உடலுறவின் போது விந்து விரைவாக வெளிப்படுதலை தடுக்கும் சில முறைகள்
உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பிறகு அதாவது பெண் உறுப்பில் நுழைந்தவுடன் விந்து வெளியேற சராசரியாக 3 முதல் 5 நிமிடங்களாவது ஆக வேண்டும்
ஆனால், அதற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புறுப்பிக்குள் நுழையும் முன்பே விந்து வெளியேறினால் அது செக்ஸ் குறைபாடுதான்.
இந்தவகையான பாதிப்பு சுமார் 70 சதவீத ஆண்களுக்கு இருக்கிறது.
விந்து விரைவில் வெளிப்படுதலை தம்பதியர் நினைத்தாலே ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும். இதற்கு இருவரிடமும் நல்ல புரிதல்
அவசியமாகும்.
1. முதலில் தம்பதியர் இருவரும் இந்தக் குறைபாடுகளை தீர்த்துவிட முடியும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும். இதற்காக மது போன்ற போதைப்
பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஆணுறுப்பில் தடவும் ஒரு சில மருந்துகள் உறுப்பில் இருக்கும் உணர்வுகளை மழுங்கடிக்கச்
செய்துவிடும். ஆரம்ப நாள்களில் இதனால் பயன் இருக்குமே தவிர தொடர்ந்து பயன்படுத்தும்போது பல்வேறு சிக்கல்கள் தோன்றலாம். அதனால் இது போன்ற
குறுக்குவழிகளைக் கைவிட வேண்டும்.
2. செக்ஸ் என்பது நான்கு நிலை என்பதைப் பார்த்தோம். உணர்வடைதல், செயல்படுதல், விந்து வெளியேற்றம், ரிலாக்ஸ் எனப்படும் நான்கு நிலைகளில், விந்து வெள்யேற்றம் எனப்படும் மூன்றாம் நிலை செயல்படும் முன் ஏற்படுவதுதான் விந்து முந்துதல் எனப்படுகிறது. இன்னொரு வகையில் சொல்வதென்றால் ஆண்&பெண் இருவரது ஆசைகளும் தீரும் முன்செக்ஸ் செயல்பாடுகள் நின்றுவிடுவதாகும். அதனால் இறுதிச் செயல்பாடான ரிலாக்ஸ் எனப்படுவதை இரண்டாவதான செக்ஸ் செயல்பாடுகளிலும் புகுத்தும்போது உறுப்பு எழுச்சி நீடிக்க வாய்ப்பு இருக்கிறது.
மனத்தை மிகவும் ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இன்னும் சொல்லப்போனால் மனத்தை செக்ஸில் இல்லாமல் வேறு ஏதாவது ஒரு
செயலில் ஈடுபடுதினால் கூட நல்லது. அதாவது தியானம் செய்வதுபோல் அல்லது மலை ஏறுவது, கிரிக்கெட் மேட்ச் ரசிப்பதுபோல் ஏதாவது ஒரு நிகழ்வை
மனத்தில் நினைத்துக்கொண்டு செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகுந்த பயன் அளிக்கும்.
3. அடுத்தாக செக்ஸ் செயல்பாடுகளை ஆவேசமாக, ஆக்ரோஷமாக செயல்படுத்தாமல் மிக இயல்பாகவும் அவசரமில்லாமலும் மெதுவாக இயங்க வேண்டும்.
ஏனெனில் உடலைவிட மனசே செக்ஸ் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆவேச உணர்வைக் குறைக்கும்போதே மனம் லேசாகிவிடுகிறது. இருவரும்
நிதானமாக செக்ஸ் செயல்பாடுகளைத் தொடரும்போது நேரத்தை வேண்டும் அளவுக்கு நீட்டிக்க முடியும்
4. ஆண்கள் விந்து முந்துதலைத்தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்க முடியும். அதாவது சுய இன்பம் காணும் செயல் இதற்கு நல்ல
முறையில் பலன் அளிக்கிறது. சுயஇன்பத்தை முழுமையாக ஒரே நேரத்தில் வேகமாக செய்து முடிக்காமல் நிறுத்தி இடைவெளிவிட்டு நேரத்தை நீட்டிக்க
வேண்டும்.
சாதாரணமாகவே ஆண்கள் சுயஇன்பம் காணும் போது அவசர அவசரமாகவே செயல்படுவார்கள்.யாராவது பார்த்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அல்லது
மனதில் உள்ள ஆசை தீர்ந்துபோவதற்குள் ஆசையைத் தீர்த்துவிடும்படி ஆவேசமாக அவசர அவசரமாக கையை வைத்துச் செயல்படுத்தி விந்துவை
வெளிப்படுத்தி திருப்தி அடைவார்கள். இதுவே கலவியின்போதும் தொடர்ந்து சிக்கலை உண்டாக்குகிறது. அதானால் முதலில் ஆண் அவனது உறுப்பை ரசிக்கப்
பழக வேண்டும். உறுப்பு எழுந்து நிற்பதில் தொடங்கி அது விந்து கக்கி வீழ்வதுவரை ரசித்து நிதானமாக கை செயல்பாடுகளை ரசித்துச் செயல்பட வேண்டும்.
விந்து வெளியாகும் நேரத்தில் செயலை நிறுத்தி வைத்து மீண்டும் தொடர வேண்டும். அடிக்கடி இப்படிச் செய்துபார்ப்பது அவசியம். என்றாவது ஒருநாள்
கையைப் பயன்படுத்தி இன்பம் அனுபவிக்க முயற்சிப்பது பயன்தராது. தினமும் அல்லது தினமும் இருமுறையாவது இந்த முறையில் உச்சகட்ட நேரத்தைக்
கூடுதலாக்கும் முயற்சியை மேற்கொள்ளும்போது தான் நல்ல பலன் தரும்.
முதலில் வெறும் கையுடன் சிறிது நேரம் சுய இன்பம் அனுபவிக்க வேண்டும். பிறகு எண்ணெய் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி சுயஇன்பத்தில் ஈடுபட்டு
செயல்படும் நேரத்தை நீடிக்க வேண்டும். இப்படி சில நாள்கள் உறுப்புடன் நெருங்கி விளையாடி நேரத்தை நிறுத்திச் செயல்படும் டெக்னிக்கை வெற்றிகரமாகக்
கண்டுகொண்ட பிறகு பெண்களுடன் உறவு கொள்ளும் போது இதைப் பயன்படுத்தலாம். இடைவெளிவிட்டு செயல்படுதல் விந்து வெளிப்படுதலைத் தடுப்பதில்
முக்கிய பங்கு வகிப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
5. உடல் முழுவதும் இனபம் இருக்கிறது என்பதை ஆணும் பெண்ணும் அறிந்துகொள்ள வேண்டும். அதாவது ஆண் உறுப்பில் மட்டும்தான் இன்பம் இருக்கிறது
என்று அதை மட்டுமே உபயோகிப்பதைப் பெண் குறைத்துக்கொண்டு உடலின் மற்ற பாகங்கள் மீது கவனம் செலுத்துவதும் மிகுந்த பலன் அளிப்பதாக
இருக்கக்கூடும்.
6. மூச்சை நன்றாக உள் இழுத்தல் மிக முக்கியமான எளிதான வழியாகக் கருதப்படுகிறது. மிகவும் ஆழமாக மூச்சை இழுத்துவிடுவது ஒரு நல்ல முயற்சியாகும்.
ஏனெனில் இறுதி நிலையான ரிலாக்ஸீக்கு சமமாக மூச்சுப் பயிற்சியைப் பயன்படுத்த முடியும்.
7. வெறுமனே செயல்பாடுளில் ஈடுபடுவதைவிட பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதும் செக்ஸ் நேரத்தைக் கூடுதலாக்குகிறது. ஏதாவது விஷயங்களைப் பேசுவது
கத்துவதன் மூலம் உடல் டென்ஷனைக் குறைத்துக் கொள்வது என்று உடலை எவ்வளவு தூரம் எளிமையாக வைத்துக் கொள்கிறமோ அவ்வளவு தூரம்
நேரத்தைத் தள்ளிப் போட முடியும்.
8. ஆண் மேலே பெண் கீழே என்ற நிலையில் உறவுகொள்வது எளிதாகவும் இனபமாகவும் இருக்கலாம். ஆனால் இது ஆண்களுக்கு ஏற்ற நிலை என்று சொல்ல
முடியாது. இந்த நிலையில் எளிதாக விந்து வெளியேற வாய்ப்பு உண்டு. அதனால் பெண்ணை இயங்கச்செய்வது அதிகப்பலன் அளிக்கக்கூடியதாக இருக்கும்.
எவ்வகையான செயலையும் ஆண்கள் மேற்கொள்ளாமல் பெண்களை மட்டுமே இயங்குபொருளாக வைத்துக்கொண்டால் கூடுதல் நேரம் விரைப்புத்தன்மையுடன்
ஆண்கள் இருக்க முடியும்.
9. ஆண்கள் தங்கள் உறுப்புகளை மட்டுமே செக்ஸ் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்துவதை விடுத்து கை, நாக்கு, கால் போன்ற உறுப்புகளையயும் பயன்படுத்த
வேண்டும். இதனால் ஆண் உறுப்புக்குக் கலவி நேரத்தில் ஓய்வு கிடைக்கும். இந்த ஓய்வின் காரணமாக நேரதை நீட்டிக்க முடியும்.
10. ஆணுக்கு விந்து வரப்போவதை அறியும் பெண் முதுகு அல்லது பின்புறத்தில் பலமாகத் தடடுவது வேறு செயலுக்கு மாற்றுவது வலிக்கும்படி கடிப்பது
போன்ற செயல்களில் ஈடுபடும்போது விந்து வெளியேற்றம் தாமதமாகிறது.
இது போன்று மேலே குறிப்பிட்டுள்ள சில வழிகளை முயற்சித்து விந்து விரைவாக வெளிப்படுதலை தடுத்து உடலுறவில் முழு திருப்தி அடையுங்கள்.
இந்த ஆம்பளைங்களே இப்படித்தான்பா!
பூனையில் சைவம் கிடையாது, ஆண்களில் ராமன் கிடையாது என்று நம் ஊர் கவிஞர் ஒருவர் எழுதியிருந்தார். இது எல்லா நாட்டு ஆண்களுக்கும் பொருந்தும். உலகம் முழுவதும் 2.7 மில்லியன் ஆண்கள் தங்களின் மனைவியை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்று அதிர்ச்சித்தகவலை தெரிவிக்கிறார் க்ரே நியூமென் என்ற எழுத்தாளர்.
மனித மனதில் எண்ணற்ற ஆசைகள் குடியேறி ஆட்டிப்படைக்கின்றன. பணம், பொருள் மட்டுமல்ல பாலியல் உணர்வுகளும் தூண்டிவிடப்பட்டு ஆண்களையும், பெண்களையும் ஆட்டிப்படைக்கிறது. இதனால் மரபு மீறிய செயல்களும், இலக்கணப்பிழைகளும் ஆங்காங்கே நேர்கிறது.
எது கிடைத்தாலும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கிடைத்தால் நல்லாருக்குமே என்ற மனதின் அடித்தள ஆசைதான் இதற்கெல்லாம் காரணம். இது செக்ஸுக்கும் பொருந்தும்.
என்னதான் தேவதை மாதிரி மனைவி இருந்தாலும், பிசாசு மாதிரி ஒரு எக்ஸ்ட்ரா பிட்டிங் வேண்டும் என்பது ஆண்களின் ஆசையாக இருக்கிறது. இது உண்மைதான் என்கிறார் இங்கிலாந்தின் பிரபல நாவலாசிரியரும், திரைக்கதை எழுத்தாளருமான வில்லியம் நிக்கல்சன். எவ்வளவு அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், ஆண்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் வேறு பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளத் தயங்க மாட்டார்களாம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஆண்களைப் பொறுத்தவரை போதும் என்ற மனமே இல்லை. ஆண்களின் ஆசையும், செக்ஸ் ஆசையும் முற்றுப்புள்ளி இல்லாத தொடர் கதையாகவே உள்ளது. எவ்வளவு செக்ஸ் கிடைத்தாலும் அதை அனுபவிக்கவே அவர்கள் முயலுகிறார்கள். போதும் என்று நிறுத்திக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. வேடிக்கைக்காகவும், ஆசைக்காகவும்தான் இந்த கள்ள உறவுகளை அவர்கள் நாடுகிறார்கள்.
செக்ஸ் விஷயத்தில் என்னதான் அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், வாய்ப்பு கிடைத்தால், பின்விளைவுகள் இருக்காது என்று உறுதியாகத் தெரிந்தால் இன்னொரு பெண்ணுடன் உறவு வைக்க அவர்கள் தயங்க மாட்டார்கள்.
ஆண்களைப் பொறுத்தவரை செக்ஸ் உணர்வு என்பது புற நிகழ்வுகளாகவே உள்ளதாக செக்ஸாலஜிஸ்டுகள் கூறுகிறார்கள். உணர்வுப்பூர்வமான செக்ஸ் உணர்வு அவர்களுக்கு வருவதில்லை. வெளி நிகழ்வுகளின் தூண்டுதலால் செக்ஸ் உணர்வை அவர்கள் அடைகிறார்கள். அந்த உணர்வை உடனடியாக வெளிப்படுத்தி விடவும் துடிக்கிறார்கள். இந்த போலியான உணர்வுகளுக்கு அவர்கள் காதல் என்றும் பெயர் வைக்கத் தயங்குவதில்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்தது, அந்தப் பெண்ணே சம்மதித்தாள், அதனால்தான் உறவு வைத்துக் கொண்டேன் என்று கூறும் ஆண்களே அதிகம். அதாவது பழியை பெண்கள் பக்கம் நைசாக திருப்பி விட்டு விடுகிறார்கள்.
இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். குறிப்பாக மனைவிகள். தங்களது கணவர்கள் நல்லவர்கள், ஒழுக்கமானவர்கள், பிறன் மனை நோக்காதவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் ஆண்களின் புத்தியை பெண்கள் அத்தனை சீக்கிரம் புரிந்து கொள்வதில்லை.
இது குறித்து எழுதியுள்ள எழுத்தாளர் நிக்கல்சன், நானும் ஒரு சராசரி ஆண்தான். எனது மனமும் அதுபோன்ற எண்ணங்களில் அலை பாய்ந்ததுண்டு. எனக்கும் வாய்ப்பு கிடைத்தால் நானும் அந்தத் தவறைச் செய்வேன்தான்-பின்விளைவுகள் இல்லாவிட்டால். ஆனால் நான் தவறு செய்தால் அதற்கான பின்விளைவுகள் உடனே என்னைத் தேடி வந்து விடும். எனவேதான் இதுவரை நான் அந்தத் தவறைச் செய்யவில்லை. செய்யும் வாய்ப்பும் இல்லை என்றே கருதுகிறேன் என்கிறார் நிக்கல்சன்.
நிக்கல்சன் தொடர்ந்து கூறுகையில், ஆண்களுக்கும், பெண்களுக்கும் செக்ஸ் விஷயத்தில் நிறைய வேற்றுமை இருக்கிறது பெண்களின் நம்பிக்கையை குழி தோண்டிப் புதைப்பதைத்தான் ஆண்கள் முதலில் செய்கிறார்கள். யாருடனும் நாம் உறவு கொள்ளலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விடுகிறார்கள். அதை உரிமையாகாவும் கருதிக் கொள்கிறார்கள்.
ஆனால் பெண்கள் நம்பிக்கை அடிப்படையிலும், நீண்ட கால உறவின் அடிப்படையிலும்தான் பிறரிடம் தங்களை உடல் ரீதியாக ஒப்படைக்க முன்வருவார்கள். இவனை நாம் நம்பலாம், இவனிடம் நம்மைக் கொடுத்தால் நலமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் ஒரு ஆணிடம் தங்களைக் கொடுக்க முன்வருகிறார்கள் என்கிறார் எழுத்தாளர்.
எது எப்படி இருந்தாலும், செக்ஸ் என்பது உடல் வேட்கைக்காக மட்டுமல்ல, அதில் சற்று உண்மையான உணர்வும் இருக்க வேண்டும் என்பதை இரு பாலினரும், குறிப்பாக ஆண்கள் புரிந்து கொள்வதுதான் நல்லது என்கிறார் எழுத்தாளர் நிக்கல்சன்.
இதற்கான எல்லா ஆண்களுமே தப்பு செய்பவர்கள் என்று சொல்ல வரவில்லை. சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமைந்தால் யார் வேண்டுமானாலும் தவறு செய்வார்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
தொடத் தொட மலர்வது பூ மட்டுமல்ல! பெண்ணும்தான்!!
ஸ்பரிசம் என்பது படுக்கை அறையில் முக்கிய அம்சம். ஒவ்வொரு செல்லும் மலரும் வகையில் தொடுவதற்கு கலைநயமும், கற்பனை வளமும் தேவை. கண்களால் தீண்டுதல், கைகளால் தீண்டுதல், இறகு, கர்ச்சிப், பூக்களால் தீண்டுதல் என பலவித தீண்டல்கள் இருக்கின்றன. தீண்ட தீண்ட தீயாய் எரியும், பின்னர் கூடலுக்கான தேடல் தொடங்கும் என்கின்றனர் கவிஞர்கள். எந்த விதமான தீண்டல்களை பெண்கள் விரும்புகின்றனர் என்று பெரிய பட்டியலே இருக்கிறது. நிபுணர்களும், அனுபவசாலிகளும் கூறியுள்ளதை படியுங்களேன்.
படுக்கை அறையில் எடுத்தோமா, கவிழ்த்தோமா என்று இருப்பதை யாரும் விரும்புவதில்லை. மெதுவாய் ஒரு பார்வை. இன்றைக்கு ஏதாவது ஸ்பெசலா இருக்குமா என்பதை பார்வையின் மூலமே கேட்டு தெரிந்து கொள்ளலாமாம். எதிர் தரப்பில் இருந்து கிரீன் சிக்னல் வந்து விட்டால் போதும் அப்புறம் உடனே அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்து விடவேண்டாம் மூடு மாறிவிடும். மெதுவாய் முன்னேறுங்கள்.
வேலை பார்த்து டயர்டா இருக்கா கை, கால் பிடிச்சு விடட்டா, மசாஜ் செய்யவா என்று தொடங்குங்களேன். ஒரு சிலருக்கு கைகளால் தொடுவது கிளர்ச்சியைத் தரும் சிலருக்கு சில பொருட்களைக் கொண்டு தொடுவது அதீத கிளர்ச்சியை கொடுக்கும்.காட்டன் கர்ச்சிப் கொண்டு உங்கள் துணையின் மேனியில் மெதுவாய் தீண்டுங்களேன். சிலிர்ப்பாய் ஒரு அனுபவம் ஏற்படும். அதுவும் முதுகுப் பிரதேசம் முன் விளையாட்டுக்கு ஏற்ற இடம். அந்த இடத்தில் கர்ச்சிப் வைத்து போடும் கோலம் அதிக கிளர்ச்சியை தருமாம்.
மயிலிறகு அல்லது மென்மையான பறவையின் ஒற்றை இறகினைக் கொண்டு நெற்றியில் தொடங்குங்கள். இந்த விளையாட்டு ஆண், பெண் இருவருக்குமே விருப்பமானது. நெற்றியில் ஒற்றை இறகைக் கொண்டு தீண்டும் இன்பத்திற்கு நிகர் வேறு எதுவும் கிடையாது என்கின்றனர் அனுபவசாலிகள். ஒவ்வொரு பகுதியாய் தொட தொட உணர்ச்சியின் வேகமும் கூடுமாம்.
திராட்சைப் பழம் சாப்பிட மட்டுமல்ல விளையாட்டுக்கு ஏற்றது. அதுவும் ப்ரிட்ஜில் வைத்த திராட்சை என்றால் இன்னும் சுவாரஸ்யம் அதிகம். உடலில் ஒவ்வொரு பகுதியிலும் ஜில் என்ற உணர்வு ஏற்பட்டு கிளர்ச்சியை அதிகரிக்கும்.
பூக்களால் தீண்டுவது ரொமான்ஸ் உணர்வை அதிகரிக்கும். அதுவும் ஒற்றை ரோஜாப்பூ ஒவ்வொரு இடமாய் தொட தொட அந்த இடத்தில் ஒவ்வொரு செல்லும் மலருமாம்.
சாக்லேட், ஐஸ்கிரீம் பிடிக்காத பெண்கள் இருக்கமாட்டார்கள். அவர்களுக்கு ஏற்ற விளையாட்டு இது. உடலின் மிக விருப்பமான இடங்களில் ஐஸ்கிரீம் அல்லது சாக்லேட் கிரீமினை பூசுங்கள். கைகளால் அல்ல சிறிய குச்சியை வைத்து மெதுவாய் கோலமிடுங்கள் உற்சாகம் அதிகரிக்கும். பின்னர் அந்த கிரீமினை மெதுவாய் சுவையுங்கள். செம டெஸ்ட் என்று நீங்களே சொல்லும் அளவிற்கு உணர்ச்சிக்குவியலாய் மாறிப்போவார் உங்கள் துணை.
இதுபோன்ற தீண்டல் விளையாட்டு சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. யாருக்கு எந்த விதமான விளையாட்டு பிடிக்குமோ அதை கேட்டு அதில் கற்பனையையும், கலை நயத்தையும் புகுத்துங்கள். அப்புறம் என்ன உங்களுக்கான நேரம் பொன்னான நேரமாகும் என்கின்றனர் நிபுணர்கள்.
இப்படித் தொடங்குங்கள்ஸ!
படுக்கை ரெடி, துணையும் ரெடி, மூடும் ஓ.கேஸ எல்லாம் ஆயத்தமான நிலையில் இருந்தாலும், சிலருக்கு எப்படித் தொடங்குவது, எங்கிருந்து தொடங்குவது, எப்படித் தொடருவது என்பதில் குழப்பம் வரும். அப்படிப்பட்ட குழப்பத்தை ரொம்ப ஈசியாக சமாளிக்கலாம்.. எப்படின்னு கேட்கறீங்களா.. தொடர்ந்து படியுங்கள்.
அருமையான செக்ஸ் இன்று நமக்குத் தேவை என்று நீங்கள் முடிவு செய்து விட்டால் முதலில் அமைதியாக வேலைகளைத் தொடங்க வேண்டும். ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கலையா என்ற பழமொழி செக்ஸுக்கும் பொருந்தும். எவன் ஒருவன் நிதானமாக செயல்படுகிறானோ அவனுக்கே அட்டகாசமான செக்ஸ் அமையும் என்கிறார்கள் அனுபவஸ்தர்கள்.
தொடுதல்தான் செக்ஸ் உணர்வுகளை தீ போல கொளுந்து விட்டு எரியச் செய்ய நல்லதொரு ஊடகமாகும். எனவே இருவரது உடல்களிலும் உங்களது தொடுதல்கள் எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு உணர்வுகளும் பற்றிக் கொண்டு எரியும், தொட்டுத் தொடருவதில் ஒரு பெரும் சுவாரஸ்யம் உருவாகும்.
தொடுதலை இரண்டு வழிகளில் செய்யலாம். உதடுகள் மூலமாகவும் செய்யலாம், விரல்கள் மூலமாகவும் செய்யலாம். இதில் உங்களது துணைக்கு எது ஓ.கே. என்பதை தெரிந்து கொண்டு, வெட்கப்படாமல் வாய் விட்டுக் கேளுங்கள், நீங்களும் உங்களுக்கு எது சவுகரியம் என்று சொல்லுங்கள், தப்பில்லை.
சிலருக்கு உதடுகள் மூலம் உடல் எங்கும் கோலம் போடுவது பிடிக்கும். துணைக்கும் கூட அது பிடித்திருந்தால் உதடுகளிலேயே ஆரம்பியுங்கள். சிலருக்கு தலையிலிருந்து கீழே போவது பிடிக்கும், சிலருக்கு காலிலிருந்து தொடங்குவது பிடித்திருக்கும்.
நாம் காலிலிருந்து தொடங்குவோம். முதலில் துணையின் கால் விரல்களை மென்மையாகப் பிடித்து சொடுக்கு எடுங்கள். சொடுக்கெடுக்கும்போது வலிக்கக் கூடாது, மென்மையாக, சுகமாக இருக்க வேண்டும். சொடுக்கு எடுக்கும்போதே பலருக்கு சொக்க ஆரம்பித்து விடும். அப்படி ஒரு சுகத்தை உங்களது கை விரல்கள் துணையின் கால் விரல்களுக்குப் பாய்ச்ச வேண்டும்.
பிறகு உள்ளங்காலை மெதுவாக வருடிக் கொடுங்கள். கூடவே செல்ல மொழிகளையும் பேசுங்கள். பாதம் ரொம்ப வலிக்குதாடா செல்லம், இப்ப நல்லாருக்கா, சுகமா இருக்கா என்று கொஞ்சியபடியே தொடருங்கள்.
பாதம் முடிந்து விட்டதா.. அப்படியே மெதுவாக மேலே வாருங்கள். இப்போது காலுக்கு வந்து விட்டோம். கால் பகுதியைப் போல ஒரு சுவாரஸ்யமான ஏரியா எதுவுமே கிடையாது. பார்க்க சாதாரணமாக இருக்கும். ஆனால் ஏகப்பட்ட முருங்கைக்காய் சமாச்சாரம் காலில்தான் உள்ளது.
குறிப்பாக காலின் பின்புறம் ஏகப்பட்ட உணர்ச்சி நரம்புகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அதாவது கெண்டைக்காலில். இந்தப் பகுதியில் உங்களது உதடுகளால் மெதுவாக முத்தமிட்டு அப்படியே தொடருங்கள். உணர்ச்சிகளின் உந்துதலால் உங்களது துணை நெளிவதைப் பார்க்கலாம்.
காலில் தொடங்கி அப்படியே தொடைப் பகுதிக்கு வாருங்கள். இந்த இடமும் உணர்ச்சிகரமான ஒரு பகுதிதான். தொடையில் உங்களது உதடுகள் விளையாடும் விதத்தைப் பொறுத்து துணையின் கொதிப்பு கூடும். தொடைகளில் பற்றிக் கொண்ட தீ அணைவதற்கு முன்பு அப்படியே இரு கால்களின் மையப்பகுதிக்கு அதாவது முக்கியப் பகுதிக்குச் செல்லுங்கள்.
இந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. அதை நீங்களாகவே செய்ய முடியும். அந்த இடத்தில் நீங்கள் என்ன செய்தாலும் அது லாபமாகவே முடியும். விரல்களையும் கூட முடிந்தவரை பயன்படுத்தலாம், பாதுகாப்பாக இருக்கட்டும் எது செய்தாலும்.
பின்னர் வயிற்றுக்கு வாருங்கள். தொப்புளில் முத்தமிடுங்கள். வயிற்றுப் பகுதி முழுவதும் உங்கள் உதடுகள் மற்றும் நாவால் வருடுங்கள், முத்தமிடுங்கள், விரல்களால் கோலம் போடுங்கள்.
பிறகு இடுப்புப் பகுதி. இங்கு முத்தமிடும்போது உங்களது துணை மின்னல் தாக்கியதைப் போல நெளிவதைப் பார்க்கலாம். முத்தமிடுவதன் மூலம் இடுப்பின் வழியாக உணர்ச்சிகளுக்கு மொத்தமாக நீங்கள் அறைகூவல் விடுக்கலாம்.
பிறகு மார்பு. பெண்களின் மார்புப் பகுதிகளும் உணர்ச்சிகளின் கொந்தளிப்புக் கூடம்தான். இந்த உறுப்புகளில் உங்களது விளையாட்டு எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து நீங்கள் காமத்தில் வெல்லலாம்.
பிறகு முகத்திற்குப் போங்கள். உதடுகளில் உதடுகளைப் பொருத்தி இதழ் அமுதம் பருகுங்கள். கன்னத்தில் முத்தமிடுங்கள். காதுகளில் மென்மையாக முத்தமிடுங்கள், நாவால் வருடுங்கள். விரல்களால் தலைமுடி கோதுங்கள், கண்களில் முத்தமிடுங்கள். தலையில் முத்தமிடுங்கள்.
இப்படி ஒவ்வொன்றாக செய்து வரும்போதே உங்களது துணை முழுமையான உறவுக்குத் தயாராகி விடுவார். எல்லாம் சரியான நிலைக்கு வந்து விட்டது என்பதை உணரும்போது உறவுக்குள் புகுங்கள்ஸ
அதில் திருப்தியில்லையா? விரக்தி அதிகரிக்குமாம்!
ஆர்வமும், ஆசையும் அதிகமாக இருந்தால்தான் துணையுடன் உற்சாகமாக உறவில் ஈடுபடமுடியும். ஆனால் செக்ஸ் குறித்த சிந்தனைகள் இல்லாமலோ, அது பற்றிய ஆசையோ குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்திதான் எஞ்சியிருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். சர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் நினைவுகளும், அது தொடர்பான எண்ணங்களும் நம்மை உயிர்போடு வைத்திருக்கும். அதேசமயம் பாலுணர்வு குறைவாக இருந்தாலோ, நாம்மால் துணையுடன் இயல்பாக உறவில் ஈடுபடமுடியவில்லை என்றாலோ ஒருவித குற்ற உணர்வு ஆட்கொள்ளும். இது தொடர்பாக செக்ஸ் ஆர்வம் குறைவாக இருந்த 5098 பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த பெண்களிடம் கடந்த 12 மாதங்களில் செக்ஸ் விஷயத்தில் எப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள், அந்த காலகட்டத்தில் அவர்களின் செக்ஸ் வாழ்க்கை எப்படி இருந்தது. செக்ஸ் வைத்துக் கொள்ளாதபோது அவர்களிடம் விரக்தித் தன்மை எந்த அளவுக்கு இருந்தது என்பது உள்பட பல அம்சங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பெண்களின் பல்வேறு குணாதிசயங்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
அப்போது செக்ஸ் ஆர்வம் குறைவாக உள்ள பெண்களிடையே விரக்தி அதிகம் இருந்ததாம். பலருக்கு செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியே இல்லாத நிலையும் காணப்பட்டதாம். மேலும் தங்களால் செக்ஸ் வாழ்க்கையில் பூரணமாக ஈடுபட முடியவில்லையே என்ற ஆதங்கம் அதிகம் இருந்ததாம்.
ஆய்வின் முடிவில், செக்ஸ் வைத்துக் கொள்ளாத சமயங்களில் அல்லது செக்ஸ் ஆர்வம் குறைவாக இருந்த சமயங்களில் இவர்கள் பெருமளவில் விரக்தியுடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செக்ஸ் ஆர்வம் குறைவாக இருந்தபோதெல்லாம் இவர்களுக்கு எதிர்மறையான சிந்தனைகள் அதிகம் இருந்ததாகவும் ஆய்வு கூறுகிறது.
இயல்பான செக்ஸ் வாழ்க்கை உடையவர்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் மிகவும் குறைந்த அளவே வருவதாகவும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறும் இந்தக் கழகத்தின் மாநாட்டில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
வாசனையை வைத்து ‘மூடை’ அறிவதில் பெண்கள் கில்லாடிகளாம்!
ஒவ்வொரு உயிரினத்திற்கும் பாலியல் தேவை இருக்கும். பாலுணர்வு கிளர்ச்சி ஏற்படும்போது அதற்குரிய துணையுடன் இணைந்து தங்களின் ஆர்வத்தினை தணித்துக்கொள்ளும். விலங்குகள் தங்களின் தேவையை அதற்கேற்ப சங்கேத சப்தங்களை எழுப்பி உணர்த்தும். இணையின் உடலில் இருந்து எழும் வாசனையை மோப்பம் பிடித்து பின்னர் இணையுமாம். அதேபோல ஆணின் உடலில் எழும் ஒருவித வாசனை அவர்களின் மூடினை உணர்த்தும் என்கின்றனர் நிபுணர்கள். பெண்களுக்கு மோப்ப சக்தி சரியாக இருந்தால் சரியான நேரத்தில் தங்களின் துணையுடன் இணையலாமாம்.
ஆண்களின் மூடு பொறுத்து அவர்களின் உடலின் செக்ஸ் ஹார்மோன் சுரக்கிறது. இது வியர்வை மூலம் வாசனையாக வெளிப்படுகிறது. இந்த வாசனையை இனம் கண்டறிந்து கொள்ளும் பெண்கள் தங்களின் துணைவரின் மூடுக்கு ஏற்ப தயாராகிவிடுகின்றனராம்.
சேலைக்கட்டும் பெண்ணுக்கு மட்டுமல்ல வாசனை ஆணுக்கும் இதுபோன்ற வாசனை எழுமாம். அதேபோல் மூச்சின் லயமும் பெண்ணுக்கு பிடிபடுமாம். இதனை வைத்துதான் பசியறிந்து பரிமாறுகின்றனர் நம் இந்திய பெண்மணிகள்.
இந்த ஆய்வுக்காக, 20 வயதுகளில் இருக்கும் 19 பெண்களிடம் இரு வகையான ஆண்களின் வியர்வை சாம்பிள்களைக் கொடுத்துள்ளனர். ஒன்று சாதாரணமான வியர்வை, இன்னொன்று செக்ஸ் மூடில் இருந்தபோது எடுக்கப்பட்ட வியர்வை சாம்பிள். உடலின் அக்குள் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வியர்வை வாசனையை எடுக்க அதிகம் மெனக்கெட்டுள்ளனர் ஆய்வாளர்கள்.
ஆய்வில் பங்கேற்ற ஆண்களுக்கு முதலில் கல்வி சம்பந்தப்பட்ட, 20 நிமிடம் ஓடும் வீடியோவை பார்க்க வைத்துள்ளனர் அப்போது ஆண்களிடம் ஏற்பட்ட வியர்வை சாம்பிளாக சேகரிக்கப்பட்டது. பின்னர் அடுத்த 20 நிமிடம் செக்ஸ் படத்தை ஓட விட்டு பார்க்க வைத்தனர். அப்போது கிடைத்த வியர்வை செக்ஸ் மூடில் இருந்ததாக வரிசைப்படுத்தப்பட்டது. இந்த வியர்வை சாம்பிள்களை தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களிடம் கொடுத்தனர்.
ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள், இந்த வியர்வையை நுகர்ந்து பார்த்தபோது அவர்களின் மூளை செயல்பாட்டை ஆய்வாளர்கள் கண்காணித்தனர். பெண்கள் வியர்வையை நுகர்ந்து பார்த்தபோது அவர்களுக்கு எதுவும் தெரியவில்லையாம். ஆனால் அவர்களின் மூளை பல்வேறு விதமாக ரியாக்ட் செய்துள்ளது.
இது குறித்து ஆய்வுக் குழுவின் தலைவரான டெக்ஸாஸ் ரைஸ் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் டெனிஸ் சென் கூறுகையில், சாதாரண வியர்வையை நுகர்ந்து பார்த்தபோது எந்தவகையான செயல்பாடுகளும் மூளையில் காணப்படவில்லை. அதே சமயம், ஆண்கள் செக்ஸ் மூடில் இருந்தபோது சேகரித்த வியர்வையை பெண்கள் நுகர்ந்து பார்த்தபோது அவர்களின் மூளையின் பல இடங்கள் தூண்டப்பட்டது என்று கூறியுள்ளார்.
எனவே மூடு பார்த்து முன்னேறுவதைப் போல வாசனைப் பார்த்து இனி ஆசையை புரிந்து கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள். உங்க மோப்ப சக்தி எப்படி? ஒர்க் அவுட் ஆகுமா?