ஆண்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாவிட்டால் சந்திக்கக்கூடும் பிரச்சனைகள்!
வெட்கம் என்பது பெண்களுக்கு மட்டும் வருவதில்லை, ஆண்களுக்கும் தான். அதிலும் இத்தகயை வெட்கமானது பெண்களை விட, ஆண்களுக்கு அதிகம் இருந்தால், அது பிரச்சனைகளுக்குத் தான் வழிவகுக்கும். ஆம், ஆண் எப்போதும் கம்பீரமாகவும், தைரியமாகவும், தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும். அதை விட்டு, எப்போதும் வெட்கப்பட்டு வெளிப்படுத்தாமல் இருந்தால், அது கருத்து வேறுபாட்டினை ஏற்படுத்தி, பிரிவுக்கு வழிவகுக்கும். ஆகவே ஆண்கள் எப்போதும் மனதில் இருக்கும் உணர்ச்சிகளை மறைக்காமல், சந்தோஷமான வாழ்க்கை அமைய வேண்டுமெனில், எப்போதும் தெளிவாக பேசி, உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும். இப்போது ஆண்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இருந்தால், உறவுகளுக்குள் என்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று பார்ப்போம்.
* மனதில் இருப்பதை வெளிப்படுத்தாமல் இருந்தால், கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, அடிக்கடி சண்டைகள் வரும். பெரும்பாலான பெண்கள், தனக்கு வருபவர் வெளிப்படையான பேச்சு மற்றும் சந்தோஷப்படும் படியாக நடந்து கொள்ள வேண்டுமென்றும் ஆசைப்படுவார்கள். இருப்பினும் துணையாக வந்துவிட்டப் பின்னர், எவ்வளவு தான் புரிந்து கொண்டாலும், ஒருசில நேரங்களில் பேசாவிட்டால், கோபமானது அதிகரித்து, தேவையில்லாத சண்டைகள் ஏற்படக்கூடும். இதனால் ஆரோக்கியமான உறவுகளுக்குள் விரிசல் ஏற்படும்.
* ஆண்கள் வெட்கப்பட்டால், பெண்களுக்கு ஆண்களின் மீது ஆர்வக்குறைவானது ஏற்படும். ஆர்வக்குறைவு என்பது எங்கேனும் வெளியே செல்லும் போது துணை அழகான ஆடைகளை அணிந்து கொண்டு வந்தால், அப்போது அவர்களிடம் " இந்த ஆடை உனக்கு அழகாக உள்ளது" என்பது போன்றவற்றை சொல்ல வேண்டும். அதை விட்டு ரெடி ஆகி வந்துவிட்டால், வாயை மூடிக் கொண்டு இருந்தால், பிறகு எப்போது வெளியே அழைத்தாலும், வருவதற்கு ஆர்வம் இல்லாதவாறே பெண்கள் நடந்து கொள்வார்கள். *
குறிப்பாக உணர்ச்சிகளை ஆண்கள் வெளிப்படுத்தாவிட்டால், காதலிக்கு விரைவில் வேறு காதலன் கிடைத்துவிடுவான். பின் நாமம் தான் போட்டுக் கொண்டு செல்ல வேண்டும். ஆகவே இப்போதிருந்தாவது, உங்கள் காதலியிடம் வெளிப்படையாக பேச ஆரம்பியுங்கள். இல்லாவிட்டால், ஒரு நல்ல அழகான துணையை இழக்க நேரிடும்.
* பொதுவாக காதலியை மயக்குவதற்கு ஒரு சிறந்த வழியென்றால் அது பேச்சின் மூலம் தான். அதிலும் மனதை வருடும் வகையில் பேசினால், பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவ்வாறு வசீகரத்துடன் பேசாவிட்டால், எதற்காக காதல் செய்ய வேண்டும். எனவே எப்போதும் வெளிப்படையாக பேசி, காதலியை மயக்குங்கள். இவையே வெளிப்படையாக பேசாமல், வெட்கப்பட்டுக் கொண்டு இருந்தால், சந்திக்கக்கூடிய பிரச்சனைகள். இத்தகைய பிரச்சனையினால் ஆண்களுக்கு மட்டும் கஷ்டம் ஏற்படுவதோடு, பெண்களுக்கும் பெரும் அவஸ்தையாக உள்ளது. எனவே முதலில் காதலிக்கும் பெண்ணின் எதிர்பார்ப்பு என்னவென்று நன்கு தெரிந்து கொள்ள முயற்சித்து, அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ளுங்கள்.
செக்ஸ் பிரச்சினையா? மனரீதியா சரி செய்யலாம்!
செக்ஸ் தொடர்பான பிரச்சினைகள் பெரும்பாலோனோருக்கு மனரீதியான சிக்கல்களினால் ஏற்படுகின்றன. பாலியல் ரீதியான பிரச்சினைகளை தீர்க்க அதற்கென உள்ள சிறப்பு மருத்துவர்களை அணுகலாம் அல்லது உளவியல் நிபுணர்களை சந்தித்தும் ஆலோசனை பெறலாம். மனதில் தன்னம்ப்பிக்கையையும், உடல்ரீதியாக பலத்தையும் பெறுவதன் மூலம் பாலியல் ரீதியான சிக்கல்களை தீர்க்கலாம்.
பால்வினை நோய்கள் உடல் உறவின் மூலம் தான் மிகமுக்கியமாக வருகின்றன. வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் ஆகியவையே இவற்றிற்குக் காரணமாகும். இவ்வகையில் குறைந்தபட்சம் 25 வேறுபட்ட பால்வினை நோய்கள் உள்ளன. இவை எல்லாமே 5 விதமான அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன.
எஸ்டிடி (sexually transmitted infections) என்பது பெரும்பாலான ஆண், பெண் போன்றவர்களுக்கு ஏற்படும் பால்வினை நோயாகும். உடல் உறுப்புகளில் வலி, புண்கள் போன்றவை இதன் அறிகுறியாகும்.
பிறப்புறுப்பில் புண்கள் சாதாரணக் கட்டியாகவோ நீருடன் கூடிய சிறு சிறு கொப்புளங்களாகவோ காணப்படும்.ஒன்றோ பலவோ இருக்கும். இவை வலியுடனோ வலி இல்லாமலோ இருக்கும். இவை ஆண், பெண் இருவருக்கும் வரும்.
ஒருவரின் சிறுநீர் துவாரத்தின் வழி சீழ் வெளிப்படுமானால் அது நிச்சயமாகப் பால்வினை நோயின் அறிகுறியாகும். இது அடிக்கடி சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலுடனோ வலியுடனோ வெளிப்படும். பெண்களுக்குத் துர்நாற்றத்தோடு ஒழுக்கு வெளிப்பட்டு துணிகள் கறைபடியுமானால் அது பால்வினை நோயின் அறிகுறியாகும். ஆண், பெண் இருபாலருக்கும் கவட்டியில் அதாவது இடுப்பும் காலும் இணையும் பகுதியில் நெறிகட்டுதல். இது மிகவும் வலியினை ஏற்படுத்தும்.
ஆண்களுக்கு விதைப்பை வீக்கமும் வலியும் பால் வினை நோயின் அறிகுறியாக இருக்கலாம். அதேபோல் பெண்களுக்கு தொடர்ச்சியான அடிவயிற்று வலி பால்வினை நோயாக இருக்கலாம். உடலுறவின் போது எப்போதும் மிகுந்த வலி ஏற்படுமானால் அது நிச்சயமாகப் பால்வினை நோயின் அறிகுறியே ஆகும். இதில் ஒரு சில அறிகுறிகள் வெறும் தொற்றுக் கிருமிகளாலும் ஏற்படலாம். ஆனால் எதுவாக இருந்தாலும் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்வது மிகவும் முக்கியம்.
ஒரு சில ஆண்களுக்கு உறவில் ஈடுபடமுடியாமல் தனது துணையை திருப்த்தி படுத்த முடியாத அளவிற்கு இயலாமை ஏற்படும். இது ஹார்மோன் குறைபாடினால் ஏற்படும். எனவே ஹார்மோன் சிகிச்சை செய்து கொள்ளலாம். கவுன்சிலிங் மூலமும், ஆயுர்வேதா, சித்தா, ஹோமியோபதி மருத்துவமுறையிலும் இதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதேபோல் ஆர்கஸம் எனப்படும் உச்சக்கட்டம் பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படுவதில்லை. இதனால் எதையோ இழந்தது போல காணப்படுவார்கள். உளவியல் நிபுணர்களை சந்தித்து சரியான கவுன்சிலிங் எடுத்துக்கொண்டால் சிக்கல்களை எளிதில் தீர்க்கலாம். விந்தணுவில் ரத்தம் வெளியாதல், பிறப்புறுப்பில் ரத்தம் வெளியானாலும் ஒருவித அச்சம் ஏற்படும். இதனால் உறவை பற்றி நினைக்கவே அடுத்தமுறை அஞ்சுவார்கள். அதேபோல் பிறப்பறுப்புக்கள் சிறியதாக இருந்தாலும் செக்ஸ் பற்றிய அச்சமும் ஒருவித தாழ்வு மனப்பான்மையும் ஏற்படும். இதுபோன்ற உடல்ரீதியான, உளவியல்ரீதியான சிக்கல்களை சிறப்பு மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெற்று சரி செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
பெண்களின் உணர்வுகளை தூண்டும் கழுதைத் தோல் வயாகரா!
கழுதைத் தோலில் இருந்து தயாரிக்கப்படும் மாத்திரைகள் பெண்களின் பாலுணர்வை தூண்டுவதாக தெரியவந்துள்ளது. இது மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளையும் நீக்குவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாலுறவையும், பாலுறவு உணர்ச்சிகளையும் தூண்டக்கூடிய பொருட்களாக சாக்கலேட், ஸ்டிராபெர்ரி, மூலிகைப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த வரிசையில் தற்போது கழுதைத்தோலில் இருந்து தயாரிக்கப்படும் மாத்திரைகளும் இணைந்துள்ளன.
சீனாவில் பாரம்பரிய மருந்துகளைத் தயாரிப்பதற்கு கழுதைகளின் தோலை பதப்படுத்தி அதில் இருந்து எடுக்கப்படும் பொருள் பயன்படுத்தப்படுவதாகத் தெரிய வந்துள்ளது. இந்த மருந்தானது, பெண்களின் பாலுணர்வைத் தூண்டுவதாகத் தெரிய வந்துள்ளது.
தற்போது ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு மருந்து நிறுவனம் ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் கழுதை தோல்களை பாரம்பரிய மருந்துகளை தயாரிப்பதற்காக பயன்படுத்தி வருகிறது. மருந்து நிறுவனங்களுக்கு கழுதையின் தோல் தேவைப்படுவதாகவும், அதில் இருந்து வடிகட்டுதல் மூலம் பெறப்படும் ஒருவகைப் பொருளைக் கொண்டு பாரம்பரிய மருந்துகளை அந்நிறுவனங்கள் தயாரிப்பதாகவும் தெரிகிறது.
கழுதை தோலில் இருந்து எடுக்கப்படும் பொருள் `எஜியாவோ’ என்றழைக்கப்படுகிறது. இதில் இருந்து தயாரிக்கப்படும் `நு பாவ்’ என்ற மருந்து பெண்களின் பாலுறவு உந்துதலைத் தூண்டுவதுடன், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியைப் போக்க உதவுவதாகவும் தெரிய வந்துள்ளது.
தென் அமெரிக்காவில் நீண்டகாலமாக கழுதை தோலில் இருந்து மருத்து தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவிலும் இந்த தயாரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. சிட்னியைச் சேர்ந்த ஏற்றுமதியாளர் ஜான் பிளெமிங், வெளிநாடுகளில் கழுதைகளை விற்பனை செய்வதற்காக கழுதை வேட்டையை விரும்புவதாகக் கூறியுள்ளார்.
பதப்படுத்தப்பட்ட கழுதை தோல் ஒன்று 30 அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. பெண்களை உற்சாகப்படுத்தும் இந்த மாத்திரைகளை தயாரிக்க பலநூறு டாலர்களை செலவு செய்தும் கழுதைத்தோல் வாங்க மருந்து நிறுவனங்கள் தயாராக இருப்பதாக மருந்து தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செக்ஸ் உறவுக்கு வேட்டு வைக்கும் வேலைப்பளு: அதிர்ச்சி தகவல்
தம்பதியரிடையேயான தவிர்க்க முடியாத வேளைப்பளுவினால் 30 வயதில் இருந்து 40 வயதிற்குட்பட்ட தம்பதியர் தங்களின் சந்தோசமான தாம்பத்ய வாழ்க்கையை தொலைத்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண்-பெண் இருபாலரின் சம்பாதிக்கும் ஆசை தான் அவர்களின் செக்ஸ் ஆர்வத்துக்கு வேட்டு வைத்துக்கொண்டிருப்பதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்கும் காரணிகள் பற்றியும், எந்தெந்த வயதில் என்ன மாதிரியான உணர்வுகள் ஏற்படும் என்பது பற்றியும் பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள், படியுங்களேன்.
மனித வாழ்க்கையில் செக்ஸ் என்பது தவிர்க்க முடியாதது. இது தொடர்பான ஆய்வுகளும், கட்டுரைகளும் ஆங்காங்கே வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் ஆண்-பெண் இருவரில் யாருக்கு செக்ஸ் ஆர்வம் அதிகம்?’ என்று ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.
30 வயது முதல் 50 வயது வரை உடைய ஆண் பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 30 வயதுப் பெண்களில் 85 சதவீதம் பேரிடம் செக்ஸ் ஆர்வம் அதிகமிருப்பதாக தெரியவந்தது. இந்த வயதுடைய ஆண்களில் 75 சதவீதம் பேர்தான் இந்த ஆர்வப் பட்டியலில் இருக்கிறார்கள்.
தாம்பத்ய உறவில் அதிக ஆர்வம் இருந்தாலும் அதிக வேளைப்பளுவினால் சோர்வடைந்து விடுவதாகவும் மாதம் ஒரு முறைதான் கணவருடன் உறவு வைத்துக் கொள்ள முடிகிறது என்றும் ஆய்வின் போது பெண்கள் கூறியுள்ளனர்.
கணவரும் நீண்ட நேரம் பணியில் ஈடுபடுவதோடு அவரின் நீண்ட நேர பயணம், பணிச்சூழலின் மனஅழுத்தம், பணக்கவலை எல்லாம் தங்களின் செக்ஸ் வாழ்க்கையை முழுங்கி வருகிறது’ என்றும் கணக்கெடுப்பில் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வு பற்றி கருத்து கூறிய டாக்டர் ஷா `30 வயதில் இருந்து 40 வயது வரை பெண்களின் செக்ஸ் ஆசைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மாறாக ஆண்களின் ஆசைகள் குறைந்து கொண்டே போகிறது. அதுதான் இவர் மாதிரியான பெண்களின் வேதனைக்கு காரணம்’ என்கிறார்.
இந்த ஆர்வத்துக்கு இப்போது வேட்டு வைத்துக்கொண்டிருப்பதே ஆண்-பெண் இருபாலரின் சம்பாதிக்கும் ஆசை தான். இந்த 30-40 வயதுப் பருவம் வாழ்க்கைக்கு அடிப்படையான வருவாயைத் திரட்டும் பருவமாக இருப்பதால் பெரும்பாலும் ஆண்கள் (பரவலாக தம்பதியினர்) கூடுதல் நேரம் வேலை செய்து வருவாய் ஈட்டவே விரும்புகிறார்கள்.
பெற்ற குழந்தை போதுமென்றும், உறவை குறைத்துக் கொள்வது நல்லது என்றும் கூட்டாக முடிவு செய்கிறார்கள். இந்த கூடுதல் வேலைப்பளுவால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் செக்சில் ஆர்வம் குறைந்து விடுகிறது.
40 வயதில் பெண்கள் அதிக செக்ஸ் ஆர்வத்துக்கு உள்ளாகிறார்கள். அப்போது அவர்களின் குழந்தைகளும் பருவம் அடையும் நிலைக்கு வளர்ந்திருப்பார்கள். அதனால் உறவை தவிர்க்கிறார்கள்.
43 வயது குடும்பத் தலைவி ஒருவர் டாக்டரின் இந்தக் கருத்தை ஒப்புக்கொள்கிறார். `நான் 20-வது வயதிலேயே 2 குழந்தைகளுக்கு தாயாகி விட்டேன். அப்போதிருந்தே வேலைக்கும்-குழந்தைக்கும் இடையே ஒரு தறி `நாடா’ போல ஓடிக் கொண்டிருக்கிறேன். இப்போது அந்த அலைச்சல் குறைந்திருப்பதால் என் செக்ஸ் உணர்வுகள் திரும்புவதாக உணர்கிறேன். ஆனால் என் கணவர் இந்த உணர்வுகளை புரிந்து கொள்வதில்லை’ என்றார்.
இது தவிர எந்தெந்த வயதில் செக்ஸ் ஆர்வம் எப்படி இருக்கும் என்பது பற்றியும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
30 வயதில் பெண்களுக்கு தாம்பத்ய திருப்தி அதிகம் ஏற்படுகிறது. அதிகமாக ஆர்வமும் காட்டுவார்கள். ஆனால் இந்த வயது ஆண்களுக்கு பொறுப்புணர்ச்சி மிகுந்து விடுகிறது. குடும்பம், குழந்தை, நிரந்தர வருவாய், அந்தஸ்து என நிர்ப்பந்தமான வாழ்க்கைப் போராட்டத்தால் கவலைகள் அதிகரிக்கிறது. அதனால் 30 வயது ஆண்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறையத் தொடங்குகிறது.
40 வயதில் பெண்களுக்கு ஹார்மோன்கள் சுரப்பது குறையத் தொடங்குகிறது. ஆனாலும் செக்ஸ் உணர்வுகள் மறுபடியும் மேலெழ ஆரம்பிக்கிறது. குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை, உறுதியான வருவாய் இல்லாத நிலை போன்றவை பெரும்பாலான பெண்களின் உறவு உணர்வுகளை ஒதுக்கச் செய்கிறது.
இதே வயதில் ஆண்கள் பலர் வாழ்க்கையில் நல்ல நிலைமையில் செட்டில் ஆகிவிடுகிறார்கள். இருந்தாலும் குறையும் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அதற்காக அதிக நேரத்தையும், கவனத்தையும் செலவிடுவதால், செக்ஸ் உணர்வுகளில் கொஞ்சம் ஆர்வம் குறைந்தவர்களாக இருக்கிறார்கள்.
50 வயதில் பெண்கள் மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் கட்டத்தை அடைகிறார்கள். அதனுடன் போராடத் தொடங்குவதால் செக்ஸ் ஆர்வத்தை கெடுக்கிறது இந்தப் பருவம்.
ஆண்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த வயதில் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய் பாதிப்புகளின் தாக்கம் வெளிப்படத் தொடங்குகிறது. எனவே விரைப்புத் தன்மையில் தளர்வு ஏற்படுவதால் அவர்களுக்கும் செக்ஸ் ஆர்வம் குறைகிறது. அரிதாக எப்போதாவது ஆர்வம் எழுகிறது.
30 வயது முதல் 50 வயது வரை ஆண்-பெண் தாம்பத்ய நிலை இப்படித்தான் இருக்கிறது. இதில் நீங்கள் எந்த வயதில் இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்குத் தக்கபடி உங்கள் தாம்பத்ய ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
குழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு: நிபுணர்கள் தரும் ஆலோசனை
பண்டைய காலங்களில் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டால் பெண்களுக்கு மட்டுமே குறை இருப்பதாக கருதப்பட்டது. இதனால் குழந்தை பிறக்காததை காரணம் காட்டி பெண்ணை ஒதுக்கி வைத்து விட்டு இரண்டாம் தாரம் கூட ஆண்கள் திருமணம் செய்து கொண்டனர். தற்போது விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக சோதனை செய்யப்பட்டதில் ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடு இருந்தாலும் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும் என்று கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சை முறைகளும் வந்து விட்டன. எனவே சரியான அளவில் விந்தணுக்களை அதிகரிக்க உளவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.
நமது கற்பனைக்குக் கூட எட்டாத கடவுளின் அற்புதங்களின் ஒன்று மகப்பேறு. ஆணின் விந்துவும், பெண்ணின் முட்டையும் சேர்ந்தால் கரு உண்டாகும். இந்த சேர்க்கை நிகழாவிட்டால், கருத்தரிப்பு ஏற்படாது. மாதவிடாய் முடிந்த 14 அல்லது 15 நாளில், பெண்ணின் சினைப்பைகளிலிருந்து சினைமுட்டை (Ovum) வெளிபடும். இது ஒரு நாள் தான் உயிரோடு இருக்கும். அதற்குள் உடலுறவு நிகழ்ந்தால் கர்ப்பம் உண்டாகும்.
உடலுறவிற்கு பின் கோடிக்கணக்கான ஆணின் விந்து அணுக்கள் பெண்ணுறுப்பில் விழும். இவை ஆவேசத்துடன் முன்நோக்கி நகர்ந்து கர்பப்பையை நோக்கி நீந்தி ஒடும். ‘ஸ்பீட்’ என்ன தெரியுமா? ஒரு செ.மீ. கடக்க கிட்டத்தட்ட 3.2 நிமிடங்கள் (8 நிமிடங்களில் 1 அங்குலம்) ஆகும். கடக்க வேண்டிய தூரம் (பெண்ணுறுப்பிலிருந்து கர்பப்பையின் தூரம்) 15 லிருந்து 25 செ.மீ. இருக்கும். இவை கர்பப்பையை அடைய நீந்துவதற்கு உதவுவது வழவழப்பான விந்து திரவம். இலக்கை அடையும் முன்பே லட்சக்கணக்கான விந்தணுக்கள் சோர்வடைந்து விழுந்து விடும். வலிமையும், நகரும் துடிப்பும் உடைய விந்தணுக்கள் தான் முட்டையை அடையும். இந்த மிகச் சிறிய (புள்ளி அளவே உள்ள) முட்டையை உயிரணுக்கள் முட்டி, முட்டி மோதும். இவற்றில் சிறந்த ஒரே ஒரு உயிரணு தான் முட்டையின் வெளிச் சவ்வை துளைத்து உள்ளே நுழையும். நுழைந்த உடனே, வேறு அணுக்கள் உள்ளே புகாதபடி சினை முட்டையில் சவ்வுப் பகுதி கதவு போல் மூடிக் கொண்டு விடும்! ஒரே ஒரு விந்தணுக்குத் தான் அனுமதி!
சாதாரணமாக ஒரு ஆணின் ஒரு மில்லி லிட்டர் விந்தில் குறைந்த பட்சம் 4 கோடி விந்தணுக்கள் இருக்க வேண்டும். அதிக பட்சமாக 12 கோடி கூட இருக்கும். இந்த குறைபாடு தான் முக்கியமான பிரச்சனை. ஆண்களின் விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுவதற்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. உடலில் சூடு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை சோதனை செய்து கண்டறியலாம். புற்றுநோய் அறிகுறிகள் இருந்தாலோ, மூளையில் குறைபாடு இருந்தாலோ விந்தணு உற்பத்தி பாதிக்கும். அதேபோல் மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, சரியான உடற்பயிற்சி இன்மை, டெஸ்டோஸ்டிரன் சுரப்பு குறைபாடினாலும் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும்.
முருங்ககாயை நன்கு வேக வைத்து சாப்பிட்டு வந்தால் காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து ஒரு அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும். நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும். அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடவேண்டும். பின்னர் ஒரு டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும். அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும். கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.
ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
வெள்ளைப்பூண்டு விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும். இதேபோல் தர்பூசணி பழம் சாப்பிடுவதன் மூலம் விந்தணு உற்பத்தி பெருகும் என்று ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. தினசரி ஒருமணிநேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும். இது உடலில் ரத்த ஒட்டத்தின் அளவை அதிகரிக்கிறது. இதனால் டெஸ்டோடிரன் ஹார்மோன் சுரப்பும் அதிகரிக்கும். அதேபோல் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியும் அதிகரிக்கும். இது விந்தணு உற்பத்தியை அதிகரிக்கிறது.
கவர்ச்சியான அழகு நிறைந்ததா பெண்ணின் கூந்தல்?
தலைமுடிக்கும் செக்ஸ்க்கும் தொடர்பிருப்பதாக பிரபல பாலியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பண்டைய காலத்தில் இருந்தே தலைமுடியானது மனிதர்களின் பாலுணர்வை தூண்டும் பொருளாக இருந்துள்ளதாக நிபுணர்கள் கண்டறிதுள்ளனர்.
கூந்தல் என்பது மனிதர்களின் அழகோடு தொடர்புடையது. இது முக்கிய அம்சமாக கருதப்படுவதால்தான் இல்லறத்தை வெறுத்த பிரம்மச்சாரினிகளும், கிருஸ்தவமத சகோதரிகளும் தங்களின் அழகை மறைக்க கூந்தலை சுத்தமாக மழித்துவிட்டோ அல்லது முக்காடிட்டு மறைத்துக்கொண்டோ வாழ்க்கின்றனர்.
கூந்தலானது கவர்ச்சியான அழகை தரக்கூடியது. தலையின் மீது கருகருவென நீண்ட கூந்தல் அமைந்திருந்தால் அந்த பெண்ணின் அழகு அதிகரிக்கிறது. இதனால் பெரும்பாலோனோரின் கண்கள் அந்த பெண்ணைத்தான் பார்க்கின்றனர். அழகான கூந்தலுக்கும் தாம்பத்ய உறவுக்கும் தொடர்புடையதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அழகான கூந்தல் என்பது பெண்மையின் அம்சம். அது மென்மையை உணர்த்துகிறது. பெண்ணின் தைரியத்தை காட்டுகிறது. அனைவருக்கும் கவர்ச்சியான அழகையும் தருகிறது. அதனால்தான் சிறப்புவாய்ந்த செக்ஸாலஜிஸ்டான எல்லீஸ், தனது செக்சுவல் சைக்காலஜி என்ற நூலில் கூந்தலானது பாலுணர்வை தூண்டும் ஒரு அம்சம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கூந்தலானது கண்களை கவர்கிறது. அதனை தொட தூண்டுகிறது. எத்தனையோ டிசைன்களில் நகைகளை அணிந்தாலும் கூந்தல் இல்லாத பெண்களுக்கு அழகு சற்று குறைச்சலாகத்தான் இருக்கும். கூந்தலானது கவர்ச்சியின் அம்சமாக கருதப்படுவதால்தான் பண்டைய காலங்களில் கணவனை இறந்த பெண்களின் கூந்தலை மழித்து தலையில் முக்காடிட்டு வந்துள்ளனர். புத்தமதம், ஜைனமதத்தை தழுவியவர்கள் துறவியாக முடிவு செய்த பெண்கள் தங்கள் கூந்தலை முற்றிலும் மழித்துக்கொண்டனர். இதன் மூலம் தங்களின் அழகை பிறருக்கு காட்சிப்பொருளாக்காமல், பிறரை இம்சிக்காமல் இறைவன் சேவையை கருத்தில் கொண்டு வாழ்கின்றனர் துறவிகள்.
கார்மேக கூந்தலைக் கொண்ட பெண்கள் சாதாரணமாக உடை அணிந்திருந்தாலும் அந்த கூந்தல் அழகே அவளை பேரழகியாக காட்டும் அதனால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு அனைவரும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆணுக்கும் பெண்ணுக்கும் கூந்தலானது காதல் உணர்வையும், பாலுணர்வையும் அதிகரிக்கும் பொருளாக இருந்துள்ளது. பெண்ணின் கூந்தல் அழகு ஆணின் மூளையில் சமிக்ச்சைகளை தூண்டுகிறது. அதேபோல் ஆணின் தலையில் கூந்தல் இருப்பதுதான் அவர்களின் அழகையும் கவர்ச்சியினையும் அதிகரிக்கிறது. அதனால்தான் பெரும்பாலான ஆண்கள் கொஞ்சம் முடி உதிரத்தொடங்கினாலே அழகு போய்விட்டதே என்று பதறத்தொடங்குகின்றனர். தாம்பத்ய உறவின் போது கூந்தலை கோதுவதன் மூலம் உணர்வுகளை தூண்ட முடியும் என்றும் அவர்கள் எண்ணுகின்றனர்.
நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நறுமணத்தைலங்களை தடவி கூந்தலை வளர்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கலரிங், கர்லிங் உள்ளிட்ட ஸ்டைல்களை செய்தும் கூந்தலை பராமரித்துள்ளனர். கூந்தலை அழகுபடுத்துவது மனிதர்களின் சுதந்திர உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அதேபோல் பண்டைய திருமணங்களில் ஆணும், பெண்ணும் கூந்தலை முடி போட்டு தங்களின் திருமண பந்தத்தை உறுதிபடுத்தியுள்ளனர்.
அதேபோல் தம்பதியரிடையே ஆரோக்கியமான தாம்பத்ய உறவு இருக்கும் பட்சத்தில் கூந்தல் வளர்ச்சியானது அதிகரிக்கிறது. இந்த செக்ஸ் ஹார்மோன்களின் சுரப்பு சரியான அளவு இருக்கும் பட்சத்தில் அதிக அளவு கூந்தல் வளர்ச்சியடைகிறது. அதேபோல் அதிக அளவில் கவலை ஏற்பட்டாலோ மன அழுத்தம் இருந்தாலோ கூந்தல் உதிரத்தொடங்குகிறது. நமது மனஆரோக்கியத்தோடும், உடல் ஆரோக்கியத்தோடும் தொடர்புடையதாக இருக்கிறது கூந்தல்.