மறக்க முடியாத உறவு வேண்டுமா? இதோ சில டிப்ஸ்..
உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் தானாகவே அதிகரிக்கும். மறக்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை ‘ரிலாக்ஸ்’ ஆக்குங்கள். எப்போதும் ‘ஹார்ட்’ ஆக இருக்க வேண்டியதில்லை. ‘சாப்ட்’ ஆகவும் இருப்பது அவசியம். எப்படி சந்தோஷப்படுத்துகிறேன் பார் என்று கடும் வேகத்தில் களத்தில் குதித்தால் அது கஷ்டத்தில் தான் கொண்டு போய் விடும். எனவே இயற்கையான வேகமே போதுமானது. சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவன்தான் புத்திசாலி. செக்ஸ் விஷயத்தில் வேகமாக இருப்பதை விட விவேகமாக இருப்பதுதான் இயல்பான, இனிமையான செக்ஸ் உறவுக்கு சிறந்தது. இது பெண்களை விட ஆண்களுக்குத்தான் முக்கியமாக தேவை. ‘வெரைட்டி’யாக முயற்சிப்பதில் தவறில்லை. அதேசமயம், அது விரக்தியில் கொண்டு போய் விட்டு விடக் கூடாது என்பதும் முக்கியமானது.
கடுமையான முயற்சிகளை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. அமைதியான, ஆழமான, நீடித்த உறவைத்தான் பெரும்பாலான பெண்கள் விரும்புவார்கள். அதேபோல மனம் நிறைய கற்பனைகளை அடுக்கி வைத்துக் கொண்டு ‘உறவில்’ இறங்கக் கூடாது. அது எதிர்பாராத ஏமாற்றங்களுக்கு வழி விடலாம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், களத்தில் இறங்கினால் எதிர்பாராத இன்பம் கிடைத்து மகிழ்ச்சியையும், கூடலையும் உறுதியாக்கி உற்சாகப்படுத்தும். அதேசமயம், படுக்கையில் போய் உட்கார்ந்து கொண்டு ‘பிளான்’ செய்வதும் தவறு. கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் என சின்னச் சின்ன பிளானுடன் போனாலே போதுமானது. அதாவது அடிப்படை இருக்க வேண்டும். அபரிமிதமான திட்டமிடல்கள் இங்கு தேவையில்லை . உங்கள் மீது உங்களது பார்ட்னருக்கு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்க வேண்டுமே தவிர, ‘இன்னிக்கு என்ன பன்னப் போறானோ’ என்ற பீதி மட்டும் வந்து விடவே கூடாது.
அதேபோல ‘பொசிஷன்’ குறித்தும் ஏடாகுடமான எதிர்பார்ப்புகளுடன் போகக் கூடாது. உங்களுக்கு எது வசதியோ அதை மட்டுமே முயற்சித்தால் போதுமானது. அதனால் எந்த பாதிப்பும் நிச்சயம் வராது. அதில் அப்படி பார்த்தோமே, செய்து பார்த்தால் என்ன என்று முயற்சித்தால் சில நேரங்களில் ஏமாற்றமோ அல்லது கசப்பான அனுபவமோ ஏற்படக் கூடும். அதனால் முடிந்ததை செய்யுங்கள் – முக்கியமாக உங்களது பார்ட்னருக்கு பிடித்தமானதை மட்டும் செய்யுங்கள். இது மிகவும் சவுகரியமானது, பாதுகாப்பானதும் கூட. செக்ஸ் என்பது கற்றுக்கொள்வதுதான். எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம். எதுவுமே முழுமையானதல்ல. முழுமையானது என்று இந்த உலகில் எதுவுமே கிடையாது. எனவே இன்று உறவு சரியில்லையே என்ற ஏமாற்றத்துடன் தூங்கப் போகாதீர்கள். நாளை இதை விட சிறந்த இரவாக அமையலாம் இல்லையா?. விடா முயற்சி விஸ்வரூப வெற்றிஸ. என்பதை நினைத்து அதன்படி நடந்துக்கொள்ளுங்கள்.
செக்ஸ் என்னெல்லாம் கொடுக்குது தெரியுமாஸ?
செக்ஸ் குறித்து வயது வந்த அனைவருக்குமே நன்றாகவே தெரிந்திருக்கும். எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்று இங்கு யாரும் இல்லை. இருந்தாலும் ஓரளவாவது தெரிந்து வைத்திருப்பார்கள் அனைவருமே.
செக்ஸ் குறித்த விழிப்புணர்வை ஒவ்வொருவரும் ஒருவரிடமிருந்து பெறுகிறார்கள். தாய் தந்தையிடமிருந்து சிலருக்கு இதுகுறித்துத் தெரிய வரும்.
ஆசிரியர்களிடமிருந்து சிலருக்குத் தெரிய வரும். நண்பர்கள் மூலம் தெரிய வரும். சிலருக்கு புத்தகங்கள், இன்டர்நெட் மூலம் தெரிய வந்திருக்கும்.
செக்ஸ் உறவின் மூலம் நமக்கு உடல் ரீதியான இன்பம் மட்டுமே கிடைக்கிறது என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மறைமுகமாக பல நல்ல விஷயங்களையும்,அது நமது உடலுக்கும், மனதுக்கும் கொடுக்கிறது. அது குறித்த ஒரு ரவுண்டப்தான் இதுஸ
பதட்டத்தைக் குறைக்கிறது செக்ஸ்
செக்ஸ் உறவு கொள்பவர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏகப்பட்ட நல்லது நடக்கிறதாம். மன அழுத்தம், பதட்டம், மனச் சோர்வு ஆகியவை நீங்குகிறதாம். இதை ஆதாரப் பூர்வமாக, அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளனர்.
செக்ஸ் உறவில் சிறப்பாக ஈடுபட்டு வருவோர், அதில் குறைபாடு உள்ளவர்களை விட மிகவும் ஆரோக்கியமாகவும், ஆக்டிவாகவும் இருப்பார்களாம். அவர்களிடம் குழப்பம், மனச்சோர்வு, மன அழுத்தம், சோம்பேறித்தனம் ஆகியவை இருக்காதாம். எதையும் சுறுசுறுப்பாக தெளிவாக செய்வார்களாம்.
செக்ஸ் உறவின் மூலம் ஆண்களும் சரி பெண்களும் சரி நல்ல நிம்மதியான மன நிலையைப் பெற முடிகிறதாம். அதிக அளவில் உடலுறவு வைத்துக் கொள்வோருக்கு ரத்த ஓட்டம் சிறப்பாக இருக்குமாம். இதனால் அவர்கள் சுறுசுறுப்பாக வேலையைச் செய்ய முடிகிறதாம். எவ்வளவு கடினமான வேலையைக் கொடுத்தாலும் கடகடவென முடித்துத் தள்ளி விடுவார்களாம்.
செக்ஸ் மகிழ்ச்சி தருகிறது
செக்ஸ் என்ற வார்த்தையைக் கேட்டதுமே பலருக்கும் மனதுக்குள் பல லட்சம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்ற பரவச உணர்வு ஏற்படும். அதுதான் செக்ஸ் குறித்த நினைவால் ஏற்படும் மகிழ்ச்சி உணர்வாகும்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், செக்ஸ் தங்களுக்கு பெரும் மன மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் தருவதாக பலரும் தெரிவித்திருந்தனர். செக்ஸ் குறித்த நினைவே தங்களுக்கு பெரும் ஊக்கத்தைத் தருவதாகவும், இன்று இரவு விருந்து உண்டு என்பது உறுதியாகும்போது அளவு கடந்த மகிழ்ச்சியுடன் பல வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
உடல் ரீதியான பிணைப்பு, உள்ளத்தையும் சேர்த்து மகிழ்ச்சிப்படுத்துவதே இதற்குக் காரணம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. மேலும், வாரம் 3 முறைக்கு மேல் உறவு வைத்துக் கொள்வோருக்கு மன மகிழ்ச்சி அளவுக்கதிகமாக இருக்குமாம்.
நோய்களை விரட்டும் செக்ஸ்ஸ
செக்ஸ் ஒரு மருந்தாகவும் செயல்படுகிறது. தொடர்ச்சியாக செக்ஸ் வைத்துக் கொள்வோருக்கு சளி, காய்ச்சல் போன்றவை அண்டவே அண்டாதாம். செக்ஸ் உறவில் தொடர்ந்து ஈடுபட்டு வரும்போது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகி ஆரோக்கியமாக திகழ முடியுமாம்.
வாரம் 2 முறை உறவு வைத்துக் கொள்வோரின் உடலில் இம்யூனோகுளோபுலின் ஏ அல்லது ஐஜிஏ என்ற நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாக சுரக்கிறதாம். இந்த ஐஜிஏ, நமது எச்சிலில் அதிக அளவு இருக்கிறது. எச்சில் மூலமாகத்தான் பல நோய்களும் பரவுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே செக்ஸை தொடர்ந்து கடைப்பிடித்து வருவோருக்கு எச்சிலில் ஐஜிஏ சுரப்பு அதிகமாகிறதாம். இதனால் பல நோய்கள் நமது உடலுக்குள் ஊடுறுவ முடியாமல் திரும்பிப் போய் விடுகின்றனவாம்.
செக்ஸ் ஒரு நல்ல வலி நிவாரணி
செக்ஸ் உறவைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும்போது உடல் வலி உள்ளிட்ட பல்வேறு வலிகளும் ஓடிப் போகின்றனவாம். ஒரு நல்ல வலி நிவாரணியாக செக்ஸ் திகழ்கிறதாம்.
பெண்களுக்கு ஆர்கசம் ஏற்படும்போது அது இன்பத்தை மட்டும் வாரி வழங்குவதில்லை, மாறாக உடலுக்கு நல்ல ரிலாக்சேஷனையும் சேர்த்தேத் தருகிறதாம். எப்படிப்பட்ட உடல் வலி, அசதியாக இருந்தாலும், நல்லதொரு செக்ஸ் உறவை வைத்துக் கொண்டால் அது ஓடிப் போய் விடுமாம்.
மேலும் செக்ஸ் உணர்வுகள் பெருக்கெடுக்கும்போது உடலில் உள்ள அசதி முழுமையாக நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கிறதாம். பெண்களின் அந்தரங்க உறுப்பில் செக்ஸ் உணர்வுகள் தூண்டப்படும்போது, அவர்களுக்கு உடலெல்லாம் மசாஜ் செய்து விட்டதைப் போல ஒரு புத்துணர்ச்சி உருவாகிறதாம்.
புதன்கிழமை ஷாப்பிங்; வியாழக்கிழமை செக்ஸ் ரொம்ப நல்லதாம்!
தாம்பத்ய உறவுக்கு ஏற்றநாள் வியாழக்கிழமை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். செவ்வாய்கிழமையன்று ரெஸ்டாரண்டுகளில் சாப்பிட ஏற்ற நாள் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொருநாளும் ஒவ்வொருவிதமான நிகழ்வுக்கு ஏற்றநாள்.
திங்கட்கிழமை கேமரா வாங்குங்க
திங்கட்கிழமையன்று அதிகம் பேர் கேமரா வாங்குகின்றனராம். சிலர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்குகின்றனராம். ஏராளமானோர் ஆன்லைனின் பர்சேஸ் செய்கின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
செவ்வாய் மீன் சாப்பிடுங்க
இருப்பதிலேயே செவ்வாய்கிழமைதான் ட்ரையான நாளாம். வார விடுமுறை நாளில் ரெஸ்ட் எடுத்த மக்கள் செவ்வாய்கிழமையன்றுதான் ப்ரெஸ்சாக வெளியில் வந்து ஓட்டல்களில் சாப்பிடுகின்றனர். அதுவும் செவ்வாய்கிழமை மீன் சாப்பிட ஏற்ற நாளாம்.
சம்பள உயர்வுக்கு புதன்
புதன்கிழமைதான் ஷாப்பிங் செய்ய ஏற்ற நாளாம். அன்றைய தினம் சூப்பர் மார்க்கெட்டுகளில் கூட்டம் அள்ளுமாம். அதேபோல் சம்பள உயர்வு கேட்க ஏற்றநாள் புதன்கிழமையாம். ஏராளமானோர் தங்கள் முதலாளிகளிடமோ, உயரதிகாரிகளிடமோ புதன்கிழமைதான் ஊதிய உயர்வு கோரிக்கையை வைக்கின்றனராம்.
செக்ஸ்க்கு வியாழன்
வியாழக்கிழமை செக்ஸ்க்கு ஏற்ற நாளாம். அதுவும் அன்றைய தினம் காலை நேரத்தில் என்றால் சூப்பர் என்கிறது லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் ஆய்வு ஒன்று. அன்றைய தினம் நமது உடலில் கார்டிசால் இயற்கையிலேயே அதிகமாக சுரக்கும். செக்ஸ் ஹார்மோன்களும் தங்களின் வேலையை சரியாக செய்யுமாம்.
வெள்ளிக்கிழமை விற்பனைக்கு
உங்களின் வீட்டை விற்பனை செய்ய நினைக்கிறீர்களா? அதற்கு செவ்வாய்கிழமைதான் ஏற்றநாள் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். 1.2 மில்லியன் மக்களிடம், 21 மாதங்களாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி இது கண்டறியப்பட்டது. அதேபோல் வெள்ளிக்கிழமை திருமணம் செய்ய ஏற்றநாள். சனிக்கிழமை ரிசப்பனுக்கு நல்ல நாளாம். வார விடுமுறை நாளான சண்டே முழுக்க முழுக்க என்ஜாய்மென்டுக்கு ஏற்றநாள் என்று கூறியுள்ளனர் நிபுணர்கள்.
ஆண்களின் ஜி ஸ்பாட் எது? உங்களுக்குத் தெரியுமா?
பெண்களைப் போல ஆண்களுக்கும் உணர்ச்சிப்புள்ளி இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொருவிதமான இடத்தில் உணர்ச்சியை தூண்டக்கூடிய புள்ளிகள் இருக்கின்றன. ஆண்களின் சரியான ஜி.ஸ்பாட் எது என்றும் அதனை எவ்வாறு கையாளுவது என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உறவின் போது தம்பதியர் இருவரும் இணைந்து ஒருவருக்கொருவர் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு அந்த கிளர்ச்சியிலே உறவில் ஈடுபடுவது ஒரு ரகம். இருவருமே இணைந்து சின்னச் சின்ன விளையாட்டுக்கள், தழுவல்கள், சில முத்தங்கள் என உறவை தொடங்குவது மற்றொரு ரகம். இதில் பெண்ணின் கிளர்ச்சியை தூண்ட எத்தனையோ விதமான டெக்னிக்குகளை கையாளுகின்றனர். பெண்ணின் உணர்ச்சிப்புள்ளி எங்கு இருக்கிறது என்று அந்த பெண்ணை கையாளத்தெரிந்த ஆணின் கைகளுக்குத்தான் தெரியும். ஏனென்றால் எங்கு தொட்டால் என்ன விதமான ஓசை கிடைக்கும் என்பதை உணர்ந்து தீண்டினால்தானே சரியான இசை கிடைக்கும்.
பெண்ணிற்கு எவ்வாறு ஜி-ஸ்பாட் எனப்படும் உணர்ச்சிப்புள்ளி இருக்கிறதோ அதேபோல ஆணுக்கும் உணர்ச்சிப்புள்ளி இருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். அந்த இடத்தை சரியாக அணுகினால் ஆண்கள் கிளர்ச்சியடைந்து உணர்ச்சிப்பிழம்பாக மாறுவார்கள் என்கின்றனர் நிபுணர்கள். ஆண்களின் ஜி ஸ்பாட் எது என்று பாக்ஸ் இதழில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்குறியின் அடியில் உள்ள புரஸ்டேட் ஆண்களின் ஜி.ஸ்பாட் என்று கூறியுள்ளனர். அந்த இடத்தில் தொட்டால் ஆண்களின் உணர்ச்சி அதிகரிக்கிறதாம்.
சில ஆண்களுக்கு மார்பின் காம்புப் பகுதியை வருடினால் உணர்ச்சியின் வேகம் அதிகரிக்கும், சிலருக்கு ஆண் குறியை வருடினால் கிளர்ச்சி ஏற்படும் என்றும் கூறுகின்றனர். காதுமடல், பின்கழுத்து, அக்குள் என பிற இடங்களும் ஆண்களின் உணர்ச்சியைத் தூண்டும் இடங்களாக நிபுணர்கள் கூறியுள்ளனர். ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு புரஸ்டேட் பகுதியை வருடுவதன் மூலம் அதிக அளவில் உணர்ச்சி தூண்டப்படுவதாக தெரிவித்துள்ளனர். புரஸ்டேட்டினை கைகளால் வருடுவதை விட வித்தியாசமான பொஸிசன்களில் புரஸ்டேட்டினை தடவுவதும் அதிக அளவில் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறதாம்
உறவு கொள்ள ஏற்ற இடம் பெட்ரூம் மட்டும்தானா?
எந்த ஒரு விசயத்தையும் ஒரே இடத்தில் ஒரே மாதிரியாக செய்தால் அது போரடிக்க ஆரம்பித்து விடும். திரும்ப திரும்ப ஒரே மாதிரியான உடை, ஒரே மாதிரியான வேலை, ஒரே மாதிரியான உணவு போன்றவை என்றால் சலிப்பு ஏற்பட்டு விடும். இது செக்ஸ் விசயத்திலும் பொருந்தும் என்கின்றனர் நிபுணர்கள். தாம்பத்ய உறவுக்கு பெட்ரூம் மட்டுமே சிறந்த இடமல்ல. வேறு சில இடங்களையும் பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.
வீட்டின் பால்கனி உறவு கொள்வதற்கு ஏற்ற இடமாம். எந்த இடைஞ்சலும் இல்லாமல் சரியான அரேஞ்ச்மென்ட் செய்து கொண்டால் அந்தரங்க உறவிற்கு பால்கனி அட்டகாசமான இடம் என்கின்றனர் நிபுணர்கள். அதேசமயம் பிறரின் கழுகுக் கண்களில் இருந்து தப்பித்துக்கொள்ளுங்கள் என்றும் எச்சரிக்கின்றனர்.
காரிலும் உற்சாகமாக உறவு கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள். இது சிறந்த இடம் என்கின்றனர். அதேபோல் அட்வென்சர் டைப் தம்பதியர் என்றால் வானமே கூரையாக உள்ள வனப்பகுதியில் டென்ட் அடித்து உங்கள் வாழ்க்கையை அனுபவிக்கலாம். அது வித்தியாசமான மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
நீச்சல் குளம் காதலுக்கு ஏற்ற இடமாம். தண்ணீரில் உறவு கொள்வது ஒரு புதிய அனுபவம் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் ஆள் இல்லாத லிப்டில் நீங்கள் இருவர் மட்டும் தனித்திருக்க நேரிட்டால் அந்த இடமும் உறவுக்கு அற்புதமான இடம்தானாம் ஆனால் லிப்டில் யாரும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொருப்பு என்கின்றனர் நிபுணர்கள்.
அதேபோல் சமையலறை என்பது சமைக்க மட்டுமல்ல சந்தோசமான உறவுக்கும் ஏற்ற இடமாம் அது சர்ப்ரைஸாகவும் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
பெண்கள் சொல்வதை கேளுங்க! ஈஸியா அட்ராக்ட் செய்யலாம்!!
பொண்ணுங்களுக்கு என்ன புடிக்கும்? எப்படி நடந்துக்கிட்டா அவர்களை ஈசியா அட்ராக்ட் செய்யலாம் என்று யோசிப்பவர்களா நீங்கள்?. உங்களுக்காகவே ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் உளவியல் நிபுணர்கள் புதிதாக திருமணம் செய்துகொண்ட ஆண்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் படியுங்களேன்.
பெண்களைக் கவர முதலில் டேக் இட் ஈசி பாலிசியை வளர்த்துக்கொள்ளுங்கள், எதற்கும் கவலைப்படாதீர்கள். அதுதான் பெண்ணைக் கவர்வதற்கான முதற்படி. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையாவது செய்ய ஆரம்பித்து கடைசியில் உள்ளதும் போய்விடும்.
தன்னம்பிக்கை கொண்ட ஆண்களால்தான் பெண்களை எளிதில் கவரமுடியும். எனவே எந்த சூழ்நிலையிலும் தலைகவிழ்ந்து பேசாதீர்கள். கண்களை நேருக்கு நேராக சந்தித்து பேசுங்கள். உங்கள் உடல்மொழி, பேசும் திறன் போன்ற அனைத்திலும் தன்னம்பிக்கை மிளிரட்டும்.
சிடுமூஞ்சித்தனமாவோ, ரிசர்வ் டைப் ஆகவோ இருப்பதை விட புன்னகையுடன் இருக்கும் ஆண்களைத்தான் பெண்கள் அதிகம் கவர்கின்றனராம் எனவே உங்கள் உதடுகளில் புன்னகை தவழட்டும். சந்தோசமான புன்னகையை தினசரி கண்ணாடியைப் பார்த்தாவது பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
பேசும் வார்த்தைகளில் தன்னம்பிக்கை மிளிரட்டும். அதேபோல் உங்களுக்கு தெரிந்தவைகளை எல்லாம் பேசி பெண்களை மிரட்சியடையச் செய்யவேண்டாம். அவர்களுக்கு என்ன பிடிக்கிறதோ அது தொடர்பானவைகளை முதலில் பேசி அசத்துங்கள். பின்னர் உங்களின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துங்கள்.
பெண்கள் கூறுவதை காதுகொடுத்து கவனியுங்கள். நீங்கள் கவனிக்க ஆரம்பித்தாலே அவர்களின் மனதில் உயர்ந்து விடுவீர்கள். பெண்களின் கண்களை கூர்ந்து கவனியுங்கள் அப்புறம் நீங்கள் கூறுவதை அவர்கள் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.
காதலிக்காகவோ, மனைவிக்காகவோ பொது இடங்களில் சென்று காத்திருப்பதில் தவறில்லை. அது உங்கள் மீதான மதிப்பினை அதிகரிக்கும். காத்திருக்கும் சமயங்களில் என்ன பேசலாம் என்பதை ஒத்திகை பார்க்க இயலும்.