சந்தோச சப்தங்கள் படுக்கை அறையை சங்கீதாமாக்கும்!
படுக்கை அறையில் தம்பதியர் போடும் சந்தோச சப்தங்கள் சங்கீதமாக ஒலிக்குமாம். மாறாக அமைதியாக கடனே என்று செயல்படுவது கூடாது என்கின்றனர். படுக்கை அறையில் ஆணோ அல்லது பெண்ணோ சந்தோஷமாக இல்லை என்பதை அறிய சில அறிகுறிகள் இருக்கிறதாம்.
ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, அவரவர் ஆசை பூர்த்தியாகாத வரை உறவுகள் கசப்பாகவே தொடரும். படுக்கை அறையில் பலருக்கு பல நேரங்களில் மோசமான கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம். அதற்கு பத்து காரணங்களைச் சொல்கிறார்கள் செக்ஸாலஜி நிபுணர்கள். எனவே கீழ்கண்ட தவறுகளை நீங்களும் செய்கிறீர்களா? என்று உங்களுக்கு நீங்களே ஒரு சுயபரிசோதனை செய்து கொள்ளுங்களேன்.
ஆர்வத்தோடு அணுகுங்கள்
படுக்கை அறை என்பது நம்முடைய உடல், மனம் இரண்டும் ஒன்றினைந்து ஈடுபாட்டோடு செயல்பட வேண்டிய இடம் யில் பலரும் அங்கு கடனே என்று தொடங்குவார்கள். பெரும்பாலோனோர் செய்யும் தவறு இதுதான். அதை கலையாக செய்யாமல், கடமைக்காக செய்யும்போதுதான் கசப்புகள், அதிருப்திகள் தலை தூக்குகின்றனவாம். ஆர்வம் குறைந்திருக்கும்போது செக்ஸில் ஈடுபட்டாலும் கூட கசப்புணர்வே மிஞ்சுமாம். எனவே துணையை ஆர்வத்தோடு அணுகுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
புதுசா செய்யுங்க பாஸ்ஸ
சாப்பாடு விசயத்திலேயே வெரைட்டி பார்க்கிற உலகம் பாஸ் இது. பெட்ரூமில் வெரைட்டி அவசியம். ஆனால் பலருக்கும் இது புரிவதில்லை. ஒரே மாதிரியான செக்ஸ் உறவிலேயே ஈடுபடுவார்கள். இது போகப் போக கசப்பையும், சலிப்பையும் தரத் தொடங்கி விடும். எனவே புதியதாக கிரியேட்டிவாக இருங்கள். இல்லையெனில் செக்ஸ் சலிப்பாகி விடும்.
எனக்கு மட்டுமே தெரியும்
பெரும்பாலான ஆண்களுக்கு எல்லாம் எனக்கு மட்டுமே தெரியும் என்பது போன்ற மனநிலைதான் செக்ஸ் விஷயத்தில் உள்ளது. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு செக்ஸ் குறித்து நிறையத் தெரியும். இதை ஆண்கள் அறிந்து கொள்வதில்லை அல்லது ஏற்பதில்லை. இதுவும் கூட கசப்புணர்வுகளுக்கு வித்திடுகிறதாம்.
தயக்கம் தடையாகலாமா
பெரும்பாலான பெண்களுக்கு படுக்கை அறையில் தாராளமாக, சுதந்திரமாக நடந்து கொள்வதில் தயக்கம் உள்ளதாம். நிர்வாணமாக இருப்பது, புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தருவது, விளக்கை அணைத்து விட்டு என்னை அணையுங்கள் என்று வற்புறுத்துவது என்று அவர்கள் செய்யும் காரியங்களால் ஆண்கள் டென்ஷனாகி மூட் அவுட் ஆகி விடுகிறார்களாம்.
தேவையை உணர்த்துங்கள்
என்ன வேண்டும், என்ன தேவை, எப்படித் தேவை என்பது குறித்து பெரும்பாலான பெண்கள் கணவர்களிடம் அல்லது தங்களது துணையிடம் சொல்லத் தயங்குகிறார்களாம். இப்படிச் செய்தால் எனக்கு கிளர்ச்சி கூடும். இதைச் செய்தால் எனக்கு மூட் வேகமாக வரும் என்பதைச் சொல்லி இன்பத்தை கேட்டுவாங்கத் தயங்கக் கூடாது என்பது ஆண்களின் கருத்தாக உள்ளது.
சிலிர்ப்பூட்டுங்கள்
படுக்கை அறையில் அதிக அளவிலான சிலிர்ப்பூட்டல்கள் உறவை பலப்படுத்த உதவுமாம். வெறுமனே உடல் உறவோடு நிற்காமல் பேச்சிலும், செயலிலும் கிளர்ச்சியூட்டும் பல காரியங்களைச் செய்யும்போது பெண்கள் குளிர்ந்து போய் விடுகிறார்களாம்.. இன்பம் மலரச் செய்கிறார்களாம். இப்படி இல்லாத பெண்களால் ஆண்களுக்கு கஷ்டம்தான் ஏற்படுகிறதாம்.
சங்கீத சப்தங்கள்
படுக்கை அறையில் பேசாமல் அமைதியாக கம்மென்று பலர் இன்பம் அனுபவிப்பார்கள். அது தவறாம். மாறாக முக்கல், முனகல், சின்னதாக கத்துவது, உணர்ச்சிகரமாக கூச்சலிடுவது போன்றவற்றில் ஈடுபட வேண்டும். இந்த சப்தங்கள்தான் படுக்கை அறையில் சங்கீதமாக ஒலிக்கும். அதோடு இது ஆண்களைத் தூண்டுவிக்க உதவுமாம்.இப்படி இல்லாமல் தேமே என்று மரக்கட்டையாக படுத்துக் கிடப்பது ஆண்களுக்கு சங்கடத்தையே கொடுக்கிறதாம்.
கண்ட்ரோல் பண்ணுங்க
செக்ஸ் விளையாட்டு மூலமும், உறவின் மூலமும் துணையைக் கட்டுப்படுத்துவது..அதாவது நம் ஆட்டத்திற்கு அவரை வளைய வர வைப்பது தனி கலை. நிறையப் பேருக்கு இந்தக் கலை கை கூடுவதில்லை. சிலருக்கு மட்டுமே வரும். மாறாக படுக்கை அறையில் சரண்டாரவது போல நடந்து கொண்டால் பலருக்கும் அது பிடிப்பதில்லையாம்.
ஆராய்ச்சி வேண்டாமே
படுக்கை அறையில் செக்ஸ் குறித்த ஆராய்ச்சியில் சிலர் இறங்குவார்கள். அது தேவையில்லாததுஸ இன்பத்தை மட்டுமே அங்கு அனுபவிக்க வேண்டும், அலசி ஆராய்ந்து பார்ப்பது வேலைக்கு ஆகாது என்பது நிபுணர்களின் கருத்து.
அருமையான செக்ஸ் வாழ்க்கைக்கு 7 டிப்ஸ்கள்!
இல்லற வாழ்வில் தாம்பத்திய உறவு என்பது மிக முக்கியமானது. கணவன் மனைவியிடையே உறவில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவும் தாம்பத்யத்தின் தொடர் வெற்றிக்கும் இருவரின் உடல்நலமும் மனநலமும் முக்கியம். ஏதாவது ஒன்றில் சிக்கல் எழும்போது உறவில் விரிசல் ஏற்படுகிறது. எனவே இனிமையான சங்கீதமாய் இல்லறம் இனிக்க உளவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்கள்.
உணவுக்கும் உறவுக்கும் இடைவெளி
உணவுக்கும் உறவுக்கும் தொடர்பு உண்டு. சத்தான உணவுகள்தான் சந்ததியை நிர்ணயிக்கின்றன என்றும் கூட முன்னோர்கள் கூறுவார்கள். எனவே அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் உண்ண வேண்டும். முக்கியமாக உணவு உண்ட ஒரு மணிநேரத்திற்குள் உறவில் ஈடுபடக்கூடாது என்கின்றனர். இதனால் மூட்டு உபாதைகளும், வேறு பல உடல்நலக்கோளாறுகளும் ஏற்படும்.
மென்மையான ரசனை
தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம். இசைப்பதும், ரசிப்பதும் மென்மையாய் நிதானமாய் அமைய வேண்டும் அவசரங்களால் தாம்பத்தியம் அரைகுறையாக அலங்கோலமாக ஆகிவிடும். உறவுக்கு முன் இனிமையான உரையாடலும், உணர்வுப்பறிமாறலும், முன்விளையாடலும் உறவு முழுமைபெற உதவும்.
எந்திரத்தனம் வேண்டாம்
தாம்பத்திய உறவில் ஏதாவது ஒரு வரையரையைக் காலப்போக்கில் தம்பதியர்கள் தாங்களாகவே நிர்ணயம் செய்துகொள்வது முக்கியம். அடிக்கடிவரைமுறையின்றி உறவு கொள்ள விரும்புவது ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும். மேலும் தாம்பத்ய உறவில் எந்திரத்தனங்களும், எல்லைமீறல்களும் இனிமைதராது.
மன ஒற்றுமை வேண்டும்
கணவன் மனைவியரிடையே ஏற்படும் கருத்துவேறுபாடுகள், மன இறுக்கங்கள் போன்றவைகளை நீடிக்க விடக்கூடாது. ஒருவருக்கொருவர் பரஸ்பரம் புரிதலோடு அவற்றை பேசித் தீர்க்க வேண்டும். மனஒற்றுமை ஏற்படாமல் உடல்களால் மட்டும் இயங்கி தேகவேட்கையைத் தணிக்க முயற்சிப்பது நல்லதல்ல. மேலும் ஆழ்ந்த மனப்பாதிப்புகள் தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரி.
அச்சம் தேவையில்லை
எந்தச் சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியைப் பாதிக்கக்கூடிய அலோபதி மருந்துகளை உண்ணக்கூடாது. வயது அதிகமாகும் போது. தாம்பத்திய உறவு இயலாமல் போய்விடுமோ என்ற அச்சம் தேவையற்றது. உடலுறுவுக்கு வயது ஒரு தடை அல்ல.
பரஸ்பரம் புரிதல்
கணவன் மனைவியின் அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர். புரிந்துகொள்ள வேண்டும். இப்படிப்பேசினால் அநாகரீகம் அப்படிச் செய்தால் அநாகரீகம் என்று எண்ணத் தே
காதல் உணர்வுகளை அதிகரிக்கும் நீல நிறம்ஸ.
திருமண நாளன்று இரவில் படுக்கை அறையில் செய்யப்பட்டுள்ள அலங்காரம் காதல் உணர்வுகளை அதிகரிக்கச் செய்யும். அன்றோடு அவ்வளவுதான். அப்புறம் ஒரே மாதிரியான டிம் லைட் விளக்கு வெளிச்சம். ஒரே போர் என்று நினைக்கிறீர்களா? கவலை வேண்டாம். உங்கள் படுக்கை அறையை உங்கள் மனதிற்கு பிடித்த மாதிரி அலங்கரியுங்கள். தினம் தினம் உற்சாகம்தான் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். அவர்கள் கூறியுள்ள ஆலோசனைகள் உங்களுக்காக.
காதலுக்கு நீல நிறம்
படுக்கை அறையில் ரொமான்ஸ் மூடு வருவதற்கு இரவு விளக்கின் நிறம் மிகவும் முக்கிய அம்சமாகும். இரவு நேர விளக்கு நீல நிறமாக இருந்தால் ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நரம்புகளில் அமைதியும், சக்தியும் கிடைக்கும். எனவே படுக்கை அறையில் நீல நிற விளக்கை பயன்படுத்துவது நல்லது. படுக்கை அறைக்கும் கூட இள நீல நிறத்தில் பெயிண்ட் அடிப்பது காதல் உணர்வுகளை அதிகரிக்கும்.
மெழுகுவர்த்தி வெளிச்சம்
மின்விளக்கு வெளிச்சம் பிடிக்காதவர்கள் படுக்கை அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி அலங்கரிக்கலாம். இது அறையின் அழகையும், ரொமான்ஸ் மூடையும் அதிகரிக்கும்.
ரோஜா பூங்கொந்து
சுகந்தமான மணம் தரும் ரோஜா மலர்களைக் கொண்டு அலங்கரிக்கலாம். ஏனெனில் ரோஜாவிற்கும் ரொமான்ஸ்க்கும் நெருங்கிய தொடர்ப்பு உண்டு.
மென்மையான இசை
படுக்கை அறையில் மனம் மயக்கும் மெல்லிய இசையை கசிய விடுங்கள். அது காதல் உணர்வுகளை அதிகரிக்கச் செய்யும்.
இயற்கை அலங்காரம்
படுக்கை அறையில் கூடை ஒன்றில் மாதுளை முத்துக்கள், ஸ்ட்ராபெரி, திராட்சைப் பழங்களைக் கொண்டு அழகாய் அலங்கரியுங்கள். அது உங்களின் ரசனையை அதிகரிக்கும்.
பட்டுத் துணி அலங்காரம்
மென்மையான, வழு வழு துணிகளைக் கொண்டு படுக்கை, தலையணைகளை அலங்கரிக்கலாம். கொசு வலை இருந்தால் அதை படுக்கையின் மேல் அலங்கரிப்பது ஒரு ராஜ தோரனை ஏற்படும்
அதுக்குப்’ பிறகு தூக்கம் வந்தா நல்லதுதான்ஸ!
நல்ல செக்ஸ் உறவுக்குப் பின் அடித்துப் போட்டது போல தூக்கம் வரும். இது ரொம்ப நல்லதுதான் என்கிறார்கள் அமெரிக்க உளவியலாளர்கள்.
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் அல்பிரைட் கல்லூரி ஆகியவை இணைந்து ஒரு ஆய்வை நடத்தின. அதில், செக்ஸ் உறவுக்குப் பின்னர் வரும் தூக்கம் குறித்தும், அதுதொடர்பாகவும் கருத்துக் கேட்டு ஆய்வு நடத்தியுள்ளனர்.
இந்த ஆய்வின் மூலம் அவர்களுக்குத் தெரிய வந்தது என்னவென்றால் நல்ல உறவுக்குப் பின் வரும் தூக்கத்திற்கும், ஆண்களின் மன நிலைக்கும் நிறைய தொடர்பு உள்ளது என்பதே.
இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான டேணியல் கிரெகர் கூறுகையில், செக்ஸ் உறவுக்குப் பின்னர் ஆண்களுக்குத்தான் அதிகம் தூக்கம் வரும். இது நல்லதுதான். காரணம், திருப்திகரமான உறவும், அதீத பாசம், அன்பும் கொண்ட ஆண்களுக்குத்தான் இப்படி தூக்கம் வருகிறதாம். இது நாங்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்தோம். எனவே உறவுக்குப் பின் ஆண்கள் நன்றாக தூங்கினால் அது நிச்சயம் பெண்களுக்குத்தான் நல்லது என்றார்.
இந்த ஆய்வுக்காக 456 ஆண் மற்றும் பெண்களை பேட்டி கண்டனர். அவர்களிடம் செக்ஸ் உறவுக்குப் பிந்தைய நிலவரம் குறித்துக் கேட்டறிந்தனர். அதில் செக்ஸுக்குப் பின்னர் யார் முதலில் தூங்கப்போவது என்பது முக்கியமான கேள்வியாகும்.
இதில் உறவுக்குப் பின்னர் தூங்கப் போனவர்களிடம் தங்களது பார்ட்னர்களிடம் அதீத பாசமும், அன்பும், உறவு குறித்த நிறைவும் இருப்பது தெரிய வந்ததாம்.
மேலும் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டவர்களில் முதலில் ஆண்கள்தான் சீக்கிரம் தூங்கி விடுகிறார்களாம். அதேசமயம், செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளாத தம்பதிகளில் முதலில் தூங்குவது பெண்களாம்.
இதுகுறித்து கிரகெர் கூறுகையில், ஆண்களுக்கு உறவின்போது திருப்தியும், தங்களின் மனைவி மீது அதீத அன்பும், பாசப் பிணைப்பும் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் திருப்திகரமான மன நிலைக்குப் போய் விடுகிறார்கள். இதுவே அவர்களது தூக்கத்தை விரைவுபடுத்துகிறது என்றார்.
இதுபோக செக்ஸுக்குப் பின்னர் செய்ய வேண்டியவை குறித்து சில டிப்ஸ்களையும் கிரகெட் அடுக்குகிறார்.
உச்சத்தை எட்டி பின்னர் அது முடியும்போது உங்களது பார்ட்னரை விட்டு உடனே விலக முயலாதீர்கள். அவருடன் நெருக்கமாக படுத்திருங்கள்.
தலையை கோதி விடுவது, முத்தமிடுவது, கை விரல்களால் மென்மையாக வருடிக் கொடுப்பது, செல்லமாக கொஞ்சிப் பேசுவது போன்றவற்றை செய்யுங்கள்.
உறவு முடிந்தவுடன் பாத்ரூமுக்கு ஓடுவது நல்லதல்ல. அது உறவை கசக்கச் செய்து விடும்.
உடல் ரீதியான நெருக்கம், உறவோடு முடிந்து விடுவதில்லை. அதற்குப் பிறகும் கூட அது நீடிப்பது அவசியம்.
உறவுக்குப் பின்னர் கடைப்பிடிக்கவே கூடாத ஒரு விஷயம் உள்ளது. அது – செல்போனை எடுத்து சுவிட்ச் ஆன் செய்வது, மிஸ்டு கால் வந்துகுக்கா, மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்ப்பது.
மொதல்ல, பல்ல வெளக்குங்கப்பா!
காதலிப்பது பெரிய விசயமில்லை, அந்த காதலை வெற்றிகரமாக்குவதில்தான் இருக்கிறது சூட்சுமம். நிறைய பேருக்கு அதன் டெக்னிக் தெரிவதில்லை. என்ன செய்தால் காதலில் வெற்றி பெறலாம் என்பது தெரியாமல் இருப்பதால்தான் நிறைய காதல்கள் தோற்றுப்போகின்றன. இது குறித்து நடைபெற்ற ஆய்வில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளன. சுவாசப் புத்துணர்ச்சி பெரும்பாலான காதல் தோற்றுப் போனதற்கு வாய் துர்நாற்றம் முக்கிய பங்கு வகித்துள்ளது. எனவே சுத்தமாக பல்விலக்கிவிட்டு சுவாசப் புத்துணர்ச்சியோடு இருந்தாலே காதல் வெற்றி பெரும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
காதலியின் செல்லப்பிராணி
அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகமான ஹஸ்டன் பல்கலையின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் காதல் வெற்றிக்கு காதலி வளர்க்கும் நாய் முக்கிய பங்கு வகிக்கிறதாம். 120 ஜோடிகளிடம் இணையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தான் இது கண்டறியப்பட்டது.
நாயை நேசியுங்கள்
நாய் வளர்ப்பதில் கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உணர்வு ரீதியாக பெரும் வேறுபாடு காணப்படுகின்றது. பொதுவாக ஒரு ஆண் செல்லப் பிராணி ஒன்றை வளர்க்கும் போது தனது காதலியும் அதன் மேல் அன்பு செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. ஆனால் ஒரு பெண் தான் வளர்க்கும் நாயை தனது காதலனும் அளவுக்கு அதிகமாக நேசிக்க வேண்டும் என எதிர்பார்கிறாள்.
எனவே காதலில் வெற்றி பெற உங்களின் காதலி ஆசை ஆசையாக வளர்த்து வருகின்ற நாயை நீங்கள் நன்றாக நேசியுங்கள் அதன் மீது அன்பு செலுத்துங்கள் உங்களின் காதல் தானாகவே வளரும். அப்படி உங்களால் நேசிக்க முடியாவிட்டால் கூட நாயை நேசிப்பது போல் ஆவது நடியுங்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
கண்ணாலே காதல் கவிதைஸ!
காதலின் போது என்ன செய்தும் காதலியை கவர முடியவில்லை என்ற கவலையா உங்களுக்கு? பெண்களை கவர சில உற்சாகமான ஆலோசனைகளை கூறியுள்ளனர் உளவியல் நிபுணர்கள். சில டிரிக்ஸ்களை உபயோகித்தால் பெண்களை எளிதில் கவர முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். முயற்சி செய்து பாருங்களேன்.
கண்களால் பேசுங்கள்
உணர்ச்சிகளை எளிதில் வெளிப்படுத்தும் பகுதி கண்கள். உங்களின் தேவைகளை கண்களால் உணர்த்துங்கள். அதேபோல் உதடுகளும் உங்களின் உண்மையான காதலை எளிதாக வெளிப்படுத்தும். கண்களில் தொடங்கி உதட்டில் முடித்தால் உங்கள் காதலில் உங்களிடம் சரண்டர்தான்.
கைகளால் காதல் செய்
உங்கள் கைகள் எதற்கு இருக்கின்றன. உங்கள் எண்ணத்தை எளிதாக வெளிப்படுத்துமே அவை. உங்கள் காதலி உங்களை தொட அனுமதித்திருக்கும் பட்சத்தில் கைகளால் விளையாடுங்கள். அது அவர்களை எளிதில் கவரும். உங்கள் உணர்வுபூர்வமான எண்ணத்தை எளிதில் வெளிப்படுத்தலாம்.
எதிர்பாராத ஸ்பரிசங்கள்
உங்கள் காதலியை தொடுவதற்கு அனுமதி அளிக்காத பட்சத்தில் எதையாவது கொடுக்கும் சாக்கிலோ, அல்லது உங்கள் காதலி எதிர்பாராத தருணங்களில் மெதுவாய் தொடலாம். இதுபோன்ற ஸ்பரிசங்களை ஒருவேளை உங்கள் காதலியே விரும்பலாம். இதுபோன்ற எதிர்பாராத ஸ்பரிசங்களைத்தான் பெண்கள் அதிகம் விரும்புகின்றனராம்.
வாசனை திரவியங்கள்
மனம் மயக்கும் வாசனை திரவியங்களை உபயோகியுங்கள். இந்த டிரிக் இரண்டாம் பட்சம்தான். உங்களின் உணர்வுபூர்வமான செயல்கள்தான் உங்கள் காதலியை கவரச்செய்யும். அதேசமயம் மென்மையான வாசனை தரக்கூடிய பெர்ப்யூம் உபயோகிப்பது ஒரு சில பெண்களை கவரும்.
உங்கள் காதலியை கவர இது போன்ற சின்ன சின்ன டிரிக்ஸ்களை உபயோகித்துப் பாருங்களேன் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.