பாலியல் சந்தேகம்
பாலியல் – கேள்விப் பதில்களில் இந்த முறை சுய இன்பம் தொடர்பிலான கேள்வி பதில்களை பார்ப்போம்ஸ. ஏனெனில் பெரும்பாலான வாசகர்கள் சுய இன்பம் தொடர்பில் தான் கேள்விகளை கேட்டு இருந்தார்கள்.
கேள்வி: சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா?
மருத்துவரின் பதில்: பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் விளம்பரம் செய்கிறார்கள். இதனால் மக்கள் சுயஇன்பத்தைப் பற்றி தேவையற்ற பயத்தை கொண்டுள்ளார்கள்.
உண்மையில் சுய இன்பத்தில் எந்த தவறும் கிடையாது. அறிவியல் பூர்வமாக எந்த கெடுதலும் கிடையாது. சுய இன்பத்தால் நரம்பு தளர்ச்சி, அணுறுப்பில் சுருக்கம், பால்வினை நோய்கள், விந்து நீர்த்து போதல், மனைவியை திருப்திபடுத்த முடியாமை போன்ற எந்த விதமான பாதிப்புகளும் வரவே வராது என்பதை உறுதியாக மருத்துவ உலகம் நிருபித்து விட்டது. இதனை மேலும்
உறுதிபடுத்தும் விதமாக நரம்பியல் துறை வல்லுனர்களும் சுய இன்பம் தீங்கானது அல்ல என்று நிருபித்து உள்ளார்கள்.
இதில் ஒரே ஒரு அட்வைஸ் என்ன வென்றால் சுயஇன்பம் செய்பவர்கள் எப்போதும் இதே வேலையாக வைத்திருக்காமல் அளவோடு வைத்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.
கேள்வி: எனக்கு வயது 24. எட்டு வருடமாக சுய இன்பம் அனுபவித்து வருகிறேன். இதனை மாற்றிகொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?
மருத்துவரின் பதில்: உங்களுக்கு 24 வயது ஆவதால் நீங்கள் சுய இன்பம் செய்வதை தப்பு என்று கூறமாட்டேன். ஒரு மனிதன் 13, 14 வயதிலேயே வயதுக்கு வந்துவிடுகிறான். சமுதாய கட்டுப்பாடுகாரணமாக அவ்வயதில் உடன் திருமணம் செய்ய முடியாது. திருமண வாய்ப்பு இல்லை என்றால் உடம்பு சும்மா இருக்காது. அந்த வயதில் தேவைப்படும். இயற்கையாகவே நமது உடம்பு இந்த இந்த வடிகாலுக்கு இரண்டு வழி இருக்கிறது.
1. சுயஇன்பம்,
2. பரத்தை தொடர்பு
பரத்தை தொடர்பில் எய்ட்ஸ் பரவல் இருப்பதால் பரத்தையிடம் போவது வம்பை விலை தந்து வாங்குவது போலாகிவிடும். எனவே சுய இன்பம் மட்டுமே ஒரே ஒரு வடிகால். ஓரளவு இதனை நீங்கள் கட்டுபாடுக்குள் வைத்து கொள்ளலாம். மனதை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு போன்றவற்றில் பங்கேற்கலாம். இரவு வெதுவெதுப்பான நீரில் குளித்து, தியானம் செய்து தூங்க போகலாம். அப்போது இப்பழக்கம் குறையக்கூடும்.
சுய இன்பம் செய்தால் மலடாகி விடுவீர்கள் என்கிறார்களே?
மருத்துவரின் பதில்: சுய இன்பத்தால் உடம்புக்கு எந்த கெடுதலும் ஏற்படாது. மலடு ஆகிவிடுவீர்கள் என்று சொல்லும் விளம்பரம் எல்லாம் தவறான விளம்பரங்கள். நம்பாதீர்கள். இந்த மாதிரி விளம்பரம் செய்யும் டாக்டர்கள் எல்லாமே சரியாக முறையாக படித்த டாக்டர்கள் கிடையாது. மேலும் நீங்கள் விளக்கம் பெறமுதல் கேள்விக்கான பதிலையும் சேர்த்து படித்துக் கொள்ளுங்கள்.
கேள்வி: விந்தை வீணாக்காதீர்கள். ஒரு சொட்டு விந்து 100 சொட்டு ரத்தத்திற்கு சமம் என்கிறார்களே இது உண்மையா?
மருத்துவரின் பதில்: இந்த கருத்து உண்மை கிடையாது. நாம் சாப்பிடும் சாப்பாடு உடம்பில் சத்து ஆக மாறி ரத்தத்தில் கலந்துவிடும். அதேபோன்று நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் ஆக்ஸிஜன் ரத்தத்தில் சேர்ந்து, இந்த ரத்தம் விதைபைக்கு போகும்பாது இந்த ரத்தத்தையும் ஆக்ஸிஜனையும் விதை பயன்படுத்தி கொண்டு ரத்தத்திற்கு திரும்பவும் கழிவு பொருட்களை கார்பண்டை ஆக்ஸைடு திருப்பி தரும். இந்த விதையின் ஆரோக்கியத்திற்கு ரத்தம் தேவைப் படுகிறதே தவிர, நேராக ரத்தம் விந்தாக மாறுவது கிடையாது. இதுமட்டுமல்ல, ஒரு ஆண் வயதுக்கு வந்ததிலிருந்து கடைசி மூச்சுவரைக்கும் ஒவ்வொரு வினாடியும் உடம்பில் விந்து உற்பத்தி நடந்து கொண்டே இருக்கும். இது நிறுத்த முடியாத ஊற்று மாதிரி. விதையில் பிறக்கும்போதே இருக்கும் குறைபாடோ அல்லது ஒரு நோயோ அல்லது அடிப்பட்ட காயம் போன்ற சூழ்நிலைதான் விந்து உற்பத்தியை பாதிக்கும். ஆகையினால் விந்து வேஸ்டாகிறது என்று எவரும் கவலைப்பட தேவையில்லை.
கேள்வி – எனக்கு அடிக்கடி கனவில் விந்து வெளியாகிவிடுகிறது. இதை எவ்வாறு நிறுத்துவது?
மருத்துவரின் பதில் – இது இயற்கையானது. கனவில் விந்து வெளியாவது குக்கரில் உள்ள சேஃப்டி வால்வ் போன்றது. உங்களுக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. உங்களுக்கு மாற்று ஏற்பாடு கிடைக்கும்போது, அதாவது சுயஇன்பம் அல்லது தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது இது குறைந்து விடும்.
கேள்வி – சுயஇன்பம் அனுபவிப்பது ரத்த சோகையை ஏற்படுத்துமா?
பதில் – இல்லை. இழப்பு சீக்கிரமே ஈடு செய்யப்பட்டுவிடும்.
கேள்வி – நான் சுய இன்பம் அனுபவிக்கும்போது விந்தோடு ரத்தம் வருகிறது. நான் என்ன செய்ய வேண்டும்?
மருத்துவரின் பதில் – பயப்பட வேண்டாம். இது பொதுவாக ஏற்படுவதுதான். தொற்றுநோய் காரணமாக பொதுவாக ஏற்படுவதுதான் இது. ஆனால் எப்போதும் ஏற்படாது. இது ரத்தக் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாகவும் ஏற்படலாம். நீங்களே தகுதி பெற்ற மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ளலாம்.
கேள்வி – நான் வழக்கமாக வலது புறமாக சுய இன்பம் செய்வேன். விறைப்பு ஏற்படும்போது எனது குறி வலதுபுறமாக வளைந்துள்ளது. இந்த வளைவை நான் சரிசெய்ய விரும்புகிறேன். நான் இடது கரத்தால் சுய இன்பம் அனுபவிக்க வேண்டுமா?
மருத்துவரின் பதில் – இல்லை. வளைவு மையப்பகுதியிலிருந்து 30 டிகிரிக்கும் குறைவாக இருந்தால் சாதாரணமாக உடலுறவு கொள்ள முடியும். அப்படி இல்லையென்றால் நீங்கள் கண்டிப்பாக சிறுநீரக மருத்துவரை பார்க்க வேண்டும்.
கேள்வி – எனக்கு வயது 25. நான் நீண்ட இடைவெளிவிட்டு சுயஇன்பம் அனுபவிக்கும்போதெல்லாம் கடினமாக உணருகிறேன். விந்தோடு மஞ்சள் நிற திரவம் வெளிப்படுகிறது. ஏன் இப்படி ஆகிறது?
மருத்துவரின் பதில் – மாதிரியை (பேதாலாஜிஸ்ட்) நோய் குணங்களை ஆராயும் நிபுணரிடம் எடுத்துச் செல்லுங்கள். அது என்னவென்று அவர் சொல்லுவார். அது விந்து திரவமாக இருப்பதால் அது என்னவாக இருந்தாலும் உங்களை பாதிக்காது.
கேள்வி – எனக்கு வயது 28. எனக்கு திருமணமாகப் போகிறது. நான் கடந்த 14 வருடங்களாக எப்போதாவது சுயஇன்பம் அனுபவித்து வருகிறேன். அண்மைக் காலமாக விந்து மிகவும் மென்மையாக தண்ணீர்போல உள்ளது. நான் கைகளை பயன்படுத்தி சுயஇன்பம் காணும்போது அது திடமாகிறது. என் விந்துவின் தரம் நன்றாக உள்ளது என்றாலும் நான் கைகளால் தொடும்போது ஒட்டுவதில்லை. என்னால் தந்தையாக முடியுமா என்று கவலைப்படுகிறேன். தயவுசெய்து விளக்கவும்.
மருத்துவரின் பதில் – உங்கள் வயதில் தானாக விறைப்பது கடினமே. உங்கள் விந்துவை கவனிப்பதை நிறுத்திவிடுங்கள். அது தன்னைத்தானே கவனித்துக்கொள்ளும்.