிர்ஸ்டைன், ஆகிய எண்ணெய் காணப்படுகிறது. ஜாதிபத்ரியிலும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன. இவை ஜாதிக்காயில் காணப்படும் அதே எண்ணெய் வகைகள் என்றாலும் இவற்றில் மிர்ட்டிசின் அதிக அடர்த்தியாக உள்ளது.
உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்:
ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
தாம்பத்தியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் உபயோகித்தாலே போதும்.