உதட்டில் உரசி. அங்கங்கே தொட்டு.

17 Jan,2014
 

 

 


உதட்டில் உரசி. அங்கங்கே தொட்டு.


 

காமம் மிக உன்னதமானது. அதை சரியாக கையாள்பவர்கள் மட்டுமே சரியான அளவில் இன்பத்தை நுகர்கின்றனர். கணவன் மனைவி இடையேயான காமம் ஒருவித பரவசநிலையை தரக்கூடியது என்கின்றனர் அனுபவசாலிகள். படுக்கை அறையில் தொடங்கும் விளையாட்டு ஒவ்வொரு நொடியும் இன்பத்தை தரவேண்டும். முழுவதுமாக ஆளும் முன் சில சந்தோச விளையாட்டுக்கள் விளையாடவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். சில நிமிடங்களில் முடிந்து போகக்கூடியதல்ல காம விளையாட்டு. எப்பொழுது தொடுவான்? எங்கே தொடங்குவான் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி சின்னச் சின்ன ஸ்பரிசங்கள் மூலம் சிலிர்க்கச் செய்யுங்கள் என்கின்றனர் செக்ஸாலஜிஸ்ட்டுகள். மேற்கொண்டு படியுங்களேன்! தம்பதியரிடையே அன்றைய தினம் ஸ்பெசல் என்றால் அதற்கான ஆயத்தபணிகளை காலையிலேயே தொடங்கி விடுங்கள். ஒருவித எதிர்பார்ப்போடு இருக்கும் துணையை ஏங்கவைத்தால் அது சுவையை அதிகரிக்கும். அதிகம் உணர்வு நிறைந்த இடம் உதடு. முன்விளையாட்டில் முக்கிய இடம் உதட்டுக்கு உண்டு. சின்னதாய் உரசல்ஸ மயிலிறகால்.. சுண்டு விரலால் ஒரு ஸ்பரிசம் என தொடங்கினால் காதல் நெருப்பு பற்றிக் கொள்ளுமாம். காது மடல் காமத்தை தூண்டும் முக்கிய இடமாகும். அங்கே செல்லமாய் கடித்து உங்கள் துணையை சொக்க வைக்கலாம். கழுத்தின் பின்புறத்தில் உணர்வு நரம்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அங்கே சின்னச் சின்னதாய் தடவல்கள்ஸ அது விரலோ, இல்லை மெல்லிய இறகோ கொண்டும் செய்யும் செயல்கள் உணர்ச்சிகளை தூண்டிவிடுமாம். சிலரின் மூக்கு பார்த்தலே கிளர்ச்சியைத் தரும். துணையின் மூக்கு நுனியை லேசாய் கடியுங்கள். கன்னக் கதுப்பில் மெதுவாய் முத்தமிடுங்கள் இதன் மூலம் உற்சாகம் அதிகரிக்குமாம். தம்பதியரிடையே மசாஜ் செய்வது முக்கியமான முன்விளையாட்டு என்கின்றனர் நிபுணர்கள். உணர்வுக்குவியலாய் இருக்கும் துணையை அங்கங்கே தொட்டு, தடவி செய்யும் விளையாட்டு உற்சாகத்தை அதிகரிக்கச் செய்யும். சில சமயம் விரல்களால் தொடுவதை விட சில பொருட்கள் உணர்வுகளை கிளறிவிடும். நெருக்கமாய் அமர்ந்து காது மடலில் விடும் மூச்சுக்காற்றுஸ மெல்லிய கர்ச்சிப்பினால் உடல் முழுவதும் போடும் கோலம்ஸ என சந்தோச செயல்பாடுகளால் தொடாமல் தொடுங்கள். முதுகு தண்டுவடம் அதீத உணர்ச்சிகளை கொண்டது. ஒவ்வொரு முடிச்சையும் தொடுவதன் மூலம் உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்க்கும் என்கின்றனர் நிபுணர்கள். அதுவும் ஒற்றை விரலால் கொடுக்கும் அழுத்தம் உடலை காற்றில் பறக்கச் செய்யுமாம். கால் தொடை பகுதியில் உள்ள முக்கிய நரம்புகளை தூண்டிவிடுவதன் மூலம் உற்சாகம் ஏற்படும் என்கின்றனர். மசாஜ் செய்யும் போது கால்களில் மெதுவாய் செய்துவிடும் மசாஜ் மூலம் சிலிர்க்கச் செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள். படுக்கை அறையில் ஆண்களால் எளிதில் உறவுக்கு தயாராகிவிட முடியும். ஆனால் பெண்கள் பாலியல் கிளர்ச்சியடைவதற்கு கூடுதல் நேரம் பிடிக்கும். எனவே முன்விளையாட்டுக்கள் மூலம் மனைவியை கிளர்ச்சியுறச்செய்யலாம். இதனால் இருவருக்கும் மனமொத்து உறவில் ஈடுபடமுடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

தாம்பத்யத்தில் தன்னம்பிக்கை அவசியம்ஸ!


புதிதாக திருமணம் முடிந்து சில வருடங்கள் வரை கணவரின் அருகிலேயே இருந்து அவருக்கு தேவையானவைகளை பார்த்து பார்த்து கவனிப்பார்கள் இல்லத்தரசிகள். அப்புறம் குழந்தை பிறந்த உடன் குடும்பத்தில் வேலை அதிகரிக்கும். இதனால் கணவரை சரியாக கவனிக்காமல் டீலில் விட்டுவிடுவார்கள். இதனால் குடும்பத்தில் சிக்கல்கள் எழுகிறது. கணவரின் கவனம் திசைமாறுகிறது. இதை தவிர்க்க, குடும்பத்தில் கணவர், குழந்தைகளிடையே பேலன்ஸ் செய்யவும், மீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவதற்கும் பெண்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் உளவியல் நிபுணர்கள்.

தேங்கிப் போகாதீர்கள்

பெண்களுக்கு திருமண வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருக்கும் தாம்பத்திய உறவு ஈர்ப்பு, போகப் போக சமைத்தல், வீட்டைச் சுத்தம் செய்தல், குழந்தைகளைக் கவனித்தல் என்று மங்கிப் போய்விடுகிறது. உங்களின் தாம்பத்ய வாழ்க்கையை தேக்கமடைய விடாதீர்கள் வாழ்க்கை தேங்கிக் கிடப்பதற்கு அனுமதிக்காதீர்கள். தாம்பத்ய உறவு வெறும் சடங்காக மாறிவருதாக உணரத் தொடங்கினால் அதில் சுவாரசியம் கூட்டுவதற்காக, கணவருக்கு ஆர்வம் ஊட்டுவதற்கு என்ன செய்யலாம் என்று நீங்கள் யோசிக்க வேண்டும்.

அழகாய் உணருங்கள்

சுயமரியாதையில்தான் தன்னம்பிக்கை தோன்றுகிறது. உடலைப் பற்றி கவலைப்படாமல், அதிக ஆர்வமில்லாமலும் உங்களை நீங்கள் உணர்ந்தால், செக்ஸியாக தோன்றுவதற்கான விஷயங்களைச் செய்யுங்கள்.அழகு நிலையம் சென்று அழகுபடுத்திக்கொள்ளலாம். கூந்தலில் கவனம் செலுத்துங்கள். பழைய உள்ளாடைகளைத் தூக்கிப் போட்டு விட்டு புதிய கவர்ச்சிகரமான உள்ளாடைகளுக்கு மாறுங்கள்.

உங்களை உணருங்கள்

கச்சிதமான உடம்பைக் கொண்ட பெண்களை விட, படுக்கையறையில் தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண்களைத்தான் ஆண்களுக்குப் பிடிக்கிறதாம். உடலில் கூடியிருக்கும் எடையை மறந்துவிட்டு படுக்கையறையில் உற்சாகம் காட்டுங்கள். பாலுணர்வு சிந்தனை பொங்கட்டும். உங்கள் உடம்பைப் பற்றி நீங்களே தெளிவாக அறிந்துகொள்ளுங்கள். எங்கே தொட்டால் பிடிக்கிறது, எங்கே உணர்ச்சி மேலிடுகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தன்னம்பிக்கை பெண்கள்

தாம்பத்ய உறவின் போது செயல்பாட்டில் திறமை பெற்றவராக மாறுங்கள். அது எளிமையானதாக, வழக்கமானதாக இருக்கலாம். தைரியமானதாக, சந்தோஷ அதிர்வளிப்பதாக இருக்கலாம். ஆனால் அந்தக் குறிப்பிட்ட செயல்பாட்டில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் தன்னம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும்.

சந்தோஷத்தில் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று திருப்தி அடைந்துவிடாதீர்கள்.வேண்டும் வேண்டும் என்று கேளுங்கள். விரும்புவதைத் தைரியமாகச் சொல்லுங்கள். ஆண்கள், பெண்களின் மனங்களைப் படிப்பவர்கள் அல்லர். எனவே அவர்கள் சரியாகச் செயல்படவில்லை என்றால் அவர்களைத் திசைதிருப்பி சரியான வழியில் செலுத்துங்கள்.

மகிழ்ச்சிப் படுத்துங்கள்

படுக்கையறையில் எதைப்பற்றியில் கவலைப்படாமல் அமைதியாக இருக்கவேண்டாம். எப்பொழுதுமே உங்களவர்தான் தொடங்கவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே முன்முயற்சியில் ஈடுபடுங்கள். `அவருடைய’ விருப்பங்களைக் கேளுங்கள். அவர் முழுமையாகத் தயாராவ தற்கு நேரம் கொடுங்கள். புதிய முறைகளில் அவரைத் தூண்டுங்கள், புதிய பரிட்சார்த்த முறைகளில் ஈடுபடுங்கள். புதிய இன்பம், புதிய மகிழ்ச்சி வெளிப்படுவதை உணர்ந்து நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள்.

மனதுக்கு மாற்றம், மகிழ்ச்சி தரும் புதிய இடங்களுக்குத் துணைவருடன் செல்லுங்கள். மனதில் மகிழ்ச்சி பொங்குவதை உணருங்கள். அந்த உற்சாகம், தாம்பத்யத்திலும் வெளிப்படும்.

 

அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது..

 


அதென்னவோ தெரியவில்லை, தற்போது பலருக்கும் தங்கள் துணை அல்லது காதல் ஜோடியுடன் நெருக்கமாக இருக்கும் தருணத்தை படம்பிடிக்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இது, பெரும்பாலும் பெண்களை தீராத மனவேதனைக்கும், சோகத்திற்கும் உள்ளாக்குகிறது.

23 வயதான அழகுப் பாடகி துலிசியா இப்போது அந்த `அந்தரங்க படப்பிடிப்பு’ சோகத்தில் சிக்கித் தவிக்கிறார். இந்தியாவைச் சேர்ந்த இவர், தனது 17 வயதிலிருந்தே ஜஸ்டின் எட்வர்ட்ஸ் என்பவரை காதலித்து வந்தார். துலிசியா வாழ்க் கையில் ஆறு ஆண்டுகள் கதாநாயகனாக இருந்த அவர், இப்போது வில்லனாகி துலிசியாவை ஏமாற்றிவிட்டார். இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த படுக்கையறைக் காட்சிகள் சமீபத் தில் இணைய தளத்தில் வெளியாகி, பார்ப்பவர்களை கண்கூசச் செய்தன.

“நான் ஏறக்குறைய அவருடன் மனைவி போலவே வாழ்ந்தேன். அவரை ஆழமாக நேசித் தேன். திருமணம், குழந்தைகள் பற்றியெல்லாம் கூட நாங்கள் பேசி முடிவெடுத்திருந்தோம். அந்த சூழ்நிலையில் எங்களுக்குள் இருந்த அந்த அந்தரங்கம் அனைத் தும் வெளியாகி, இப்படி ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்று நான் கனவில்கூட நினைத்திருக்கவில்லை.” என்று புலம்புகிறார் துலிசியா. அந்த அந்தரங்க காட்சிகள் வெளியாக, தன் காதலன் தான் காரணம் என்றும் கண்கலங்குகிறார்.

இவரைப் போலவே தாங்கள் உயிருக்குயிராக நேசித்தவரை கண்மூடித்தனமாக நம்பி, தன்னை ஒப்படைத்ததன் எதிர் விளைவை இன்று பலரும் அனுபவித்துக் கொண்டிருக் கிறார்கள். பெண்கள் மட்டுமல்ல, பெண்களால் படம்பிடிக்கப்பட்டு பழிவாங்கப்பட்ட ஆண் களும் இந்த சோகப்பட்டியலில் இணைந்திருக்கவே செய்கிறார்கள்.

 

பிரபலமான பெண்மணியின் மகன் அவர். உயர்ந்த துறை படிப்பு ஒன்றை நிறைவு செய்து கொண்டிருந்தபோது, அவருக்கும், அதே துறையில் இருக்கும் பெண்ணுக்கும் காதல் வந்தது. சில மாதங்களிலே கட்டில் வரை சென்றுவிட்டது. அதை அவள் படம்பிடித்தது அவருக்கு தெரியாது. `எல்லாம்’ நடந்து முடிந்த பின்பு அவர் எச்சரிக்கையாகி, காதலி எப்படிப்பட்டவள் என்று விசாரிக்கத் தொடங்கினார். ஏற்கனவே ஒன்றிரண்டு காதலர்கள் இருந்ததும், அவர்களிடமும் அவள் எல்லைமீறி பழகி இருப்பதும் அவருக்கு தெரியவந்தது. அதனால் அவளது தொடர்பை துண்டித்துவிட ஆர்வம் காட்டினார். அவளோ தன்னை திருமணம் செய்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தாள்.

இந்த நிலையில் அவருக்கு வேறு திருமண ஏற்பாடு நடந்தது. பெண் மிக வசதிபடைத்த குடும்பத்தை சேர்ந்தவள். திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதை அமைதியாக கவனித்து வந்த அந்த காதலி, திருமணத்திற்கு பத்து நாட்களுக்கு முன்பு திடீரென்று களத்தில் இறங்கினாள். தான் படம் பிடித்து வைத்திருந்ததை அப்படியே பெண் வீட் டாருக்கு போட்டுக்காட்டி ஒரு மணி நேரத்திலே பூகம்பத்தை ஏற்படுத்தி, திருமணத்தையே தடுத்து நிறுத்திவிட்டாள். `அவள் படம் பிடித்தது தனக்கு தெரியவே தெரியாது’ என்று தலையில் அடித்துக்கொண்டார், அந்த நபர்.

“அந்தரங்கத் தருணங்களை காமிராவில் பதிவு செய்யும் ஆசை ஆண்களிடம் அதிகரித்து வருகிறது. அது தங்கள் நெருக்கத்தின் அடையாளம் என்று கருதி பெண்களும் அதற்கு அனுமதித்து விடுகிறார்கள். ஆனால் பல நேரங்களில் ஆண்கள் `அதை’த் தங்கள் நண்பர்களிடம் காட்டி மகிழ்கிறார்கள். இணையத்திலும் ஏற்றுகிறார்கள். செக்ஸ் காட்சி களான அவைகளை விற்று சிலர் பணமாக்கவும் செய்கிறார்கள். காதலி தன்னைப் பிரிந்து சென்றால், அவளைப் பழிவாங்கவும் அதை பயன்படுத்துகிறார்கள்”-என்கிறார், மனநல நிபுணர் சர்மா.

பிரபல செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் டி.காமராஜ் இந்த `ஆபாச படப்பிடிப்பின்’ காரணங்களை இன்னொரு கோணத்தில் அலசுகிறார். அவர் சொல்கிறார்..

“ஆணும், பெண்ணும் அந்தரங்கமாக பழகுவதை ஆவணமாக்குவது ஆதிகாலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. தான் யாரை நேசிக் கிறேன். தங்களுக்குள் எப்படிப்பட்ட உறவு இருக்கிறது என்பதை பட மாக முதலில் மனிதன் குகைகளிலும், மலைகளிலும் வரைந்து வைத் தான். பின்பு எழுதி வைத்தான். நாகரீகம் வளர்ந்த பின்பு கடிதம் வாயி லாக தங்கள் அந்தரங்கங்களை பதிவு செய்து அதை அத்தாட்சியாக பாதுகாத்தனர். பின்பு நாகரீகமான உடையோடு இருவரும் நெருக்கமாக இருந்ததை படம் பிடித்து வைத்தனர். தான் விரும்புவதை சேகரித்து பாதுகாத்துவைத்து பார்த்து மகிழும் எண்ணம் இயல்பாகவே ஆண் களுக்கும், பெண்களுக்கும் உண்டு.

இப்போது கிட்டத்தட்ட எல்லோர் கைகளிலும் செல்போனிலோ, வேறு வகையிலோ கேமிரா இருக்கிறது. அதை பயன்படுத்திப்பார்க்க விரும்புகிறார்கள். அதில் நண்பர்களோடு நிற்பது, ஓடுவது, ஆடுவது போன்றவற்றை படம் பிடிப்பதைவிட, வயதுக்கு தகுந்தபடியான அந்தரங்க விஷயங்களை படம்பிடிக்கவே சிலர் விரும்புகிறார்கள்.

முதலில் வேறுயாரையாவது அந்தரங்கமாக படம் பிடிப்பார்கள். பின்பு தம்மையே படம் பிடித்தால் என்ன என்ற எண்ணம் தோன்றும். அதற்கு தக்கபடி தன் காதலியை அணுகு வார்கள். முதலில் அவளிடம் நெருக்கமாக பழகிவிட்டு, அவளை தன்னோடு சேர்ந்து ஆபாச படம் பார்க்கவைக்கும் அளவிற்கு ஈடுபாடுகொள்ளச் செய்வார்கள். பின்பு, `திரு மணத்திற்கு முந்தைய உறவை இப்போது பலரும் தவறாக கருதுவதில்லை’ என்று வசீகர மாக பேசி, அதற்கான சம்மதத்தை பெற்றுவிடுவார்கள். அது தொடரும் போதே, `யார் யாரோ தோன்றும் அந்தரங்க படங்களை நாம் பார்க்கிறோம். அடுத்தவர்களை அந்த கோணத்தில் பார்ப்பதைவிட நாமே அப்படி இருக்கும்போது அதை படம் பிடித்துவைத்து விரும்பும்போதெல்லாம் பார்க்கலாமே. நாம் நம்மீது வைத்திருக்கும் காதலுக்கும், நம்பிக் கைக்கும் அதை ஒரு ஆவணமாக்கலாமே என்று சொல்வார்கள். இப்படித்தான் பெண் களை `படப்பிடிப்பிற்கு’ சம்மதிக்கவைக்கிறார்கள்.

ஆனால் மனித மனதிற்கு ரகசியங்களை பாதுகாக்கும் பலம் கிடையாது. மனித மனம், `ஒரு ரகசியத்தை பாதுகாப்பதால் தனக்கு சுவாரஸ்யம், சந்தோஷம் அதிகமா? அதை வெளியிடுவதால் தனக்கு சந்தோஷம் அதிகமா?’ என்று தனக்குள்ளே அடிக்கடி கேள்வி கேட்கும். அதில் வெளியிடுவதுதான் சந்தோஷம் என்ற முடிவை எடுத்துவிடும்போது, தான் பிடித்துவைத்திருக்கும் படங்களை தன்னோடு நட்பில் இருப்பவர்களிடம் காட்டுவார்கள்.

அந்த படத்தை அடுத்தவர்களுக்கு காட்டுவதன் மூலம், தனக்கு அழகான காதலி இருப்பது- அவளை தான் உறவு கொள்வது- அதை படம்பிடித்து தன்னை ஒரு சாதனை யாளன் போல் காட்டிக்கொள்வது போன்றதெல்லாம் ஈடேறும் என்று நினைப்பார்கள். அப்படி சிலரிடம் அந்த படம் பரிமாறப்படும்போது, அவர்கள் வேண்டும் என்றோ, அஜாக்கிரதை யாலோ அதை பலரும் பார்க்கும் அளவிற்கு இணையங்களில் சேர்த்துவிடுகிறார்கள். இதுதான் ஆபத்தாக மாறுகிறது.

நாங்கள் எங்களிடம் ஆலோசனைக்கு வரும் தம்பதிகளிடம் வெளி மாநிலங்களுக்கோ, வெளிநாட்டிற்கோ செல்லும் போது அங்கு ஹோட்டல்களில் செக்ஸ் வைத்துக்கொள்ளாதீர் கள். அங்கு பல இடங்களில் கேமிரா வைத்து சாதாரணமான ஊழியர்களே படம்பிடித்து, தம்பதிகள் சொந்த ஊர் வரும் முன்பே அந்த காட்சிகள் வந்துவிடுகின்றன என்று உஷார்படுத்துகிறோம்.

தற்போது ஆண்களிடம் செக்ஸ் பலகீனம் அதிகரித்து வருகிறது. அதனால் அவர்கள் `ஆக்டிவ்’ செக்சில் ஈடுபடுவதைவிட, பார்த்து மகிழுவதே போதும் என்று நினைக்கிறார்கள். அதனாலும் தன் இணையோடு சேருவதை படம்பிடிக்கிறார்கள். தாங்கள் இணையும் படத்தை பார்த்தே திருப்திபடுவது அல்லது தூண்டுதல் அடைவது போன்றவை ஆரோக்கிய மான செக்ஸ் அல்ல. அவர்களை ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் செக்ஸ் பலகீனம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் சிகிச்சை எடுத்து தங்கள் செக்ஸ் வாழ்க் கையை புதுப்பித்துக்கொள்ளவேண்டும்.

அந்தரங்கத்தை படமாக்குவது தவறான செயல். அதைவைத்து பெண்களை- ஆண்களோ, ஆண்களை- பெண்களோ மிரட்டுவது கடுமையாக தண்டிக்கவேண்டியது. அந்த பழக்கம் இருப்பவர்கள் அதிலிருந்து மீளுவதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும்”- என்கிறார், டாக்டர் டி.காமராஜ்.

மனநல ஆலோசகர் பிரீத்தி மனோகர் சொல்கிறார்ஸ

“ஆபாச படங்களை தம்பதிகள் சேர்ந்து பார்ப்பதும், காதலர்கள் சேர்ந்து பார்ப்பதும் அதிகரித்து வருகிறது. அதனால், அதுபோல் தங்கள் அந்தரங்கத்தையும் சிலர் கூச்சமில்லாமல் படம் பிடிக்கிறார் கள்.

என்னிடம் கவுன்சலிங்குக்கு ஒரு தம்பதியினர் வந்தனர். நடுத்தர வயது தம்பதிகளான அவர்கள் எப்போதும் பிசியாக தங்கள் வேலை யிலே மூழ்கிகிடப்பவர்கள். தங்கள் சக்தியை எல்லாம் வேலையிலே செலவிட்டுவிட்டு, சக்தியற்றவர்கள்போல் வீடு திரும்புவார்கள். அத னால் சாப்பிட்டுவிட்டு தூங்கிவிடுவார்கள். மூன்று மாதத்திற்கு ஒரு முறை தான் செக்ஸ் வைத்துக்கொள்வது என்ற நிலைக்கு அவர்கள் தாம்பத்ய வாழ்க்கை சுருங்கிவிட்டது.

அதனால் இருவரும் கலந்துபேசி, தங்கள் செக்ஸ் வாழ்க்கையை புதுப்பித்துக்கொள்வதற்காக ஒரு சுற்றுலா தலத்திற்கு சென்றார்கள். அங்கு அறையில் தங்கியிருந்தபோது, சந்தோஷமான மூடில் எப்போ தும் தாங்கள் பார்த்து மகிழ, தங்கள் உறவை படம்பிடித்திருக் கிறார்கள். அதை லேப்டாப்பில் போட்டு பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

திடீரென்று லேப்டாப் பழுதாகிவிட, அந்த படத்தை தங்களுக்கு தெரிந்த விதத்தில் அழித்துவிட்டு சர்வீஸ்க்கு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் சர்வீஸ் செய்தவர், அழித்த படங்களை மீண்டும் எடுத்து பார்த்ததோடு, அதை தன் நண்பர்களுக்கும் அனுப்பிவைத் திருக்கிறார். அதெல்லாம் இந்த தம்பதிக்கு தெரிந்தபோது மிகவும் அதிர்ந்துபோனார்கள். அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டது.

திருமணமான இன்னொரு பெண் என்னை சந்திக்க வந்திருந்தார். அவருக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. ஒரு குழந்தையும் இருக்கிறது. இப்போது கணவருக்கு இன்னொரு பெண்ணோடு தொடர்பு இருப்பது உறுதியாகி விட்டதால், அவரிடமிருந்து விவாகரத்து பெற விரும்புகிறார். ஆனால் திருமணமான புதிதில் இருவரும் இணைந்திருந்த படுக்கை அறை காட்சிகள் அனைத்தையும் அவள் சம்மதத்தோடு, கணவர் படம்பிடித்திருக்கிறார். அவள் என்னிடம், `நான் விவாகரத்து பெற்ற பின்பு, எதிர்காலத்தில் இன்னொரு திருமணம் செய்தால், அந்த பழைய அந்தரங்க காட்சிகளை இந்த கணவர் வெளியிட்டுவிடுவாரோ என்று பயமாக இருக்கிறது’ என்றார். பெண்களால் கணவரையும் நம்ப முடிவதில்லை. காதலரையும் நம்ப முடியவில்லை. அதனால் அவர்கள் அந்தரங்கத்தை படம்பிடிக்க அனுமதிக்காமல் இருப்பதே நல்லது..” என்று கூறும் பிரீத்தி மனோகர், காதலில் ஈடுபடும் பெண்கள் தங்கள் அந்தரங்கம் படமாவதை எப்படி தடுக்கவேண்டும்? என்றும் ஆலோசனை சொல்கிறார்..

“ஆண்கள் முதலில் பிரண்டாக பழகுவார்கள். பின்பு அவள் மீது தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி, உணர்வு ரீதியாக அவளை அணுகுவார்கள். அவள் மீது மிகுந்த அக்கறை இருப்பதுபோல் காட்டி, அவளை வசப்படுத்தி காதலிப்பார்கள்.

காதல் ஓ.கே. ஆனதும் சினிமா, பீச் என்று சுற்றுவார்கள். பின்பு அவளை ஆபாச படங் களை பார்க்க அழைப்பார்கள். அப்போதே பெண்கள் உஷாராகிவிடவேண்டும். அதற்கு சம்மதித்தால் அடுத்த கட்டம், உடலுறவு, பின்பு அதை படம் எடுத்தல் என்ற நிலைக்கு போய்விடும். படம் பிடிப்பதில் ஒரு காதலன் வெற்றி பெற்றுவிட்டால் அன்றே அவளது நிம்மதி, எதிர்காலம் எல்லாம் கேள்விக்குறியாகிவிடும்.

இதை தடுப்பதில் அம்மாக்களின் பங்கு முக்கியமானது. மகள்களிடம் அவர்கள் மனம் விட்டுப்பேச வேண்டும். பெற்றோர் இருவரும் தினமும் தங்களுக்கு வெளி இடங்களில் கிடைத்த அனுபவங்களை மகளிடம் சொல்லவேண்டும். அப்போது அவள் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை சொல்வாள். இப்படிப்பட்ட நெருக்கமான உறவை பெற்றோர் ஏற்படுத்திக் கொண்டால் மகள்கள் அடுத்தவர்களிடம் அன்பையும், நட்பையும் எதிர்பார்த்து இப்படிப்பட்ட ஆபத்தில் சிக்கிக்கொள்ளமாட்டார்கள். பெற்றோரும், ஆசிரியர்களும், சமூகமும் இதில் ஒருங்கிணைந்து செயல்பட்டால் அந்தரங்கம் படமாகும் அபாயத்தை குறைக்கலாம்..” என்கிறார்.


செல்லமாய் ஒரு ‘கடி’, அன்பாய் ஒரு அணைப்பு, ஆசையாய் ஒரு முத்தம்..!

 


இல்லறத்தில் தாம்பத்யம் என்பது இனிய சங்கீதம் போன்றது. அது சந்தோசமாய் இருப்பதும், சங்கடமாய் மாறுவதும் தம்பதியர்கள் கையில்தான் இருக்கிறது.

பெண்ணின் உணர்வுகளை அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளும் ஆண்கள் அளவில்லாத மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். அதே சமயம் பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் தன்னிச்சையாக நடந்து கொள்ளும் ஆண்கள் சம்பிரதாய சடங்குபோல தாம்பத்தியத்தில் ஈடுபடுகின்றனர் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். அன்பான தாம்பத்ய வாழ்க்கைக்கு அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றிப் பாருங்களேன்.

காதோடு பேசுங்கள்

உங்களின் எண்ணத்தை மனைவியின் காதோரம் செல்லமாய் குசு குசுப்பாய் பேசுங்களேன். அதிலேயே கிறங்கிப்போவார் உங்கள் துணைவி. நீங்கள் காதலாய் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் உங்களுக்கு போனஸ் மகிழ்ச்சியை தரும்.

மனம் விட்டு பாராட்டுங்களேன்

உங்கள் மனைவியின் செயல்பாடுகளை மனம் விட்டு பாராட்டுங்களேன். அது அவரது உற்சாகத்தை அதிகப்படுத்தும். அப்புறம் உங்களின் நெருக்கமான செயல்பாடுகள் மனைவியை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு அழைத்து செல்லும்.

ரொமான்ஸ் நிகழ்வுகள்

உங்களின் தேவையை உங்கள் செயல்பாடுகளே உணர்த்துமே. வெளிநாடுகளில் என்றால் இரவு டின்னரில் கண்டிப்பாய் ஒயின் இருக்கும். நம் ஊரில் மல்லிகைப் பூ, அல்வா கொடுத்து மனைவியை அசத்தி விடுவார்கள். இதே டெக்னிக்கை நீங்கள் கடைபிடித்து பாருங்களேன். அல்வா பிடிக்காவிட்டால் உங்கள் துணைவிக்கு என்ன ஸ்வீட் பிடிக்கிறதோ அதை கொடுத்து உங்கள் எண்ணத்தை தெரிவிக்கலாம்.

முன் விளையாட்டு

காதலுக்கு முந்தைய விளையாட்டுக்கள் மனைவிக்கு மிகவும் பிடித்தமானது. கன்னத்தில் செல்லமாய் ஒரு கடி, அன்பாய் ஒரு அணைப்பு, ஆசையாய் ஒரு முத்தம் என தொடங்குங்களேன் அப்புறம் என்ன உங்கள் துணைவி உங்களுக்கு பிடித்தமானவராய் நடந்து கொள்வார் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

 

 

காதலிக்க நேரமில்லாத தம்பதியரா? இதப் படிங்க !

 

ஐந்து இலக்க சம்பளம், மல்ட்டிநேசனல் கம்பெனி வேலை என இன்றைய இளையதலைமுறை நிறையவே மாற்றங்களை சந்தித்து வருகிறது. தம்பதியர் இருவரும் வேலைக்கு செல்வதால் இருவரும் தங்களின் காதலை சரியாக பகிர்ந்து கொள்ளக்கூட நேரமிருப்பதில்லை.

காலை நேரத்தில் அவசரமாக கிளம்பவும், மாலையில் அயர்ச்சியாக திரும்பி வந்து உறங்கவும்தான் முடிகிறது. இதனால் இல்லற வாழ்க்கை ஒருவித வெறுமை நிரம்பியதாக மாறிவிடுகிறது. நாளடைவில் விரிசலையும் ஏற்படுத்திவிடுகிறது. இதனை தவிர்க்கவும், இல்லறத்தை உற்சாகம் மிக்கதாக மாற்றவும் ஆலோசனை கூறியுள்ளனர் உளவியல் நிபுணர்கள். படித்து பாருங்களேன்.

குடும்பத்திற்கான நாள்

இப்பொழுதெல்லாம் 5 நாள் வேலை 2 நாள் விடுமுறை என்றாகிவிட்டது. எனவே விடுமுறை நாட்களை குடும்பத்திற்கென ரிசர்வ் செய்யுங்கள். அதில் எந்த கமிட்மென்ட்டும் வேண்டாம். துணையுடன் அமர்ந்து பேசவும், காதலை வெளிப்படுத்தவும் அந்த நாட்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஜாலியாக வெளியில் சென்று ஐஸ்கிரீம் சாப்பிடலாம், திரைப்படத்திற்கு செல்லலாம். இது உங்களின் காதல் வாழ்க்கையை உற்சாகப்படுத்தும்.

நோ மிஸ்டு கால்

என்னதான் தலை போகிற வேலையாக இருந்தாலும் மனைவி அழைத்தால் அந்த போனை எடுத்து பேசுங்கள். அதை எடுக்காமல் மிஸ்டு காலாகும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கையும் மிஸ் ஆகும் சூழல் உருவாகும். இப்பொழுது இருக்கும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆயிரம் முறை ஐ லவ் யூ எஸ்எம் எஸ் அனுப்பலாம். மெயில், சாட்டிங், என ஏதாவது ஒரு விதத்தில் பணிச்சூழலுக்கு இடையே துணையுடன் உரையாடுங்கள். அது பணிச்சுமையை குறைக்க உதவும்.

இன்ப அதிர்ச்சி

வேலைக்காக உங்கள் துணைவி பேருந்தில் சென்று வருகிறார் என்றால் அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் அலுவலகத்தில் இருந்து அவரை அழைத்து வரலாம். அவ்வப்போது வரும் வழியில் உள்ள உணவகங்களிலேயே அமர்ந்து டிபன், ஐஸ்கிரீம் என சாப்பிடுவது இருவருக்குமே உற்சாகத்தை அதிகரிக்கும். அதேபோல் கணவருக்கு பிடித்தமான ஆடைகளை அயர்ன் செய்து வைப்பது ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் சின்ன உதவிகள்தான் உள்ளத்தில் காதல் உணர்வுகளை உற்சாகப்படுத்தும்.

அன்பார்ந்த பரிசுப்பொருள்

தங்கம், வைரம் என விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை வாங்கி குவித்தால்தான் துணைவிக்கு பிடிக்கும் என்றில்லை. உங்களின் உணர்வுகளை, ரசனைகளை துணையுடன் பகிர்ந்து கொண்டாலே போதும் அதுவே அவருக்கு நீங்கள் தரும் மிகப்பெரிய பரிசுப்பொருள். உங்களுக்கு வரும் நல்ல நகைச்சுவை துணுக்குகள், பேஸ்புக், டுவிட்டரில் உங்களுக்கு கிடைத்த நல்ல படங்கள் என துணையின் மெயிலுக்கு அனுப்புங்கள். உங்களுக்கு இடையேயான காதல் பற்றிப் படரும்.

சின்ன சின்ன உதவிகள்

வீட்டு வேலைகளில் செய்யும் சின்ன சின்ன உதவிகள் துணைவியின் இதயத்தை வெல்லும் எளிய வழி. சமையலில் உதவி செய்யும் போது நடக்கும் சின்ன சின்ன ரொமான்ஸ்கள் அன்றைய நாள் முழுவதும் நீடிக்கும் அலுவலகப் பணியை உற்சாகத்துடன் செய்யலாம். பணிக்கு செல்லும் இளம் தம்பதியரே இதை பின்பற்றிப் பாருங்களேன். மன அழுத்தம் எதுவும் இன்றி வாழ்க்கையை உற்சாகமுடன் தொடரலாம்.


`கசந்த’ வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா?


பெண்களில் பலருக்கும் மனச்சுமையாக இருந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம், அவர்களின் சொல்லிக் கொள்ள முடியாத கடந்த கால வாழ்க்கை. திருமணமானதும் தங்களின் அந்த கசந்த காலத்தை கணவரிடம் கூறலாமா, வேண்டாமா என தங்களுக்குள் பெரிய அளவில் மனப்போராட்டமே நடத்துவார்கள்.

`சொன்னால் ஒன்றும் தப்பில்லை’ என நட்பு வட்டத்திலும், `சொல்லிவிடாதே, உன் வாழ்க்கையை நீயே ஏன் கேள்விக்குறியாக்கிக் கொள்ள வேண்டும்?’ என்று உறவினர்களும் சொல்லி பயமுறத்துவார்கள். இந்தநிலையில் ஒரு தெளிவான முடிவு தெரியாமல் பெண்கள் ஒரு குற்ற உணர்வுடன் வாழ்க்கையை தொடர வேண்டியிருக்கலாம். அவர்களுக்கு சரியான ஆலோசனை கூற அருகில் யாரும் இல்லாத நிலையில் யார்மூலமாகவோ இவர்களின் கடந்த காலம் கணவருக்கு சொல்லப்பட்டு, அப்போது ஏற்படும் பூகம்பத்தில் எதிர்காலமும் சேர்ந்து ஆட்டம் கண்டுவிடும் அபாயம் உண்டு.

ஆண்களின் கடந்த காலத்தை பெண்கள் சுமைதாங்கிகளாக தாங்கிக் கொள்கிறார்கள். அதன் சுவடு சிறிதும் தெரியாமல் ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும் மனப்பக்குவம் இந்திய பெண்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. அந்த பக்குவம் ஆண்களிடம் உள்ளதா என்பது கேள்விக்குறியே. காரணம் நம்முடைய சமூக அமைப்பு.

ஆண் கடந்த காலத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைப்பது போல, பெண் தன்னுடைய கடந்த காலத்தை ஆணிடம் வெளிப்படுத்த தயங்குகிறாள். நம்முடைய சமுதாய அமைப்பில் ஆண்கள் பல திருமணங்களை செய்து கொள்கிறார்கள். அவர்களின் மதிப்பு குறைவதில்லை. ஆனால் பெண்கள் அப்படியில்லை. ஒருமுறை அவர்களுக்கு திருமணம் நடந்து விட்டால் வாழ்நாள் முழுமைக்கும் அவர்கள் அந்த திருமண பந்தத்துடன் கட்டுண்டு கிடக்க வேண்டும். இது தான் நம் குடும்ப கட்டமைப்பின் காலம்காலமான நியதி!

பெண்ணானவள் எப்போதுமே குடும்பத்தின் கவுரவமாக, எதிர்காலமாக கருதப்பட்டாள். இதுவும் ஒருவகை அடிமைத்தனம் தான். இன்று முன்னேறிய சமூகத்தில் திருமணம் பல மாற்றங்களுக்குஉட்பட்டிருக்கிறது. பெண்கள் தயக்கமின்றி மறுமணம் செய்து கொள்கிறார்கள். இழந்த வாழ்க்கையை புதுப்பித்துக் கொள்கிறார்கள். இருந்தாலும் கடந்த காலம் எனும் திரையை மட்டும் விலக்க தயங்கும் சூழ்நிலை இன்றும் இருந்து வருகிறது. காரணம் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற பயம்தான்.

பெண்கள் நம்மைப் போல உயிரும் உணர்வும் உள்ள ஜீவன்கள் என்பதை ஆண்கள் ஏற்றுக் கொள்ளவே பலகாலம் பிடித்தது. ஒருவனை திருமணம் செய்து கொண்டு, ஒருவனுக்காக வாழ்ந்து, அவன் இறந்ததும் அவனுடன் உடன்கட்டை ஏறும் கொடூர வழக்கம் நம் இந்தியாவில் இருந்தது. இதனை ஒரு புனிதமான, தெய்வீக வழக்கம் என்று கூறிக்கொண்டு பெண்களை உயிருடன் நெருப்புக்குத் தாரைவார்க்கும் மனிதர்கள், பெண்களின் கடந்த காதல் காலத்தை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?

பெண்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்ககூடாது. இருந்தால் அது பாவம். ஆசைகள் இருந்தால் அது துரோகம். யாரையாவது காதலித்தால் அது சமூக குற்றம் என்பது போன்ற மனநிலை ஆண்கள் மனதில் வேறூன்றி விட்ட நிலையில், அவர்களுடைய கடந்த காலத்தை திரை போட்டு மறைப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும். ஆனால் இந்த நிலை மாற வேண்டும். அப்படி மாறினால் அது பெரிய சமூக மாற்றமாக அமையும்.

ஆண்கள் தன்னைப் போலவே பெண்களும் உயிருள்ள பிரஜைகள் என்பதை கருத்தில் கொண்டாலே போதுமானது. அவர்கள் கடந்த காலத்தை பரந்த மனதுடன் உற்று நோக்கி அவர்களுடைய நேர்மையான மனதை அஸ்திவாரமாக கொண்டு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். ஏனென்றால் கடந்த காலத்தை விட நிகழ்காலம் முக்கியமானது. அது ஒளிமயமாக மாற வேண்டுமானால்

கடந்த கால அவலங்களை தூக்கிப் போட வேண்டும். அதற்கு உயர்ந்த உள்ளம் தேவை. இது ஒவ்வொரு ஆணிடமும் இருக்க வேண்டும். இருந்தால் அது அவர்களுடைய வாழ்க்கையை வளமாக்கும்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies