இன்றைய கொள்ளை, கொலை, கிரிமினல் செய்திகள்..
றொத்காவன் கோஸ்கொல்ம் பகுதியில் இரண்டு முகமூடித் திருடர்கள் கடிகார, வெள்ளி நகைக்கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் ஊழியரை மிரட்டித் திருடிச் சென்றுள்ளனர்.
கறுப்பு நிறமான கைத்துப்பாக்கிகளுடன் கடைக்குள் நுழைந்து, கடிகாரங்கள், வெள்ளி நகைகளை கைப்பையில் வழித்துப் போட்டுக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.
ஓகூஸ் நகரத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணித்த நபர் ஒருவருடைய சடலம் இன்னமும் அடையாளம் காணப்படாமல் வைத்தியசாலையில் கிடக்கிறது.
இவருடைய கொலையுடன் சம்மந்தப்பட்ட 23 வயது நபர் ஒருவர் தானாக வந்து போலீசில் சரணடைந்துள்ளார், பூட்டிய அறைக்குள் விசாரணைகள் நடக்கின்றன.
டென்மார்க்கில் இருந்து மிதிவண்டிகளைத் திருடி லாரியில் ஏற்றிக்கொண்டு சேர்பியா நோக்கிச் சென்ற மூன்று சேர்பிய திருடர்கள் ஜேர்மனிய போலீசாரால் றொஸ்ரொக் நகரத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தது பழைய கதை.
கடந்த 24 செப்டெம்பர் கைதான இவர்கள் டென்மார்க் வந்து சேர்ந்துள்ளார்கள், விசாரணைகளின் பின் நான்கு வாரங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
ஸ்ரூவர் – கொல்ஸ்ரபோ நகரங்களுக்கிடையில் கார் சாரதி ஒருவர் தனியாவர்த்தன விபத்தைச் சந்தித்து மரத்துடன் காரினால் மோதி மரணத்தைத் தேடியுள்ளார்.
கிலல்ய நகரத்தில் 51 வயதுடைய பெண்மணி ஒருவரை கார் மோதியதில் பலத்த காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காரை ஓட்டிவந்த பெண்மணி ஸ்டியரிங்கை தளம்ப விட்டதால் வந்தவினைஸ
வலதுபக்கமாக திரும்பும்போது உண்டாகும் விபத்தில் மரணிப்போர்
டென்மார்க்கில் வலது பக்கத் திருப்பத்தில் வண்டிகள் திரும்பும்போது உண்டாகும் விபத்தில் மரணிப்போர் தொகை எதிர்பாராதவிதமாக இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.
சென்ற ஆண்டு மூன்றுபேர் வலதுபக்கத் திருப்பத்தில் மரணித்தார்கள், ஆனால் இந்த ஆண்டோ அது ஏழாக அதிகரித்துவிட்டது.
போக்குவரத்து அமைச்சர் இதுதொடர்பான பேச்சுக்களை நடாத்த மிதிவண்டி ஓட்டுனர் சங்கம், பாரவண்டிகள் சங்கம், போக்குவரத்துப் பகுதிகளுக்கு பொறுப்பான தாபனங்களை எல்லாம் அழைத்து தற்போது பேசிக்கொண்டிருக்கிறார்.
கடந்த காலங்களில் எவ்வாறு இந்த மரணங்களைக் குறைக்கலாம் என்பது தொடர்பாக பல யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும், எதுவுமே உரிய பலன்தரவில்லை.
தற்போது புதிதாக இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன, முதலாவது வலதுபக்கத்தில் திருப்புவதானால் கண்டிப்பாக வண்டிகளை பிறேக்கிட்டு நிறுத்திய பின்னரே திருப்ப வேண்டும்.
வலது பக்கத்தில் நடப்பதைப் பார்ப்பதற்கு வசதியாக விசேட கமேரா பூட்டப்பட வேண்டும்.
இதைத்தவிர பாடசாலை மாணவர்களுக்கு வலதுபக்க விபத்துக்கள் குறித்து அதிவிசேட வகுப்புக்கள் எடுக்கப்பட வேண்டும், சாரதி அனுமதிப்பத்திரப் பரீட்சைகளில் இது முக்கிய விடயமாகப் பேசப்பட வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது மாறிச் செல்லும் புதிய போக்குவரத்து விதிகளை அறியும்பொருட்டு, ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை விஷேட சாரதி அனுமதிப்பத்திர வகுப்பு நடாத்தப்பட வேண்டும்.
கடந்த 2009 ம் ஆண்டு இந்த விடயம் முக்கியமாக பேசப்பட்டபோது வலதுபக்க திருப்பத்தில் மரணித்தது ஒருவர் மட்டுமே, அடுத்த ஆண்டோ அது ஐந்தாக உயர்ந்தது, 2011 ல் 3 ஆகவும், 2012ல் 3 ஆகவும் இருந்து இந்த ஆண்டு ஏழாக உயர்ந்துள்ளது.
ஏன்ஸ? இது தேவையா..? இதற்குப் பதில் தேடியே இன்றைய கூட்டம் நடக்கிறது.
இடது பக்கம் சாரதி இருக்கையுள்ள நாடுகளில் வலதுபக்க திருப்பம் குருட்டுப்பக்கமாக இருப்பது தெரிந்ததே.
முதலில் வாகனம், அதன் பின்னரே மிதிவண்டி, பாதசாரிகள் என்பது இத்தகைய விபத்துக்களை குறைக்க உதவும் என்பது இங்கிலாந்து வீதி விதிகளால் உணர முடிகிறது.
வரும் ஆனால் வராது என்று வலது பக்கமாக வண்டியைத் திருப்புவோரால் வரும் தொல்லை இது.
கணினித் தவறால் பெண்கள் ஸ்கிறீங்கிற்கு
டென்மார்க்கில் வாழும் பெண்கள் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாசல் புற்றுநோயால் பாதிக்கப்படுவது வெகுவாக அதிகரித்துள்ளது பழைய கதையாகும்.
இந்த நோயில் சிக்குப்படும் பெண்களை வருமுன் காப்பாற்றுவதற்காக ஸ்கிறீனிங் என்னும் விசேட பரிசோதனை நடைபெறுகிறது.
26 வயதுக்குட்பட்ட இளம் பெண்களுக்கு நடாத்தப்படும் இந்த விசேட பரிசோதனையானது இதுவரை சுமார் 370.000 பெண்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால் கணினியில் ஏற்பட்ட தவறுகாரணமாக சுமார் 27.000 பேருக்கு கடிதங்கள் அனுப்பப்படவில்லை, இதில் 8.000 பேருக்கு இப்போது கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன, மிகுதியாக உள்ள 19.000 பேரும் தவறவிடப்பட்டுள்ளார்கள்.
தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இந்தப் பெண்கள் தவிர்க்கப்பட்டதால் சுமார் 400 பேர் ஆபத்தான நிலைக்குப் போனதை வைத்தியர்களால் கண்டறிய முடியவில்லை.
மூன்றுபேர் மரணமடைந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது, ஆகவே மிகுதியானவர்களுக்கு இன்றும் நாளையும் கடிதங்கள் அனுப்பப்படுகின்றன.
மொத்தப் பெண்களில் சுமார் இரண்டு வீதமானவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுகிறார்கள் என்பாதால் கடிதம் அனுப்பப்படாதவர்களில் இரண்டு வீதமானவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.
சோசல்டெமக்கிரட்டி மருத்துவத்துறைத் தவிசாளர் பிளமிங் மூலர் மோற்றன்சன் மனிதத் தவறுபோல தொழில்நுட்பத் தவறும் இடம் பெறும் என்கிறார்.
முன்னர் மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனைக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டபோது இதுபோன்ற தவறு வரவில்லை ஆனால் இப்போது மட்டும் வந்திருப்பது தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகக் கூறினார்.
டேனிஸ் மக்கள்கட்சி கூறும்போது இவ்விதம் ஸ்கிரீனிங் பரிசோதனைக்கு கடிதம் அனுப்படாதவர்களில் யாராவது இந்த நோயினால் மரணித்திருப்பது உறுதியானால் அவர்கள் குடும்பத்தினர்க்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என்றும் கேட்டுள்ளது.
tks.s,durai