காதலுடன் காதல் செய்வோம்!
24 Jan,2014
காதலுடன் காதல் செய்வோம்!
புதுவருடம் பிறந்த உடனே பெரும்பாலோனோர் முக்கியமான சில தீர்மானங்களை எடுத்துக்கொள்வார்கள். பொய் சொல்லக்கூடாது, யாரையும் திட்டக்கூடாது இப்படி இன்னபிற தீர்மானங்களை எடுப்பார்கள். மற்ற விசயத்தில் எடுக்கும் தீர்மானங்கள் இருக்கட்டும் தம்பதியரிடையே காதலை அதிகரிக்க சில முக்கியமான தீர்மானங்களை எடுக்கவேண்டியது அவசியம். அதுதான் தாம்பத்ய வாழ்க்கையில் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும். இந்த தீர்மானங்கள் இருவரிடையே பிணைப்பையும், காதலையும் அதிகரிக்கும் என்கின்றனர் அனுபவசாலிகள்.
2012ம் ஆண்டு கடந்து விட்டது. புத்தாண்டு பிறந்து விட்டது. இந்த புது வருடத்தில் நம்முடைய வாழ்க்கையும் புதிதாக தொடங்கவேண்டும். நேற்றுவரை நமக்கு பிடித்த விசயங்களை செய்து கொண்டிருப்போம். இனிமேலாவது நம் துணைக்கு பிடித்த விசயங்களை செய்வோம் என்று தீர்மானித்துக்கொள்ளவேண்டும். நீங்கள் பார்த்து பார்த்து செய்யும் ஒவ்வொரு விசயமும் உங்கள் துணைக்கு உங்கள் மீதான காதலை அதிகரிக்கும்.
புத்தம் புது நேசம்
படுக்கை அறையில் இதுநாள் வரை செய்து வந்த விசயங்களை தூக்கி தூரப்போடுங்கள். ஏனெனில் அது போரடித்துப் போயிருக்கும். இந்த புத்தாண்டில் புதிதாய் தொடங்குங்கள். இது உங்கள் துணைக்கு உற்சாகத்தை அதிகரிப்பதோடு புதியதாய் உணர்வார்.
ஸ்பரிசத்தினால் உணர்த்துங்கள்
ஆயிரம் வார்த்தைகளில் கூறுவதை ஒரு ஸ்பரிசத்தினாலோ, முத்தத்தினாலோ உணர்த்தி விடலாம். உடல் ரீதியான தொடுகை உணர்வையும், நெருக்கத்தையும் அதிகரிக்கும். தம்பதியர் ஒருவருக்கொருவர் அடிக்கடி தொட்டு விளையாடுவதன் மூலம் நெருக்கம் கூடும் என்கின்றனர் அனுபவசாலிகள்.
பொம்மைகளை பரிசளியுங்கள்
கணவன் மனைவி இடையே அந்தரங்கமான பரிசுப் பொருட்களை பரிசளிக்கலாம். இந்தப் புத்தாண்டில் செக்ஸ் பொம்மைகளை வாங்கி சர்ப்ரைஸ் ஆக பரிசளிக்கலாம்.
ரொமான்ஸ் பேச்சுக்கள்
வீட்டிலோ, வெளியிடங்களிலோ சில தம்பதியர் இயந்திரத்தனமாக நடந்து கொள்வார்கள். பேச்சுக்கூட கடமைக்காகத்தான் இருக்கும். படுக்கை அறையில் உடல்களின் சங்கமம் கூட ஏதோ கடனே என்று இருக்கும். அந்தமாதிரியான தம்பதியர் இந்த புத்தாண்டு முதலாவது மாறுங்கள். படுக்கை அறையில் கிளுகிளுப்பாய் பேசுங்கள். அதுவே சுவாரஸ்யத்தை அதிகரிக்கும்.
பழசுக்கு குட்பை
உறவின் போது ஒரே மாதிரியான பொசிசன், ஒரே மாதிரியான செயல்பாடு என இருக்காதீர்கள். புத்தம் புதிய பொசிசன், புதிய இடங்கள் என புதிதாய் அனுபவியுங்கள். 2012 ஆண்டோடு பழசுக்கு மூட்டை கட்டுங்கள். 2013ம் ஆண்டில் புதிதாய் உணருங்கள். உங்கள் தாம்பத்யத்தில் சுவாரஸ்யம் அதிகரிக்கும்.