நான் என்ன செக்ஸ் மெஷினா?
க்ஸில் பிரச்சினை வரலாம், ஆனால் செக்ஸே பிரச்சினையாக மாறினால்ஸ நினைக்கவே பயமாக இருக்கிறதல்லவாஸ ஆனால் நிதர்சனம் அதுவாகத்தான் இருக்கிறது. நிறையப் பேருக்கு குறி்ப்பாக பெண்களுக்கு செக்ஸே பெரும் பிரச்சினையாக மாறி மனதையும் உடலையும் வாட்டி வதைத்து வருவதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். அதிலும், அதீதமான செக்ஸ் உணர்வுகள் பொங்கிப் பிரவகிக்கும் பெண்களுக்கு ஏற்படும் செக்ஸ் பிரச்சினைகளை சொல்லில் அடக்க முடியாது. எப்படி தணிப்பது, தவிப்பை எப்படித் தவிர்ப்பது, எதை ஊற்றி காமத்தீயை தணிப்பது என்பதில் அவர்கள் பெரிதும் தடுமாறிப் போய் விடுகிறார்கள், பல நேரங்களில் தடம் மாறியும் போய் விடுகிறார்கள். ஆனால் பல பெண்களுக்கு செக்ஸ் மீது பெரும் விரக்தி ஏற்பட்டு விடுகிறது. நாட்டம் குறைந்து போய் விடுகிறது. விருப்பம் இல்லாமல் கடனுக்கு கணவரிடம் படுக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையைத் தவிர்த்து, அதை சரி செய்து எப்படி தொடர்ந்து உறவில் ஈடுபடுவது என்பது குறித்த பார்வை இதுஸ விருப்பமின்மை – எந்தப் பெண்ணுக்குமே செக்ஸ் மீது ஆர்வம் இல்லாமல் போகவே போகாது. நிச்சயம் இருக்கத்தான் செய்யும், ஆனால் ஆண்களைப் போல வெளியில் காட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள். உள்ளுக்குள்ளேயே வைத்திருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை நாம்தான் அடையாளம் கண்டு அனுசரணையுடன் அணுக வேண்டும்.இரவு விளையாட்டுக்கு பகலிலிருந்தே இவர்களைத் தயார்படுத்த வேண்டும். சின்னச் சின்ன செக்ஸ் விளையாட்டுக்கள், முத்தம், முன் விளையாட்டுக்கள் என பகலிலிலிருந்தே ரொமான்ஸைத் தொடங்கினால் இரவில் இவர்கள் சிறப்பான முறையில் தயராகி விடுவார்களாம். அழகா இல்லையே – சில பெண்களுக்கு தாங்கள் அழகாக இல்லை, உடல் அழகு சரியில்லை என்ற விரக்தி இருக்கலாம். இவர்களுக்கும் கூட செக்ஸில் ஆர்வம் குறைவாக இருக்குமாம். ஆனால் இப்படிப்பட்ட பெண்கள் மீது அவர்களின் ஆண் துணைகள் அதீத ஆர்வத்தையும், அன்பையும் பொழிந்தால் நிச்சயம் இவர்களுக்கும் செக்ஸ் ஆர்வம் சிறப்பாக தூண்டப்படுமாம். உன்னாலும் என்னை ஆள முடியும், நீயும் செக்ஸியாகத்தான் இருக்கிறாய் என்று அவர்களுக்கு தைரியம் சொல்லி ஊக்கப்படுத்தினாலே போதும் அவர்கள் நிச்சயம் செக்ஸில் சிறந்து விளங்குவார்கள் என்கிறார்கள் டாக்டர்கள். ஆர்கஸத்தில் ஆர்வமின்மை – ஆண்களுக்குத்தான் இந்த எழுச்சி, உச்சம், கிளைமேக்ஸ் எல்லாம் கவலை தரும் விஷயம். பெண்களைப் பொறுத்தவரை வெறும் முன் விளையாட்டுடன் நிறுத்தினால் கூட திருப்திப்பட்டுக் கொள்வார்கள். பெரும்பாலான பெண்கள் படுக்கையில் பொய்யான ஆர்கஸத்தைத்தான் வெளிப்படுத்துகிறார்கள் என்று கூறுகிறது ஒரு ஆய்வு. இப்படிப்பட்ட நிலையில் ஆண்கள் மிகவும் பொறுமையாக, நேர்த்தியாக பெண்களைக் கையாண்டால் நிச்சயம் அவர்கள் உரிய நேரத்தில் ஆர்கஸத்தை எட்டுவது நிச்சயம். நான் என்ன செக்ஸ் மெஷினா – சில ஆண்கள் எப்போது பார்த்தாலும் செக்ஸ் நினைப்பிலேயே இருப்பார்கள். தங்களது துணையை தொடர்ந்து கொண்டே இருப்பார்கள். இது பெண்களுக்கு அலுத்துப் போய் விடும். நான் என்ன செக்ஸ் மெஷினா என்று விரக்திக்குப் போய் செக்ஸையே வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள். இப்படிப்பட்டவர்களிடம் மனித நேயத்துடன் பொறுப்புடன், பொறுமையாக நடந்து கொண்டு மனதைக் காயப்படுத்தாமல் மனதையும், காமத்தையும் வெல்ல முயற்சிக்க வேண்டும். ரொம்ப வலிக்குதே – இது பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சினைதான். உறுப்பு வறட்சி, இறுக்கம் காரணமாக உறவின்போது வலி ஏற்படுவது சகஜம்தான். இதனாலும் பலருக்கு செக்ஸ் பிடிக்காமல் போய் விடுகிறதாம். இதுபோன்ற நேரங்களில் உரிய உபாயங்களைக் கையாள வேண்டும். மேலும் முரட்டுத்தனமான உறவை தவிர்க்க வேண்டும். பூவைப் போல பெண்களின் உறுப்பை பாவித்து அதை அணுகி இன்பத்திற்குள் நுழைய வேண்டும். இப்படி பெண்கள் சந்திக்கும் செக்ஸ் பிரச்சினைகள் நிறையவே உள்ளன. ஆனால் பிரச்சினை என்று வந்தால் கூடவே தீர்வும் இருக்கத்தானே செய்யும். அதை நாம் சரியாக உணர்ந்து, புரிந்து தெளிந்து அணுகினால் எல்லாம் சரியாகி, இன்பமும் கைகூடி வரும்.
செக்ஸ் உறவின் போது பெண்கள் எப்போது பெயிலாகிறார்கள்?
தாம்பத்ய உறவின் போது பெண்களுக்கு சில சிக்கல்கள் எழுகின்றன. உச்சக்கட்டம் அடைவதில் ஏற்படும் சிக்கல் மனரீதியான சிக்கல்களை அளிக்கின்றன. உடல்ரீதியான, மனரீதியாக பிரச்சினைகள் இருந்தாலும் பெண்கள் பெயிலாகிவிடுவார்கள் என்கின்றனர் நிபுணர்கள். எந்த சமயத்தில் பெண்கள் ஜெயிக்காமல் தோற்றுப்போகிறார்கள் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போதோ, அல்லது பாலியல் ரீதியான நோய் தாக்கியுள்ள போதோ அவர்களுக்கு மனரீதியான ஒரு அழுத்தம் ஏற்படுகிறதாம். இதனால் அவர்களுக்கு ஆர்கஸம் ஏற்படுவதில் சிக்கல்கள் எழுகின்றன என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். எனவே கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பான உறவு முறை பற்றி மகப்பேறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
உச்சக்கட்டம் என்பது ஒரு உணர்வு. இது அடிப்படையில், பால் உறுப்புகளின் தூண்டுதலில் தொடங்கி, உடலளவிலான பலவகையான மாற்றங்களையும், மனதளவிலான சில மாற்றங்களையும் உள்ளடக்கிய ஒரு எழுச்சி நிலை. இந்த எழுச்சி நிலைக்கு உடலின் பல்வேறு பாலுறுப்புகளிலிருந்து மூளைக்கு செல்லும் ரசாயன சமிக்ஞைகளும், அதற்கான மூளையின் எதிர்வினையாய் உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் உடலியக்க மாற்றங்களுமே காரணம்!
உலகில் எல்லாருக்குமே, உடலுறவின்போது உச்சக்கட்டத்தை அடைவதுதான் குறிக்கோள். ஆனாலும், உச்சக்கட்டத்தை அடைவது என்பது பலருக்கு கைவராத ஒரு கலையாகத்தான் இருக்கிறது என்கிறது விஞ்ஞானம் இந்த நிலையை அடைதல் என்பது எல்லோராலும் எளிதில் முடியாது. உடல் ரீதியான கோளாறுகள், நோய் பாதிப்புகள் இருந்தாலும் பெண்களால் உச்சக்கட்டத்தை எளிதில் அடைய முடியாது. எனவே செக்ஸாலஜிஸ்ட்களை சந்தித்து ஆலோசனை பெறவும்.
உச்சக்கட்டம் தொடர்பான பிரச்சினை காரணமாக ஒருவர் மருத்துவரை அணுகினாலும், தீர்வுக்கான சிகிச்சை சிக்கலானது. காரணம், உச்சக்கட்டத்தைப் பொருத்தவரை இத்தனை நாட்களில், இத்தனை தரம் உச்சக்கட்டத்தை அடைவதுதான் இயல்பானது என்று சொல்லும் ஒரு திட்டவட்டமான வரையரை கிடையாது! ஆக, மருத்துவர்கள் நோயாளிகளின் வயது, செக்ஸ் அனுபவம் மற்றும் திருப்தி ஆகியவற்றைக் கொண்டே ஒரு தீர்வை காண முயலவேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
பெண்களுக்கு “Female Sexual Arousal Disorder (FSAD) எனப்படும் குறைபாடுகள் இருந்தாலும் பாலுணர்வு தூண்டுதல் ஏற்படுவதில்லை. உறுப்புகளில் வலி, வறட்சி போன்றவை ஏற்படும். இதுபோன்ற காரணங்களினாலும் உடலுறவினால் அவர்களுக்கு திருப்தி ஏற்படாத நிலை ஏற்படுகிறது.
சிறுநீர் தொற்றுப் பிரச்சினையினால் பெண் உறுப்புகளில் ஏற்படும் புண்களும் உடலுறவில் ஆர்வமின்மையை ஏற்படுத்துகிறது. எனவே உடல் உறவில் திருப்தி இன்மையும், உச்சக்கட்டம்ஏற்படுவதில் சிக்கல் உள்ள பெண்கள் சரியான உளவியல் நிபுணர்களையோ, செக்ஸாலஜிஸ்ட்களையோ சந்தித்து ஆலோசனை பெறலாம்.
மனைவிக்கு அன்பு பரிசாய் அடிக்கடி முத்தம் கொடுங்கள்ஸ.
பெண்களின் உணர்வுகள் இதயத்திலிருந்து இயக்கப்படுகிறது. அவர்களுக்கு “காம உணர்வு” வாழ்க்கையில் தனிப்பட்ட விஷயமில்லை. அவர்களின் மனம் இதமாக இருப்பது அவசியம். கணவன் படுக்கையறைக்கு வெளியே எப்படி நடந்து கொள்கிறான் என்பதைப் பொருத்துத்தான் படுக்கையறையின் மகிழ்ச்சியிருக்கும். மனைவியைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, அதிரப் பேசுவது, மோசமாக நடந்துகொள்வது ஆகியவை அவளை பாதிக்கும். அன்பும் நெருக்கமும் இருவருக்கும் இடையில் இருந்தால்தான் உடல் உறவும் இன்பமாக இருக்கும். வேலையிலிருந்து திரும்பும் கணவன், மனைவிக்கு வாங்கிவரும் பரிசுப்பொருட்கள் அவளுக்கு மகிழ்ச்சியைத் தரும். இந்த மகிழ்ச்சி செக்ஸ் உறவை இரட்டிப்பாக்கும்.
பல பெண்கள், “என் கணவர் படுக்கையறையைத் தவிர மற்ற நேரங்களில் முத்தமிடுவதில்லை” என்ற மனக்குறை உள்ளவர்களாக இருக்கிறார்கள். பெண்களுக்கு வெறும் காமத்தை பின்னணியாகக் கொண்ட தொடுதல்களைவிட பரிவான, இதமான தொடுதல், மெல்ல அணைப்பது, கைகளைப் பற்றிக்கொள்வது, முத்தமிடுதல் ஆகியவை மிக முக்கியமானவையாகும். எனவே எப்பொழுதெல்லாம் உங்கள் மனைவி விரும்புகிறாரோ அப்பொழுதெல்லாம் ஒரு முத்தத்தைப் பரிசளியுங்களேன். உங்கள் மீதான காதலும் பாசமும் அதிகரிக்கும்.
உங்களின் உறவு இனிமையாக மாற, மனம் திறந்து பேசுங்கள். ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துங்கள். இதமான, உணர்வுப் பூர்வமான விஷயங்கள் மகிழ்ச்சியைப் பல மடங்காக்கும். உங்கள் மனைவி, உங்களைத் தழுவி இதமாக, கழுத்து, தலையை வருடிவிடுவது உங்களின் இதயத்தை எப்படித் துள்ள வைக்கிறது! அதுபோலத்தான் உங்களின் நெருக்கமும் அவர்களுக்கு மகிழ்ச்சிகரமானது என்பதை மறந்துவிடாதீர்கள்.
ஆண்களைப் பொருத்தவரை செக்ஸ் என்பது சாலையில் செல்லும் தெரிந்த நபரிடம், போகிற போக்கில் ” ஹலோ! எப்படி, வரட்டுமாஸ” என்பது போல இருக்கிறது. பல ஆண்கள் உச்சக்கட்டம் முடிந்தவுடன் துவண்டுபோய் சுருண்டுவிடுகிறார்கள். ஆனால் உறவுக்குப்பின்னும் நெருக்கம் இருக்க வேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பாகும்.
உறவின்போது ஆண்களிடம் “என்டார்பின்” இயக்குநீர் அதிகரிக்கும். இதனால் உணர்ச்சிகளை ஆண்கள் உடனடியாகக் கொட்டித் தீர்த்துவிடுவார்கள். பெண்களிடத்தில் இது மெதுவாக வேலை செய்யும். அதற்கு ஈடுகொடுத்து ஆண்கள் செயல்பட வேண்டும். இந்த இணக்கமான போக்கு பெரிய மாற்றங்களைச் செய்யும். அப்போது உறவில் மகிழ்ச்சி எல்லையற்றதாக மாறும்.
உச்சக்கட்ட நிலையைத் தொடவேண்டும் என்ற ரீதியலான உடலுறவு என்பது ஒரு நதியின் அடுத்த கரைக்குச் செல்வதில் கவனம் இருப்பதைப் போன்றது. செல்லும் வழியில் உள்ள ரசிக்கவேண்டிய பல விஷயங்கள் அந்த பரபரப்பில் மறைக்கப்படும். உடலுறவில் ஏற்படும் உச்சக்கட்ட நிலையைவிட, உடல் ரீதியான நெருக்கம், உணர்வுகளின், உணர்ச்சிகளின் நெருக்கம் மற்றும் முன்விளையாட்டுக்களின் மூலமாகப் பெண்கள் உச்சத்தைத்தொடுவார்கள்.
செக்ஸ் உறவில் உச்சக்கட்டம் என்பது ஒரு இன்பமான விஷயம். ஆனால், அது எப்பொழுது ஏற்படும் என்பதை கணிக்க முடியாது. ஒரு ஆய்வுப்படி 60 சதவீதம் பெண்கள் மட்டும்தான் உச்சக்கட்ட நிலையைத் தொட்டுள்ளார்கள். மனைவி உச்சக்கட்ட நிலையை அடைய கணவன் உதவ வேண்டும்.
உறவின் போது சில ஆண்கள் மூர்க்கத்தனமாகச் செயல்படுவார்கள். சிரிப்பதையும், புன்னகை செய்வதையும்கூட மறந்துவிடுவார்கள். இது தவறான செயலாகும். உடலுறவின்போது கலகலப்பாக இருப்பது அவசியம். ஜாலியான மூடில் பழகுவது அதிக மகிழ்ச்சியைத் தரும். மேலும் காதல் வயப்பட்டு, சில சின்னச் சின்ன சில்மிஷங்களைச் செய்ய வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனராம்.
ரொமான்ஸ்க்கு ஏற்ற நேரம் இரவுதான்ஸ இது ஜூலியின் சாய்ஸ்
ஹாலிவுட் ஜாலி தம்பதிகள் ஏஞ்சலினா ஜூலி – பிராட் பிட் தம்பதியர் தங்களின் ரொமான்ஸ்க்கு ஏற்ற இடமாக நீச்சல்குளம், வாட்டர் பால்ஸ் அருகில் உள்ள குளுமையான பிரதேசங்களைத்தான் பயன்படுத்துகின்றனராம். அதேபோல் இரவு நேரத்தில் மட்டுமே தங்களின் ரொமான்ஸ்ஸை வைத்துக்கொள்கின்றனராம்.
உலகம் முழுக்க ரொமான்ஸுக்கு உகந்த நேரம் இரவு என்பது ஹாலிவுட் டாப் ஸ்டார் ஏஞ்செலீனா ஜூலிக்கும் பொருத்தமாகவே உள்ளது. அவரும் கூட காதல் கணவர் பிராட் பிட்டுடன் ஹாப்பியாக செலவழிக்க இரவு நேரங்களையே தேர்ந்தெடுப்பாராம். பகல் நேரங்களில் மூச்!.
காதலுக்கும், காமத்துக்கும் நேரம் காலம் கிடையாது என்பார்கள். அதற்காக நேரம் காலமே தெரியாமல் அதிலேயே மூழ்கியிருப்பதும் தவறு என்றும் கருத்து உண்டு. இது ஹாலிவுட் ஜாலி தம்பதியருக்கும் தெரியும் போலும். அதனால்தான் தங்களுடைய ரொமான்ஸ் நேரத்தை படு கவனமாக தேர்ந்தெடுத்து அதை பக்காவாக பயன்படுத்துகின்றனராம். இதனால்தான் அவர்களுடைய காதல் வாழ்க்கை படு இனிமையாக இருக்கிறதாம்.
எனக்கு இரவு நேரங்கள்தான் மிகவும் பிடிக்கும். பி்ட்டுக்கும் அப்படித்தான். எங்களது வீட்டுக்குள் நுழையும் அளவுக்கு இன்னும் பாப்பராஸிகளின் தொல்லை இல்லை. எனவே அந்த தனிமையும், அதனுடன் இணையும் இனிய மெல்லிசையும், அழகான இருளும், மெல்லிய வெளிச்சமும் எங்களை மீண்டும் காதல் காலத்திற்கு கூட்டிச் சென்று விடும்.அந்த இரவு நேரங்கள்தான் எங்களின் சக்தியாக விளங்குகிறது. இருவரும் மனம் விட்டுப் பேச, சுவையாக உரையாட அது வாய்ப்பு தருகிறது. எங்களது காதல் இன்று வரை நீர்த்துப் போகாமல் இருக்கவும் இதுதான் காரணம்.
எங்களது தனிமையை நாங்கள் தீர்மானித்து விட்டவுடன், முதலில் ஆறு குழந்தைகளையும் முன்கூட்டியே சாப்பாடு கொடுத்து அவர்களது வேலைகளை முடித்து விட்டு, தூங்கச் செய்து விடுவோம். அதில் ஏதாவது ஒன்று வீம்பு செய்யும், வம்பு பண்ணும். இருப்பினும் சாப்பாடு தேவையென்றால் அவர்களே எடுத்து சாப்பிட்டுக் கொள்ளும் அளவுக்கு பழக்கி வைத்திருப்பதால் பெரிய அளவில் பிரச்சினை வந்ததில்லை.பிறகு இருவரும் எங்களது ரொமான்ஸை ஆரம்பிப்போம்.
இன்று கணவன், மனைவியரிடையே நெருக்கம் இல்லாமல் போவதற்கு இப்படிப்பட்ட தனிமைகள் கிடைக்காததே காரணம். அதை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் இதற்காக மெனக்கெடுகிறோம். இனிமையான வாழ்க்கையை தொடருகிறோம்.
படுக்கை அறை மட்டுமே ரொமான்ஸ்க்கு ஏற்ற இடம் என்று பெரும்பாலோனோர் கூறுகின்றனர். ஆனால் சமையலறையும், நீச்சல்குளமும் கூட ரொமான்ஸ்க்கு ஏற்ற இடம்தான் என்கின்றனர். அதேபோல நீச்சல் குளத்தின் அருகில் உள்ள குளுமையும், வாட்டர்பால்ஸ் அருகில் உள்ள இடமும் எங்களின் ரொமான்ஸ்க்கு அற்புதமான இடம். ஏனெனில் அம்மா, அப்பா என்பதைத் தாண்டி இன்னமும் நாங்கள் காதலர்கள்தான். இது போன்ற உணர்வு எல்லோருக்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் கணவன், மனைவியாகவும் நாம் வெற்றிகரமாக செயல்பட முடியும் என்கிறார் ஜூலி.
பிஸியான சூழ்நிலையிலும் தங்களுக்கு என நேரம் ஒதுக்கும் இந்த ஹாலிவுட் தம்பதியரைப் போல எல்லோருமே நேரத்தை ஒதுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். என்கின்றனர் நிபுணர்கள்.
தளர்வா இருக்கே என்ற கவலையா உங்களுக்கு?
பிறப்புறுப்பு இறுக்கம் இன்றி தளர்வாக இருந்தாலோ, அரிப்பு போன்ற நோய் தொற்றுகள் இருந்தாலோ பெண்களுக்கு தாம்பத்ய உறவில் ஈடுபாடு இருக்காது. முக்கியமாக குழந்தை பிறந்த பிறகு இறுக்கம் தளர்ந்துவிட்டதாகவும், அதன் விளைவாக உறவில் நெருக்கம் குறைந்து விட்டதாகவும் பல பெண்கள் புலம்புவதுண்டு. இதனால் மனரீதியாக சிக்கல்களுக்கும் ஆளாவதுண்டு. இந்த தளர்வினை எளிதாக சரி செய்து விடலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
கெகெல் எனப்படும் பிரத்யேகப் பயிற்சியின் மூலம் அந்த இடத்தை மீண்டும் டைட்டாக்கலாம். சிறுநீர் கழிக்கிற போது அதைப் பாதியிலேயே அடக்கிக் கொள்கிற மாதிரியான பயிற்சிதான் இது. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சரியாகச் செய்கிற பட்சத்தில் கட்டாயம் பலனளிக்குமாம்.
ஒவ்வொரு பெண்ணின் பிறப்புறுப்பிலும் சுமார் பதினைந்து விதமான பாக்டீரியா கிருமிகள் குடியிருக்குமாம். அத்தனையும் நல்ல பாக்டீரியா. அதனால் கெட்ட கிருமிகள் அத்தனை லேசில் அங்கே நுழைய முடியாதாம். உடலின் மற்ற பகுதிகளைப் போலவே பிறப்புறுப்புக்கும் காற்றோட்டம் அவசியம். அப்போதுதான் அந்தப் பகுதி சுவாசிக்க முடியுமாம். அதற்கு இடம் கொடுக்காமல் எப்போதும் இறுக்கமான உள்ளாடை மற்றும் ஜீன்ஸ் அணிகிறவர்களுக்கு அடிக்கடி பிறப்புறுப்புத் தொற்று வர வாய்ப்புண்டாம்.
பல பெண்களையும் தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கும் விஷயம் அந்தரங்க உறுப்பில் உண்டாகும் அரிப்பு. அந்த இடத்தின் வறட்சி, இறுக்கமான உடை போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம். அரிப்பு ஒரு நாளைக் கடந்து தொடர்ந்தாலோ, பிறப்புறுப்பின் உள்ளே அரிப்பிருந்தாலோ, அது ஈஸ்ட் தொற்றாகவோ, பால்வினை நோயின் அறிகுறியாகவோ இருக்கக் கூடும்.
மாதம் ஒரு முறை மார்பக சுய பரிசோதனை வலியுறுத்தப்படுகிற மாதிரியே, பிறப்புறுப்பு சுய பரிசோதனையும் அவசியம். அந்த இடத்தில் காணப்படுகிற சிறிய கொப்புளங்கள், பருக்கள் போன்றவை அலட்சியப்படுத்தப்படலாம். ஆனால் வேறு ஏதேனும் வித்தி யாசங்களை உணர்கிற பட்சத்தில் அது உடனடியாக மருத்துவப் பரி சோதனைக்குட்படுத்தப் பட வேண்டும்.
ஐயாயிரத்தில் ஒரு பெண் குழந்தை வீதம் பிறப்புறுப்பும், கர்ப்பப்பையும் இல்லாமல் பிறப்பதுண்டு. ஆனாலும் செயற்கையாக பிறப்புறுப்பை வைக்கிற அளவுக்கு இன்றைய நவீன மருத்துவத்தில் வசதிகள் பெருகிவிட்டதால் கவலை வேண்டாம். குழந்தை பெற வாய்ப்பில்லாமல் போனாலும், அவர்களது செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படாமலிருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
செக்ஸ்சில் ரசனை மிக அவசியம்!
அதிகப்படியான வேலைப்பளு, சரியாக சாப்பிடவே நேரம் இல்லாத போது செக்ஸ்க்கு எங்கே நேரம் ஒதுக்குவது என்று சலித்துக்கொள்கின்றனர் இன்றைய இளம் தம்பதியினர். தற்போதிருக்கும் காலக்கட்டத்தில் திருமணத்திற்குப் பின்பு ஏற்படும் சில பல பிரச்சினைகளினால் குடும்ப உறவுகள் தவிடுபொடியாகிக் கொண்டிருக்கின்றன. காதல் வங்கித் துவக்க வேண்டிய அளவிற்கு தம்பதியரிடையே காதலுக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்ச வேண்டிய நிலை வந்துவிட்டது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் தாம்பத்திய உறவில் ஏற்பட்டுள்ள சரிவு நிலைதான் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
எந்த பிரச்சினையாக இருந்தாலும் மருத்துவரை அணுகும் தம்பதிகள், தாம்பத்ய உறவில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மருத்துவரை அணுக பெரிதும் தயங்குகின்றனர். இதைப் போய் எப்படி யாரிடம் கேட்பது என்ற கூச்ச உணர்வுதான் அவர்களை யோசிக்க வைக்கிறது. எனவே தாம்பத்ய உறவில் தடுமாறும் தம்பதியருக்கு சில விளக்கங்களை அளித்துள்ளனர் உளவியல் நிபுணர்கள். படியுங்களேன்.
சலிப்பா இருக்கா?
எப்போதும் ஒரே முறையிலான உடல் உறவு கூட சலிப்பை ஏற்படுத்தலாம். எனவே உடல் உறவு கொள்ளும் முறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
அதாவது சில விஷயங்களை மாற்றிப் பாருங்கள் என்பதே உளவியல் நிபுணர்களின் முதல் ஆலோசனை. சில தம்பதிகள் எப்போதும் இரவில் மட்டுமே உறவு கொள்வார்கள். தூக்க களைப்பிலும், உடலுக்கு உறக்கம் தேவைப்படும் நேரத்திலும் உறவு கொள்வதால் அதில் ஒரு சலிப்பு ஏற்படலாம். சில நேரங்களில் காலையில் குளித்து முடித்து உடலும், மனமும் உற்சாகமாக இருக்கும் போது உறவு கொள்வதில் நிச்சயம் புதுவிதமான மாற்றத்தை உணர முடியும். அது போலவே, இருட்டில் உடல் உறவு கொள்ளும் தம்பதிகள், சிறிது வெளிச்சத்திலும், வெளிச்சத்தில் உடல் உறவு கொள்ளும் தம்பதிகள் லேசான இருட்டிலும் உடல் உறவு கொள்ளலாம்.
நேரம் ஒதுக்குங்கள்
மூன்று நிமிடத்தில் முடிந்து விடும் உறவல்ல செக்ஸ். அதற்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். தம்பதியர் இருவருமே தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக நடந்து கொள்வது நல்லது. உடல் உறவு கொள்ள இந்த நாட்கள் மட்டுமே என்று பட்டியல் போட்டுக் கொள்ளாமல் தம்பதிகளின் ஆசைக்கேற்ப உடல் உறவு வைத்துக் கொள்வது நல்ல தம்பத்தியத்திற்கு வழிகோலும் என்கின்றனர் நிபுணர்கள்.
உடலை ஆராதியுங்கள்
செக்ஸ் உறவின் போது இயந்திரத்தனமாக இயங்காமல் துணையின் உடலை ஆராதிக்க வேண்டுமாம். அப்பொழுதுதான் ஒருவருக்கொருவர் ஆசையும், ஆர்வமும் அதிகரிக்குமாம். அதேபோல் செக்ஸ் பற்றிய சந்தேகங்களை ஒருவருக்கொருவர் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டுமாம். தங்களுக்கு தெரிந்த சில டிப்ஸ் மற்றும் டிரிக்ஸ்களை சொல்லித்தரவேண்டுமாம். முக்கியமாக செக்ஸ் உறவின் போது ஒருவருக்கொருவர் தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தயாராக இருந்தால் மட்டுமே உடலுறவில் ஈடுபடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
ஒருவர் உடல் பாதிக்கப்பட்டு இருக்கும் போதோ, அதிக களைப்படைந்திருந்தாலோ அந்த சமயத்தில் உடல் உறவிற்கு அழைப்பதை துணைவர் தவிர்க்க வேண்டும். அந்த சமயத்தில் உங்களது ஆதரவும், அன்பும் அவருக்குத் தேவை என்பதை நினைவில் கொள்ளவும்.
ரசனையோடு ஈடுபடுங்கள்
தாம்பத்யத்தில் வெறுப்படைந்த நிலையில் இருப்பவர்கள் தம்பதிகள் ஒருவருக்கொருவர் பேசி, ஒரு சில நாட்கள், வாரங்கள், மாதம் என ஒரு காலக் கட்டத்தை நிர்ணயித்துக் கொண்டு அதுவரை தாம்பத்யம் வைத்துக் கொள்வதில்லை என்று முடிவெடுங்கள். ஆனால், இந்த சமயத்தில் எல்லாம் தனித்தனியாக இருந்து விடாமல் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டிருக்கலாம். இதனால் தாம்பத்யத்தின் மீது ஒரு ஏக்கம் பிறக்கும். ஒரு வேளை இந்த முயற்சியினால், காலக் கெடு வரை காத்திருக்க முடியாமல் கூட சில தம்பதிகள் தங்களது தாம்பத்யத்தை அனுபவிக்கும் நிலை ஏற்படலாம்.
எனவே எதையும் முழு ரசனையோடும், ஈடுபாட்டோடும் அன்போடும் செயல்படுங்கள். உங்கள் தாம்பத்ய வாழ்க்கையும் சந்தோசம் தழைத்தோங்கும் என்கின்றனர் நிபுணர்கள். துணை வாழ்க்கைத் துணையாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.