பார்க் போர்கப்பல் கொழும்பில் வேவுபார்க்குமா ?
30 Oct,2013

பார்க் போர்கப்பல் கொழும்பில் வேவுபார்க்குமா ?
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெலத் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்வாரா, இல்லையா என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், கொழும்பு துறைமுகத்துக்கு பாக்கிஸ்தானின் அதி நவீன போர்கப்பல் சென்றடைந்துள்ளது. குறிப்பிட்ட இக் கப்பலினுள் என்ன இருக்கிறது என்பது இதுவரை யாருக்கும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்க விடையம். இக் கப்பல் 30ம் திகதிவரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்று முன்னர் கூறப்பட்டது. ஆனால் அங்கே ஏற்கனவே நங்கூரமிடப்பட்ட பாக்கிஸ்தானின் எண்ணெய்க்கப்பலே நாளை புறப்படவுள்ளது. அப்படி என்றால் பாக்கிஸ்தானின் போர் கப்பல் எப்போது புறப்படவுள்ளது என்பது தெரியவில்லை. இது இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங்கின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லாவிட்டாலும், குறிப்பிட்ட பாக்கிஸ்தான் கப்பல் மன் மோகன் சிங்கின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க்கும் திறன்கொண்டதா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளது.
இலங்கை தொடர்பாக இந்தியாவில் பெரிதாக சர்ச்சைகள் அடிபடும் நேரங்களில், கொழும்பில் என்ன நடக்கிறது என்பதை தொடர்ந்து கவனித்து வந்தீர்கள் என்றால், ஏதோ ஒரு பாகிஸ்தான் நடவடிக்கை அங்கு இருப்பதை கவனிக்கலாம். இலங்கை ராணுவச் சிப்பாய்களுக்கு, இந்தியாவில் பயிற்சி கொடுப்பது தொடர்பான சர்ச்சைகள் உச்சத்தில் இருந்த நாட்களில், பாகிஸ்தானின் உயர்மட்ட ராணுவ குழு கொழும்புவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. இலங்கை ராணுவத்துக்கு தேவையான பயிற்சிகளை வழங்க தாம் தயார் என அறிவித்துவிட்டு சென்றது அந்தக் குழு.
தற்போது, இலங்கையில் காமல்வெலத் மாநாடு நடக்கவுள்ள நிலையில், பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான ‘கைபர்’, ‘நஸ்ர்’ என்ற இந்த இரு போர்க் கப்பல்கள் கொழும்பு துறைமுகம் சென்று நங்கூரமிட்டுள்ளன.