பிடிப்பட்ட அமெரிக்க கப்பலின் தலைமை அதிகாரி கொழும்பில் தங்கிய மர்மம் என்ன?
24 Oct,2013
பிடிப்பட்ட அமெரிக்க கப்பலின் தலைமை அதிகாரி கொழும்பில் தங்கிய மர்மம் என்ன?
சென்னை: அமெரிக்க கப்பலான சீமேன்கார்ட் ஓகியோ கப்பலின் தலைமை பாதுகாவலர் 10 நாட்கள் கொழும்பில் தங்கியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தூக்குக்குடி கடல் பகுதியில் அமெரிக்காவின் அட்வென் போர்ட் நிறுவனத்திற்று சொந்தமான சீமேன் கார்ட் ஓகியோ கப்பலை இந்திய கடலோர காவல் படையினர் அக்டோபர் 12 ஆம் திகதி பிடித்து கடற்படை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து கடற்படை பொலிஸார் வழக்கு பதிவு செய்து கப்பலில் ஆயுதங்கள் இருந்ததால் கியூ பிரிவில் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
கியூ பிரிவு பொலிஸார் இரு நாட்கள் கப்பலில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி பின்னர் கப்பலில் இ.ருந்த 35 துப்பாக்கிகள் 5680 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கப்பலில் இருந்த 35 பேரையுல்ம் கைது செய்தனர்.
இந்நிலையில் பொலிஸாரின் விசாரணையில் கப்பலின் தலைமை பாதுகாவலர் கப்பலில் பயணம் செய்வதற்கு முன்னர் 10 நாட்கள் கொழும்பில் தங்கியுள்ளனர் என்ற தகவலை கண்டுபிடித்துள்ளனர்.
கப்பலில் பாதுகாப்பு தலைமை அதிகாரியான இங்கிலாந்தைச் சேர்ந்த சர்ச்பார்க் பகுதியை சேர்ந்த போல் டேவிட் டெம்ப் டவர் (5 0 வயது இவர் கப்பலில் உள்ள பாதுகாவல் பணியில் இருந்த 25 பேரில் தலைமை அதிகாரியாவார். யாருக்க எந்த ஆயுதங்களை வழங்க வேண்டும் என தீர்மானிப்பவர் சர்ச் பார்க் ஆவார். இந்நிலையில் அக்டோபர் 28 ஆம் திகதி சீமென் கார்ட்ஓகியோ கப்பல் கொச்சி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டள்ளது.
அப்போது கப்பலில் ஆயுதங்கள் ஏதும் இல்லை பாதுகாவலல்கள் 25 பேரும் இல்லை கப்பல் கப்டன் உட்பட 10 மாலுமிகள் மட்டுமே கப்பலில் இருந்துள்ளனர். தனியார் பாதுகாப்பு கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும்.
விடுமுறை முடித்து கப்பலில் பணிக்கு திரும்பும் போது ஒரு நாளைக்கு முன்னதாக அருகில் உள்ள நாடுகளுக்கு வந்து கப்பலில் ஏறிக்கொள்வது வழக்கம்.
விடுமுறையில் சென்ற பால் டேவிட் டெம்ப் டவர் பணிக்கு வருவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக இலங்கைக்கு வந்துள்ளார். அங்க கொழும்பில் தங்கியுள்ளார். அதன் பின்னர் இலங்கையில் இருந்து ஷார்ஜா கப்பல் மூலம் நடுக்கடலில் வந்து இருந்த சீமேன் கார்ட் ஓகியோ கப்பலுக்கு செப்மெம்பர் 30 ஆம் திகதி வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து போல் டேவிட் இலங்கையில் இருந்து வரும் போது பாதுகாவலர்களை அழைத்துக் கொண்டு ஆயுதங்களுடன வந்தாரா அவர் மட்டும் தனியா வந்தாரா மேலும் 40 நாட்களுக்கும் மேலாக கடலில் கபபல் நின்றிருந்த மர்மம் என்ன? இது போன்ற பல சந்தேகங்கள் எழுந்துள்ளது.
போல் டேவிட்டை பொலிஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே இது போன்ற சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் என்பதற்காக கியூ பிரிவு பொலிஸார் மனு செய்துள்ளனர். மேலும் போல் டேவிட் டெம்ப்டவரிடம் நடத்தப்படும் விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல் வெளிவரலாம் என கியூ பிரிவு பொலிஸார் எதிர்பார்க்கின்றனர்.